சிவபிரதோஷம் - "தியானக் கரும்பைச் சுவைக்கணும் " - (மீ. விசுவநாதன்)

6 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Dec 2, 2021, 9:04:57 AM12/2/21
to Santhavasantham

             சிவபிரதோஷம்

"தியானக் கரும்பைச் சுவைக்கணும் "

           (மீ. விசுவநாதன்)


வேத ஒலியைக் கேட்டபடி - மனம்

வெளியில் அலையா திருக்கணும்

பாதம் இரண்டைப் பிடித்தபடி - சிவப்

பண்பில் குளிர்தே இருக்கணும்

 

ஆண்பெண் உறவைச் சொல்லுகிற - சிவ

ஆழக் கருத்தை உணரணும்

வீண்பொய் பேசும் நாவெல்லாம் - சிவ

தியானக் கரும்பைச் சுவைக்கணும்

 

போரை விரும்பா உயிர்களென - இந்த

உலகம் பேரை எடுக்கணும்

ஊரை ஆளும் அரசனுக்கு - இறை

உணர்வை தந்தும் அருளணும்

 

கோவில் சென்று வந்தாலும் -உனை

உள்ளுக் குள்ளும் ருசிக்கணும்

ஆவி போகும் போதினிலும் - சிவ

அன்பில் எண்ணம் நிலைக்கணும்

 

(இன்று-02.12.2021- பிரதோஷ நன்னாள்)

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 2, 2021, 9:06:25 AM12/2/21
to santhav...@googlegroups.com
அருமை கவிஞரே

      - தில்லைவேந்தன்


Siva Siva

unread,
Dec 2, 2021, 9:36:47 AM12/2/21
to santhavasantham
Nice,
mOnai is missing in some half lines. If those places can be refined, it will add to the beauty.


Saidevo ramaNi

unread,
Dec 2, 2021, 9:38:39 AM12/2/21
to சந்தவசந்தம்
மிக மிக அருமை, விசு! வாழ்த்துகள்.
ரமணி

M. Viswanathan

unread,
Dec 2, 2021, 12:27:39 PM12/2/21
to Santhavasantham

ஓம் நமச்சிவாய. 
அன்புக் கவிஞர்களின் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மகிழ்ச்சி. நன்றி. பிழைகளைச் சுட்டிக் காட்டிய கவிஞர் சிவ சிவா அவர்களுக்கு நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்
02.12.2021 22.57 pm 

M. Viswanathan

unread,
Mar 15, 2022, 5:35:11 AM3/15/22
to Santhavasantham, M. Viswanathan

       சிவபிரதோஷம்

"கதியவன் என்பவர் தோழன்"

        (மீ. விசுவநாதன்)

 

தேவரோ அசுரரோ வந்து

வேண்டினால் காத்திடப் போவார்  !

பாவமோ புண்யமோ அந்தப்

பலனிலே பற்றினைக் கொள்ளார் !

ஈவதே தன்மனம் என்று

இருப்பதை இன்பமாய்த் தந்து

போவதே சிவமென எண்ணும்

புகழினைக் கொண்டவர் ஈசன் !


 துளிவிடம் தொண்டையைத் தொட்டும்

தொண்டரின் துயரினைப் போக்கக்

களிமிகக் கொண்டவன் ஈசன்!

கதியவன் என்பவர் தோழன் !

வெளியிலே தேடவும் வேண்டாம்

விதியினை நோகவும் வேண்டாம்

துளித்துளி அன்பினால் பக்தி

கொள்பவர்க் கவன்குல தெய்வம்.

(இன்று ( 15.03.2022 ) பிரதோஷ நன்னாள்)

Reply all
Reply to author
Forward
0 new messages