தொடர்வண்டிப் பயணத்தில் இருபுறக் காட்சிகள்

18 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Jul 25, 2024, 7:29:10 AM (2 days ago) Jul 25
to santhav...@googlegroups.com
தொடர்வண்டிப் பயணத்தில் இருபுறக் காட்சிகள்


இரண்டு புறமும் நெல்வயல்கள்,
     இடையே தென்னை,பனைமரங்கள்,
உருண்ட வெண்ணெய் வெண்முகில்கள்,
    உயரந்த மலைகள், புல்வெளிகள்,
புரண்டு செல்லும் சிறுநதிகள்,
     புதிதாய் முளைத்த பாலங்கள்,
திரண்ட சவுக்கு மரக்கூட்டம்,
      செழித்த வாழை இலைத்தோட்டம்


காய்ந்து வறண்ட விளைநிலங்கள்,
    காடு போன்ற முட்புதர்கள்,
மேய்ந்து திரியும் கால்நடைகள்,
    வெள்ளை அடித்த கல்லறைகள்,
வேய்ந்த ஓலைச் சிறுகுடில்கள்,
    விளங்கும் கோவில் கோபுரங்கள்,
சாய்ந்த இருக்கை தனிலமர்ந்து
    சலிப்பே  இன்றி நான்கண்டேன்.

                   —தில்லைவேந்தன்.
.....

anand...@yahoo.com

unread,
Jul 25, 2024, 8:57:59 AM (2 days ago) Jul 25
to santhav...@googlegroups.com
மிக அருமை, ஒரு ரயில் பயணத்தில் நாமே செல்வது போல உணர்ந்து மகிழவைக்கும் கவிதை! 

- இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhSG4Peg-TfHbYFBQOM-to_SbjVzg4c7G5TjQ-DvFYufw%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jul 25, 2024, 9:07:23 AM (2 days ago) Jul 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு இமயவரம்பன்.

             —தில்லைவேந்தன்.

Ram Ramakrishnan

unread,
Jul 25, 2024, 10:46:10 AM (2 days ago) Jul 25
to santhav...@googlegroups.com
உங்கள் பிரயாணத்தில் நாங்களும் சேர்த்து பயணித்து ரசித்தோம் ஙேத்தரே. பகிர்விற்கு நன்றி

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 25, 2024, at 07:29, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:



NATARAJAN RAMASESHAN

unread,
Jul 25, 2024, 11:18:25 AM (2 days ago) Jul 25
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

       —தில்லைவேந்தன்
..

Kaviyogi Vedham

unread,
Jul 25, 2024, 11:46:29 AM (2 days ago) Jul 25
to santhav...@googlegroups.com
ஙேத்தரே../?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Jul 25, 2024, 11:58:38 AM (2 days ago) Jul 25
to santhav...@googlegroups.com
அழகு மிக அழகு தில்லை,
   யோகியார்

Ram Ramakrishnan

unread,
Jul 25, 2024, 12:40:25 PM (2 days ago) Jul 25
to santhav...@googlegroups.com
தட்டச்சுப்பிழை, யோகியாரே.

தாங்களிதில். என்வயது முதிர்ச்சியையும் கொள்ளலாம்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 25, 2024, at 11:58, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages