வண்ணப்பா முயற்சி

14 views
Skip to first unread message

கவிஞர் இனியன்

unread,
Sep 8, 2025, 3:02:00 AMSep 8
to சந்தவசந்தம்

முதல்முறையாக ஒரு வண்ணப்பா எழுத முனைந்துள்ளேன். பிழைகளைச் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.

 

வண்ணப்பா

தனந்தன தந்தன தானன தானன

தனந்தன தந்தன தானன தானன

தனந்தன தந்தன தானன தானனதனதான.

 

 

இலங்கிடு தண்டமி ழேஉயி ராகுக

   உவந்திட நெஞ்சினி லேகுடி யேறுக

   இருந்திட வந்தினி தேநல மேதரவருவாயே!

       இயங்கிட செந்தமி ழேயினி மீளுக

       வரந்தர நின்றினி தேயெமை ஆளுக

       இதந்தர இன்புற வேயென நீவர விழைவாயே!

 

துலங்கிடு சந்தன நன்மணி யேயென ஆகினை

      விரைந்திடு வெம்பகை போவென நீஉரை

      தொடர்ந்திடு வென்றியே ஆமென ஆகுவைஇனிதாக

          துணிந்திடு நன்றென வேயுள தோபகை

          கடிந்திடு வம்பென வேமொழி மாசினை

          துடைந்திடு இன்றுள தேபழி தீயெனவிரைவாக!

 

நலங்கெழு பொன்னென வேயொளி வீசுக

     விரைந்தெழு கன்றென வேநடை போடுக

     நலந்தரு மொன்றினை யேயினி நாடுகதுணிவோடு!

          நிலந்தரு சொத்தென வேநனி  ஆயினை

          இளந்தளி ரென்றிட மேவன ஆகுவை

          நடந்திடு நல்லெரு தாயினி தாகிடவருங்காலம்!

 

சிலம்பிடை முத்தென வேயொளி வீசிட

      உளங்கொள நல்லவை யாவுமே ஆகுவை

      சிறந்தவை சொத்தென வேயுள ஓதிடசிறப்பாகும்

          திகழ்ந்திடு வித்தென வேயொரு தூமொழி

          நலந்தரு சத்தென வாகிடு மீமொழி

          தடந்தனை இத்தரை மீதினி லேயமை – உலகாள!

 

-கருவூர் இனியன்.

இமயவரம்பன்

unread,
Sep 8, 2025, 4:14:56 AMSep 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான கருத்தமைந்த வண்ணப்பா, திரு. இனியன். வாழ்த்துகள்!

எனது குறிப்புகள் கீழ்வருமாறு காண்க:

(2nd stanza)

வென்றியே - சந்தம் சரிபார்க்கவும் 

மாசினை துடைந்திடு = சந்தத்திற்காக மாசினைத் என்று வரவில்லை போலும்

துடைந்திடு = சந்தத்திற்காகத் துடைத்திடு என்பது துடைந்திடு என்று மருவியுள்ளதுபோல் தோன்றுகிறது

துடைந்திடு இன்றுள = புணர்ச்சி சரிபார்க்கவும்


(3nd stanza)

இவ்விடங்களில் சந்தம் சரிபார்க்கவும்:

சொத்தென

நல்லெரு

வருங்காலம்


(4nd stanza)

இவ்விடங்களில் சந்தம் சரிபார்க்கவும்:

முத்தென

நல்லவை

சொத்தென

சிறப்பாகும்

வித்தென

சத்தென

இத்தரை


- இமயவரம்பன் 

Govindaraju Arunachalam

unread,
Sep 8, 2025, 9:14:11 AMSep 8
to santhav...@googlegroups.com

இமயவரம்பன் அவர்கள் பின்னூட்டத்தைத் தொடர்ந்து அடியேன் திருத்தி அமைத்த வண்ணப்பா. இதிலும் பிழைகள் இருக்கலாம். திருத்தியருளுக.

 

வண்ணப்பா

தனந்தன தந்தன தானன தானன

தனந்தன தந்தன தானன தானன

தனந்தன தந்தன தானன தானனதனதான.

 

 

இலங்கிடு தண்டமி ழேஉயி ராகுக

   உவந்திட நெஞ்சினி லேகுடி யேறுக

   இருந்திட வந்தினி தேநல மேதரவருவாயே!

       இயங்கிட செந்தமி ழேயினி மீளுக

       வரந்தர நின்றினி தேயெமை ஆளுக

       இதந்தர இன்புற வேயென நீவர விழைவாயே!

 

துலங்கிடு சந்தன நன்மணி யேயென ஆகினை

      விரைந்திடு வெம்பகை போவென நீஉரை

      தொடர்ந்திடு வென்றி ளாமென ஆகுவைஇனிதாக!

          துணிந்திடு நன்றென வேயுள தோபகை

          கடிந்திடு வம்பென வேமொழி மாசினை

          துடைந்திடு பண்டுள தேபழி தீயெனவிரைவாக!

 

நலங்கெழு பொன்னென வேயொளி வீசுக

     விரைந்தெழு கன்றென வேநடை போடுக

     நலந்தரு மொன்றினை யேயினி நாடுகதுணிவோடு!

          ந்தரு சிந்ததென வேநனி  ஆயினை

          இளந்தளி ரென்றிட மேவன ஆகுவை

          நடந்திடு நண்பொடு தாயென வாகிட– கனிவோடு!

 

சிலம்பிடை உண்டென வேயொளி வீசிட

      உளங்கொள சிந்தனை யாவுமே ஆகுவை

      சிறந்தவை வந்தன வேயவை ஓதிடசிறப்பாமே!

          திகழ்ந்திடு விந்தென வேயொரு தூமொழி

          நலந்தரு சந்தமு மாகிடு மீமொழி

          தடந்தனை இங்கினி தாயினி மேலமை உலகாள!

 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/78A103F0-ADB5-40F4-8184-763AFCF24554%40gmail.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Siva Siva

unread,
Sep 8, 2025, 9:40:38 AMSep 8
to santhav...@googlegroups.com
முதன்முயற்சியே நீண்ட சந்த அமைப்பில்!
வாழ்க!

4-ஆம் அடியில் - தடந்தனை - என்ற இடத்தில் மோனை அமைந்தால் இன்னும் சிறக்கும்.

வாகிட– கனிவோடு! /
ஓதிட – சிறப்பாமே! /

இவ்விடங்கள் வினையெச்சம் என்றால் வல்லொற்று மிகும். சந்தம் கருதி மிகாது வந்தனவா?

வி. சுப்பிரமணியன்

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 8, 2025, 10:50:43 AMSep 8
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு  இனியனாரே

        —தில்லைவேந்தன்.

Govindaraju Arunachalam

unread,
Sep 8, 2025, 10:33:13 PM (14 days ago) Sep 8
to santhav...@googlegroups.com

அடியேன் எழுதிய வண்ணப்பா குறித்துப் பின்னூட்டம் தந்து நெறிப்படுத்திய, வாழ்த்திய பெருமக்கள் இமயவரம்பன், சிவசிவா, தில்லைவேந்தன் ஆகியோர்க்கு நன்றி.


On Mon, Sep 8, 2025 at 8:20 PM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
மிகச் சிறப்பு  இனியனாரே

        —தில்லைவேந்தன்.

--

GOPAL Vis

unread,
Sep 9, 2025, 3:22:34 AM (13 days ago) Sep 9
to santhav...@googlegroups.com
மிக அருமையான எளிமையற்ற முதல் முயற்சி. வாழ்த்துகள்.
க்வனிக்க வேண்டிய இடங்கள்:


இயங்கிட செந்தமி ழேயினி மீளுக                                          [ஒற்று]

       

ந்தரு சிந்ததென வேநனி  ஆயினை                     [டைப்போ?]

         

நடந்திடு நண்பொடு தாயென வாகிட– கனிவோடு!     [ஒற்று]

 

உளங்கொள சிந்தனை யாவுமே ஆகுவை                           [ஒற்று]

சிறந்தவை வந்தன வேயவை ஓதிட – சிறப்பாமே!         [ஒற்று]


கோபால்.

         

Govindaraju Arunachalam

unread,
Sep 12, 2025, 10:49:25 AM (10 days ago) Sep 12
to santhav...@googlegroups.com

திரு.கோபால் அவர்கள் பின்னூட்டத்தைத் தொடர்ந்து அடியேன் திருத்தி அமைத்த இறுதி வடிவம்.

 

வண்ணப்பா

தனந்தன தந்தன தானன தானன

தனந்தன தந்தன தானன தானன

தனந்தன தந்தன தானன தானனதனதான.

 

 

இலங்கிடு தண்டமி ழேஉயி ராகுக

   உவந்திட நெஞ்சினி லேகுடி யேறுக

   இருந்திட வந்தினி தேநல மேதரவருவாயே!

       இயங்கிடு செந்தமி ழேயினி மீளுக

       வரந்தர நின்றினி தேயெமை ஆளுக

       இதந்தர இன்புற வேயென நீவர விழைவாயே!

 

துலங்கிடு சந்தன  மேயென ஆகினை

      விரைந்திடு வெம்பகை போவென நீஉரை

      தொடர்ந்திடு வென்றிக ளாமென ஆகுவைஇனிதாக!

          துணிந்திடு நன்றென வேயுள தோபகை

          கடிந்திடு வம்பென வேமொழி மாசினை

          துடைந்திடு பண்டுள தேபழி தீயெனவிரைவாக!

 

நலங்கெழு பொன்னென வேயொளி வீசுக

     விரைந்தெழு கன்றென வேநடை போடுக

     நலந்தரு மொன்றினை யேயினி நாடுகதுணிவோடு!

          நயந்தரு சிந்தென வேநனி  ஆயினை

          இளந்தளி ரென்றிட மேவன ஆகுவை

          நடந்திடு நண்பொடு தாயென வாகிட– அளியோடு!

 

சிலம்பிடை உண்டென வேயொளி வீசிட

      உளங்கொள நின்றனை யாவுமே ஆகுவை

      சிறந்தவை வந்தன வேயவை ஓதிட – நலமாமே!

          திகழ்ந்திடு விந்தென வேயொரு தூமொழி

          நலந்தரு சந்தமு மாகிடு மீமொழி

          தடந்தனை இங்கினி தாயினி மேலமை – வலமாமே!

 

Siva Siva

unread,
Sep 12, 2025, 11:27:17 AM (10 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
இனிய சந்தம். 
நல்ல பாடல்.

இருந்திட வந்தினி தேநல மேதர – வருவாயே/

வந்து ... வருவாயே - ?

மாசினை துடைந்திடு /

இங்கே வல்லொற்றுச் சந்தம் கருதி விடப்பட்டதா?

துடைந்திடு = ?


தடந்தனை  /

இந்த இடத்திலும் மோனை அமைந்தால் இன்னும் சிறக்கும்.

வி. சுப்பிரமணியன்

GOPAL Vis

unread,
Sep 12, 2025, 11:39:32 AM (10 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
உளங்கொள நின்றனை யாவுமே ஆகுவை - சந்த வாய்பாடு தானன
நான் இத முன்னர் கவனிக்கவில்லை.
கோபால்.

Govindaraju Arunachalam

unread,
Sep 13, 2025, 4:48:41 AM (9 days ago) Sep 13
to santhav...@googlegroups.com

தனந்தன தந்தன தானன தானன


உளங்கொள நின்றனை ஒருயி ராகுவை

என மாற்றுகிறேன்.


மீண்டும் கூர்ந்து பார்த்தமைக்கு நன்றி. அடுத்துவரும் என் கவிதை நூலில் இதை முதற் பாடலாக வைக்க எண்ணியுள்ளேன்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages