திருமால் அடியே சரண்

1 view
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jan 31, 2026, 8:56:03 AM (7 days ago) Jan 31
to Santhavasantham

திருமால் அடியே சரண்

(சந்த விருத்தம்

தனதானன தனதானன தனதானன தனனா)


அழல்போல்விழி 

அரவேமலர்

அணையாய்த்துயில் வளர்வாய்

சுழலாழியொண் படையாயொரு சுரிசங்குடன் ஒளிர்வாய்

தொழுவாரவர் வினையோடுறு துயராயின அரிவாய்

அழியாப்புகழ் உடையாய்திரு வடியேசர ணாமே.


பழுதாய்ப்பல பகல்போயுறு பழியாலுளம் இழிய 

உழல்வேமிக உயிர்சோர்ந்திடும் ஒருவாழ்வினை விழையேன்

உழைநேர்விழி  மடவாள்திரு  உறைமார்பினை உடையாய்

கழியாவினை களைவாயொளிர் கழலேசர ணாமே.


(உழை நேர் விழி = மான் போன்ற விழி)


  • இமயவரம்பன் 

Siva Siva

unread,
Jan 31, 2026, 9:19:21 AM (7 days ago) Jan 31
to santhav...@googlegroups.com
Nice.

/தொழுவாரவர் வினையோடுறு துயராயின அரிவாய் 

Reminded me of Sundarar thevaram 7.1.9

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jan 31, 2026, 9:36:45 AM (7 days ago) Jan 31
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you!

I often listen to the beautiful Pathigam “பித்தா பிறைசூடி”, sung by the Odhuvars of சிரவை ஆதீனம்.
“தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே”
May be these words of this Pathigam resonated deeply within me, and found its expression in my verse.

On Jan 31, 2026, at 9:19 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:

தொழுவாரவர் வினையோடுறு துயராயின அரிவாய் 
Reply all
Reply to author
Forward
0 new messages