[santhavasantham] oru pudhiya thiruppugazh

23 views
Skip to first unread message

aka...@gmail.com

unread,
Jan 2, 2007, 3:30:13 AM1/2/07
to santhav...@googlegroups.com

pas_jaya
(pas_...@yahoo.ca
) எழுதியது

வம்புங் கோபமு மேவசு ராதிகள்
. வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
. மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா
தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
. ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
. தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே
அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
. இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
. மன்றுன் பால்வர மோகம தாவுற வனைவோனே
செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
. எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
. செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.


திருவனந்தபுரம் பல்கலைக் கழக நூலகத்தில் இருக்கும்
14 சுவடிகளைப் பரிசோதித்து, திருப்புகழ் ஆய்வாளர் வலையப்பேட்டை
கிருஷ்ணன் அண்மையில் கண்டுபிடித்து, அச்சேற்றிய ஒரு திருப்புகழ்.

(சுவடிகளில் இன்னும் சில புதிய பாடல்கள் உள்ளன; ஆனால், ஓலைகள்
சிதைவுற்றதால், அவை முழுமையாக இல்லை.இங்குள்ளது முழுமையாகக் கிடைத்த
ஒன்று.)

"செங்குன்றாபுரம்" என்பது கேரளாவில் கோட்டயம் அருகில் உள்ள செங்கனூர்
என்பது என்கிறார் கிருஷ்ணன்.

பசுபதி
31-12-06

__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com



Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/santhavasantham/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/santhavasantham/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mailto:santhavasan...@yahoogroups.com
mailto:santhavasantha...@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
santhavasanth...@yahoogroups.com

<*> Your use of Yahoo! Groups is subject to:
http://docs.yahoo.com/info/terms/


Reply all
Reply to author
Forward
0 new messages