எளிய இனிமை!

6 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 7, 2025, 8:49:50 PM (6 days ago) Oct 7
to santhav...@googlegroups.com

.              எளிய இனிமை!


இலையில் சோறு கிடைப்ப துண்டு  - பசி 

     என்ற ஊறு காயும் உண்டு 

தலைக்கு மேலே கூரை உண்டு - தாகம்

    தணியக் குளிர்ந்த  தண்ணீர் உண்டு 

கலையில் மிகுந்த ஆர்வம் உண்டு- தமிழ்க்

      கவிதை எழுதிக் குவிப்ப துண்டு

விலையே இல்லா அமைதி உண்டு- தூக்கம் 

   விரும்பிப் படுத்தால் வருவ துண்டு



விரியும் சிறிய மலரின் அழகில் - மனம்

    வியந்து நெகிழ, என்னை மறப்பேன்

தெரியும் நிலவை, திரியும் மீனைக்- கண்டு 

     சிந்தை சிலிர்த்து மகிழ்ந்து கிடப்பேன்

கரிய இரவும் காலைப் பகலும்- எனைக்

     களிப்பில் ஆழ்த்திக் கதைகள் புகலும்

அரிய வாழ்வின் எளிய இனிமை - மிக 

    அருகில் இருக்க, அறிந்து சிறப்பேன்.


                       — தில்லைவேந்தன்.


Arasi Palaniappan

unread,
Oct 7, 2025, 9:33:20 PM (6 days ago) Oct 7
to சந்தவசந்தம்
சிறப்பு!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hiUR0OHTOUw36OHjYY4REcrd_0U_iS1KdjGqW_iR%2BV0Sg%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 7, 2025, 9:41:08 PM (6 days ago) Oct 7
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

       —தில்லைவேந்தன்
.

On Wed, Oct 8, 2025 at 7:03 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
சிறப்பு!

Kaviyogi Vedham

unread,
Oct 12, 2025, 8:39:14 PM (2 days ago) Oct 12
to santhav...@googlegroups.com
mika  azagu. good
 yogiyar

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 12, 2025, 11:42:34 PM (2 days ago) Oct 12
to santhav...@googlegroups.com
நன்றி யோகியார் 

     — தில்லைவேந்தன.
On Mon, Oct 13, 2025 at 6:09 AM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
mika  azagu. good
 yogiyar

Arasi Palaniappan

unread,
Oct 13, 2025, 2:06:05 AM (24 hours ago) Oct 13
to சந்தவசந்தம்
மிகு சிறப்பு!

sudha's creations

unread,
Oct 13, 2025, 2:23:45 AM (24 hours ago) Oct 13
to santhavasantham
எவ்வளவு எளிமை.. அற்புதமான கவிதை 
சுதா வேதம் 

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 13, 2025, 4:32:08 AM (21 hours ago) Oct 13
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

     —தில்லைவேந்தன்

On Mon, Oct 13, 2025 at 11:36 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
மிகு சிறப்பு!


.

இமயவரம்பன்

unread,
Oct 13, 2025, 4:40:04 AM (21 hours ago) Oct 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
எளிய இனிமை - மிக அருமை! 

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 13, 2025, 4:59:46 AM (21 hours ago) Oct 13
to santhav...@googlegroups.com
நன்றி திரு இமயவரம்பன் 

     —தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages