பாரதிக்கு ”உண்மையாக” எத்தனை மொழி தெரியும்?

5,856 views
Skip to first unread message

Girija Varadharajan

unread,
Sep 17, 2013, 8:22:29 AM9/17/13
to santhavasantham

அண்மையில் இங்கே ஒரு கூட்டத்திற்குப் போயிருந்தேன். பாரதியைப் பற்றிப் பேசினார்கள். ” யாமறிந்த மொழிகளிலே என்ற பாடலைச் சொல்லி ஒருவர் , “ இப்படிச் சொல்வதற்கு பாரதி  முற்றிலும் தகுதியானவனே. நம்மைப் போல ஒன்றிரண்டு மொழி மட்டும் கற்றவன் அல்லன் அவன். அவனுக்குப் பத்து மொழிகள் தெரியும்”  என்றார். அடுத்து வந்தவரோ பாரதிக்குப் பதினாறு மொழிகள் தெரியும் என்றார் . (நல்லவேளை  மேலும் எண்ணிக்கை ஏறவில்லை. இருவர் மட்டுமே பேசியதால்) .

உண்மையாக பாரதிக்கு எத்தனை மொழிகள் நன்றாகத்தெரியும்? ( எழுத, படிக்க, பேச,  அவற்றின் கவிதை பற்றி அறிந்து ஆராய - ) 

அம்மொழிகள் யாவை? 
  
இது தொடர்பான, நம்பகத் தன்மை உடைய உண்மையான தகவல் என்ன?

நம் குழுமத்தில் பாரதி பற்றி ஆய்ந்த பலர் உள்ளார்கள் அவர்களைத் தெளிவு படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
  
வரதராசன்.அ.கி 

Kaviyogi Vedham

unread,
Sep 17, 2013, 9:30:50 AM9/17/13
to santhavasantham
சப்பாஷ்.. அருமையான ஆய்வுக் கேள்வி,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115
 Present camp..Bangalore till oct13.. so present ..
cel. no.09686679017

2013/9/17 Girija Varadharajan <girijavar...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subbaier Ramasami

unread,
Sep 17, 2013, 9:57:17 AM9/17/13
to சந்தவசந்தம்
பாரதிக்கு நன்கு தெரிந்த மொழிகள்

1- தமிழ்
2- ஆங்கிலம்
3 பிரஞ்ச்
4 தெலுங்கு
5 மலையாளம்
6 ஹிந்தி
7 சமஸ்கிருதம்

அவர் இலத்தின் கிரேக்கம் படித்ததாக எங்கோ ஒரு குறிப்புப்பார்த்த நினைவிருக்கிறது. பாரதி ஹிந்துஸ்தானி கற்றதாகச் சொல்லியிருக்கிறார். அவர் ஹிந்தியைத்தான் அப்படிக்குறிப்பிடுகின்றார் என நினைக்கிறேன்.

கன்னடமும் , மராத்தியும்  தெரியும் எனத் தெரிகிறது.

தாகுரின் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அதை வங்காளத்திலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்ததாகத் தெரியவில்லை.

எழுதப்படிக்கத் தெரிந்தவை 7
பேசத்தெரிந்தவை 2
பேசினால் அறிந்துகொள்ளத்தெரிந்தவை 2

மொத்தம் 11 என்பது என் கணிப்பு.

இலந்தை

2013/9/17 Girija Varadharajan <girijavar...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Sep 17, 2013, 10:18:11 AM9/17/13
to santhavasantham

2013/9/17 Subbaier Ramasami <elan...@gmail.com>

எழுதப்படிக்கத் தெரிந்தவை 7
பேசத்தெரிந்தவை 2
பேசினால் அறிந்துகொள்ளத்தெரிந்தவை 2

மொத்தம் 11 என்பது என் கணிப்பு.

இலந்தை

உருதுவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  கயாம் (க்ஹ்ஹய்யாம்... என்பதை ஒத்து) போன்ற சில பிரயோகங்களை அப்படியே இஸ்லாமியரைப் போல் உச்சரிப்பான் என்று வரா குறிப்பிட்டிருக்கிறார்.  உருது என்றால் கூடார பாஷை என்று பொருள் என பாரதியும் ஒரு கட்டுரையில் குறித்திருக்கிறான்.  இந்த மொழியைப் பற்றியும் பேசியிருப்பதாக நினைவு.  புத்தகத்தைப் புரட்ட நேரமில்லை.  மன்னிக்கவும். :)

இது இஸ்லாமியரைப் பற்றிய ஏதோ ஒரு கான்டெக்ஸ்டில் வரா சொல்வது என்று நினைவு.  பாரதிக்கு அரபி தெரியாது ஆகையாலே உருதுவைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.  (ஹிந்துஸ்தானி பற்றிய உங்களுடைய குறிப்பில்.)

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Balasubramanian N.

unread,
Sep 17, 2013, 11:39:53 AM9/17/13
to santhav...@googlegroups.com

2013/9/17 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Balasubramanian N.

unread,
Sep 17, 2013, 11:48:04 AM9/17/13
to santhav...@googlegroups.com

"எனக்கு இத்தனை மொழிகள் தெரியும்" எனப் பாரதியே ஆங்கிலத்தில் ஓரிடத்தில் எழுதியிருப்பதாகப் படித்த நினைவு. ஹரீ, ஹரீ விண்டுரையும்!

2013/9/17 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

Raja.Tyagarajan

unread,
Sep 17, 2013, 12:46:16 PM9/17/13
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தையார், ஹரியண்ணா அவர்கட்கு,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
அரவிந்தரின் சில கட்டுரைகளின் படி, பாரதிக்கு வங்க மொழியிம் தெரியும் என்பதாக புதுவை ஃப்ரஞ்ச் இன்ஸ்டிடியுடில் பணி புரிந்த திரு இராம்மோகன் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  விரைவில் ஆதாரத்தை அளிக்க முயலுகிறேன்.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.

Girija Varadharajan

unread,
Sep 18, 2013, 1:37:09 AM9/18/13
to santhavasantham
அனைவருக்கும் நன்றி. இதற்கான  ஆவணங்கள் உள்ளனவா? 

பாரதியே எழுதியது / சொன்னது. 

அல்லது அவருடன் மிக நன்கு நெருங்கிப் பழகியவர்களின் கூற்று அல்லது எழுத்து ? 

அல்லது அவரது வரலாற்று நூல்களில் குறிப்பாக இது பற்றி.
 
புதிய மொழிகளை அவன் கற்கும் வாய்ப்பு கிடைத்த வகை- எங்கே / எப்பொழுது/ எப்படி/ யார் மூலம் கற்றுக்கொண்டான்  ? - இவை போன்ற விவரங்கள் ?

இந்தப் பாடல் சொல்லப்படும் போதெல்லாம் பாரதிக்கு இத்தனை மொழிகள் தெரியுமாக்கும் என்று பலரும் மிகையாகக் கூறுவதைக் கேட்டுள்ளேன். ஆனால் யாரும் அந்த மொழிகள் இவை, அவற்றை இவன் கற்க நேர்ந்த வாய்ப்பு இவைகள்  என்று குறிப்பிட்டுச் சொல்வதே இல்லை. 

வரதராசன். அ.கி   

2013/9/18 Raja.Tyagarajan <thia...@dataone.in>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

Subbaier Ramasami

unread,
Sep 18, 2013, 7:20:39 AM9/18/13
to சந்தவசந்தம்
நான் இங்கே குறிப்பிட்ட மொழிகள் அத்தனைக்கும் ஆதாரம் உண்டு. 

agni and othe poems. Fox with the golden tail- ENGLISH
பிரஞ்ச் தேசிய கீதத்தைக்கேட்டு அதைப்போலப் பாடவேண்டுமென்று பாரதி  பாடல் எழுதியிருக்கிறார். இது பாரதியின் வரலாற்றில் வருகிறது.

3- ராகவ சாஸ்த்ரி கதை,   தெலுங்கு சாகித்யங்கள் பற்றிப் பாரதி எழுதியிருப்பது, போன்றவை  மலையாளத்திற்கும் தெலுங்கிற்கும் சான்று பகரும். இலத்தின், கிரேக்கம் பற்றி அவரேஎ எழுதியிருக்கிறார். படித்திருக்கிறேன். தேடிப்பிடிக்கவேண்டும். ஹிந்துஸ்தானி பற்றியும் அவரே எழுதியிருக்கிறார். காசியில் இருந்ததால் இந்தி தெரியும். கீதை மொழியாக்கம் வடமொழிப்புலமையைக் காட்டும். வங்கத்தோடு அவருக்கு நிறையத் தொடர்புண்டு. பிபின் சந்த்ர பால, அவரது குரு நிவேதிதா தேவி, அரவிந்தர் ,தாகுரின் இலக்கியங்கள்  .  அதனால்மட்டும் வங்க மொழி தெரியும் என்று சொல்ல மாட்டேன். அரவிந்தர் பாரதியைப்பற்றி எழுதியுள்ளதெல்லாம் மிகவும் குறைவே.  ஆனால் அவர்களது ஆன்மீகத் தொடர்பும் நட்பும்  ஆழமானவை நீண்டவை

இலந்தை
 
2013/9/18 Girija Varadharajan <girijavar...@gmail.com>

Hari Krishnan

unread,
Sep 18, 2013, 9:37:09 AM9/18/13
to santhavasantham

2013/9/18 Subbaier Ramasami <elan...@gmail.com>

அரவிந்தர் பாரதியைப்பற்றி எழுதியுள்ளதெல்லாம் மிகவும் குறைவே.  

ஒப்பீட்டளவில் குறைவுன்னு சொல்லலாம்.  அரவிந்தரைப் பற்றி (வழக்கு விவரங்களை) பாரதி எழுதியதையெல்லாம் சீனி விசு புத்தகமாகப் போட்டிருக்கிறார்.  கடல் கவிதை மொழிபெயர்ப்பு, கட்டுரைகளில் பற்பல இடங்களில் ஆங்காங்கே போகிற போக்கில் குறிப்புகள் என்று கட்டுரைத் தொகுப்பில் கணிசமான அளவு தேறும்.

N. Ganesan

unread,
Sep 18, 2013, 10:11:46 AM9/18/13
to santhav...@googlegroups.com

On Tuesday, September 17, 2013 10:37:09 PM UTC-7, AKV Rajan wrote:
அனைவருக்கும் நன்றி. இதற்கான  ஆவணங்கள் உள்ளனவா? 

பாரதியே எழுதியது / சொன்னது. 

அல்லது அவருடன் மிக நன்கு நெருங்கிப் பழகியவர்களின் கூற்று அல்லது எழுத்து ? 

அல்லது அவரது வரலாற்று நூல்களில் குறிப்பாக இது பற்றி.
 
புதிய மொழிகளை அவன் கற்கும் வாய்ப்பு கிடைத்த வகை- எங்கே / எப்பொழுது/ எப்படி/ யார் மூலம் கற்றுக்கொண்டான்  ? - இவை போன்ற விவரங்கள் ?

இந்தப் பாடல் சொல்லப்படும் போதெல்லாம் பாரதிக்கு இத்தனை மொழிகள் தெரியுமாக்கும் என்று பலரும் மிகையாகக் கூறுவதைக் கேட்டுள்ளேன். ஆனால் யாரும் அந்த மொழிகள் இவை, அவற்றை இவன் கற்க நேர்ந்த வாய்ப்பு இவைகள்  என்று குறிப்பிட்டுச் சொல்வதே இல்லை. 

வரதராசன். அ.கி   

பல மாகாணங்களில் வாணிகம் செய்யும் பலருக்கும் பல பாஷைகள் தெரியும்.
பாரதி எழுத்துக்களில் மற்ற மொழிகள் எவ்வளவு தெரியும் என்று எழுதியிருப்பதைத் தொகுத்து
எழுதினால் அவரது ஞானம் பற்றி அறியலாம். அவருக்குப் பல மொழிகள் தெரிந்ததால்
சொல்கிறார்: “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”.
இது பொதுவாக, சில வார்த்தைகள், வாக்கியங்கள் தெரிவதைச் சொல்வதா? ஆழக் கற்ற புலமையைச்
சொல்வதா?  தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், நல்ல புலமை. தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம்
அளவுக்கு மற்ற மொழிகள் அறிந்தவரா பாரதி என்று தெரிந்தோர் சொல்லலாம்.

சுத்தானந்தபாரதியாரும் பல மொழிகளில் புலமை கொண்டவராய் வாழ்ந்தவர்.
தமிழ், தெலுங்கு (தாய்மொழி), பிரெஞ்சு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், இந்தி, ... என்று 20 மொழிகளுக்கு மேலறிந்தவர் அவர்.

நா. கணேசன்

Subbaier Ramasami

unread,
Sep 18, 2013, 10:16:47 AM9/18/13
to சந்தவசந்தம்
பாரதி அரவிந்தரைப்பற்றி எழுதியது அதிகம். ஆனால் அரவிந்தர் பாரதியைப்பற்றி எழுதியது குறைவு.

அரவிந்தர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் வறுமையைத் தாங்கிகொள்ளும் சக்தி பாரதிக்கு இருந்ததைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

இலந்தை

2013/9/18 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

N. Ganesan

unread,
Sep 18, 2013, 10:23:20 AM9/18/13
to santhav...@googlegroups.com

On Tuesday, September 17, 2013 9:46:16 AM UTC-7, இராஜ.தியாகராஜன் wrote:

அன்புள்ள இலந்தையார், ஹரியண்ணா அவர்கட்கு,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
அரவிந்தரின் சில கட்டுரைகளின் படி, பாரதிக்கு வங்க மொழியிம் தெரியும் என்பதாக புதுவை ஃப்ரஞ்ச் இன்ஸ்டிடியுடில் பணி புரிந்த திரு இராம்மோகன் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  விரைவில் ஆதாரத்தை அளிக்க முயலுகிறேன்.
 
முக்கியமான செய்தி. ”அரவிந்தர் பாரதியைப்பற்றி எழுதியுள்ளதெல்லாம் மிகவும் குறைவே” -
அரவிந்தர் பாரதியார் பற்றி எழுதியவற்றைத் தொகுக்கப்படவேண்டும்.
பாரதி பற்றி அறிஞர்கள் என்பது போன்ற தலைப்பில் பலர் எழுதியிருக்கிறார்கள்.
அவற்றிலும் அரவிந்தர் பாரதி பற்றி எழுதிய செய்திகள் இருக்கும்.

ஆதாரம் கிடைத்தால் படிக்கக் காத்துள்ளோம்.

நா, கணேசன்

Girija Varadharajan

unread,
Sep 19, 2013, 3:00:18 AM9/19/13
to santhavasantham

நான் இதுபற்றி அதிகம் அறிந்தவன் அல்லன்.  எனவே இது பற்றி விவாதிக்க வரவில்லை இன்கு. 

15-9-2013 அன்று இங்கே ஒரு கூட்டத்தில் கேட்ட செய்தி என்னைச் சற்று சிந்திக்க வைத்தது.  அதன் விளைவாக இங்கே ஒரு மடல் இட்டேன்.  பலர் விவரம் சொன்னீர்கள் . மிக்க நன்றி.

என்னுடைய ஆதங்கமே அவரவர் அந்தக் கவிஞன் மீது கொண்ட பக்தி மேலீட்டால் பாரதிக்கு 15 மொழி தெரியும் / 20 மொழி தெரியும் என்று ரீல் விடுகிறார்களே என்பது தான்.  இதன் உண்மை என்ன என்று கண்டறிய  ஆசைப்பட்டேன். அவ்வளவே.  
இது தொடர்பாக மேலும் சில செய்திகளை அறிந்து கொள்ளலாமே என்ற ஆர்வத்துடன்  கூகிளில் ” பாரதிக்குத் தெரிந்த மொழிகள் “ என்ற தலைப்பில் தேடினேன்.
அங்கு கண்ட ஒரு விவரம் கீழே: 

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடிய பாரதிக்கே நான்கு மொழிகள்தான் தெரியும். பதினெட்டு மொழிகள் தெரிந்த பேரா. ஹார்ட் சொன்னது அதிகாரபூர்வமாகவும் நடுநிலையாகவும் மிகச் செம்மையாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் அமைந்திருக்கிறது" என்று நெகிழ்கிறார் பேரா. மறைமலை.

சூட்சுமம் “ தெரிந்த” என்பதில் இருக்கிறதோ எனறு ஐயுறுகிறேன். எந்த அளவுக்குத் தெரிந்த? அந்த மொழிகளில் கவிதை இயற்றும் அளவிற்கா? அல்லது அந்த மொழியின் பயன்பாட்டில் உள்ள நுட்பங்கள் அனைத்தும் தெரிந்த வகையிலா? பேசத் தெரியும் என்ற அளவிலா? 
 (என் தங்கை 30 ஆண்டுகளாக தில்லியில் வசிக்கிறாள். அவளுக்கு ஹிந்தி ”தெரியும்” என்பது போன்ற தெரியும் அளவிலா- ஒரு ஹிந்திப் பத்திரிகை கூட அவளுக்கு வாசிக்கத் தெரியாது!. ( என் ஆப்த நண்பன் குமாருக்குத் தெலுங்கு தெரியும் . இது உண்மை தான். ஆனால் எழுத வராது. படிக்கவும் வராது.  இதுவும் ஒருவகைத் தெரியும் தான் !)  

இன்னும் இது பற்றித் தேடிக்கொண்டிருக்கிறேன்
 
வரதராசன். அ.கி 

K.R. Kumar

unread,
Sep 19, 2013, 3:14:44 AM9/19/13
to santhav...@googlegroups.com
சபாஷ்,

சரியான் தேடல்.!

ஏதேனும் விடை கிடைத்தால் உங்கள் கருத்துகளை இறுதியாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
குமார்(சிங்கை)

2013/9/19 Girija Varadharajan <girijavar...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Sep 19, 2013, 9:01:01 AM9/19/13
to சந்தவசந்தம்
Kindly go through the definition for literate.     If you apply that definition Bharathi knows more languages. It is not necessary that one should write poems in all languages one knows

He could write poems in the following languages.

Tamil
HINDI
SANSKRIT
ENGLISH
FRENCH.

HE COULD SPEAK IN
MALAYALAM AND TELUGU

HE COULD UNDERSTAND

MARATHI, KANNADA AND URDU

I  HAVE TRANSLATED SOME SANSKRIT POEMS.      THAT DOES NOT MEAN THAT I KNOW SANSKRIT VERY WELL. 

I HAVE USED OTHERS' TRANSLATIONS 

SIMILARLY BHARATHI COULD HAVE BROWSED BENGALI.

RAMASAMI

2013/9/19 Girija Varadharajan <girijavar...@gmail.com>

N. Ganesan

unread,
Sep 19, 2013, 9:30:58 AM9/19/13
to santhav...@googlegroups.com

On Thursday, September 19, 2013 12:00:18 AM UTC-7, AKV Rajan wrote:

நான் இதுபற்றி அதிகம் அறிந்தவன் அல்லன்.  எனவே இது பற்றி விவாதிக்க வரவில்லை இன்கு. 

15-9-2013 அன்று இங்கே ஒரு கூட்டத்தில் கேட்ட செய்தி என்னைச் சற்று சிந்திக்க வைத்தது.  அதன் விளைவாக இங்கே ஒரு மடல் இட்டேன்.  பலர் விவரம் சொன்னீர்கள் . மிக்க நன்றி.

என்னுடைய ஆதங்கமே அவரவர் அந்தக் கவிஞன் மீது கொண்ட பக்தி மேலீட்டால் பாரதிக்கு 15 மொழி தெரியும் / 20 மொழி தெரியும் என்று ரீல் விடுகிறார்களே என்பது தான்.  இதன் உண்மை என்ன என்று கண்டறிய  ஆசைப்பட்டேன். அவ்வளவே.  
இது தொடர்பாக மேலும் சில செய்திகளை அறிந்து கொள்ளலாமே என்ற ஆர்வத்துடன்  கூகிளில் ” பாரதிக்குத் தெரிந்த மொழிகள் “ என்ற தலைப்பில் தேடினேன்.
அங்கு கண்ட ஒரு விவரம் கீழே: 

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடிய பாரதிக்கே நான்கு மொழிகள்தான் தெரியும். பதினெட்டு மொழிகள் தெரிந்த பேரா. ஹார்ட் சொன்னது அதிகாரபூர்வமாகவும் நடுநிலையாகவும் மிகச் செம்மையாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் அமைந்திருக்கிறது" என்று நெகிழ்கிறார் பேரா. மறைமலை.

நான்கு மொழிகள் தெரிந்த பாரதி என்ற 2 மொழியியற் பேராசிரியர்கள் செய்தி தந்தமைக்கு நன்றி.

4 மொழிகள் என்ன? தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு என்பவையா?

இந்தி/உர்து, தெலுங்கு, ... பேசத் தெரிந்தவர் போலும். ஏதாவது அம்மொழிகளில் எழுதியுள்ளாரா?

நா. கணேசன்

Balasubramanian N.

unread,
Sep 19, 2013, 1:54:17 PM9/19/13
to santhav...@googlegroups.com

பாரதியின் இந்துஸ்தானிப்பேச்சின் சிறப்பை வ.ரா. குறிப்பிட்டிருக்கிறாரே?

2013/9/19 N. Ganesan <naa.g...@gmail.com>

Hari Krishnan

unread,
Sep 20, 2013, 12:09:23 AM9/20/13
to santhavasantham

2013/9/19 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

பாரதியின் இந்துஸ்தானிப்பேச்சின் சிறப்பை வ.ரா. குறிப்பிட்டிருக்கிறாரே?

ஏன் ஸ்வாமி!  காலங்காத்தால (அதான் நேத்திக்கு ராத்திரி தூங்கப் போன காலங்காத்தால) ஒமக்கு வேற வேலையே கிடைக்கலியா  ம்ம்?  குட்டிசெவுத்துல போயி கூப்பாடு போட்டா, அது எதிரொலிக்கவாவது செய்யும்.

இது வெறும் கீறல் விழுந்த இஎல்பி (எக்ஸ்ட்ரா லாங் ப்ளேயிங்) ரெகார்ட்.  இங்க வந்து பதில் சொல்லிட்டிருக்கீறே!  முனைவர் பாலு அவர்களுக்கு அப்படின்னு ஒங்களையும் முனைவர் வரிசைல சேத்துடுவார்.  அவர் பாஷைல முனைவர்னா நக்கல்னு அர்த்தம்.

வெம்பு மதகரிக் காயிரந்தான் வேண்டுமே.... வெம்பா சொல்லுது.:)

N. Ganesan

unread,
Sep 20, 2013, 9:32:32 AM9/20/13
to santhav...@googlegroups.com

On Thursday, September 19, 2013 10:54:17 AM UTC-7, nahupoliyan wrote:

பாரதியின் இந்துஸ்தானிப்பேச்சின் சிறப்பை வ.ரா. குறிப்பிட்டிருக்கிறாரே?

எழுதவில்லையா? இம் மடலில் கேட்டிருந்தேன்:
’இந்தி/உர்து, தெலுங்கு, ... பேசத் தெரிந்தவர் போலும். ஏதாவது அம்மொழிகளில் எழுதியுள்ளாரா?’

Hari Krishnan

unread,
Sep 20, 2013, 10:38:54 AM9/20/13
to santhavasantham

2013/9/20 N. Ganesan <naa.g...@gmail.com>

எழுதவில்லையா? இம் மடலில் கேட்டிருந்தேன்:
’இந்தி/உர்து, தெலுங்கு, ... பேசத் தெரிந்தவர் போலும். ஏதாவது அம்மொழிகளில் எழுதியுள்ளாரா?’
 
 ஆராய்ச்சி நூல்களைப் படிக்கவும்.  (நான் எழுதியிருப்பதையெல்லாம் தேடிப் படித்துக் கொள்ளவும் என்ற சொல்லும் அளவுக்கு எனக்குத் திமிர் போதவில்லை.  :D)

N. Ganesan

unread,
Sep 20, 2013, 10:55:05 AM9/20/13
to Santhavasantham
2013/9/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

2013/9/20 N. Ganesan <naa.g...@gmail.com>

எழுதவில்லையா? இம் மடலில் கேட்டிருந்தேன்:
’இந்தி/உர்து, தெலுங்கு, ... பேசத் தெரிந்தவர் போலும். ஏதாவது அம்மொழிகளில் எழுதியுள்ளாரா?’
 
 ஆராய்ச்சி நூல்களைப் படிக்கவும்.  (நான் எழுதியிருப்பதையெல்லாம் தேடிப் படித்துக் கொள்ளவும் என்ற சொல்லும் அளவுக்கு எனக்குத் திமிர் போதவில்லை.  :D)

நீங்கள் எழுதியதைப் படித்ததில்லை. ஆனால், இங்கிருப்போர் இந்தி/உர்து பாரதியார் எழுதியுள்ளாரா என்று விளக்குவார்கள் என நினைக்கிறேன்.

நா. கணேசன்
 
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--

N. Ganesan

unread,
Sep 20, 2013, 11:03:22 AM9/20/13
to santhav...@googlegroups.com
On Thursday, September 19, 2013 12:00:18 AM UTC-7, AKV Rajan wrote:
பாரதியார் 
(1) பிற மொழிகளைப் பற்றி எழுதிய செய்திகள்
(2) பிற மொழிகளில் பாரதியார் எழுதிய கட்டுரைகள்
இவற்றையெல்லாம் பாரதியார் வலைத்தளம் தொகுத்தால் பயனுடையதாய் இருக்கும்.

மொழியியற் பேராசிரியர்கள் கூற்றும் பாரதி ஆய்வுகளுக்கு உதவும். மொழியியலின்
படி பார்த்தால் பாரதியார் தமிழ் மொழியின் பிறப்பு பற்றிச் சொல்லியிருப்பவை
பொருந்துமா என்றும் பார்க்கவேண்டும்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Sep 20, 2013, 11:04:46 AM9/20/13
to santhavasantham

2013/9/20 N. Ganesan <naa.g...@gmail.com>

நீங்கள் எழுதியதைப் படித்ததில்லை. ஆனால், இங்கிருப்போர் இந்தி/உர்து பாரதியார் எழுதியுள்ளாரா என்று விளக்குவார்கள் என நினைக்கிறேன்.

ஆராய்ச்சி நூல்களைப் படிக்கவும்.  (நான் எழுதியிருப்பதையெல்லாம் தேடிப் படித்துக் கொள்ளவும் என்ற சொல்லும் அளவுக்கு எனக்குத் திமிர் போதவில்லை.  :D)

N. Ganesan

unread,
Sep 20, 2013, 11:11:08 AM9/20/13
to santhav...@googlegroups.com
On Friday, September 20, 2013 8:04:46 AM UTC-7, Hari Krishnan wrote:

2013/9/20 N. Ganesan <naa.g...@gmail.com>
நீங்கள் எழுதியதைப் படித்ததில்லை. ஆனால், இங்கிருப்போர் இந்தி/உர்து பாரதியார் எழுதியுள்ளாரா என்று விளக்குவார்கள் என நினைக்கிறேன்.

ஆராய்ச்சி நூல்களைப் படிக்கவும்.  (நான் எழுதியிருப்பதையெல்லாம் தேடிப் படித்துக் கொள்ளவும் என்ற சொல்லும் அளவுக்கு எனக்குத் திமிர் போதவில்லை.  :D)

பாரதி ஆராய்ச்சி செய்தாரா? ஹிந்தி/உர்து பற்றியா?

நா. கணேசன்
 
Hari Krishnan

unread,
Sep 20, 2013, 11:12:04 AM9/20/13
to santhavasantham

2013/9/20 N. Ganesan <naa.g...@gmail.com>

பாரதி ஆராய்ச்சி செய்தாரா? ஹிந்தி/உர்து பற்றியா?

நா. கணேசன்

Subbaier Ramasami

unread,
Sep 20, 2013, 11:16:12 AM9/20/13
to சந்தவசந்தம்
எங்களுக்குப் பாரதியார் கவிதையும் எழுத்துக்களும் போதும். தேவையில்லாமல் ஒன்றிலிருந்து ஒன்றைப்பற்றி விதண்டா விவாதங்களுக்குத் தளம் அமைத்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.

பாரதியார் தமிழைப்பற்றி எழுதியிருப்பது பொருந்துமா பொருந்தாதா என்பதெல்லாம் எங்களுக்குத்தேவையில்லை. அதையெல்லாம் ஆய்வு அறிஞர்கள் வேறு தளங்களில் முட்டி மோதிக்கொள்ளட்டும்.

இலந்தை

எதற்கெடுத்தாலும் உரசலா?

இலந்தை

2013/9/20 N. Ganesan <naa.g...@gmail.com>

--

N. Ganesan

unread,
Sep 20, 2013, 11:25:47 AM9/20/13
to santhav...@googlegroups.com
On Friday, September 20, 2013 8:16:12 AM UTC-7, Ram wrote:
எங்களுக்குப் பாரதியார் கவிதையும் எழுத்துக்களும் போதும். தேவையில்லாமல் ஒன்றிலிருந்து ஒன்றைப்பற்றி விதண்டா விவாதங்களுக்குத் தளம் அமைத்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.

உண்மை ஐயா.  முதலில் பாரதியார் எழுத்துக்களும், கவிதையும் போதும்.  ஹிந்தி/உர்துவில் ஏதாவது எழுதியுள்ளாரா பாரதி?
பாரதியார் எழுத்துக்கள் தமிழ், அவர் அறிந்த மொழிகளில் எழுதியவை பாரதியார் சங்கம், வலைத்தளம் தரவேண்டும்.

நா. கணேசன்

திரு. ஹரிகி ஆராய்ச்சி நூல்களைப் படிக்கவும் என்கிறார். நிச்சயம் படிக்கலாம். ஆராய்ந்தும் எழுதியுள்ளனர். சிலவற்றைப் படித்தும் இருக்கிறேன்.

Subbaier Ramasami

unread,
Sep 20, 2013, 11:31:39 AM9/20/13
to சந்தவசந்தம்
அதைப்போய் பாரதியார் ங்க வலைத்தளத்தில் எழுதுங்கள்.

இங்கே பாரதி அன்பர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் இது பாரதியாருக்கென்றே ஒதுக்கப்பட்ட தளமல்ல.

விவாதத்திற்கென்றே விஷயங்களைக் கிளப்பாதீர்கள்.

இலந்தை

2013/9/20 N. Ganesan <naa.g...@gmail.com>
On Friday, September 20, 2013 8:16:12 AM UTC-7, Ram wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages