நாடு வாழ வேண்டும் - மீ. விசுவநாதன்

0 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
12:58 AM (18 hours ago) 12:58 AM
to Santhavasantham, M. Viswanathan
"நாடு வாழ வேண்டும்"
     (மீ. விசுவநாதன்)

நாடு வாழ வேண்டும்
நலன்கள் ஓங்க வேண்டும்
தேடு செல்வம் ஞானம்
தேவைக் கேற்ப வேண்டும்
பாடு பட்டு வாழ்வோர்
பசியும் தீர வேண்டும்
வீடு பேறு இன்பம்
வீதி யெங்கும் வேண்டும்.

அன்பு கருணை நட்பு
அமுத மாக வேண்டும்
பன்மு கத்துக் கல்வி
பரவ லாக வேண்டும்
துன்பு நேர்ந்த போதும்
தூய சிந்தை வேண்டும்
நன்று கவிதை யாலே
நாவும் வாழ்த்த வேண்டும்.

நண்பர் கூட்டம் வேண்டும்
ஞான மார்க்கம் வேண்டும்
உண்மை தெய்வம் ஒன்றே
உணர்ந்து பழக வேண்டும்
பண்ணும் செயல்கள் யாவும்
பரமன் சரணம் என்றே
வண்ணம் கோடி கோடி
வகைகள் கூட்டி வாழ்வோம்.
(18.02.2026 11.18am)

Sai Ganesan H

unread,
1:08 AM (17 hours ago) 1:08 AM
to santhav...@googlegroups.com, M. Viswanathan
மிகவும் அருமை ஐயா! 

- சத்ய வேழன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tJB9hC1T0zgin1N6z3Pp9C-ekzL3RyZQ3ZyKyWDNPTDA%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
1:25 AM (17 hours ago) 1:25 AM
to Sai Ganesan H, Santhavasantham
நன்றி.
மீ.வி.

Siva Siva

unread,
8:46 AM (10 hours ago) 8:46 AM
to santhav...@googlegroups.com
Nice.

/வீடு பேறு இன்பம் வீதி யெங்கும் வேண்டும்./ = ?

/ அன்பு கருணை நட்பு
அமுத மாக வேண்டும் /

அரையடி ஈற்றில் நிறுத்திப் படிக்கவேண்டுமோ?

V. Subramanian


Ram Ramakrishnan

unread,
9:52 AM (9 hours ago) 9:52 AM
to santhav...@googlegroups.com
அருமை, திரு. மீ. வி. மிக உயர்ந்த சிந்தனை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 18, 2026, at 08:46, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages