திருமழிசைப் பிரான்
வானார் திருமழிசை வள்ளல் பிரான்பற்றித்
தேனார் நறுந்தமிழில் செப்பிடவே -நானார்?
இருந்தாலும் என் தமிழால் ஏலும் வகையில்
விருந்தாக நான்நல்கு வேன்
பாருலகில் எல்லாப் பகுதிக்கும் ஈடாகச்
சீருலவும் நல்ல திருமழிசை- பேருலவும்
அந்தப் பதியில் அவதரித்தார் செய்யதிருச்
சந்தம் கொடுத்த தகை.
ஆய்ந்ததவப் பார்க்கவர்க்கும் அற்புதமாய் நல்லழகு
ஏய்ந்த கனகாங்கி ஏந்திழைக்கும் - வாய்ந்த
திருவாழி அம்சமாய்ச் சீரார் மழிசைப்
பெருவாழ்வாய்ப் பூத்தார் பிரான்
தந்தையும் தாயும் தனியேக ஓர்புதரில்
அந்தக் குழந்தை அழுதிருக்க- அந்தவழி
வந்த ஜகந்நாதர் மாறா எழில்காட்டித்
தந்தார் அருளள்ளித் தான்
வாட்டும் பசிதீர் வரம்நல்கித் தன்மேனி
காட்டியவர் தாம்மறைந்த காரணத்தால்- மீட்டுமங்கே
தன்னைத் தான் காணும் தணியாத ஆர்வத்தால்
பின்னும் அழுதார் பிரான்.
பிள்ளைப்பே றில்லாப் பிரம்பறுப்பான் அங்கொருவன்
உள்ளம் வருந்தி உலைந்துவர- கொள்ள
விழுந்ததவன் காதில் மிகவோங்கி அங்கே
குழந்தை அழுத குரல்.
குரல்கேட்டே ஓடிக் குழந்தைதனை வாரி
வரம்பெற்ற பேராய் மகிழ்ந்து- பெருமன்பு
தோய்ந்த மனைவியிடம் தூக்கிப்போய்த் தான்கொடுத்தான்
பாய்ந்த தவள்முலைப் பால்.
பசிக்கா தவருக்குப் பாலெதற்கு? ஏதும்
புசிக்கா திருத்த புதுமை- இசைகேட்டே
எல்லோரும் வந்தங்கே ஏதோதெய் வீகமெனச்
சொல்லிப் பணிந்தார் தொழுது
வந்தவருள் அங்கோர் வயதான வேளாளர்
அந்தக் குழந்தை அடிபணிந்து- தந்திட்ட
பால்மட்டும் வாங்கிப் பருக அவர்மனைவி
சூல்கொண்டாள் ஈடுண்டோ சொல்?
பிள்ளை பிறந்திந்தப் பிள்ளைக்குத் தாசனாய்
உள்ளார்ந்த தொண்டால் உயர்ந்துவந்தான் - தெள்ளுதமிழ்
பாடும் கனிகண்ணன் பண்புத் திருப்பெயரான்
சீடனாய் வாழ்ந்தான் சிறந்து
ஏழு வயதெய்தியபின் இல்லில் இருக்காமல்
ஆழப் பொருளை அறிவதற்கே - சூழும்
சமயமெல்லாம் ஆய்ந்ததன்பின் சைவ மதத்தில்
அமைந்ததனைக் கொண்டார் அகம்.
தொடரு.ம்
அனந்த்
பி.கு. தட்டச்சு: புசிக்கா திருத்த/திருந்த புதுமை
> திருமழிசை.jpg
> 4KViewDownload
அன்புடன்,
தங்கமணி.
திருமழிசைப் பிரான்
வானார் திருமழிசை வள்ளல் பிரான்பற்றித்
தேனார் நறுந்தமிழில் செப்பிடவே -நானார்?
இருந்தாலும் என் தமிழால் ஏலும் வகையில்
விருந்தாக நான்நல்கு வேன்
பாருலகில் எல்லாப் பகுதிக்கும் ஈடாகச்
சீருலவும் நல்ல திருமழிசை- பேருலவும்
அந்தப் பதியில் அவதரித்தார் செய்யதிருச்
சந்தம் கொடுத்த தகை.
ஆய்ந்ததவப் பார்க்கவர்க்கும் அற்புதமாய் நல்லழகு
ஏய்ந்த கனகாங்கி ஏந்திழைக்கும் - வாய்ந்த
திருவாழி அம்சமாய்ச் சீரார் மழிசைப்
பெருவாழ்வாய்ப் பூத்தார் பிரான்
தந்தையும் தாயும் தனியேக ஓர்புதரில்
அந்தக் குழந்தை அழுதிருக்க- அந்தவழி
வந்த ஜகந்நாதர் மாறா எழில்காட்டித்
தந்தார் அருளள்ளித் தான்
நல்ல பாடல்கள்.
சில ஐயங்கள். கீழே காண்க.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009/1/28 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
திருமழிசைப் பிரான்
வானார் திருமழிசை வள்ளல் பிரான்பற்றித்
தேனார் நறுந்தமிழில் செப்பிடவே -நானார்?
இருந்தாலும் என் தமிழால் ஏலும் வகையில்
விருந்தாக நான்நல்கு வேன்
1) தேன் என்றாலே வாசனை அன்றோ?
தேன் என்றால் சுவையும் உண்டே!
பாருலகில் எல்லாப் பகுதிக்கும் ஈடாகச்
சீருலவும் நல்ல திருமழிசை- பேருலவும்
அந்தப் பதியில் அவதரித்தார் செய்யதிருச்
சந்தம் கொடுத்த தகை.
2) பாருலகு - எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?
பார் உலகு- நம் பார்க்கின்ற உலகு, ,
3) திருமழிசைப் பேருலவும்' என்று 'ப்' மிக வேண்டுமோ?
ஆய்ந்ததவப் பார்க்கவர்க்கும் அற்புதமாய் நல்லழகு
ஏய்ந்த கனகாங்கி ஏந்திழைக்கும் - வாய்ந்த
திருவாழி அம்சமாய்ச் சீரார் மழிசைப்
பெருவாழ்வாய்ப் பூத்தார் பிரான்
தந்தையும் தாயும் தனியேக ஓர்புதரில்
அந்தக் குழந்தை அழுதிருக்க- அந்தவழி
வந்த ஜகந்நாதர் மாறா எழில்காட்டித்
தந்தார் அருளள்ளித் தான்
4) குழந்தையை ஏன் விட்டுச் சென்றார்கள்?
5) 'அந்த வழி வந்த ஜந்நாதர்' என்பது போல் சொல்வது உண்டா? இது ஜகந்நாதர் எங்கோ போகும்பொழுது அவ்வழியாகப் போனார் என்பதுபோல் பொருள் அன்றோ?
திருமழிசை ஆழ்வார்-2
பார்க்கவன்தன் புத்திரனார் பண்பறிந்து வைணவத்தில்
சேர்க்கத் திருமழிசை சென்றங்கே- தீர்க்கமொடு
ஆசிரமம் ஒன்றை அமைத்திட்டார் பேயாழ்வார்
நேசத்தில் நெஞ்சம் நெகிழ்ந்து.
ஓட்டைக் குடத்தை உளுத்தகயி றால்கட்டி
மாட்டிக் கிணற்றின் மடியிறக்கி- தேட்டமுடன்
நீர்சேந்தி வேர்மேலாய் நிற்கவைத்த பூச்செடிமேல்
வார்த்திட்டார் நீர்பேயாழ் வார்.
பார்த்த திருமழிசைப் பக்தர் பரிகசித்தார்
ஆர்த்தார் பயித்தியமே ஆமென்றார்- நீர்யாரோ
பித்தரோ, இல்லையெனில் பேயரோ என்றந்த
உத்தமரைக் கேட்டார் உடன்
"என்செய்கை பித்தென்றால் எப்படியோ அவ்விடத்தில்
புன்செய்கை அன்றோ புகலுமென்றார்- தன்செய்கைக்
காரணத்தை ஞானமாய்க் காட்டிநின்ற பேயாழ்வார்
பூரணத்தைத் தொட்டுவிட்ட பூ.
வேதம் புராணம் விளங்கும் இதிகாசம்
ஏதும் தயங்கா தியம்புகிற - ஆதியினைப்
பூசனை செய்யாமல் போற்றியே நீர்சிவனைப்
பேசுவது தானன்றோ பித்து?
என்றுரைத்தார் பேயாழ்வார், இல்லை எனவெழுந்தே
மன்றில் மழிசைபிரான் வாதிட்டார் - அன்றங்கே
பேயாழ்வா ரின்வாதப் பெற்றியிலே மாறிவிட்டார்
காயாத நெஞ்சம் கனிந்து.
(திருமழிசைப்பிரான் வைணவராக மாறுவதற்கு முன் சிவவாக்கியர் என்றும் அவர் அப்பொழுது எழுதிய பாடல்கள் சிவவாக்கியர் பாடல்களாக விளங்குகின்றன என்றும் ஒரு வரலாறு உண்டு- ஞானவெட்டியான் அவர்களின் சித்தன் குழுமத்தைக் காண்க!)
யோக நிலையில் இருந்து மழிசைபிரான்
ஏகமாய் மாலையே எண்ணிவந்தார்- தேகம்
ஒளிவிட் டிருக்கின்ற ஓங்குநிலை பெற்றார்
தெளிவுற்ற சிந்தைத் திரு.
வானில் சிவனும் மனைவியுடன் செல்லுகையில்
ஊனில் ஒளிவிடும் உத்தம- ஞானியைப்
பார்த்தே எவரென்று பார்வதியும் தான்கேட்க
ஆர்வமாய்ச் சொன்னார் அவர்.
'முன்னாள் எனதடிமை, முற்றிலுமே தான்மாறி
இன்னாள் திருமாலை ஏத்துகிறான் - மன்னுகிற
இன்னரும் பண்புடையான் என்றே சிவன்சொல்ல
புன்னகைத்தாள் பார்வதியாம் பொன்.
நமக்குள் பிரிவில்லை, நம்மடியார் தம்முள்
குமையும் பகைமைகள் கொள்வார்- அமைகின்ற
உங்களுக் குள்ளே ஒருகோடி லீலைகளா
இங்கேயும் ஏனோ இது?
நல்லதொரு ஞானியெனில் நாம்காண வேண்டுமெனச்
சொல்லி உமையவளும் தோத்தரிக்க- வல்லவரைக்
காண இருவரும் காளையை விட்டிறங்கி
மாணுடையார் முன்நின்றார் வந்து.
வந்தவரைப் பார்த்தும் வணங்கா மழிசைபிரான்
கந்தலொன்றைத் தைத்திருந்த காட்சிகண்டு - பந்தமுடன்
இப்புறத்தே வந்த எமைஏன் வணங்கவில்லை
செப்புமெனக் கேட்டார் சிவன்.
உம்மால் எனக்காவ தொன்றுமிலை என்பதனால்
சும்மா இருந்து துணிதைத்தேன் - உம்மாலே
ஆகுமெனில் வீடுபே றின்றளிக்க, ஆகாதா?
ஏகுக என்றார் இவர்.
வேறு வரமேதும் வேண்டில் தருகின்றேன்
கூறும்" எனச்சிவனும் கூறிடவே - நூறு
வயதளிப்பீர் இல்லையெனில் வந்திங்கே தைக்கத்
தயவளிப்பீர் நூல்கோத்துத் தந்து.
என்று மழிசைபிரான் எள்ளி உரைத்ததுவும்
கொன்றன்ன கோபம் குமுறிவர - அன்றுசிவன்
நெற்றிக்கண் ணைத்திறந்தார், நேராய் மழிசைபிரான்
பற்றுந்தீ பற்றவைத்தார் பார்.
உத்தம ஞானியின் உண்மைத் திறமறிந்து
'பக்திசா ரர்' பட்டம் பாலித்தே- சித்தம்
களித்துச் சிவனளித்தார், , கண்டுபல சித்தி
அளித்து மகிழ்ந்தார் அரி..
அட்டமா சித்திகள் யாவும் மழிசைபிரான்
இட்டமா வந்தவர்க்கு ஏவல்செய- வெட்டியிலே
சோதித்த யாவருமே தோற்றுவிட சித்துகளின்
வாதத்தில் பெற்றார் வலம்.
தொடரும்
ஓங்கும் துவாபரத்தில் உற்றமுதல் ஆழ்வார்கள்
ஈங்குவந்து சேர்ந்த எழிலாண்டில்- பாங்குடைய
சித்தார்த்தி தன்னில் திகழ்தை மகநாளில்
இத்தரையில் பூத்தார் இவர்.
இலந்தை
தாழ்சடையும்
நீண்முடியும் ஒண்மழுவும்
சக்கரமும்,
சூழரவும்
பொன்னாணும் தோன்றுமால்,
சூழும்
திரண்டருவி
பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவு
மொன்றாய் இசைந்து.
யோக நிலையில் இருந்து மழிசைபிரான்
ஏகமாய் மாலையே எண்ணிவந்தார்- தேகம்
ஒளிவிட் டிருக்கின்ற ஓங்குநிலை பெற்றார்
தெளிவுற்ற சிந்தைத் திரு.
வானில் சிவனும் மனைவியுடன் செல்லுகையில்
ஊனில் ஒளிவிடும் உத்தம- ஞானியைப்
பார்த்தே எவரென்று பார்வதியும் தான்கேட்க
ஆர்வமாய்ச் சொன்னார் அவர்.
'முன்னாள் எனதடிமை, முற்றிலுமே தான்மாறி
இன்னாள் திருமாலை ஏத்துகிறான் - மன்னுகிற
இன்னரும் பண்புடையான் என்றே சிவன்சொல்ல
புன்னகைத்தாள் பார்வதியாம் பொன்.
நமக்குள் பிரிவில்லை, நம்மடியார் தம்முள்
குமையும் பகைமைகள் கொள்வார்- அமைகின்ற
உங்களுக் குள்ளே ஒருகோடி லீலைகளா
இங்கேயும் ஏனோ இது?
நல்லதொரு ஞானியெனில் நாம்காண வேண்டுமெனச்
சொல்லி உமையவளும் தோத்தரிக்க- வல்லவரைக்
காண இருவரும் காளையை விட்டிறங்கி
மாணுடையார் முன்நின்றார் வந்து.
வந்தவரைப் பார்த்தும் வணங்கா மழிசைபிரான்
கந்தலொன்றைத் தைத்திருந்த காட்சிகண்டு - பந்தமுடன்
இப்புறத்தே வந்த எமைஏன் வணங்கவில்லை
செப்புமெனக் கேட்டார் சிவன்.
உம்மால் எனக்காவ தொன்றுமிலை என்பதனால்
சும்மா இருந்து துணிதைத்தேன் - உம்மாலே
ஆகுமெனில் வீடுபே றின்றளிக்க, ஆகாதா?
ஏகுக என்றார் இவர்.
இலந்தை
On Jan 30, 12:14 am, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> குழந்தையை ஏன் வ்இட்டுச் சென்றார்கல் கேஏல்விக்குப்பதில்...
>
> read more »
>
> முன்னொரு காலத்தில் தொண்டை நாட்டில் மகிமை பொருந்திய இந்தத் திருமழிசைத்
> திருத்தலத்தில், முனிவருக்கும், இவரது பத்தினி கனகாங்கிக்கும் 12 திங்கள்
> கருவில் உருவாகி, சித்தாத்ரி ஆண்டு, தைத் திங்கள் தேய்பிறை கிருஷ்ணபட்சம்
> பொருந்திய பிரதமை திதியின் ஞாயிற்றுக்கிழமை அன்று மக நட்சத்திரத்தில்
> திருமாலின் ஆழி அம்சமாய் உடலில் எந்த உறுப்புகளுமே இல்லாத ஒரு சதைப் பிண்டம்
> பிறந்தது. மலையத்தனை வருத்தத்தை மனதில் கொண்டவர்களாய் அந்தப் பிண்டத்தை அருகில்
> இருந்த புதரில் வீசி எறிந்துவிட்டுச் சென்று விட்டார்கள் அந்தத் தம்பதியர்.
>
> திருமாலும், திருமகளும் அங்கு தோன்றி அந்தப் பிண்டத்துக்கு உயிர் கொடுத்து ஒரு
> அழகிய ஆண் குழந்தையாக மாற்றினார்கள். அவர்கள் மறைந்ததைப் பார்த்த குழந்தை
> அவர்கள் மீண்டும் தன் முன் தோன்ற வேண்டும் என்று பிடிவாதமாய் அழுதது. அங்கு
> வந்த திருவாளன் என்ற வயதான வேளாளன் அந்தக் குழந்தையைத் மகிழ்வுடன் எடுத்துச்
> சென்று தன் மனைவி பங்கஜவல்லியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னான்.
>
> திருமாலின் அருள் பெற்ற அந்தக் குழந்தை, பால் எதுவும் குடிக்காமல் சிறுநீர்
> கூடக் கழிக்காமல் அழுது கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட, அந்த ஊரில் சான்றோனான
> ஒரு முதியவர் வந்து பாலைக் கொடுக்க குழந்தை குடித்தது. அதில் இருந்த
> மீதிப்பாலைக் குடித்த ஆழ்வாரின் வளர்ப்புப் பெற்றோர்கள் வாலிபம் திரும்பி
> இளையவர்களாக மாறி கணிகண்ணன் என்ற குழந்தையை பெற்றார்கள். இந்தக் கணி கண்ணன்தான்
> திருமழிசை ஆழ்வாரின் பிரதான சீடர் ஆவார்.
>
> திருமழிசை ஆழ்வார் அஷ்டாங்க யோகம் செய்து இறைவனை அடையும் பொருட்டு சீக்கியம்,
> பௌத்தம் என ஏழுக்கும் அதிகமான மதங்களில் சேர்ந்தார். சைவ மதத்தில் சிவவாக்கியம்
> என்ற பெயருடன் சிவவாக்கியர் திருஆயிரம் என்ற பதிகத்தை இயற்றினார்.
>
> On 1/29/09, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > நல்ல பாடல்கள்.
>
> > சில ஐயங்கள். கீழே காண்க.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>
> > 2009/1/28 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>
> > --- Hide quoted text -
>
> - Show quoted text -
ஆணிப்பொன் செய்யும் அடைவுகளும்- காணுதற்கு
அப்படியே தந்தளித்து ஆற்றல்மிகு சித்துக்கள்
ஒப்பின்றிச் செய்தார் உயர்ந்து.
முதலாழ்வார் மூவருடன் மூல முதலின்
பதம்போற்றிப் பேரருளைப் பாடி- இதமாகச்
சிந்தித் தளாவி திருமயிலை யில்மீண்டும்
சந்தித்துச் செய்தார் தவம்.
அணியிளமை யானும் அடைவதற் காகக்
கணிகண்ணா பாட்டொன்று கட்டு- பணிக்கின்றேன்
என்றே அரசன் இயம்ப கணிகண்ணன்
கன்றிச் சிவந்தார்தம் கண்.
நாடு கடத்திவிட்டேன், நாளையே போவென்று
கூடும் சினமன்னன் கூறிவிட -சீடர்
மழிசைப் பிரானிடத்தே வந்து புகல
வழிசெய்தார் அந்த மகான்.
நானும் வருகின்றேன் நாதனையும் நாமழைத்து
ஆன இடமெல்லாம் யாம்செல்வோம்- ஏனமாய்
வந்தவன் நமது வழிவருவான் என்றிசைத்துப்
பந்தமுடன் பாடினார் பா.
"கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்"
மன்னன் அறிந்தோடி வந்தான், பதைபதைத்தான்
என்னபிழை செய்தேன்நான் என்றழுது - முன்னே
கணிகண்ணன் காலில் கதற, திறந்தார்
மணிநா மழிசையார் மன்.
"கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"
என்று மழிசைபிரான் இன்தமிழால் பாட்டிசைக்க
ஒன்றும் மறுக்கா துரைத்தபடி- சென்றவழி
மீண்டும் திரும்பிவந்து வெஃகாவைத் தானடைந்தார்
ஆண்டவனை ஆண்டாராழ் வார்
பேரிரக்கம் கொண்டு பெருந்தகையர் பாடியதால்
ஓரிரவு மாலிருந்த ஒண்பதியும்- ஓரிருக்கை
என்று பெயர்பெற் றிருக்கிறது, சான்றாக
அன்று நிகழ்ச்சிக் கது.
திருக்குடந்தை மாநகர்க்குச் செல்லுகிற போது
மருவாசம் வீசும் வழியில் - பெரும்புலியூர்
என்னும் பதிக்கே இவர்செல்லக் கேட்டதுவே
மன்னு மறைகீதம் வந்து
வேதம் ஒலித்திட்ட வீதியிலோர் வாயிலிலே
போதம் அளிக்கவந்தார் போயிருக்க - மாதவரைப்
பேதமாய்க் கண்டு பிறப்பைத் தவறெண்ணி
ஓதுதல் விட்டார் உடன்.
ஆழ்வார் அதைவிட் டகல மறைசொல்லச்
சூழ்வார் விட்ட தொடர்மறக்க - ஆழ்வார்
கருமனத்தர் நாணக் கருநெல் நகத்தால்
உரித்தங்கு போட்டார் உடன்
விட்ட தொடர்நினைவில் மேவிவர வேதியர்கள்
ஒட்டுமொத்த மாயங்கே ஓடிவந்தே - இட்டமுடன்
மாமுனியின் பாதம் வணங்கி அகமொன்றித்
தாமகிழ்ந்து நின்றார் தழைத்து.
யாகமொன்றை அவ்வூர் அடிகள் செயவிரும்பி
ஏகப் பெரிதாய் இயற்றுமுன் - யாகத்தில்
அக்கிர பூசையினை ஆழ்வார்க் கவர்செய்தார்
வக்கிரத்தார் தாம்செய்தார் வம்பு.
பேதுற்று நின்ற பெரும்புலி யூரடிகள்
தீதற்ற நெஞ்சத் திறமறிந்து - வேதத்தின்
மூலத்தை விண்ணோர் முழுப்பொருளை, கண்முன்னே
ஞாலத்தில் காட்டவெண்ணி னார்.
தொடரும்
ஓங்கு கின்ற செந்த மிழ்க்கு ளம்கொ டுக்கும் மாயவன்
வீங்கு பாற்க டல்கி டக்கும் வேத கீத மானவன்
தாங்கு கின்ற நாக மீது தான்கி டந்தி ருப்பவன்
ஆங்கு வந்து காட்சி நல்க ஆழ்வார் பாட்டுப் பாடினார்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமை யான கேசவன்
வாசம் மல்கும் வண்டு கிண்டு தண்து ழாய லங்கலான்
வீசு கின்ற மின்கொள் நேமி வீறு கொண்ட கையினான்
நேசம் கொண்டே காட்சி நல்க நெஞ்சப் பாட்டுப் பாடினார்
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினான்
சிங்க மாய தேவ தேவன் சேயன் ஆயன் மாதவன்
பொங்கு விண்க டந்த ஜோதி புண்ய கீர்த்தி ஆனவன்
அங்கு வந்து காட்சி நல்க ஆழ்வார் பாட்டுப் பாடினார்
கரும்பி ருந்த கட்டி யாய்க டல்கி டந்த கண்ணியன்
சுரும் பிருந்த தண்து ழாய்து லங்கு கின்ற மார்பினன்
அரும்ப லர்ந்த அல்லி யான்அ னந்த கீர்த்தி அச்சுதன்
விரும்பி வந்து காட்சி நல்க வேண்டிப் பாட்டுப் பாடினார்
சுருக்கு வாரை யின்றி யேசு ருங்கி வந்த வாமனன்
பெருக்கு வாரை இன்றி யேபெ ருக்க மெய்து பெற்றியான்
தருக்கு ராவ ணன்தன் தீமை சாய்த்து விட்ட வில்லினான்
சுருக்க வந்து காட்சி நல்கத் தூயர் பாட்டுப் பாடினார்
ஞால மேழும் உண்டு மண்டி ஆலிலைத் துயின்றவன்
கால நேமி காலனாய் கணக்கி லாத கீர்த்தியான்
வேலை மேலே வில்வ ளைத்த வெல்சி னத்த வீரியன்
கோல மாக வந்து காட்சி கூட்ட ஆழ்வார் பாடினார்
"அக்க ரங்க ளக்க ரங்க ளென்று மாவ தென்கொலோ?
இக்கு றும்பை நீக்கி யென்னை யீச னாக்க வல்லையேல்
சக்க ரங்கொள் கையனே சடங்கர் வாய டங்கிட
உட்கி டந்த வண்ண மேபு றம்பொ சிந்து காட்டிடே!"(இது ஆழ்வார் பாடல்)
என்று பாட உள்ளி ருந்த ஏந்தல் மார்பில் தோன்றினான்
நின்றி ருந்த பேர்கள் நெஞ்சில் நேச பாவம் ஊன்றினான்
கன்று தாய்நி னைந்த போது கண்ணின் முன்பு தோன்றலாய்
அன்று கண்ட பெற்றி பின்னும் யாவர் காண வல்லரே!
அங்கு விட்ட கன்று பின்ன ருட்கு டந்தை ஏகினார்
பொங்கு வெள்ளக் காவி ரிக்குள் போடத் தாமி யற்றிய
துங்க மாலை ஏட னைத்தும் தூக்கி வந்து வீசினார்
தங்கி நீந்தி வந்த நூல்கள் சந்தத் தோடந் தாதியே!
குடந்தை யில்கி டந்து ஜோதி கூட்டும் அந்த அண்ணலை
கிடந்த வாறெ ழுந்தி ருக்கக் கேட்டு ஞானி பாடவும்
கிடந்த மாலெ ழுந்தி ருக்க வாழி கேச னேயென
கிடந்த வாறெ ழுந்தி ருந்த கோலம் மாலும் மேவினான்.
மங்க லங்கொள் செந்த மிழ்ப்பா வாழ்த்தி ஏத்திப் பாடினார்
இங்கு வந்த காரி யங்கள் யாவும் தீர்ந்த தென்னவே
பொங்கு நாட லங்க ரிக்கப் போனார் ஆழ்வார் ஞானியே!
உன்னை யன்றி யில்லை நான்நீ என்னை யன்றி இல்லையே
உன்னை யன்றி தேவ னார்நான் பாட மாட்டேன் மானுடம்
உன்னை எட்டெ ழுத்தி னால்வ ழுத்து வார்விண் ஆளுவார்.
என்னப் போற்றும் ஆழ்வார் வாக்கு தீர்க்கம் என்றும் தீர்க்கமே!
இப்பாடல்களில் ஐயம் என்பதை விட, இவற்றுள் கூறப்படும் கருத்தை ஒட்டியே ஐயங்கள்!
மேற்சொன்னது உண்மையெனில்,
1) தான் சைவராக இருந்ததைப் பற்றித் திருமழிசையார் ஏதாவது பாடல்களில் குறிப்பிட்டுள்ளாரா?
ஓங்கு கின்ற செந்த மிழ்க்கு ளம்கொ டுக்கும் மாயவன்
வீங்கு பாற்க டல்கி டக்கும் வேத கீத மானவன்
தாங்கு கின்ற நாக மீது தான்கி டந்தி ருப்பவன்
ஆங்கு வந்து காட்சி நல்க அண்ணல் கீதம் பாடினார்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமை யான கேசவன்
வாசம் மல்கும் வண்டு கிண்டு தண்து ழாய லங்கலான்
வீசு கின்ற மின்கொள் நேமி வீறு கொண்ட கையினான்
நேசம் கொண்டே காட்சி நல்க நெஞ்சப் பாட்டுப் பாடினார்
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினான்
சிங்க மாய தேவ தேவன் சேயன் ஆயன் மாதவன்
பொங்கு விண்க டந்த ஜோதி புண்ய கீர்த்தி ஆனவன்
அங்கு வந்து காட்சி நல்க அண்ணல் பாட்டுப் பாடினார்
கரும்பி ருந்த கட்டி யாய்க டல்கி டந்த கண்ணியன்
சுரும் பிருந்த தண்து ழாய்து லங்கு கின்ற மார்பினன்
அரும்ப லர்ந்த அல்லி யான்அ னந்த கீர்த்தி அச்சுதன்
விரும்பி வந்து காட்சி நல்க வேண்டிப் பாட்டுப் பாடினார்
சுருக்கு வாரை யின்றி யேசு ருங்கி வந்த வாமனன்
பெருக்கு வாரை இன்றி யேபெ ருக்க மெய்து பெற்றியான்
தருக்கு ராவ ணன்தன் தீமை சாய்த்து விட்ட வில்லினான்
சுருக்க வந்து காட்சி நல்கத் தூயர் பாட்டுப் பாடினார்
ஞால மேழும் உண்டு மண்டி ஆலிலைத் துயின்றவன்
கால நேமி காலனாய் கணக்கி லாத கீர்த்தியான்
வேலை மேலே வில்வ ளைத்த வெல்சி னத்த வீரியன்
கோல மாக வந்து காட்சி கூட்டத் தூயர் பாடினார்
"அக்க ரங்க ளக்க ரங்க ளென்று மாவ தென்கொலோ?
இக்கு றும்பை நீக்கி யென்னை யீச னாக்க வல்லையேல்
சக்க ரங்கொள் கையனே சடங்கர் வாய டங்கிட
உட்கி டந்த வண்ண மேபு றம்பொ சிந்து காட்டிடே!"(இது ஆழ்வார் பாடல்)
என்று பாட உள்ளி ருந்த ஏந்தல் மார்பில் தோன்றினான்
நின்றி ருந்த பேர்கள் நெஞ்சில் நேச பாவம் ஊன்றினான்
கன்று தாய்நி னைந்த போது கண்ணின் முன்பு தோன்றலாய்
அன்று கண்ட பெற்றி பின்னும் யாவர் காண வல்லரே!
அங்கு விட்ட கன்று பின்ன ருட்கு டந்தை ஏகினார்
பொங்கு வெள்ளக் காவி ரிக்குள் போடத் தாமி யற்றிய
துங்க மாலை ஏட னைத்தும் தூக்கி வந்து வீசினார்
தங்கி நீந்தி வந்த நூல்கள் சந்தத் தோடந் தாதியே!
குடந்தை யில்கி டந்து ஜோதி கூட்டும் அந்த அண்ணலை
கிடந்த வாறெ ழுந்தி ருக்கக் கேட்டு ஞானி பாடவும்
கிடந்த மாலெ ழுந்தி ருக்க வாழி கேச னேயென
கிடந்த வாறெ ழுந்தி ருந்த கோலம் மாலும் மேவினான்.
தங்கி யங்கு யோகங் கூடித் தன்து ழாயன் தன்னையே
மங்க லங்கொள் செந்த மிழ்ப்பா வாழ்த்தி ஏத்திப் பாடினார்
இங்கு வந்த காரி யங்கள் யாவும் தீர்ந்த தென்னவே
பொங்கு நாட லங்க ரிக்கப் போனார் ஆழ்வார் ஞானியே!
உன்னை யன்றி யில்லை நான்நீ என்னை யன்றி இல்லையே
உன்னை யன்றி தேவ னார்நான் பாட மாட்டேன் மானுடம்
உன்னை எட்டெ ழுத்தி னால்வ ழுத்து வார்விண் ஆளுவார்.
என்னப் போற்றும் அண்ணல் வாக்கு தீர்க்கம் என்றும் தீர்க்கமே!
நிறைவு