சந்தக்குழிப்பு:
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தந்ததான
(திருப்புகழ் - பழனி
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி)
------------------------------------------------------------------------------------
ஆடுநட ராசனுடன் வாமியிட மேயமர
ஆதியயன் மாலவனும் ஒன்றுகூடி
ஆதபனி னாய்வதனி லாதுரமு மேவிடுமவ்
வாசலமு மோடிவிட லுந்தனாசி!
காடடவி மீதில்வரு வேடனுள மேநினது
காருணிய மானதொரு விந்தைதானே!
காழிநகர் வாவியதில் ஞானமுறு மாளுடையர்
காடகமும் மூடுமுமை தந்தபேறே!
தேடரிய நாவரசர் ஊறுபிணி யேயுறுவர்
சீலனவ னாதரவில் வென்றுசேர்வார்!
தேசுமவி நாசியதில் வாயுமிழும் வாரிடங்கர்
தேவனுனை ஓதிடிவ ரன்பினாலே!
நாடிமறை ஓதிடுநல் வாசகரின் நேசமதில்
நாடதனில் மாறுமொரி யெந்தையாலே!
நாசமில தாகிமன வாசைமுழு தாயழிய
நானுறவம் மோனவளர் மன்றுளோனே!
பதம் பிரித்துப் பொருளுரை:
ஆடும் நடராசனுடன் வாமி இடமே அமர
ஆதி அயன் மாலவனும் ஒன்றுகூடி
ஆதபனின் ஆய்வதனில் ஆதுரமும் மேவிடும் அவ்
ஆசலமும் ஓடிவிடல் உந்தனாசி!
(சிவபெருமானின் அடியையும் முடியையும் காண்பதற்காக பிரம்மனும் திருமாலும்
மேலேயும் கீழேயும் தேடி அலைந்த ஆய்வினில் (முயற்சியில்), அவர்களுக்கு
ஏற்பட்ட பரபரப்பும், அஞ்ஞானத்தின் விளைவான
துன்பமும்/அகந்தையும் ஓடி மறைந்து அவர்க்குத் தெளிவு ஏற்பட்டது இறைவனாகிய உன்னுடைய
பேரருளால்தான்!
வாமி - சிவகாமியாம் உமாதேவி
ஆதபன் – இறைவன் (இங்குச் சிவபெருமானைக் குறித்தது). ஆய்வதனில் (ஆடியும் முடியும் காணும் ஆய்வில், ஆதுரம் – பரபரப்பு., ஆசலம் – துன்பம் ஓடிவிடல் – அத்துன்பமும் அவர்தமக்கு நீங்குதன், உந்தனாசி – உந்தன் அருளேயாம்).
காடு அடவி மீதில் வரும் வேடன் உளமே நினது
காருணியம் ஆனது ஒரு விந்தைதானே!
காழிநகர் வாவி அதில் ஞானமுறும் ஆளுடையர்
காடகமும் மூடும் உமை தந்தபேறே!
(காட்டில் திரியும் வேடனாகிய திண்ணனின் (கண்ணப்பரின்) கரடுமுரடான நெஞ்சில் ஈசனின் பேரருள் புகுந்து ஆட்கொண்டது ஒரு பேரதிசயமாகும்! அதுபோல, சீகாழிக் குளக்கரையில் அழுத குழந்தை சம்பந்தருக்கு, ஆடை மூடிமறைத்து உமாதேவியார் ஞானப் பாலமுது ஊட்டி அருளுமாறு செய்ததும் உன்னுடைய பெருங்கருணையினால் கிடைத்த பேறேயாகும்!
அடவி – காடு.,
காடடவி – ஒருபொருட் பன்மொழி., காருணியம் – கருணை
காழிநகர் – சீகாழி என்ற நகர், வாவி – குளம், ஆளுடையர் – திருஞனசம்பந்தர்
காடகம் – ஆடை, சேலை., காடகமும் மூடும் உமை – இங்கு, உமாதேவி குழ்ந்தைக்குப் பாலமுது
ஊட்டியதைக் குறித்தது)
தேடரிய நாவரசர் ஊறுபிணியே உறுவர்
சீலந் அவன் ஆதரவில் வென்றுசேர்வார்!
தேசும் அவிநாசி அதில் வாய் உமிழும் வார் இடங்கர்
தேவன் உனை ஓதிடிவர் அன்பினாலே!
(தேடற்கரிய நாவன்மை கொண்டஅப்பர் பெருமான் தம்மை வருத்திய சூலை நோயை, நற்குணப் பெருமானாகிய ஈசனின் அருளால் வென்று அவனடி சேர்ந்தார்! ஒளிமிக்க அவிநாசித் தலத்தில், பெரிய முதலை விழுங்கிய சிறுவனை மீண்டும் உயிருடன் உமிழுமாறு சுந்தரமூர்த்தி நாயனார் செய்தது என, நாயன்மார்கள் நிகழ்த்திய அற்புதங்கள் அனைத்தும் இறைவனாகிய உன்மீது அவர்கள் கொண்ட தூய அன்பின் மிகுதியால் உன்னைப் போற்றித் துதித்ததனால் விளைந்தவையே ஆகும்!
தேடரிய – தேடர்கரிய நாவரசர் – நாவன்மை கொண்ட திருநாவுக்கரசர் ஊறுபிணி – சூலை என்னும் கொடு நோயால். சீலன் சிவபிரான். தேசும் – ஒளிபொருந்திய வாய் உமிழும் – இளம் பிள்ளையை விழுங்கிப் பின் உமிழும் வார் இடங்கர்- பெரிய முதலை. உனை ஓதிடுவர் அன்பினாலே – உன்னைப் போற்றுபவர் உன்னிடம் கொண்ட அன்பின் மிகுதியாலே).
நாடிமறை ஓதிடுநல் வாசகரின் நேசம் அதில்
நாடு அதனில் மாறும் ஒரி யெந்தையாலே!
நாசம் இலது ஆகிமன ஆசை முழுதாய் அழிய
நானுற அம் மோனம் வளர் மன்றுளோனே!
(வேதங்களின் பொருளுணர்ந்து பாடிய மாணிக்கவாசகரின் அன்பினாலே, நாட்டில் திரியும் நரிகளைக் குதிரைகளாக்கி அருளியது எம் தந்தையாகிய சிவபெருமானின் பேரருளாகும்! அழியாத சிவபேற்றினை அளித்து, என் மனத்தின் ஆசைகளை எல்லாம் முற்றிலும் போக்கி, அடியேன் மன அமைதி பெற்று உய்யும் வண்ணம் மௌன ஞானத்தை வளர்க்கும் பொன்னம்பல மன்றின் இறைவனே!
வாசகர் – மாணிக்க வாசகப்பெருமான் ஒரி – நரி. மாறும் ஒரி – நரி பரியாக(குதிரையாக) மாறியதைக் குறித்தது. மோனம் – உள்ளத்து அமைதி)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPL%3DAjPPABa5VoNT5sDwyRPFVDXh882R4XaG-OuAVzjrw%40mail.gmail.com.
On Jul 31, 2026, at 20:03, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
சந்தக்குழிப்பு:
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தந்ததான
(திருப்புகழ் - பழனி
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி)
------------------------------------------------------------------------------------
ஆடுநட ராசனுடன் வாமியிட மேயமர
ஆதியயன் மாலவனும் ஒன்றுகூடி
ஆதபனி னாய்வதனி லாதுரமு மேவிடுமவ்
வாசலமு மோடிவிட லுன்றனாசி!
காடடவி மீதில்வரு வேடனுள மேநினது
காருணிய மானதொரு விந்தைதானே!
காழிநகர் வாவியதில் ஞானமுறு மாளுடையர்
காடகமும் மூடுமுமை தந்தபேறே!
தேடரிய நாவரசர் ஊறுபிணி யேயுறுவர்
சீலனுன தாதரவில் வென்றுசேர்வார்!
தேசுமவி நாசியதில் வாயுமிழும் வாரிடங்கர்
தேவனுனை ஓதிடிவ ரன்பினாலே!
நாடிமறை ஓதிடுநல் வாசகரின் நேசமதில்
நாடதனில் மாறுமொரி தந்தவேளே
நாசமில தாகிமன வாசைமுழு தாயழிய
நானுறவம் மோனவளர் மன்றுளோனே!!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO7qcW5%2Bug6C_hm%3Dqo-N66A7maWA4yFpvioZ9iExrr%2Big%40mail.gmail.com.
On Aug 1, 2026, at 08:34, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMYPatEKhFQYYiDTHt0edVjjc916bNQrur%2Bf4DBGsBaYw%40mail.gmail.com.
On Aug 1, 2026, at 09:35, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttGgWkKcjag5TsAUb-sjd04XBeJnzFtB5avif72U5yftQ%40mail.gmail.com.