காடி, நெய் - சங்க இலக்கியத்தில் விளக்கெண்ணெய் (Castor Oil) பெயர்கள்

359 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 5, 2023, 6:13:57 PM5/5/23
to Santhavasantham
காடி, நெய் - சங்க இலக்கியத்தில் விளக்கெண்ணெய் (Castor Oil) பெயர்கள்
------------------------------------------------------------------------------------------------------------

பேரா. ச. கண்மணி கேட்டிருந்தார்:
> ஆமணக்கு என்ற புன்செய்ப் பயிர் பண்டை இலக்கியத்தில் இடம் பெற்று உள்ளதா?
> அதற்கு வேறு பெயர்கள் உள்ளனவா? தாய்த் தெய்வ வழிபாட்டில் முக்கிய இடம் பெறும்
> இத்தாவரத்தைப் பண்டை தமிழ் இலக்கியத்தில் காண... முயல்கிறேன்; முடியவில்லை. சக

நல்ல கேள்வி. யாரும் எழுதியதாய்த் தெரியவில்லை. சில ஆராய்ச்சிக் குறிப்புகள்.
தாய்த் தெய்வ வழிபாட்டில் விளக்கெண்ணெய் பற்றி எழுதவும். தொல்காப்பியத்தில்
விளக்கெண்ணெய் (Castor Oil) பற்றிச் சொல்கிறேன். அதனால், தாய்த்தெய்வ வழிபாட்டுக்கு
விளக்கெண்ணெய் (= ஆமணக்கு/கொட்டைமுத்து/முத்து எண்ணெய்) சங்க காலத்தில் பயன்படத்
தொடங்கியுள்ளனர்.

ஆமணக்கு - நிகண்டுகள் பதிவு செய்துள்ளன. எனவே, கி.பி. 5-ம் நூற்றாண்டு வாக்கில்
இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். ’ஆமணக்கு நட்டு ஆச்சாவாக்கல் ஆகாது' என்ற
பழமொழியை நச்சர்
சிந்தாமணி ( 2613) உரையிலே சொல்லியுள்ளார். ஆதளை, ஆமண்டம், ஏரண்டம் (< ஹேரண்டம் என
வடமொழி). மூலிகை அகராதிகளில் சுமார் 90+ பெயர்கள் கொட்டைக்கு உள்ளது.
இந்தியா முழுதும்
வழங்கும் சொற்கள் இறக்குமதி.

கொட்டைபரப்பு-தல் koṭṭai-parappu- , v. tr. < id. +. Lit., to sow
castor-oil seeds. To destroy completely, rase to the ground, as an
enemy's town; [கொட்டைமுத்து விதைத்தல்] பகைவரதுநாட்டை அழித்துத்
தரைமட்டமாக்குதல். திரிபுரஞ் சுட்டுக் கொட்டைபரப்புங் குரிசில்
(திருப்பு.).

https://www.kaumaram.com/thiru/nnt1198_u.html வட்ட முலைக்கச்சு - திருப்புகழ்
கொட்ட(ம்) மிகுத்திட்ட அரக்கர் பட்டணம் இட்டு நெருப்புக்
கொளுத்தி அத் தலை கொட்டை பரப்பச் செருக் களத்து
இடை அசுரோரைக் குத்தி முறித்துக்

https://www.kaumaram.com/thiru/nnt0319_u.html தசைதுறுந் தொக்கு ...
காஞ்சிபுரத் திருப்புகழ்
ஒற்றைக் கணை இட்டு எண் திரிபுரம் சுட்டுக் கொட்டை பரப்பும் குரிசில்
வந்திக்கக் கச்சியில் நிற்கும் கதிர் வேலா

தமிழ், மலையாளம் இரண்டிலும் சங்க காலப் பெயர்: *கொட்டை* (Castor Nut).
கொட்டைச் செடியின் கீழே
இலிங்கம் உள்ள ஊர்: கொட்டையூர். வடமொழியில்: ஹேரண்டபுரி. தேவாரம் உள்ள
தலம் இது. இலிங்கம்
கொட்டைமுத்தால் இயன்றது போல உள்ளது. பந்தாடுநாயகி, எங்கு இல்லாதவாறு
காலில் பந்தை ”உந்தீ! பற” என
உதைக்கிறாள். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பெரும்புலவர். அவரது
பிரபந்தங்களை உவேசா அச்சிட்டார்.
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடக, கொட்டையூர் சி. தேசிகர் பாடியது.

கொட்டைச் செடிக்கு உள்ள பெயர்களில் ஒன்று: ஆதளை. ஆதளை மாதுளைக்கும்,
ஆமணக்குக்கும் பெயர்.
இப்பெயர் பற்றி மட்டும் சொல்கிறேன். துவளை : துவளுவது. அடர்த்தியான
புதர்களாக உள்ள தாவரங்களுக்குத்
தமிழில் -துவளை என்று பெயரிட்டுள்ளனர். தூதுவளை, மாதுவளை, ...
தூதுவளை > தூதுளை/தூதுளம் என்று மூலச்சொல்லில் வகரம் மறைந்து வழங்குகிறது. அதுபோல்,
மாதுவளை - மாங்காய் போலக் காய்ப்பது. தொங்கிக்கொண்டிருக்கும் (துவளு-) வாதுகளில்
மாதுளங்காய் காய்க்கும். இது, ஸம்ஸ்கிருதத்திலே, மாதுளங்க- < மாதுளங்காய்
என்றாகிறது.
மாதுளையும், குலாம் காதிறு நாவலரும்:
https://abedheen.wordpress.com/2007/07/28/குலாம்-காதிறு-நாவலர்/
https://nagoori.wordpress.com/2014/08/03/துலுக்கச்சி-வயிற்றில்-மக/
Typically pomegranates are grown as a tree, but they can be grown as a
large bush by allowing suckers to grow, and keeping it pruned for
size.

கச்சபம்/கச்சவம் என்பது ஒரு வகை ஆமை. கச்சவ + ஆலயம் = கச்சாலயம். ராமநாதபுரம்
சேதுபதிகளின் கச்சவத்தீவு > கச்சத்தீவு ஆகிவிட்டது. காரைக்குடி மணி
நேற்று மறைந்துவிட்டார். அவர் முழவக்குன்று (> முழக்குன்னு) என்னும் கேரள
துர்க்கை கோவிலை பிரபலப்படுத்தியவர். (1) கச்சவத்தீவு > கச்சத்தீவு (2)
முழவக்குன்று > முழக்குன்னு (3) தூதுவளை > தூதுளை (4) மாதுவளை > மாதுளை
... சொன்முதல் ம் மறைந்து ஆதளை என்ற பெயர் உருவாகியுள்ளது. மாதுளைச் செடி
போல் இருப்பதலால், ஆதளை என்ற பெயர் கொட்டைச் செடிக்கும் வந்துள்ளது.
துவளு-தல் பொருளில், ஆதளைமாதளை - n. Redupl. of ஆதளை. Bewilderment;
மயக்கம். (W.). துவண்டுவிடுதல்.
மாதுளை > ஆதுளை/ஆதளை. சொன்முதல் ம்- மறையும் உதாரணங்கள்:
https://groups.google.com/g/santhavasantham/c/34ebzqoFK64/m/ZfjCNyGKCgAJ

காடி, நெய் - சங்க இலக்கியத்தில் விளக்கெண்ணெய் (Castor Oil) பெயர்கள்
------------------------------------------------------------------------------------------------------------

மனிதன் உட்பட எல்லா விலங்கு, பறவைகளின் தசையில் பரவியிருப்பது: நெய்.
நெய்யுடன் அரத்தம் (ரத்தம்) இருப்பதால், நெய்த்தோர் என ரத்தத்தை
பாகிஸ்தான் பிராகுவி பாஷையில் இருந்து தமிழ் (நற்றிணை; DEDR 3748) வரை
அழைப்பதுண்டு. வேட்டையாடிய ஊனை முரியடுப்பு (skewer-oven, முரி - skewer)
போன்றவற்றில் அடும்போது மனிதன் கண்டறிந்தான். “பைம் நிணம் ஒழுகிய நெய்ம்
மலி அடிசில்” (குறி.). பின்னர், பாவு, ஊடு கொண்டு சீலை நெய்தான். நெய்-
பரப்புதல். எனவே, நெய்தல் தொழில் நெசவு ஆயிற்று. இயைவது இசை, நெய்வது
நெசவு.

(a) *காடி*: விளக்கெண்ணெய் அமிலத்தன்மை நிறையக் கொண்டது. Castor oil, a
mixture of triglycerides in which about 90% of fatty acids are
ricinoleates.இன்றும், அமிலத்தன்மை அதிகம் கொண்ட வார்னிஷ் “காடிநெய்” என
மொழிபெயர்க்கின்றனர்.
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0006231_கலைச்சொற்பட்டி-க.pdf
(பக். 65, 1972).

அமிலத்தன்மை மிக்க விளக்கெண்ணெயைக் காடி எனச் சங்க காலத்தில்
வழங்கியுள்ளனர். இன்றும், வடு மாங்காய் ஊறுகாய் போடுபோது
விளக்கெண்ணெய்தான் பயனாகிறது. பெரும்பாணாற்றுப்படை வரியை விளக்கும்போது
நச்சினார்க்கினியர் இதனை விளக்கியுள்ளார்.

ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் 50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப
கோழி சேக்கும் கூடு உடை புதவின்
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி
நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த 55
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
*காடி வைத்த கலன்* உடை மூக்கின் - பெரும்பாண்.

(தாளிப்பனையோலையால் செய்த)பாய் வேய்ந்த, (வழியை)அறைக்கும் விளிம்புகள்
கொண்ட வண்டி- 50
யானை(புனத்தில் தின்னாமல்) காக்கின்றோர் (இதண் மேல் கட்டின)குடிலைப் போன்ற,
கோழிகள் தங்கும் கூட்டை உடைய (குடிலின்)வாயிலில்,
(மூங்கில்)முளை(போன்ற) கொம்பினையுடைய கரிய பிடியின் முழந்தாளை ஒக்கும்,
துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலைத் தொங்கும்படி தூக்கி,
நாடக மகளிர் (தாம்)ஆடும் களத்தில் கொண்டுவந்த 55
வார்ப்பிணிப்பு இறுகின இனிய இசைக்கருவி(யான முழவை) ஒப்பக் கயிற்றால்
(சுற்றிக்)கட்டி,
காடி வைத்த மிடாவினுடைய மூக்கணை மீதிருந்து, ~ ப. பாண்டியராஜா, மதுரை.

இங்கே, காடி - நெய் (அதாவது விளக்கெண்ணய்.) ஏனெனில், எருமை/மாட்டு
வெண்ணெய் உருக்கும் நெய் அமிலம் இல்லாதது: “Ghee is lactose and
casein-free, and it contains butyrate, which makes it an alkaline food
by default.” இந்த மிடாவிலே நெய்யை, அதாவது விளக்கெண்ணெயைக் கொண்டு
செல்வது வழக்கம் என்பதை மேலும் வரும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

“யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர்
மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும்” - கலித்தொகை.

“ஆடவர் எவருக்கும் இவள் அணங்கான வருத்தும் தெய்வமாக அமைவாள் என்று
ஊர்ப்பெண்கள் மோர் வேண்டாம், புளிப்புக்கு விளக்கெண்ணெய் (காடி) ஊறும்
வடு மாங்காய் ஊறுகாய் ஒன்று போதும். அதையே வைத்துக்கொள்வோம்”

காடி வெள் உலை கொளீஇ நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி
மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை - புறம் 399.

விரால் மீன் குழம்பு செய்யும் போது, விளக்கெண்ணெய் (காடி) விட்டுத்
தாளித்து, புளிப்புக்கு மாங்காய்ப் புளியைச் சேர்த்துச் சமைத்தனர்.

”பரல் வறை கருனை காடியின் மிதப்ப” - பொருநராற்றுப்படை
பருக்கைக் கற்களைப் போன்ற கருனைக் கிழங்கின் துண்டங்களை விளக்கெண்ணெயில்
(காடியில்) வறுத்து எடுத்து.

நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் - பெரும்பாண்

இங்கே வடுமாங்காய் ஊறுகாய் - விளக்கெண்ணய் (காடியில்) ஊறிக்கொண்டிருப்பது
- சேர்த்துப் பாணர்க்கு அளிப்பது பேசப்படுகிறது.

(b) நெய் = விளக்கெண்ணெய், மருத்துவத்தில்.
--------------------------------------------------------------------

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி -நற்றிணை

ஈன்றணிமையின் மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க,
வெண்சிறுகடுகை அரைத்து அப்பி, விளக்கெண்ணெய் பூசிக் குளித்த, ஈர உடை தரித்த,

கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ்
விளங்கு நகர் விளங்க கிடந்தோள் குறுகி
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி 5
திதலை அல்குல் முது பெண்டு ஆகி - நற்றிணை

வருக! பாணனே! சிறிது சிரிப்போம்! நேரிய இழை அணிந்த நம் தலைவி
தன் சுற்றத்தைச் சூழ உடைய முதிர்ந்த சூல் கொண்டு நம் குடிக்கு ஒரு
புதல்வனை ஈன்று உதவினாள்;
நெய்யோடு பளிச்சிடும் வெண்சிறுகடுகின் திரண்ட விதைகள்
பளிச்சென்ற நம் மாளிகையில் பேய்க்காப்பாக எங்கும் சிதறிக்கிடக்கப்
படுத்திருந்தோளின் அருகில் சென்று
புதல்வனை ஈன்றதனால் தாய் என்னும் வேறொரு பெயரைப் பெற்று, அழகிய வரிகளும்
அழகுத்தேமலும் உடைய அல்குலுடன் முதும்பெண் ஆகித்

பேய்க்காப்பாக, விளக்கெண்ணெயும், சிறுகடுகும் சேர்ந்து, மகப்பேறு
உற்றவளைக் குளிப்பாட்டி,
விளக்கெண்ணெய், கடுகு இரண்டையும் கலந்து மனை எங்கும் வீசினர். அணங்குகள்
அண்டாது இருக்கச்
செய்வதாகும்.

சில்- > தில்- திலம் ‘எண்/எள்’ > தைலம் (தத்திதாந்தப் பெயர்). இது
எள்நெய். இறப்போடும், பேயோடும் தொடர்புடையது. பேய்க்காப்பாக,
பயனாவது விளக்கெண்ணெய் தான். எள்ளில் வரும் எண்ணெய் அன்று என்பது
குறிப்பிடத்தக்கது. கம்பன் மண்டோதரி இராவணன் மாய்ந்தபின் அழுது அரற்றும்
போது “எள்ளை’ பயன்படுத்துவான். கள்ளிருக்கும் கூந்தல் சானகியை ....
உழுந்து மங்களகரமானது என்பது தமிழர் கொள்கை. எனவே சீதாகலியாணப் பாட்டில்
உழுந்து பற்றிச் சொல்வான் கம்பன்.

நெய் என்ற சொல்லைத் தொல்காப்பியர் இரண்டே இடங்களில் தான் ஆளுகிறார்.
இரண்டும் இந்த மகப்பேற்று மங்கல நிகழ்ச்சியின் போது தான். எனவே,
தொல்காப்பியத்தில், நெய் = விளக்கெண்ணெய் என்பது தெளிவு.

புதல்வன் பயந்த புனிறு தீர் பொழுதின்
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும்
செய் பெரும் சிறப்பொடு சேர்தல்-கண்ணும் - தொல். கற்பியல். 5

“அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்
கயந்தலை தோன்றிய காமர் நெய் அணி
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ” -தொல். கற்பியல். 6

கயந்தலை - புதல்வன். புதல்வன் தோன்றிய நெய்யணி நயந்த கிழவனை

தாய்த்தெய்வ வழிபாட்டில் கொட்டை நெய் மிக முக்கியமாக விளங்குகிறது. இது,
குழந்தை பிறக்கும் மகப்பேறு காலத்தில் மருத்துவர்களுக்கு மிகப் பயன்படும்
நெய்யாக இருப்பதால் ஆகும்.

சனி நீராடு - ஔவை. இது விளக்கெண்ணெய் தலை, உடலில் தேய்த்துக் குளிப்பதாகும்.
https://elephantbeans.wordpress.com/2009/10/22/pamper-yourself-diy-castor-oil-bath/
https://tamil.asianetnews.com/health/uses-of-the-castor-castor
https://www.yogachikitsa.net/tag/castor-oil-bath/

மகப்பேறு மருத்துவத்தில் நெய் (தொல்காப்பியம்; விளக்கெண்ணெய்)
https://pubmed.ncbi.nlm.nih.gov/23881775/
Castor oil, bath and/or enema for cervical priming and induction of labour
Background: Castor oil, a potent cathartic, is derived from the bean
of the castor plant. Anecdotal reports, which date back to ancient
Egypt have suggested the use of castor oil to stimulate labour. Castor
oil has been widely used as a traditional method of initiating labour
in midwifery practice. Its role in the initiation of labour is poorly
understood and data examining its efficacy within a clinical trial are
limited. This is one of a series of reviews of methods of cervical
ripening and labour induction using standardised methodology.

நெய் எனத் தொல்காப்பியர் அழைக்கும் ஆமணக்கு எண்ணெய், பிள்ளைப்பேற்றில்
எவ்வாறு பயனாகிறது என்னும் ஆய்வுக் கட்டுரை:
https://www.aranejournal.com/article/6036

எண்ணெய் (தைலம்) என்றால் எள் நெய். பெருவழக்காக, Oil என்பதற்கு எண்ணெய்
பயன்படுத்துகிறோம். இது இறப்பு, அணங்கு போன்றவற்றோடு தொடர்புடையது. எனவே,
திருவரங்கம் போன்ற ஊர்களில், தன்வந்திரி மருத்துவர் கோவிலில், எள்ளின்
எண்ணெய் விளக்குக்கு ஆகாது. கொட்டைமுத்து நெய் தான் அங்கே.
https://temple.dinamalar.com/news_detail.php?id=46822

நா. கணேசன்

மட்டக்களப்பு மக்களின் மகப்பேற்று நம்பிக்கையுடன் தொடர்புடைய பெண் தெய்வ வழிபாடுகள்
https://www.aranejournal.com/article/6036
மருத்துவிச்சியும் மகப்பேற்றுச் சடங்குகளும்
மேகலா சிவகுமாரன், விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, கிழக்குப்
பல்கலைக்கழகம், இலங்கை

பண்டைக்காலங்களில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் என்பது வீடுகளிலே
இடம்பெற்றது. இதனால் மகப்பேறுடன் தொடர்புடைய மருத்துவிச்சி முறைமையும்;
அவ்வவ் பிரதேச மக்களின் வழிபாட்டு பாரம்பரியங்களோடு பிணைப்புற்றிருந்தது.
தமிழர் பண்பாட்டில் வாட்டு கங்காணி, குடும்பநல உத்தியோகத்தர் பதவிகள்
அறிமுகமாகும் வரை ஒவ்வொரு கிராமங்களிலும் மருத்துவிச்சிகளே
மருத்துவர்களுக்கான இடத்தினை வகித்தனர்.

மருத்துவிச்சி முறைமை என்பது ஒரு வகையான வைத்திய முறை என்பதனையும்
கடந்து, உறவு முறையாக அமைகிறது. கர்ப்ப பாலத்தில் தாய் சேய்க்கான
பயத்தைப் போக்கி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலிமையோடு இருப்பதற்கு
வழிசெய்கிறது. மருத்துவிச்சிமாரை பொறுத்தவரை அனுபவமும், தீர்க்கதரிசன
பார்வையும், மனவலிமையும், கர்ப்பிணியை ஆற்றுப்படுத்தும் விதமும், பிரசவ
வலியால் துடிக்கும் பெண்களை கையாளும் விதமும் முக்கியமானது. கர்ப்பிணி
பெண்ணுக்கு வலியெடுத்ததும் ஊரிலுள்ள மருத்துவிச்சி அழைத்துவரப்படுவாள்.
தனது அனுபவத்தாலும் தன்னம்பிக்கையாலும், உடல் உள பலத்தாலும்
சுகப்பிரசவங்களைப் பெற்றுத்தருபவள். இத்தகைய மருத்துவிச்சி முறைமையிலும்
வழிபாட்டு மரபுகள் கலந்துள்ளன. மருத்துவிச்சி கர்ப்பிணித் தாயின்
அடிவயிற்றில் ஆமணக்கு எண்ணெய் தடவுதல் ஒரு மருத்துவமுறையாகும்.
மட்டக்களப்பு பகுதிகளில் மந்திரம் கூறி சுழுக்கு பார்த்தல் இடம்பெறுவது
போல் பிரசவவலி ஏற்பட்ட பெண்ணுக்குக்கு மருத்துவிச்சிமார் மந்திரம் கூறியே
எண்ணெய் தடவியுள்ளனர். அத்தோடு தண்ணீரும் ஓதிக்கொடுத்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக

“ஓம் தெட்சண பஞ்சாட்சரி ஆதி மூர்த்தி அலங்கார மோகினி
இருட்டறையிலிருக்கின்ற இந்திர மோகினி வயிற்றில் கெற்பம்
தரித்து ஒரு படி கடந்து இருபடி கடந்து முற்படி கடந்து
நாற்படி கடந்து ஐம்படி கடந்து அறுபடி கடந்து ஆறாம்படிக்குள்ளே
ஆத்தனைத் தொழுது வாறாள் மோகினி வயிற்றில்
மறிபட்ட மாவும் பிள்ளையும் வழுகி விழவே சுவாஹா” (சர்வேஸ்வரன்., ஆரையம்பதி
வடபத்திரகாளி கோயில்:மந்திரஏடு) எனும் மந்திரம் உச்சரித்து தண்ணீர்
ஓதிக்கொடுக்கப்பட்டது. இன்னும் சிக்கலாகி பிரசவம் தாமதிக்கும் போது
பூசாரியை அழைத்து கடப்பில் தேங்காய் வெட்டுதலும் இடம்பெற்றது. அத்தோடு
பத்திரகாளிக்கும் அனுமருக்கும் மடை வைத்து தண்ணீர் ஓதிச் சொரிவர்.
இவ்வாறு மருத்துவிச்சியுடனும் மந்திர வழிபாட்டு முறைகள் பிணைப்புற்று
விளங்கியுள்ளன.

வழிபாடுகளுடன் வழக்காறுகளும் ஒன்றியிருந்தமையை மருத்துவிச்சி முறைமையில்
காணமுடிகின்றது. பிரசவமானதும் பிரசவித்த தாய் அணியும் சேலைக்கு மாத்துச்
சேலை என்று பெயர். இம்மாத்தினை ஊர்க்குடிமகனிடமிருந்து பெற்று அணிவர்.
இன்றும் இவ்வழக்கினை மட்டக்களப்பின் சில கிராமங்களில் கட்டாயம்
கடைப்பிடிக்க வேண்டிய வழமையாக மேற்கொண்டுவருகின்றனர்.
மருத்துவிச்சியானவள் பிறந்த குழந்தை ஆணாக இருந்தால் உலக்கையையும்,
பெண்ணாக இருந்தால் விளக்குமாற்றையும் கூரைக்கு மேல் எறிவாள். இவ்வாறான பல
வழமைகளும் இடத்திற்கிடம் சில மாறுபாடுகளுடன் இடம்பெற்றுள்ளன.

lns2...@gmail.com

unread,
May 6, 2023, 7:26:13 AM5/6/23
to சந்தவசந்தம்
விளக்கெண்ணைய்க்கு வடமொழியில் ஆமண்ட (आमण्डः), ஏரண்ட (एरण्डः) என்ற இரண்டு சொற்களையும் பொதுவாக காணலாம்.

அன்புடன்,

Srini

N. Ganesan

unread,
May 6, 2023, 8:58:28 AM5/6/23
to vall...@googlegroups.com
On Sat, May 6, 2023 at 4:15 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> ///”பரல் வறை கருனை காடியின் மிதப்ப” - பொருநராற்றுப்படை

> பருக்கைக் கற்களைப் போன்ற கருனைக் கிழங்கின் துண்டங்களை விளக்கெண்ணெயில்
> (காடியில்) வறுத்து எடுத்து./// Dr.Ganesan wrote...
> கருனை என்பது கருணைக்கிழங்கு அன்று. அது உண்ணும் போது பக்கவுணவாக (side dish) அமையக் கூடியது.
> வறை = நன்கு காய்ந்த விலங்கிறைச்சி = வாடூன்.
> உப்புக்கண்டத்தை எண்ணெயில் மூழ்க வறுத்து உண்டமை
> சக

வறை. வறு-த்தல் என்னும் வினையில் பிறக்கும் தொழிற்பெயர். எது வேண்டுமானாலும் இருக்கலாம். வாடூன் என்றே கொள்ளலாம்.
அல்லது, அப்போது வேட்டையாடிய இறைச்சி (வாடா ஊன்) என்றும் சொல்லலாம். கருனை - விளக்கு எண்ணெயில் வறுக்கையில்
கருகிய என்பது பொருத்தமாக உள்ளது.

“மண்டைய கண்ட மான் வறை கருனை” – புறம் 398/24
தான் உண்ணும், மண்டையிடத்துத் துண்டித்த மான் இறைச்சியாகிய வறுத்த பொரிக்கறியையும்

இன்னொன்று: சைவ உணவாக இவ்வடியைக் கொள்கிறார் பொ. வே. சோம சுந்தரனார்:

”ஈண்டுப் பரல் என்றது பலா அல்லது அவரை முதலியற்றின் விதையை. ” பொ. வே. சோ.
”பரல் வறைக் கருனை காடியின் மிதப்ப”  - பலாக் கொட்டை போன்றவற்றைக் கருக (கருனை)
விளக்கெண்ணயில் (காடி) வறுத்தெடுத்த பொரிக்கறியைக் கூட்டி.

காடி - அமிலத்தன்மை மிக்க கொட்டைமுத்து நெய். நெய் என்றே அழைப்பார் தொல்காப்பியர்.
எள்நெய் தான் அளவில் அதிகம். மங்கல நிகழ்ச்சிகளில் எள்நெய் தவிர்ப்பதும் உண்டு. அங்கே
நெய் (castor oil) பயன்படுத்தியுள்ளனர். சனி நீராடு - இதனை மங்கலஸ்நானம் என்பர்.
நாவிதன் (மருத்துவன்) (அ) மருத்துவிச்சி உதவுவர். மங்கலன் என்ற பெயர் பரியாரிக்கு
உண்டு. மங்கல வாத்தியம் என்னும் நாகஸ்வரம் கோயில்களில் வாசிக்கும் பாணர்
வகையினர். சிந்தாமணி, நச்சர் உரை போன்றவற்றில் காண்க. கலியாணங்களில்
மங்கல வாழ்த்துப் பாடும் பாணர்கள்.

’ஆமணக்கு நட்டு ஆச்சாவாக்கல் ஆகாது' என்ற பழமொழியை நச்சர் சிந்தாமணி ( 2613) உரையிலே சொல்லியுள்ளார்.
இதனை ஒத்த பழமொழி ஹிதோபதேசத்தில் உள்ளது.

NG

>
> On Sat, 6 May 2023, 10:25 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
>>
>> Thank you Dr.Ganesan.
>> மிகவும் பயனுள்ள செய்திகள்.
>> இப்படிப் பெயரும் பொருளும் இருப்பது எனக்குப் புதுச்செய்தி. பொழுது கிடைக்கும் போது நிதானமாக. மீண்டும் படிக்க வேண்டும். அருமை
>> மிக்க நன்றி.
>> சக
>>>

N. Ganesan

unread,
May 6, 2023, 3:50:29 PM5/6/23
to Santhavasantham, Kannan Natarajan, Arul Natarajan, Dr.Krishnaswamy Nachimuthu, George Hart, Theodore Baskaran, sivasub...@sivasubramanian.in, Subramanian T S, K Rajan
முனைவர் சி. திருஞானசம்பந்தம்:
> அருமை, ஐயா!

ஐயவி என்னும் வெண்கடுகினை அரைத்தும், இரைத்தும் பேய், அணங்கு இவைகளுக்குக் காப்பாகச் செய்வது மிகப் பழங்காலத்தில் இருந்து இந்தியா முழுமையும் உள்ளது. இன்னும் விரிவாக ஆராய வேண்டிய செய்தி இது. சிந்து சமவெளிக்கும், தமிழர் வானியலுக்கும் உள்ள தொடர்புகளை விரிவாகப் பல ஆய்வுக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். உ-ம்: தாய்த் தெய்வம் கொற்றவை வரலாறு, 4700 ஆண்டுகளாய்த் தெரிகிறது. 7 கட்டுரைகளின் வலைக்கண் இங்கே அளித்துள்ளேன், வாசிக்கலாம்: https://twitter.com/naa_ganesan/status/1633327350342459392

ஐயவி என்னும் வெண்கடுகு பேய், அணங்கு என்னும் தீய ஆற்றலை அணுகாவண்ணம் செய்வது என்னும் நம்பிக்கை, சிந்துவெளித் திராவிட மக்களிடம் இருந்து பிற்காலங்களில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் சென்றுள்ளது. நல்ல ஜர்னலில் யாராவது முழுமையாக இதுபற்றி ஆய்வுக்கட்டுரை எழுதவேண்டும். பல உசாத்துணை என்னால் தரவியலும். சங்க காலத்தில் சேரர் தலைநகர் வஞ்சி (இன்றைய கரூர்). இதனை வாடா வஞ்சி, பூவா வஞ்சி என்பது போல, கோட்டையின் புறவாயிலின் கதவைப் பூட்டிக்காக்கும் துலாமரத்துக்கும் ஐயவி என்று பெயர். இதனைப் “பூணா ஐயவி” என்கின்றனர். ஐயவிக்குக் கடிப்பகை எனப் பெயர் பேயோட்டி என்பதாலே. ஐயவிப் புகைத் தூபம் காட்டலை மணிமேகலை (7) இருமுறை பாடியுள்ளது. பாணபட்டரின் காதம்பரி நூலிலும் இச்செய்தி உள்ளதை உவேசா குறிப்பிட்டுள்ளார். ஐயவி அதர்வண வேதத்திலும் உள்ளதாம். இந்திரனை வழிபடும் இருக்குவேதிகளுக்கு 5 நூற்றாண்டு முன்னரே வருகை தந்தவர்கள் அதர்வண வேதத்தார். அவர்கள் சிந்துவெளியினருடன் முதலில் நன்கு கலந்தனர் என்பார் ஆஸ்கோ பார்ப்போலா. எனவே தான், ஐயவி சடங்குகள் மிகப் பழமையானவை எனக் கருதுகிறேன். அவரைக் கேட்கவேண்டும்.

போர்க்களத்தில் புண்பட்ட மறவனை அணங்கு, பேய்கள் அணுகாவண்ணம், கையில் நெய்யை எடுத்து தீயில் இட்டு, ஐயவி தூவி புகையூட்டினர். இதை அழகாக, ஒரு புறப்பாட்டில் காண்கிறோம். “நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்ப”. இங்கே நெய் = விளக்கெண்ணெய் எனக் கொள்வது சிறப்பான பொருளாக இருக்கிறது. காரணம்: தொல்காப்பியர் நெய் என்ற சொல்லின் பிரயோகம் பாருங்கள். நெய்யும், ஐயவியும் மகப்பேறு காலத்தில் மருத்துவக் குணத்திற்காகவும், பேய்க்காப்பாகவும் இடுவது. நோயாளியாகப் படுத்து இருக்கிறான் போர்வீரன். புண்ணுற்ற வீரனுக்கு பேய்க்காப்பாக இடும் நெய், ஐயவி புகை விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவது ஆகும். நெய் இங்கே கால்நடை (மாடு, எருமை) வெண்ணெய் அன்று எனக் கருதுகிறேன். தன்வந்திரிக்கு விளக்கெண்ணெயில் தீபம் எரிப்பது முக்கியமான குறிப்பு. புண்ணுற்ற மறவனுக்குக் காப்பாக ஐயவிப் புகை நெய் (=விளக்கெண்ணெய்) கொண்டு உருவாக்கினர் என்பது நெய், ஐயவி என்று வரும் தொல்காப்பியம், மேல்கணக்கு நூல்களால் தெரியலாகும்.

வேம்புசினை யொடிப்பவுங் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கைய ரையவி புகைப்பவும்
எல்லா மனையுங் கல்லென் றவ்வே
வெந்துடன் றெறிவான் கொல்லோ
நெடிதுவந் தன்றா னெடுந்தகை தேரே.

நீயே ஐயவி புகைப்பவுந் தாங்கா தொய்யென
உறுமுறை மரபிற் புறநின் றுய்க்கும்
கூற்றத் தனையை ஆகலின்    -ஔவை
(இதுவும் நெய் (விளக்கெண்ணெய்) விட்டு ஐயவி தூவி எழுப்பும் புகை)

இன் நகை மனைவி பேஎய் புண்ணோன்
துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 19)

பேய்க்காஞ்சி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்று உள்ளது. புறநானூறு 281 இது காஞ்சித்திணையின் துறை.

போரில் வேந்தனைக் காப்பாற்றிய வீரன் புண் பட்டுக் கிடக்கிறான். இவன் புண்ணைப் பேய் அணுகாவண்ணம் காப்பாற்ற வேண்டும். பழம் தரும் இரவந்தழையும், வெப்பந்தழையும் இல்லத்தில் செருகுவோம். கொம்பு ஊதுவோம். யாழ் இசைப்போம். பல இசைக்கருவிகள் முழக்குவோம். இவன் நெற்றியில் மைப் பொட்டு வைப்போம். ஐயவி என்னும் வெண்சிறு கடுகை இவனைமேல் தூவுவோம். ஆம்பல் குழல் ஊதுவோம். மணி அடிப்போம். காஞ்சிப் பண் பாடுவோம். நறுமணப் பொருள்களைப் புகையச் செய்வோம்.
http://vaiyan.blogspot.com/2015/04/281.html
சனி நீராடு - ஔவை. இது விளக்கெண்ணெயைத் தலை, உடலில் தேய்த்துக் குளிப்பதாகும். சனி நீராடலை மங்கலஸ்நானம் என்ப.
https://elephantbeans.wordpress.com/2009/10/22/pamper-yourself-diy-castor-oil-bath/
https://tamil.asianetnews.com/health/uses-of-the-castor-castor
https://www.yogachikitsa.net/tag/castor-oil-bath/

மகப்பேறு மருத்துவத்தில் நெய் (தொல்காப்பியம்; விளக்கெண்ணெய்)
https://pubmed.ncbi.nlm.nih.gov/23881775/
Castor oil, bath and/or enema for cervical priming and induction of labour
Background: Castor oil, a potent cathartic, is derived from the bean of the castor plant. Anecdotal reports, which date back to ancient Egypt have suggested the use of castor oil to stimulate labour. Castor oil has been widely used as a traditional method of initiating labour in midwifery practice. Its role in the initiation of labour is poorly understood and data examining its efficacy within a clinical trial are limited. This is one of a series of reviews of methods of cervical ripening and labour induction using standardised methodology.

நெய் எனத் தொல்காப்பியர் அழைக்கும் ஆமணக்கு எண்ணெய், பிள்ளைப்பேற்றில் எவ்வாறு பயனாகிறது என்னும் ஆய்வுக் கட்டுரை:
https://www.aranejournal.com/article/6036

எண்ணெய் (தைலம்) என்றால் எள் நெய். பெருவழக்காக, Oil என்பதற்கு எண்ணெய்
பயன்படுத்துகிறோம். இது இறப்பு, அணங்கு போன்றவற்றோடு தொடர்புடையது. எனவே,
திருவரங்கம் போன்ற ஊர்களில், தன்வந்திரி மருத்துவர் கோவிலில், எள்ளின்
எண்ணெய் விளக்குக்கு ஆகாது. கொட்டைமுத்து நெய் தான் அங்கே.
https://temple.dinamalar.com/news_detail.php?id=46822

-----------

இன்னொன்று. பேரா. ச. கண்மணி கணேசன், சிவகாசி விளக்கினார்.

“பரல் வறை கருனை காடியின் மிதப்ப” - பொருநராற்றுப்படை. இது ஒரு கடினமான வரி. பலரும் பல பொருள் உரைத்துள்ளனர். காடி - கழுத்து என்று நச்சர் கூறி, தொண்டை முட்டும் வரை உண்டனர் என்றார் ப. பாண்டியராஜா. பின்னர், காடி - புளிங்கறி என்பதும் ஒரு பொருள் என்கிறார் நச்சர்.

காடி - கஞ்சி என்பதற்கும் வரும் (கோதைமோகன்). கஞ்சியில் வறுத்த வாடூன் இட்டுக் கொடுத்தனர் என்றும் பொருள் எடுக்கலாம்.

துவரம்பருப்பை நன்கு மசிய வேகவைக்க 2 துளி விளக்கெண்ணெய் விடுதல் உண்டு. அதுபோல, பலாக்கொட்டை, அவரை (= பரல், பொ.வே. சோமசுந்தரனார்) போன்ற கடுமையான விதைகளை வேகவைத்துக் கறி சமைக்கும்போது, மேலாக (மிதப்ப) சில துளிகள் விளக்கெண்ணெய் பயன்படுத்தியிருக்கலாம். https://www.myhealthykiddo.com/castor-oil-cooking/

https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jul15/28814-2015-07-16-02-32-24
பெரும்பாணாற்றுப்படை (57) உரையில் காடியை ‘நெய் என்று சுட்டுவாரும் உண்டு’ என்றும் ‘இனிப் பாரின் கழுத்தானவிடத்தே வைத்த மிடா வென்றுமாம்’ என்றும் எனும் இரு குறிப்புகளை நச்சினார்க்கினியர் தருகிறார் (பத்துப்பாட்டு, நச்சினார்க்கினியர் உரை, 1986, ப. 216). நச்சினார்க்கினியரின் இந்தக் குறிப்பினால் ‘நெய்’, ‘கழுத்து’ எனும் வேறு இரு பொருளையும் காடி எனும் சொல் சுட்டிநிற்பது தெரிகின்றது.

காடி = கழுத்து என்று எழுத்து, வண்டியின் பாரில், அதன் கழுத்தில் மிதக்கும் மிடா எனலாம் என்கிறார் நச்சர். ஆனால், வண்டிப்பாரில் மிடா
வைத்தால் மிதப்பதில்லையே! எனவே, நச்சர் கூறும் ‘காடியை நெய் என்று சுட்டுவாரும் உண்டு’ எனக் கொள்வது பொருத்தமாகத் தெரிகிறது.
இங்கே, காடி - நெய். அதாவது, விளக்கெண்ணெய். ஏனெனில் விளக்கெண்ணய் தான் அமிலம் (acids). கால்நடையின் நெய் காடி (acid) அன்று,
மாட்டு நெய் அமிலத்துக்கு எதிரான alkaline.

பலாக்கொட்டை, அவரை (= பரல், பொ.வே. சோமசுந்தரனார்) போன்ற கடுமையான விதைகளை வேகவைத்துக் கறி சமைக்கும்போது, மேலாக (மிதப்ப) சில துளிகள் விளக்கெண்ணெய் பயன்படுத்தினர்: “பரல் வறை கருனை காடியின் மிதப்ப”. Cf. விளக்கெண்ணெய்ப் பருப்பு சமையல்,
https://www.myhealthykiddo.com/castor-oil-cooking/

-----------------


’ஆமணக்கு நட்டு ஆச்சாவாக்கல் ஆகாது' என்ற பழமொழியை நச்சர் சிந்தாமணி ( 2613) உரையிலே சொல்லியுள்ளார். இதனை ஒத்த பழமொழி ஹிதோபதேசத்தில் உள்ளது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 6, 2023, 8:09:25 PM5/6/23
to Santhavasantham

தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் மகப்பேற்று நாள்கள், புண்ணுற்ற நோயாளிகளைக் காக்கும் தருணங்களில் ஐயவி அப்புதல், நெய்யில் ஐயவி இட்டுப் புகையெழுப்பல் என்கிறபோது நெய் = விளக்கெண்ணெய் (ஆமணக்கெண்ணெய்) ஆகும். கூந்தல் வளர்ச்சிக்கு, சனி நீராடும்போது இந்த நெய்யைப் பயன்படுத்தி உள்ளனர். மருத்துவத் தெய்வம் தன்வந்திரிக்கு விளக்கு எரிப்பதும் இந்த விளக்கெண்ணெயே. சில குறிப்புகள்,
https://groups.google.com/g/santhavasantham/c/IAI4jRL6ml8/m/5VkYc7pCAwAJ

குழந்தைக்குத் தாயர் ஊட்டும் நெய் என்கிறபோது, நெய் = விளக்கெண்ணெய் என்கிறது அறநெறிச் சாரம் என்னும் பழைய நூல். இது நெய் என்பது விளக்கெண்ணெயைக் குறிக்கும் சங்க நூற் பயன்பாட்டின் தொடர்ச்சியைக் காட்டுகிறது.

தந்நலமற்ற பெரியோர் தாயினை யொப்பர்

காலொடு கையமுக்கிப் பிள்ளையை வாய்நெறித்துப்
*பாலொடு நெய்பெய்யும்* தாயனையர் - சால
அடக்கத்தை வேண்டி அறன்வலிது நாளும்
கொடுத்துமேற் கொண்டொழுகு வார்.

(பதவுரை) சால-மிக, அடக்கத்தை வேண்டி-அடங்கியிருக்குமாறு செய்யக் கருதி, நாளும்-ஒவ்வொரு நாளும், அறன் வலிது கொடுத்து-அறத்தினைத் தாமாகவே வற்புறுத்திக் கூறி, மேற் கொண்டு ஒழுகுவார்-அடக்கியாளும் பெரியோர், காலொடு கை அமுக்கி-காலையும் கையையும் ஆட்டாதவாறு இறுகப் பற்றிக் கொண்டு, வாய் நெறித்து-வாயைப் பிளந்து, பிள்ளையை-குழைந்தைக்கு, பாலொடு நெய் பெய்யும்-பாலையும் ஆமணக்கு நெய்யையும் அருத்துகின்ற, தாயனையர்-தாய்க்கு நேராவர்.
(குறிப்பு) ஒழுகுவார் தாயனைய ரென்க.  பிள்ளையை: உருபு மயக்கம்.  ''வாய்வெறித்து'' எனவும் பாடம்.  நெறித்தல்-சுண்டித் திறப்பித்தல்.  (96)        

ஆமணக்கும் ஆனையும் - காளமேகம்
--------------------------------------------------------
   முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
   கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும்
   தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்
   ஆமணக்கு மால்யானை யாம்.                        

NG

Ramamoorthy Ramachandran

unread,
May 8, 2023, 10:47:42 AM5/8/23
to Santhavasantham
கணேசனாரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத்தக்க வகையில் விளங்குகிறது! -
புலவர் இராமமூர்த்தி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUc080SnL0TxEVPA2pXQoCQaPZK7ZztmbB9OqoS5X1c9NQ%40mail.gmail.com.
Message has been deleted

N. Ganesan

unread,
May 8, 2023, 3:14:45 PM5/8/23
to Santhavasantham, N. Chokkan, Gopalsamy Ragavan, Kana Praba, sivasub...@sivasubramanian.in, George Hart
On Mon, May 8, 2023 at 9:47 AM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
கணேசனாரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத்தக்க வகையில் விளங்குகிறது! -
புலவர் இராமமூர்த்தி 

நன்றி, புலவர் ஐயா.

சங்கப் புலவர்கள் நுண்மாண் நுழைபுலம் கொண்ட சான்றோர். ஆல்கலித்தன்மை கொண்ட (மாட்டு) நெய் வேறு, அமிலத் தன்மை கொண்ட (காடி) நெய் (= விளக்கெண்ணெய், தற்காலப் பெயர்) வேறு எனப் பகுத்துக் காட்டியுள்ளனர். மிகுந்த காவலோடு செல்லும் வணிகச் சாத்துகளின் வண்டிகள் ஒழுகைகள் எனப்பட்டன. சரஞ்சரமாய்ச் செல்பவை. இதில் செல்வது காடி எனப் பத்துப்பாட்டில் வருகிறது. இது வெறும் புளித்தண்ணி அல்ல. இங்கே, காடி = நெய் (நச்சர்) என்பது, விளக்கெண்ணெய் எனக் கூறலாம். காரணத்தைத் தந்துள்ளேன்.

மாவடு ஊறுகாய் காடியில் (விளக்கெண்ணெயில்) செய்வதும் பாடியுள்ளார் சங்கப்புலவர்.

”மா”வடு

கோடை வந்தாலே மாமரங்களில் மாம்பிஞ்சுகள் நிறைந்து தொங்கும். மாம்பிஞ்சு என்று சொல்வதை விட மாவடு என்ற பெயர்தான் இன்று பிரபலமாக இருக்கின்றது. மாவடு என்றதுமே இரண்டு திரைப்படப் பாடல்கள் நினைவுக்கு வரும்.

என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறச்சொல்லோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
படம் – சிவகாசி
பாடல் – இயக்குனர் பேரரசு
இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், உதித் நாராயண்
பாடலின் சுட்டி – https://youtu.be/Cz2dDTo-xRw

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
………………
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
படம் – நெஞ்சில் ஒரு ஆலயம்
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
பாடலின் சுட்டி – http://youtu.be/t5zV9id2QP4

முதல் பாடல் கவித்துவமே இல்லாமல் இருந்தாலும் தயிர்ச்சோற்றுக்கு மாவடு மிகப்பொருத்தம் என்ற உண்மையைச் சொல்கிறது. இரண்டாவது பாடல் மிக இனிமையான பாடல். மாவடு வகிர்ந்தது போன்ற அழகான கண்கள் என்று உவமிக்கிறது.

சரி. நாம் தயிர்ச்சோற்றுக்கே போகலாம். ஊறுகாய்கள் எல்லாமே தயிர்ச்சோற்றுக்குப் பொருத்தமாக இருந்தாலும் நன்கு ஊறிய வடுமாங்காய் பலரால் விரும்பப்படுவதுதான் உண்மை.

இப்பொழுதெல்லாம் ஊறுகாய்களை கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வீட்டிலேயே செய்யப்படும் மாவடுவுக்கு இணை வேறெதுவும் இல்லை.

சென்னையில் மாவடு பார்த்துப் பொறுக்கி வாங்க வேண்டுமென்றால் மயிலைதான் சிறந்த இடம். வெறும் வடுமாங்காய்கள் மட்டுமல்ல, ஊறுகாய் செய்வதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் அங்கேயே வாங்கிவிடலாம். பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வடுமாங்காய் பிரபலமாக இருப்பது இன்று நேற்று நடப்பதல்ல. கடைச்சங்க காலத்திலேயே அப்படித்தான் இருந்திருக்கிறது.

கடைச்சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் தொகுக்கப்பட்ட ஒரு நூல் அந்தணர் வீடுகளில் வடுமாங்காய் பயன்பாட்டில் இருந்ததையும் செய்முறையையும் தெளிவாகக் குறிக்கிறது.

அந்த நூல்தான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படை.

மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின்
……………………………………….பைந்துணர்
நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர்
நூல் – பெரும்பாணாற்றுப்படை
எழுதியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்

இந்த வரிகள் அந்தணர் வீடுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களைப் பட்டியல் இடுகின்றது. மாதுளங்காயை எப்படிப் பொரியல் செய்வது என்றும் இந்தப் பாடல் விளக்கும். ஆனாலும் நமக்குத் தேவையான மாவடு பற்றிய வரிகளின் பொருளை மட்டும் பார்க்கலாம்.

மறைகளை ஓதுகின்றவர்களின் வீடுகளில்
நெடிய மாமரங்களின் பசுங்கொத்துகளிலிருந்து
உதிர்க்கப்பட்ட மாவடுக்கள் காடியில் ஊறி
உண்பதற்கு சோற்றோடு வகைபடப் பெறுவீர்கள்

காடித்தண்ணீரில் மாவடு ஊற வைக்கப்பட்டு சோற்றோடு கலந்து உண்ணப்பட்டதாம். எப்போது? கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முன்னர்.

ஆனால் அந்த முறையில்தான் இப்போதும் மாவடுக்கள் ஊறவைக்கப்படுகின்றனவா? இல்லை. இப்போதைய செய்முறையை எளிமையாச் சொல்கிறேன்.

வடுமாங்காய்களை காம்பு நீக்கி நீரில் அலசிக்கொள்ள வேண்டும். நன்கு கழுவப்பட்ட மாவடுக்களை நிழலில் உலர்த்திக்கொள்ள வேண்டும். சிறிதும் ஈரம் இருக்கக்கூடாது.

ஆமணக்கு எண்ணெய்யை (விளக்கெண்ணெய்) சிறிதளவு எடுத்துக்கொண்டு மாவடுகளின் மீது பரவலாகப் பரவும்படி கலந்துகொள்ள வேண்டும். சிறிதளவு விளக்கெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவு கூடினால் ”பின்விளைவுகள்” இருக்கும்.

இந்த மாவடுக்களோடு உப்பு, மிளகாய்த்தூள், கடுகுப்பொடி கலந்து பாத்திரத்தில் போட்டு துணியால் மூடி வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து காலையிலும் மாலையிலும் குலுக்கி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஊறி ஊறி நீர் சேர்ந்து மாவடுக்கள் சுண்டிச் சுருங்கி சுவையாகிவிடும். அவ்வளவுதான் செய்முறை.

என்ன? மாவடு வாங்கப் போகின்றீர்களா? மாவடு ஊறியபின் எனக்கும் ஒரு பாட்டில் நிறைய கொடுங்கள்.

அன்புடன்,
ஜிரா


-----------------

On Mon, May 8, 2023 at 10:39 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> நச்சினார்க்கினியர் சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை .
> சக்
>

தெளிவாக, நச்சினார்க்கினியர் காடி = நெய் எனக் குறித்துள்ளார்.

“காடி வைத்த கலன்” என்கிறபோது, ஆமணக்கெண்ணெய் வண்டியில் வைத்து ஊர்ச் சந்தையில் வணிகம் செய்வதற்காகச் செல்லும் வணிகச் சாத்துகளின் ஒழுகை பற்றிப் பேசும் வரிகள். காடி = நெய் என்பது விளக்கெண்ணெய். ஏனெனில், காடி மாட்டு நெய்யின் குணாமிசம் அன்று. அப்போதெல்லாம், மின்சாரம், பேட்டரி, நிலக்கரி வரவில்லை. ஒரு நாளில் பாதி நேரம் இருள் தான். இராத்திரியில் வெளிச்சம் செய்ய எல்லோருக்கும் விளக்கெண்ணெய் தேவை. வண்டிகளில் நகர்ச் சந்தைகளுக்கு வரும். புளித்தண்ணியை அவ்வளவு பாதுகாப்பாக யாரும் ஏராளமான வண்டிகள் செல்லும் ஒழுகைகளில் கொண்டு செல்லார். அந்தந்த ஊர் குளம், ஆறுகளின் தண்ணீரில் புளியைக் கரைத்தால் புளித்தண்ணி ஆகிவிடும். 

வடுமாங்காய் செய்யும் போதும் காடி என்பது விளக்கெண்ணெய்ப் பயன்பாடு காட்டும் ஓரிடம்.

இன்னும் சில முக்கியமான இடங்களில் விளக்கெண்ணெய் வருவது பற்றிப் பார்த்தோம். உ-ம்: அணங்கோட்டுதலுக்கு ஐயவி + நெய்.

NG
ReplyForward

N. Ganesan

unread,
May 8, 2023, 8:31:49 PM5/8/23
to Santhavasantham
சங்க இலக்கியத்தில் காடி வைத்த கலன். வண்டிகளில் சாரிசாரியாய் விளக்கெண்ணெய் (=காடி. அமிலங்களால் பெறும் பெயர்) வைத்த மிடாக்கள், மிகுந்த காவலுடன் சந்தைகளுக்குக் கொண்டுச்செல்வது கூறப்பட்டுள்ளது. வடுமாங்காய் ஊறுகாய் காடி (விளக்கெண்ணெய்) கொண்டு தயாரித்ததைப் பரிமாறுவதும் அழகுற வர்ணிக்கப்படுகிறது. விளக்கெண்ணெய் பயன்படுத்தி வடுமாங்காய் ஊறுகாய் காடிநெய்யால் செய்முறை. https://www.youtube.com/watch?v=CX6ryeY7x-4
((1) காரம் - மிளகாய்த்தூள். அப்போது, குறுமிளகு. + (2) உப்பு. + (3) காடி என்பது நெய் (விளக்கெண்ணெய், தற்காலப் பெயர்). விளக்கெண்ணெய் அரிதாகவே சமையலில் பயன்படும். உதாரணம் பரல் என்னும் பலாக்கொட்டை, அவரையை மசியச் செய்யச் சேர்த்துவதும் காண்கிறோம்.

காடி = நெய் என்பது நச்சினார்க்கினியர் வாக்கு. இந்த நெய் பூசி பேய்க்காஞ்சி என்னும் துறையில் அணங்குகளிடம் இருந்து காப்புக்கு ஐயவி அப்பியும், மகப்பேற்றுக் காலங்களில் தாய், சேய்களுக்கும் உபயோகப்படுத்தினர்.

விளக்கெரிக்க முக்கியமான எண்ணெய் ஆனதால், களவினின்றும் காத்து ஒழுகைகள் செல்ல வேண்டியதாயிற்று. இப்போது பெட்ரோல் மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்வதுபோல.

N. Ganesan

unread,
May 9, 2023, 7:52:42 AM5/9/23
to santhav...@googlegroups.com, sivasub...@sivasubramanian.in, Dr.Krishnaswamy Nachimuthu, George Hart, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, tiruva...@googlegroups.com, Robert Zydenbos, Brenda Beck, K Rajan
On Mon, May 8, 2023 at 9:47 AM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
கணேசனாரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத்தக்க வகையில் விளங்குகிறது! -
புலவர் இராமமூர்த்தி 

விளக்கெண்ணெய் உருவாக்கும் ஆமணக்கு, ஐயவி (வெண்கடுகு) இரண்டும் இந்தியாவில் 5000 ஆண்டுகளாகப் பயிராகின்றன. பேரா. ச. கண்மணி விளக்கெண்ணெய் பற்றிக் கேட்ட கேள்வி, சற்று ஆராயச் செய்தது. நெய் என்ற சொல்லைப் பார்த்ததும், கால்நடை நெய் என்று பொருள் கொள்ளத் தோன்றும். பின்னர், தொல்காப்பியம், அதன் உரைகள், அறநெறிச்சாரம், சங்க நூல்களில் “காடி”, ”நெய்” வரும் இடங்களைக் கண்டால், தற்காலத்தில் நாம் விளக்கெண்ணெய், ஆமணக்கெண்ணெய் என்பது “காடி” - ஏனெனில் அதில் 90% அமிலம் உள்ளது - மற்றும் நெய். எள்ளில் இருந்து எடுப்பது எண்ணெய். ஆனால், நெய் என வரும் போது அது மாட்டு நெய்யா, விளக்கெண்ணெயா என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும். மாட்டுநெய் அமிலம் அல்ல, அது alkaline producing food என வகைப்படுத்தப்படுகிறது. எனவே, மாட்டு நெய் “காடி” என்பதற்கு நேரெதிரானது. இன்றும் வார்னிஷ் அமிலம், காடிநெய் என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறேன். காடி = நெய் என்று ஒரு பொருள் என்று சொல்லிவிட்டார் நச்சினார்க்கினியர். துவரம் பருப்பை மசியச் செய்ய, விளக்கெண்ணெய் சில சொட்டுகள் விட்டுச் சமைப்பது போல, பலாக்கொட்டை, அவரைவித்து, ... இவற்றை நன்கு சமைக்கவும் காடிநெய் பயனாகியுள்ளது. “பரல் வறைக் கருனை காடியின் மிதப்ப” என்பது காடி = விளக்கெண்ணெய். மாவடு காடி தோய்த்துச் சமைத்துப் பின் சில காலம் சென்றபின், காடியில் மிதக்கிறது போல, என “பரல் வறைக் கருனை காடியின் மிதப்ப” பொருள் கூறலாம். பரல் = பலாக்கொட்டை, அவரைவித்து, ... வறுத்துப் பொறிகறி சமைக்கையில், விளக்கெண்ணெய் சில சொட்டுச் சேர்ந்து செய்யும் தாளிதத்தில் பலாக்கொட்டை மிதக்க . பரல் = பலாக்கொட்டை, அவரை என்றாது பொ. வே. சோமசுந்தரனார்.

சென்னைப் பல்கலைப் பேரகராதியில் பாருங்கள்:
காடி² kāṭi , n. prob. கடி⁵. cf. ghṛta. Ghee; நெய். (பெரும்பாண். 57, உரை.)

காடி = நெய் என்று நச்சர் எழுதியுள்ளதைப் பார்த்ததும், நெய் = ghee என்று மொழிபெயர்த்துவிட்டனர். இது பிழையென்று தெரிகிறது.
ஏனெனில், மாவடு ஊறுகாய் செய்யுமிடத்தில், காடி (= விளக்கெண்ணெய்) பயன்படுத்தலைச் சங்கப்புலவோர் பாடியுள்ளனர்.


சங்க இலக்கியத்தில் காடி வைத்த கலன். வண்டிகளில் சாரிசாரியாய் விளக்கெண்ணெய் (=காடி. அமிலங்களால் பெறும் பெயர்) வைத்த மிடாக்கள், மிகுந்த காவலுடன் சந்தைகளுக்குக் கொண்டுச்செல்வது கூறப்பட்டுள்ளது. வடுமாங்காய் ஊறுகாய் காடி (விளக்கெண்ணெய்) கொண்டு தயாரித்ததைப் பரிமாறுவதும் அழகுற வர்ணிக்கப்படுகிறது. விளக்கெண்ணெய் பயன்படுத்தி வடுமாங்காய் ஊறுகாய் காடிநெய்யால் செய்முறை. https://www.youtube.com/watch?v=CX6ryeY7x-4
https://www.facebook.com/watch/?v=322467525935229
((1) காரம் - மிளகாய்த்தூள். அப்போது, குறுமிளகு. + (2) உப்பு. + (3) காடி என்பது நெய் (விளக்கெண்ணெய், தற்காலப் பெயர்). இதே செய்முறையைப் பத்துப்பாட்டில் 2000 வருஷம் முன்னரே கொடுத்துவிட்டனர் சங்கச் சான்றோர். விளக்கெண்ணெய் அரிதாகவே சமையலில் பயன்படும். உதாரணம் பரல் என்னும் பலாக்கொட்டை, அவரையை மசியச் செய்யச் சேர்த்துவதும் காண்கிறோம்.

காடி = நெய் என்பது நச்சினார்க்கினியர் வாக்கு. இந்த நெய் பூசி பேய்க்காஞ்சி என்னும் துறையில் அணங்குகளிடம் இருந்து காப்புக்கு ஐயவி அப்பியும், மகப்பேற்றுக் காலங்களில் தாய், சேய்களுக்கும் உபயோகப்படுத்தினர். சங்க நூல்களில் அணங்குக் கோட்பாடு அக்காலச் சமய, சமூக நிலையை விளக்குவது:
https://tamilnation.org/caste/hart.pdf .                        பல்லவர் காலத்தில், அணங்காடல் பற்றி, ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் பாடிய பாசுரப் பதிகம் அழகானதும், முக்கியமானதும் ஆகும்.

விளக்கெரிக்க முக்கியமான எண்ணெய் ஆனதால், களவினின்றும் காத்து ஒழுகைகள் செல்ல வேண்டியதாயிற்று. இப்போது பெட்ரோல் மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்வதுபோல.

நச்சர் கூறுவது:  “இனிக்காடியை நெய்யென்பாரும் உளர்”. நெய் என்பது விளக்கெண்ணெய், மாவடு ஊறுகாய் சமையல், தொல்காப்பியம் காட்டுகிறது. நெய் என்னும் விளக்கெண்ணெய்யின் உபயோகம் தமிழர் சமயம் (அணங்காடல், ...), மகப்பேறு வைத்தியம், பேய்க்காஞ்சி என்னும் துறை, போர்வீரனுக்கு புண்ணுற்ற காலத்தில் பேய்க்காப்பு, மருத்துவத் தெய்வம் தன்வந்திரிக்கு விளக்கெண்ணெய் எரித்தல் போன்றவற்றால் அறியலாகிறது.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages