கானூர் இரட்டமணி மாலை உரையுடன்

21 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Apr 24, 2012, 9:57:53 PM4/24/12
to சந்தவசந்தம்
இத்துடன் ஒளிநகல் எடுக்கப்பட்ட புத்தகம் பிடிஎஃப் அமைப்பில் இணைத்துள்ளேன்

1985ல் வெளியானது
kanoor book.pdf

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 24, 2012, 10:32:51 PM4/24/12
to santhav...@googlegroups.com
அற்புதம்! உங்கள் ஞான குருவான ஸ்ரீ துர்க்கைச் சித்தரின் முன்னுரை, உங்களுடைய ‘என்னுரை’, பதிப்புரை ஆகியவற்றிலிருந்து தொடங்கி நூல் முழுவதும் படிப்பதற்கு ஒரு அரிய அனுபவமாக உள்ளன. 
 
அனந்த்   

2012/4/24 Subbaier Ramasami <elan...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Apr 26, 2012, 8:15:55 AM4/26/12
to santhav...@googlegroups.com


பச்சை வயல்களும் பனிப்புல்லும்
    பார்வை படுகிற பகலொளியும்
இச்சை யூட்டிடும் மலர்மரங்கள்
    எங்கும் மணந்திடும்  பூவிரிப்பைக்
கச்சை யணிபவர் சேலைநுனி
   கனிவாய் வருடிடும் காட்சிகளும்
அச்சன் பிரளய விடங்கேசன்
   அருளும் பாடிடும் கலியினிதே.
   தென்னைக்குத் தந்திருக்கும் விளக்கம்
      சிந்தையினில் என்றைக்கும் இனிக்கும்,
முன்னைக்கும் முன்னான முதலை
      பின்னைக்கும் பின்னான பொருளை
என்றைக்கும் வந்திக்கும் வண்ணம்
     எமக்கென்று செய்திருக்கும் மணிகள்
நின்றென்றும் காக்கின்ற விதத்தில்
    நிலத்திற்கு நீரளித்த கொடையே.

வாழ்க பல்லாண்டு!

சிவ சூரியநாரயணன்.

  
     


  
     


O

Subbaier Ramasami

unread,
Apr 26, 2012, 8:42:22 AM4/26/12
to santhav...@googlegroups.com
நன்றி. இந்த இரட்டைமணிமாலையில் உரையும் அந்தாதியாக அமைந்திருப்பதைக் காணலாம்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Lalitha & Suryanarayanan

unread,
Apr 26, 2012, 9:02:25 AM4/26/12
to santhav...@googlegroups.com
அடடா, எவரே இப்படிச் செய்திருப்பார்- பாடலின் சுவையிலும் உரையின் அழகிலும் இதைக் கவனியாமல் விட்டுவிட்டேன் போலும்!

 உங்கள் உரை மிகவும் சுவையூட்டுகிறது.:சொல்வைத்து விளையாடும் புலவர்கள், செப்பு வைத்து விளையாடும் சிறுவர்கள், அண்டங்கள் கட்டி விளையாடும் ஈசன் - என இப்படி அடுக்கி இருப்பது அழகு!

தாழ்கின்ற ஒரு கையை மறுகை தாங்கிப் பிடித்திருப்பதாகச் சொல்வது நயமிக்கது! மொத்தத்தில் இயற்கை வருணனைகளும், அதற்குக் கொடுத்திருக்கும் விளக்கங்களும் படிக்கப் படிக்க இனிக்கின்றன.

நன்றி.

சிவசூரி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 26, 2012, 9:39:05 AM4/26/12
to santhav...@googlegroups.com
ஆம், நானும் உரையிலுள்ள அந்தாதி அமைப்பைக் கவனிக்கவில்லை. இதற்கு முன் வேறெங்குமகாணாப் புதுமை இது. மொத்தத்தில், இந்தக் கானூர் மணிமாலை இலந்தையாரின் மிகச் சிறந்த படைப்பாகத் திகழ்கிறது.
அனந்த்
2012/4/26 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>

Pas Pasupathy

unread,
Apr 26, 2012, 11:40:01 AM4/26/12
to santhav...@googlegroups.com
இப்போது தான் இந்த மடலைப்  பார்க்கமுடிந்தது.
 
வேறு , எளிய வடிவில், போன மாதம் ( 24 மார்ச்) இங்கே இட்டீர்கள் என்று நினைக்கிறேன்? சரியா? அதை நான் சேமிக்கும்போது படித்தேன்.
 
மிக அழகிய நூல். ( இரண்டிற்கும் உள்ள ஒரு வேறுபாடு:
கட்டளை*க்* கலித்துறை என்று வலி மிகுந்தது முதல் வடிவம்!:-))
 
தற்செயலாக, போன வாரம் ஒருவரிடம் பேசும்போது, நூல் இயற்றியவரே
உரையும் எழுதினால் எப்படி இருக்கும், பாரதி ஏனோ ‘பாஞ்சாலி சபதம்’ இரண்டாம் பகுதிக்குக் குறிப்புரை எழுதவில்லை என்றெல்லாம் சொல்லிக்
கொண்டிருந்தேன்.
 
உரையும் நீங்களே எழுதியது மிகச் சிறப்பு.

On Tue, Apr 24, 2012 at 9:57 PM, Subbaier Ramasami <elan...@gmail.com> wrote:
இத்துடன் ஒளிநகல் எடுக்கப்பட்ட புத்தகம் பிடிஎஃப் அமைப்பில் இணைத்துள்ளேன்

1985ல் வெளியானது

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta--

Siva Siva

unread,
Apr 27, 2012, 1:04:09 PM4/27/12
to santhav...@googlegroups.com
இங்கிட்டது பலர்க்கும் பயனளிக்கும். வாழ்க!

ஓர் ஐயம்:
பக்கம் 14: "....எல்லாம் நடக்க இராமசா மிக்கருள் வல்லான் தருவான் வரம்."

உரையில் 'இராமசாமி = இராமன் ' என்று காண்கிறேன். இப்பெயர் சிவனைக் குறிக்குமா இராமனைக் குறிக்குமா?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/4/24 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Apr 27, 2012, 1:51:33 PM4/27/12
to santhav...@googlegroups.com
இராமசாமியின் தூதன் நானடா ராவணா    என்று ஒரு கீர்த்தனை இராமநாடக கீர்ஹ்ட்தனையில் உண்டு. எங்களோர் இராமர் கோயிலை நாங்கள் இராமசாமி கோயில் என்று தான் அழைக்கிறோம்

“தவப்பயனாய் தசரதனும் பெற்றெடுத்ததெய்வம் 
தண்ணளியால் புரக்கின்ற இராமசாமி கோவில்”  என்று நான் எங்களோர் பதிகத்தில் எழுதியுள்ளேன்.VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 27, 2012, 3:16:39 PM4/27/12
to santhav...@googlegroups.com
பாபநாசம் சிவன் கீர்த்தனைகளில் ‘ராமதாசனுக்கருள் செயும்’ என்று பாடலாசிரியன் (ராமதாசன் என்னும் புனைபெயரில்) தனக்கு இறைவன் அருள வேண்டுமென அமைப்பது போல, இங்கு நம் இலந்தை இராமசாமிக்கு அவர் நினைத்ததெல்லாம் நடக்க அருள் செய்வதில் வல்லவனான சிவன் வரம் தருவான்’ எனக் கொள்ளலும் தகும் அல்லவா?

அனந்த்

2012/4/27 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Apr 27, 2012, 7:28:16 PM4/27/12
to santhav...@googlegroups.com
இந்த இரட்டைமணி மாலையை நான் எழுதவேண்டும் என்று ஊக்குவித்தவர் கான்னுர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த மூல காரணமாக இருந்தவர் த திரு செல்லச்சாமி அவர்கள். அவருடைய பெயர் நூலில் வருமாறு ஊர் செல்லச் சாமிகள் ஒவ்வோர் திசையும் உதவுவரே என்று எழுதியிருந்தேன். உடனே அவர் என்னுடைய பெயரும் அந்த நூலில் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். எங்கள் ஊர் சிவன் கோவிலில் இராமர் தனது வில்லை வைத்துச் சிவனை வணங்கியதால் அக்கோவில் சிவனுக்குக் கோதணடமேஸ்வரர் என்று பெயர். சிவன் இராமருக்கு ஆசிவழங்கியதாகத் திருவாறைத் தலபுராணம் கூறுகிறது. எனவே என் பெயரை அங்கே பாட்டோடு எளிதாக இணைக்க முடிந்தது.

இலந்தைKavingar Jawaharlal

unread,
Apr 28, 2012, 5:29:34 AM4/28/12
to santhav...@googlegroups.com
கானூர் இரட்டைமணிமாலை அற்புதமான பாடல்கள் அவன் அருள்வான் 

2012/4/28 Subbaier Ramasami <elan...@gmail.com>--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119


Reply all
Reply to author
Forward
0 new messages