பூஸ்துதி தமிழாக்க முயற்சி (கோபால்) இறுதிப் பகுதி (21-33)

1 view
Skip to first unread message

GOPAL Vis

unread,
Mar 23, 2026, 7:35:45 AM (yesterday) Mar 23
to santhav...@googlegroups.com

பூஸ்துதி (21-33)

 

ஆவிர்மதை³ரமரத³ந்திபிருஹ்யமானாம்ʼ
ரத்னாகரேண ருசிராம்ʼ ரஶநாகு³ணேன .
மாதஸ்த்ரிலோகஜனனீம்ʼ வனமாலினீம்ʼ த்வாம்ʼ
மாயாவராஹமஹிஷீமவயந்தி ஸந்த꞉ ..(21)

 

தாயே, மதம் பெருகும் திக்கஜங்கள் தாங்க, அழகிய ரத்நாகரமான கடல்களை மேகலையாகக் கொண்டு, வநமாலை களை அணிந்த த்ரிலோகமாதாவான உன்னைப் பெரியோர்கள் மாயாவராஹனின் மஹிஷியாகச் சொல்லுவர். ..(21)

 

மதசலம் பெருகிடும் வானவர் வாரண
……மத்தகம் எட்டினில் மலரென அமர்ந்தவள்
உததிகள் மணிமினும் ஒட்டியா ணந்தனை
……ஒத்ததாய் அணிசெய, உனதடர் வனம்பல
விதநிற மாலையாய் விளங்கிடும் அழகிநீ!
……விரிந்தமூ உலகுகட்(கு) அன்னையாய், வெறியனை
அதஞ்செய வராகனாய் ஆனவன் மனைவியாய்
……ஆன்றவர் உனைத்தம(து) அகத்தினிற் காண்பரே! ..(21)

[வாரணம் = யானை; உததி = கடல்; அதம் செய = அழிக்க; ஆன்றவர் = அறிவாலும் அறத்தாலும் உயர்ந்தவர்; அகம் = உட்கண், உள்ளம்]

நிஷ்கண்டகப்ரஶமயோக³நிஷேவணீயாம்ʼ
சா²யாவிஶேஷபரிபூதஸமஸ்ததாபாம் .
ஸ்வர்கா³பவர்க³ஸரணிம்ʼ வதீமுஶந்தி
ஸ்வச்ச²ந்த³ஸூகரவதூமவதூதபங்காம் ..(22)

 

ஸ்ரீவராஹப் பெருமாளின் பத்தினியான நீ, பாவங்களாகிய முள்ளும் கல்லும் இல்லாத சாந்தி யோகத்தினால் அடையக் கூடியவளாயும், குளிர்ந்த நிழலைத் தந்து தாபங்களைப் போக்குவளாயும், மற்ற எந்தவிதக் குற்றமுமாகிய சேறு சகதிகள் அற்றவளாயும் விளங்குவதனால், ஸ்வர்க்க மோக்ஷாதி லோகங்களை அடைய நல்லதொரு வழியாகிறாய் என்று பெரியோர் பணிப்பர். ..(22)

 

வீட்டினை எய்தவும் நீதரும் வீதிநல்
……விதியெனக் கருதுவார் வித்தக யோகியர்!
ஆட்டமற்(று) அடங்கிய ஆன்மிகர்க்(கு) உன்வழி
……அடர்ந்தமுள் கற்றடை அச்சமில் லாததாம்!
வாட்டமும் தாபமும் மாற்றிடும் நிழல்வழி!
……மாசெனும் சேறிலா வழிஅவர்க்(கு) எளியதாம்!
காட்டுவ ராகனாய்த் தன்னையே காட்டுவோன்
……காந்தனாய்க் கொண்டதாய்க் காசினித் தேவியே! ..(22)
[வீடு = மோக்ஷம்; வீதி = வழி; கற்றடை = கல்தடை]

³ண்டோ³ஜ்ஜ்வலாம்ʼ ³ஹனகுந்தலத³ர்ஶனீயாம்ʼ
ஶைலஸ்தனீம்ʼ தரலநிர்ஜ²ரலம்ப³ஹாராம் .
ஶ்யாமாம்ʼ ஸ்வதஸ்த்ரியுக³ஸூகரகே³ஹினி த்வம்ʼ
வ்யக்திம்ʼ ஸமுத்³ரவஸநாமுபயீம்ʼ பி³ர்ஷி ..(23)

 

மாயாவராஹ மஹிஷியே, அழகிய பாறைகள் - தாடைகள் உள்ளதும், காடுகளாகிற - காடுகள் போல் கறுத்த மயிர்முடியுடையதும், மலைகளாகிற மலைகள் போன்ற மார்பகத்தைப் பெற்றதும், தளதளக்கும் நீர்விழ்ச்சிகளாகிற - நீர்வீழ்ச்சி போன்ற-தொங்கு முத்துவடம் பூண்டதும், கறுத்த, யௌவனப் பருவ மத்தியில் உள்ளதும், கடலாகிற கடல் போன்ற - உடை அணிந்ததும் ஆன இருவிதம் (நாம் காணும் பூமி - எம்பெருமான் பக்கத்தில் தேவி என்ற பிரிவு) கொண்ட உருவத்தைத் தாங்குகிறாய் நீ. ..(23)

 

இயற்கையாய் இறைவியாய் இருவடி(வு) ஏற்றனை!
……இருங்கடல் சேலையாய் இலங்கிடும் இளம்பெணே!
உயர்பரு மலைகளே உனதிரு முலைகளாய்
……ஊங்கிவீழ் அருவிகள் உனமணி அலங்கலாய்
வயங்கிடும் கன்னமாய் வழுவழுப் பாறைகள்
……வளமிகு வனங்களே அடர்ந்துநீள் கூந்தலாய்ச்
சுயத்தினில் கறுத்தநற் சுந்தரீ வராகனாய்த்
……தோன்றிய அறுகுணத் தூயனின் துணைவியே! ..[23]
[இருங்கடல் = பெரிய கடல்; இலங்கிடும் = விளங்கிடும்; ஊங்கி = மிக அதிகமாகி; உன = உன்னுடைய; அலங்கல் = மாலை; வயங்கிடும் = ஒளிர்ந்திடும்]

நிஸம்ʼஶயைர்நிக³மஸீமனி விஷ்ணுபத்னி
ப்ரக்²யாபிதம்ʼ ப்ருʼகு³முகை²ர்முனிபி⁴꞉ ப்ரதீதை꞉ .
பஶ்யந்த்யனன்யபரதீரஸஸம்ʼஸ்துதேன
ஸந்தஸமாதிநயனேன தவானுபாவம் ..(24)

 

வேத தத்துவங்களில் துளியும் ஐயமற்ற, ப்ரஸித்த, ப்ருகு முதலிய மஹரிஷிகளால் வெளியிடப்பெற்ற உன் பெருமைகளைப் பெரியோர்கள், அநந்நிய சிந்தையின் ஆனந்ம் பொங்கும் யோகக்கண் கொண்டு ப்ரத்யக்ஷிக்கிறார்கள். ..(24)

 

மாலெனும் தத்துவ வடிவனின் மனைநினை
……மறைமுடி(பு) அகழ்ந்தவர் மட்டுமே உணர்ந்தவர்!
நூலறிந்(து) ஆழ்ந்(து)அதன் நுண்மையை நுகர்ந்தவர்
……நோன்பெனத் தவித்துளே நோக்குவார் அகக்கணின்
மூலமே பிருகுமா முனிமுதல் முனிவர்கள்
……முற்றிலும் மற்றவை முனிந்துதம் அனுபவச்
சீலமார் தவநிலைச் சிறப்பினால் அன்றியுன்
……சீரினை ஆரிவண் செப்பிடும் சதுரரே! ……(24)
[மனை = மனைவி; மறைமுடிபு = வேதாந்தம்; நோன்பு = விரதம்; தவித்து = தவமிருந்து; உளே = உள்ளே/ உள்முகமாக; முனிந்து = தள்ளி; சதுரர் = வல்லவர்]

ஸஞ்சோதி³தா கருணயா சதுரபுமர்தா²ன்
வ்யாதன்வதீ விவிதமந்த்ரக³ணோபகீ³தா .
ஸஞ்சிந்த்யஸே வஸுமதி ஸ்தி²ரபக்திப³ந்தை⁴꞉
அந்தர்ப³ஹிஶ்ச ப³ஹுதாப்ரணிதானத³க்ஷை꞉ ..(25)

 

பலவித வேதமந்திரங்களிலே ஓதப்பெற்ற நீ கருணை தூண்ட எல்லா விதமான பயன்களையும் வாரி வழங்குவதனால், ஸ்திரமான பக்தியுடன் உள்ளும் வெளியும் நன்கு புலன்களை வென்ற யோகிகள் உன்னை இடைவீடின்றித் தியானிக்கிறார்கள். ..(25)

 

திருமிகு நிலமகள் செல்வியே கருணையின்
……செறிவுனை உந்தவே சீவர்கள் வேண்டிடும்
அரும்பெரும் பேறுகள் நான்கையும் அளிப்பையென்(று)
……அறிவுசால் அவைகளில் ஆன்றவர் சாற்றுவர்!
பெருமையில் மிக்கநின் பிரியர்கள் பத்தியின்
……பிணைப்பினில் உறுதியாய்ப் பிழையிலா வகைகளில்
ஒருமன மாகியே உள்ளிலும், வெளிப்படை
……உருவிலே கொண்டுனை ஓதியும் துய்ப்பரே! ..(25)
[செறிவு = மிகுதி; துய்ப்பர் = அனுபவிப்பர்]

க்ரீடா³க்³ருʼஹீதகமலாதி³விஶேஷசிஹ்னாம்ʼ
விஶ்ராணிதாபயகராம்ʼ வஸுதேஸபூதிம் .
தௌ³ர்க³த்யது³ர்விஷவிநாஶஸுதாநதீ³ம்ʼ த்வாம்ʼ
ஸஞ்சிந்தயன் ஹி லபதே தனதா³திகாரம் ..(26)

 

மெல்லிதமாகக் கையில் கமலமலர் முதலிய சின்னங்களை ஏந்தி நிற்பவளும், அபயகரம் அருளுபவளும், ஸர்வைச்வரிய ஸம்பத்தையும், துர்கதி என்னும் விஷவியாதியைப் போக்கும் அம்ருத நதியுமான உன்னை நன்கு தியானிப்பவன் வருங்காலத்தில் குபேரப் பட்டம் அடைவான். ..(26)

அன்னைநீ மகி்ழ்வுடன் அம்புயம் ஏந்துவை
……அடுத்தகை கொண்டெமக்(கு) அபயமும் காட்டுவை!
இன்னலாம் விடமன ஏழ்மையை இன்பமாய்
……இன்னமு(து) ஆறென இருந்துநீ மாற்றுவை!
உன்னையுன் செல்வமோ(டு) உன்னியே போற்றினார்
……உறுதியாய்க் குபேரனை ஒத்தபே(று) எய்துவர்!
என்னதான் உன்னிழல் எட்டினார் கிட்டிடார்?
……ஈதலில் உனக்கிணை எண்ணுதற்(கு) இல்லையே! ..(26)
[அம்புயம் = தாமரை; உன்னி = ஆழ்மனத்தில் எண்ணி]

உத்³வேலகல்மஷபரம்பரிதாத³மர்ஷாத்
உத்தம்ʼஸிதேன ஹரிமஞ்ஜலினா(அ)ப்யத்ருʼஷ்யம் .
ஆகஸ்மிகோ(அ)யமதி³ம்யயதி ப்ரஜானாம்ʼ
அம்ப³ த்வதீ³யகருணாபரிணாம ஏவ ..(27)

 

ஜனங்களுடைய ஜந்மபரம்பரைப் பாவங்களால் தொடர்ந்து வரும் கோபம் காரணமாக, சென்னிமேல் கரங்குவித்தும் அணுகித் தணிக்க ண்ணாத திருமால், ஜனங்கள் பக்கம் உன்னுடைய ஸுலபமான ஸௌம்ய கருணா கடாக்ஷங்களினாலே தணிந்து அணுகக் கூடியவனாகிறான். ..(27)

இரக்கமே வடிவமாம் எம்பெரு மானுமே
……எல்லையற்(று) அல்லவை பொறுத்திட ஏற்றிலா(து)
உரத்தொடும் சினத்தொடும் உதவிட மறுக்கிறான்
……உச்சியிற் கரங்குவித்(து) ஓதினும் இரங்கிலான்!
புரத்தலும் பொறுத்தலும் பூமிநின் இயற்குணம்;
……புல்லரும் கருணையாம் புகல்பெறும் நீழல்நீ!
இரப்பவர் எவருமே அவனருள் எய்திட
……எளிமையாய் வழிசெயும் இறைவிநீ ஒருத்தியே! ..(27)
[அல்லவை = பாவங்கள்; உரத்தொடு = உறுதியுடன்; உச்சி = தலை உச்சி; புல்லர் = துணிந்து பாவம் செய்பவர்]


ப்ரத்யேகமப்³³னியுதைரபி து³ர்வ்யபோஹாத்
ப்ராப்தே விபாகஸமயே ஜனிதானுதாபாத் .
நித்யாபராதனிவஹாச்சகிதஸ்ய ஜந்தோ
³ந்தும்ʼ முகுந்த³சரணௌ ஶரணம்ʼ க்ஷமே த்வம் ..(28)

 

தனித்தனியே பலகோடி வருஷங்கள் அநுபவித்தாலும் முதல் மாளாதபடியான பாபராசிகளை நித்தம் செய்கிறவனாயும், காலம் கடந்த பிறகு கழிவிரக்கம் கொள்கிறவனாயுமுள்ள ஜீவனுக்குப் பயம் போய், எம்பெருமான் திருவடிகளை ஆச்ரயிக்க நீ ஓர் தக்க துணையாகிறாய். ..(28)

 

பண்ணிய பழவினைப் பாவமா மூட்டைகள்
……பலயுக மாயினும் பற்றுவிட்(டு) அகன்றிடா!
மண்ணிடக் கரையுமோ வளர்ந்தமா மலையது?
……வருந்திடும் மன்னுயிர்க்(கு) ஒரேதுணை முகுந்தனை
நண்ணுதற்(கு) அருகதை நலமிலாச் சீவனை
……நாரணன் திருவடி நயம்பெற அருளுவை
மண்ணெனும் பேரினுள் மறைந்தபே ராற்றல்நீ!
……மகவுசெய் பிழையெலாம் மறந்தருள் அன்னையே! ..(28)
[பழவினை = முற்பிறவிகளில் கருமங்களால் சேர்த்த பாவங்கள்; மண்ணிட = கழுவிட; மன்னுயிர் = பிறந்து உயிர்த்திருக்கும் சீவன்; நயம் = திருவருள்]

த்ராணாபிஸந்திஸுபகே³(அ)பி ஸதா³ முகுந்தே³
ஸம்ʼஸாரதந்த்ரவஹனேன விலம்ப³மானே .
ரக்ஷாவிதௌதனுப்ருʼதாமனகானுகம்பா
மாதஸ்வயம்ʼ விதனுஷே மஹதீமபேக்ஷாம் ..(29)

 

எம்பிரான் ஜீவர்களைக் கருணையினால் காக்க எண்ணியிருந்தும், ஸம்ஸார லோகத்தை நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்புள்ளவன் ஆகையால், அவர்கள் விஷயத்தில் கொஞ்சம் விளம்பம் செய்யும்போது, தாயே, நீ அதைப் பொறாதவளாகிக் கருணை கொண்டு, இவர்களுக்காகப் பரிந்து பெருமாளிடம் வேண்டுகிறாய். ..(29)

 

ஆக்கிய அகிலமார் அனைத்துயிர் தம்மையும்
……அன்பனாம் எளியனாம் முகுந்தனே அறத்துடன்
காக்கிற பொறுப்பினைக் கருணையால் சுமப்பதால்
……காலதா மதம்சிறி(து) ஆவதைக் காண்கையில்
தேக்கமாங்(கு) ஆவதைத் தேவிநீ தவிர்த்திடத்
……திறமுடன் அத்தொழில் ஆற்றிடச் சித்தமாய்
ஊக்கமோ(டு) உறுதியை உன்கையில் ஏற்கிறாய்!
……உவமையே(து) உனதயைக்(கு) உலகையீன் அன்னையே! ..(29)

[உலகை ஈன் = உலகைப் பெற்ற/ஈன்ற]

ர்மத்³ருஹம்ʼ ஸகலது³ஷ்க்ருʼதிஸார்வபௌமம்ʼ
ஆத்மானபிஜ்ஞமனுதாபலவோஜ்ஜி²தம்ʼ மாம் .
வைதானஸூகரபதேஶ்சரணாரவிந்தே³
ஸர்வம்ʼஸஹே நனு ஸமர்பயிதும்ʼ க்ஷமா த்வம் ..(30)

 

தர்மத்ரோஹியும், ஸகல பாபிகளுக்கும் ப்ரதமனாயும், என்னையும் அறியகில்லாத் துச்சனாயும், இத்தனையளவு இரக்கமற்றவனாயும் இருக்கும் என்னை, எம்பிரான் யஜ்ஞ ராஹனின் இணையடிப் போதுகளை அடைவிக்க, 'ஸர்ஸஹை' என்று பொறுமைக்குப் பெயர்போன நீ அன்றோ தக்கவளாகிறாய்? ..(30)

 

அறச்செயல் கெடுத்தவன் அல்லதே அறிந்தவன்
……அடுத்தவர் வலிதனில் இரக்கமே அற்றவன்
மறக்கொடுஞ் செயல்களில் மன்னவர் மன்னவன்
……மறைஇறை ஆத்தும அறிவினில் மண்டுகம்
பிறவியே பயனிலாப் பிழைஎனை யுங்கதி
……பெறப்பெரும் வராகனின் திருவடித் திருநிழல்
உறஉத வும்தயை உனதனித் தன்மையே!
……உறவினால் அன்னைநீ உனதுரு கருணையே! ..(30)

[அல்லது = அதருமம்; மறம் = பாவம்; மண்டுகம் = தவளை; உற = அடைய]

தாபத்ரயீம்ʼ நிரவதிம்ʼ வதீத³யார்த்³ரா
ஸம்ʼஸாரகர்மஜனிதாம்ʼ ஸபதி³ க்ஷிபந்த꞉ .
மாதர்பஜந்து மதுராம்ருʼதவர்ஷமைத்ரீம்ʼ
மாயாவராஹத³யிதே மயி தே கடாக்ஷா꞉ .. 31..

ஸம்ஸாரம் என்னும் கடுங்கோடையில் உண்டான எல்லையற்ற, என் தாபத்ரயங்களையும் அப்போதே அவிக்கவல்லனவும், உன் கருணா ரஸங்களால் குளிர்ந்தவையும் ஆன உன் கடாக்ஷங்கள், வராஹ மஹிஷியே, என்னிடம் பதிந்து, இனிய அமிருத வர்ஷதாரைகளின் தரத்தைப் பெற வேண்டும். ..(31)

 

தன்னையே வராகனாய் இயற்றிய தலைவனின்
……தலைவியே இச்சமு சாரமோர் வெங்கனல்!
நின்னருந் தயைக்கடல் நீரொரு மாரியாய்
……நீள்கருங் கடைவிழி நிருமல நோக்குடன்
இன்னமு தாகவே இணைந்திடப் பெறுவனேல்
……இனியிவண் முப்பெரும் துயரமென்(று) எஞ்சுமோ?
மன்னுயிர் சிறிதுமே வாடிடக் காண்கிலா
……மண்ணனாய் ஏலெனை மலரடிப் பொடியிலே! ..(31)
[இவண் = இவ்வுலகில்; அனாய் = அன்னையே; ஏல் = ஏற்றுக் கொள்]

பத்யுர்த³க்ஷிணபாணிபங்கஜபுடே வின்யஸ்தபாதா³ம்பு³ஜா
வாமம்ʼ பன்னக³ஸார்வபௌமஸத்³ருʼஶம்ʼ பர்யங்கயந்தீ புஜம் .
போத்ரஸ்பர்ஶலஸத்கபோலப²லகா பு²ல்லாரவிந்தே³க்ஷணா
ஸா மே புஷ்யது மங்க³லான்யனுதி³னம்ʼ ஸர்வாணி ஸர்வம்ʼஸஹா ..(32)

தன் பர்த்தாவான வராஹ நாயனாரின் வலத்திருக்கைத் தாமரையில் த்ருடமாகத் தன் பாதகமலங்களைப் பதித்து, ஸர்ப்பராஜனைப் போல் குளிர்த்தி, மென்மை, மணம் இவை கொண்ட, இடமுடைய அவனது இடத் தோளில் நளினமாகச் சாய்ந்துகொண்டு அவனது தளிர் போன்ற தாடைகளின் இதமான ஸ்பர்சம் பட்டுத் தன் பளிங்குக் கன்னங்கள் பளபளக்க, திருக்கண் தாமரைகள் தளதளக்கப் பரவசப்பட்டு நிற்கும்
பூமிப்பிராட்டி எனக்கு எல்லாவிதமான மங்களங்களும் பொங்கும்படி அருளவேண்டும். ..(32)

 

கணவனின் வலக்கரக் கஞ்சமேல் நின்னடிக்
……கமலமூன் றியவளே! கட்செவி ஆயிரம்
பணமுளான் அனஇடப் புயத்தினிற் சாய்ந்தவள்!
……பதியுடை நீள்முகம் படக்கனம் சிலிர்த்திடும்
உணர்வுற மிளிர்பவள்! ஒளிமிகு மலர்விழி
……உடையவ ளே!பிழை உவப்புடன் பொறுத்திடும்
குணமணி நிலஅனைக் கோமக ளே!எனைக்
……குறையற வளமிகக் கொடுத்தருள் செய்கவே! ..(32)
[கஞ்சம் = தாமரை; கட்செவி = பாம்பு; பணம் = பாம்பின் படம்; ஆயிரம் பணமுளான் = ஆதிசேடன்; அன = போன்ற]

அஸ்யேஶானா ஜக³த இதி யா ஶ்ரூயதே விஷ்ணுபத்னீ
தஸ்யாஸ்தோத்ரம்ʼ விரசிதமித³ம்ʼ வேங்கடேஶேன பக்த்யா .
ஶ்ரத்³தாக்திப்ரசயகு³ருணா சேதஸா ஸம்ʼஸ்துவானோ
யத்³யத்காமஸபதி³ லபதே தத்ர தத்ர ப்ரதிஷ்டா²ம் .. 33..

 'அஸ்யேசாநா' என்று தொடங்கி ச்ருதியில் ஓதப் பெற்ற விஷ்ணு பத்தினியின் பெருமை பற்றி, பக்தி கொண்ட ஸ்ரீவேங்கடேச கவியினால் இந்தத் துதிநூல் ஆக்கப்பெற்றது. மிக்க ச்ரத்தையும் பக்தியும் கொண்ட உள்ளத்துடன் இந்த நூலைப் பயிலுவர் எதெதை விரும்பினாலும் அவ்விச்சையின் எல்லையில் நிச்சயம் நிற்பர். ..(33)

 

எவ்வனை எம்பெரு மான்மனை, இந்நிலத்(து)
……ஈச்சுரி, எனமறை இயம்பியே போற்றுமோ,
அவ்வனை அகத்திலே ஆழ்த்தியே இத்துதி
……ஆக்கினான் வேங்கட நாதனிங்(கு)! ஆரிதைச்
செவ்வனே சீரிய சிரத்தையோ(டு) ஓதுதல்
……செய்வரோ அன்னவர் சிந்தையால் வேண்டியே
எவ்வெது வேட்பரோ அவ்வதை எய்துவார்!
……இன்னலற்(று) எய்துவார் இடையறா இன்பமே! ..(33)
[எவ்வனை = எந்த அன்னை; மனை = மனைவி; வேட்பரோ = விரும்புவாரோ]

 

வேதாந்த தேசிகர் அருளிய பூஸ்துதியும், அதன் தமிழ்க் கவிதை வடிவமும் முற்றிற்று.

 

பின்மொழி

தேசிகனின் பூத்துதியைச் சேவையென நித்தமுமே
வாசிநீ; வாசித்தால் வாக்குமனம் தூய்மையுறும்!
பூசிநீ பூமிதனைப் பூத்துதியால்! பூசைகடன்
காசினியிற் கால்வைத்தக் கால்!

நல்வாழ்த்துகள்

கோபால்

[23/03/2026]


 

Ram Ramakrishnan

unread,
Mar 23, 2026, 9:11:31 AM (yesterday) Mar 23
to santhav...@googlegroups.com
மிக அருமையான பூஸ்துதி தமிழாக்கப் பாடல்கள், திரு. கோபால். ரசித்தேன் மிகவே.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 23 Mar 2026, at 5:05 PM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttsSzJETPcKyqxES5f%2BQvWpo7DFAOopFQckVxqCTi0aKg%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
Mar 23, 2026, 11:05:40 AM (yesterday) Mar 23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்.
கோபால்

On Mon, Mar 23, 2026 at 6:41 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமையான பூஸ்துதி தமிழாக்கப் பாடல்கள், திரு. கோபால். ரசித்தேன் மிகவே.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 23 Mar 2026, at 5:05 PM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:



பூஸ்துதி (21-33)

 

ஆவிர்மதை³ரமரத³ந்திபிருஹ்யமானாம்ʼ
ரத்னாகரேண ருசிராம்ʼ ரஶநாகு³ணேன .
மாதஸ்த்ரிலோகஜனனீம்ʼ வனமாலினீம்ʼ த்வாம்ʼ
மாயாவராஹமஹிஷீமவயந்தி ஸந்த꞉ ..(21)

 

தாயே, மதம் பெருகும் திக்கஜங்கள் தாங்க, அழகிய ரத்நாகரமான கடல்களை மேகலையாகக் கொண்டு, வநமாலை களை அணிந்த த்ரிலோகமாதாவான உன்னைப் பெரியோர்கள் மாயாவராஹனின் மஹிஷியாகச் சொல்லுவர். ..(21)

 

மதசலம் பெருகிடும் வானவர் வாரண
……மத்தகம் எட்டினில் மலரென அமர்ந்தவள்
உததிகள் மணிமினும் ஒட்டியா ணந்தனை
……ஒத்ததாய் அணிசெய, உனதடர் வனம்பல
விதநிற மாலையாய் விளங்கிடும் அழகிநீ!
……விரிந்தமூ உலகுகட்(கு) அன்னையாய், வெறியனை
அதஞ்செய வராகனாய் ஆனவன் மனைவியாய்
……ஆன்றவர் உனைத்தம(து) அகத்தினிற் காண்பரே! ..(21)

[வாரணம் = யானை; உததி = கடல்; அதம் செய = அழிக்க; ஆன்றவர் = அறிவாலும் அறத்தாலும் உயர்ந்தவர்; அகம் = உட்கண், உள்ளம்]


.............
Reply all
Reply to author
Forward
0 new messages