சவால் வெண்பா.. சொல்க தீர்வு

5 views
Skip to first unread message

Kaviyogi Vedham

unread,
Jun 24, 2026, 9:02:38 PM (10 hours ago) Jun 24
to santhavasantham

   தண்டா  மரைக்கன்றி  யார்தகுதி   தேவிபதம்?

   வண்டாருக் கன்றி மலர்தேனும்?-கொண்டானே

   செம்மைமுகம் நாணுவதும்  சேர்த்தறிவான்! என்றாலும்

   வெம்மைக்குத் >>>>>>>  ...கு?

.

(வெண்பா-வேதம்  24-06-26)-  புதிர்போட்டு  சந்தவசந்தம்-இல்+சென்னை  நண்பருக்கு.(அவருக்கு சவால் என்றால்   பிடிக்கும்)-

. க்ளூ--விடுபட்ட  இடத்திற்கு..

1)-கொண்டான்  முயல்கிறபோது.. இரவில்  யாரோ இரண்டு தடவை நாயை  அழைப்பது கேட்டது.

2)-எனக்கும்  ஐயம்..  இப்படி  யாராவது.. உருகுவார்களா/

  என் அன்பர்கள் முயன்று பூர்த்தி செய்க...  ஒரு   வாரம் கழித்து நான்   விடை சொல்வேன்.

Parthasarathy S

unread,
2:41 AM (4 hours ago) 2:41 AM
to சந்தவசந்தம்
அடியேனின் முயற்சி!

தண்டா  மரைக்கன்றி  யார்தகுதி   தேவிபதம்?

வண்டாருக் கன்றி மலர்தேனும்?- கொண்டானே


செம்மைமுகம் நாணுவதும்  சேர்த்தறிவான்! என்றாலும்

 வெம்மைக்குத் தாங்குமோ மொக்கு?

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Reply all
Reply to author
Forward
0 new messages