நன்றி கணேசன் ஐயா. ஊதியூர் பற்றிய கூடுதல் செய்திகள்மற்றும் உதியர், ஓதி மரம், சொல்லாய்வு ஆகியன அறிந்தேன்.மிக்க நன்றி.சுந்தரம்.
மிக அருமையான பதிவு. உவச்சர்களின் காளி கோயில் திருப்பணி பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். கம்பர் போன்ற மகாகவிகள் இருமொழிப் புலவர்கள் இவர்களிலே தோன்றியுள்ளனர்.இப் பூசாரிகள் பிற்காலத்தில் தமிழர் குலங்களில் பல சிவாச்சார்யர் (குருக்கள்) ஆனமை போல, கபி குலம் என்றாகியிருக்கலாம். கபி - பழுப்பு நிறம். கபிகுலத்தவர் தொல்காப்பியர்என்று பழைய நூல்கள் பல கூறுகின்றன. இருமொழிப் புலமையால் தொல்காப்பியம் தமிழுக்குக் கிடைத்துள்ளது.உதி/ஒதி என்பது ஒருவகை மரம். அது ஊதி/ஓதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கொங்கு நாட்டுப் பகுதியில் உதி/ஒதி மரங்கள் மிகுதியாகப் பண்டைக் காலத்தில் இருந்தன.ஓதி மலை என்ற மலை சத்தியமங்கலம் அருகே உள்ளது. http://www.giriblog.com/2008/07/othimalai-murugan.htmlஊதியூர் கொங்கண முனிவருடன் தொடர்பானதலம். ஊதி மலை முருகனின் மேல் திருப்புகழ் இரண்டு உள்ளது. அதில் அம்மலைக்குப் பெயர்க்காரணம்அருணகிரி நாதர் சொல்லியுள்ளார். ஓதி மரங்கள் மிகுந்த இடம் எனப் பாடியுள்ளார்.பழைய காலச் செய்யுளில் ஓ, ஒ ஆதற்குப் புள்ளி பெறும் என்பதற்கு ஓதி, ஒதி சொற்களை உதாரணமாகப் பாடப்பெற்றுள்ளது.உதி மரம் குலச்சின்னமாக இருந்த குடும்பம் மேலைக் கொங்கில் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் உதியர்கள்.காஞ்சி நதி பூர்வீகம் என்பது சங்கச் செய்யுள்களால் அறிகிறோம். அயிரை மலை (பழனி மலைத்தொடர்) ஐயை அவர்கள் குலதெய்வம்.இவர்கள் கொல்லிப் பொறையருடன் மணவினை, ஆள்வினை செய்த குடும்பங்கள் இணைந்து சேர நாட்டை ஆண்டுள்ளனர்.பெருஞ்சோறு மாபாரத காலத்திலேயே அளித்தவர்கள் என்பார்கள். வடக்கே இருந்து வந்த வேளிர்கள் எனலாம்.பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், .... இவனது தலைநகர் சேரர்களின் வஞ்சி. சங்க காலத்தின் வஞ்சி எனப்பட்ட ஊர் இன்று கரூர்என அழைக்கப்படுகிறது.அன்புடன்நா. கணேசன்2018-06-02 1:24 GMT-07:00 dorai sundaram <doraisu...@gmail.com>:காங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள்
முன்னுரை
வரலாற்று ஆர்வலரும் திருப்பூர் வீரராசேந்திரன் வரலாற்று மைய உறுப்பினருமான நண்பர் உடுமலை தென்கொங்கு சதாசிவம், தம்முடைய தொழிலில் ஈடுபடும் நேரம் போகக் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் வரலாற்றுத் தடயங்களைத் தேடிப் பயணப்பட்டுக்கொண்டே இருப்பவர். அவ்வாறான தேடல்களுள் ஒன்றில் தாராபுரம் அருகே, தாளக்கரை என்னும் ஊரில் வயல்வெளிகளுக்கிடையில் தனிக்கல் ஒன்றில் கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார். அந்தக் கல்வெட்டைப் படித்துச் செய்திகளை அறிந்துகொள்ளும் ஆவலில் கல்வெட்டு பற்றிய தகவலைக் கட்டுரை ஆசிரியரிடம் (கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம், கோவை) பகிர்ந்துகொண்டதில் இருவரும் 17-12-2017 அன்று தாளக்கரை நோக்கிப் பயணப்பட்டோம். காங்கயம் கல்லூரியொன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் வரலாற்று ஆர்வலர் ஆதிரை என்பவரும் காங்கயத்தில் எங்கள் பயணத்தில் இணைந்துகொண்டார். இப்பயணம், தாளக்கரைக் கல்வெட்டை ஆய்தல் என்ற நோக்கத்துடன் மட்டுமன்றி, வழியில் காங்கயத்திலிருந்து தாளக்கரை வரையிலுள்ள பகுதிகளில் கிடைக்கும் தொல்லியல் தடயங்களைத் தேடும் ஒரு முயற்சியாகவும் அமைந்தது.

பாராட்டுதல் வழங்கிய சுபா அவர்களுக்குமிகுந்த நன்றி.பொன்னூதிமலை என்றுதான் அப்பகுதி மக்கள்வழங்குகிறார்கள். ரசவாதக் கதை நிலவினாலும்,ஊதி மலை, பொன்னிறப் பூகளைக்கொண்ட மரங்களின்மலை என்று எடுத்துக்காட்டிய கணேசன் அவர்களுக்கும்மிகுந்த நன்றி. அன்னூருக்கருகில் ஓதி மலை அமைந்துள்ளது.முடியும்போது சென்று பார்க்கவேண்டும்.சுந்தரம்.
2018-06-03 13:34 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:மிக அருமை.பேசப்படாத கோயில்கள், சின்னங்கல் என உங்கள் ஆய்வு மிக நேர்த்தியாக மிளிர்கின்றது. மிக ஆக்கப்பூர்வமான ஆய்வு. நன்ரி.சுபா
பாராட்டுதல் வழங்கிய சுபா அவர்களுக்குமிகுந்த நன்றி.பொன்னூதிமலை என்றுதான் அப்பகுதி மக்கள்வழங்குகிறார்கள். ரசவாதக் கதை நிலவினாலும்,ஊதி மலை, பொன்னிறப் பூகளைக்கொண்ட மரங்களின்மலை என்று எடுத்துக்காட்டிய கணேசன் அவர்களுக்கும்மிகுந்த நன்றி. அன்னூருக்கருகில் ஓதி மலை அமைந்துள்ளது.முடியும்போது சென்று பார்க்கவேண்டும்.சுந்தரம்.