இன்று 13-02-2026 ஏகாதஶி. எம்பெருமானை வேண்டி இடும் பா உங்கள் அனுபவத்திற்கு
வரிவில் கையா வகையாய் உலகை
விரித்தே காத்தாய் விருந்தாய் இட்டாய்
கரியும் துயரில் கலங்கும் வேளை
கலக்கும் நானென தென்பதை விடவே
உரிமை விடாமல் உயர்புள் கொண்டாய்
ஒளிகொள் ஆழி வுதவிக் கிட்டாய்
பரியாய் ஞானம் பகலாய் இருத்திப்
பதமே பாவிக் கருள்செய் பரமா!
_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
--