முக்கியமான பாரதி சிந்தனை

348 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Feb 19, 2023, 11:45:23 PM2/19/23
to santhavasantham
பாரதி சிந்தனை.

அன்பர்களே,
தினமொரு பாரதி சிந்தனை எழுதிவந்த போது பாரதியின் செந்தமிழ்நாடென்னும் போதினிலே கவிதை மிக நன்றாக இருந்தாலும் அதற்கு ஏன் பரிசு கிடைக்கவில்லை என்பதன் காரணை விளக்கி எழுதியிருந்தேன். என் கருத்துக்கு ஆதரவாக இப்பொழுது ஒரு விளக்கம் கிடைத்திருக்கிறது. நான் சமீபத்தில் நாமக்கல் கவிஞரின் என் கதை புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது.
பாரதி கலந்து கொண்ட தே போட்டிக்கு நாமக்கல் கவிஞரும் கவிதை அனுப்பியிருக்கிறார். அதைப்பற்ரி அவர் எழுதியிருப்பதில் யார் போட்டியை நடத்தினார்கள், போட்டியின் விதி முறை என்ன என்பதெல்லாம் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. நடத்தியது தூத்துக்குடி அன்பரொருவர். தேசிய உணர்ச்சியுள்ள 100 கும்மிப் பாடல்கள் எழுதி அனுப்பவேண்டுமென்பது நிபந்தனை.. பாரதியின் பாட்டு 100 பாடல்கள் இல்லை.. அது தமிழ்நாட்டைப் பற்றியதாக் இருக்கிறது. பாரதியிடம் போட்டியைப் பற்றிக் கூறியவர்கள் நிபந்தனைகளை முழுமையாகச் சொல்லவில்லை என்பது தெரிகிறது.

இனி நாமக்கல் கவிஞருடைய கட்டுரையை இடுகிறேன். மிக நீளமானது. எனவே கொஞ்சங்கொஞ்சமாக இங்கே இடுகிறேன். அடுத்த இடுகையில் தொடங்கும். நாமக்கல் கவிஞர் எழுதிய கும்மிப்பாடல்கள் அவரது பாடல் தொகுதியில் கிடைக்கலாம். தேடுவோம். பரிசு பெற்ற கும்மிப் பாடல்களை அமரர் பெ.சு மணியவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். நான் படித்திருக்கிறேன். மிகவும் சுமார் ரகம்.

Niranjan Bharathi

unread,
Feb 20, 2023, 7:24:33 AM2/20/23
to santhav...@googlegroups.com

அன்பிற்குரிய இலந்தை Uncle,

 நீங்கள் கூறியது போல் தேசிய உணர்ச்சி கொண்ட 100 கும்மிப்பாடல்களை எழுத வேண்டும் என்பது தான் போட்டி விதிமுறை.

இந்த நிகழ்வு பற்றி பாரதி ஆய்வாளர் பேராசிரியர் ய.மணிகண்டன் 2021ஆம் ஆண்டு ஜூன் மாத காலச்சுவடு இதழில் மிக விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மிக நீண்ட அக்கட்டுரையிலிருந்து சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு:-

  • “செந்தமிழ் நாடென்னும் போதினிலே”எனத் தொடங்கும் பாடலைப் பாரதி எழுதினார்; போட்டிக்கு அனுப்புவதற்காக அல்ல, நண்பர்களின் விருப்பத்திற்காக என்னும் செய்தியை முதலில் வெளிப்படுத்தியவர் பாரதிதாசன். 1935இல் தான் நடத்திய ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்’, ஆவணி இதழில் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாடல் உற்பத்திக்குக் காரணம்” என்னும் தலைப்பில் ஒரு கவிதையைப் (பக். 5) பாரதிதாசன் எழுதினார். அதில் தமிழ்நாட்டைப் பற்றிய பாடலுக்குப் பரிசளிப்பதாக மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் அறிவித்ததாக நினைவுகூர்ந்து எழுதியிருந்தார்.

  • 1939இல் எழுதி 1954இல் வெளிவந்த ‘பாரதி நினைவுகள்’ நூலில் புதுவையில் பாரதி வசித்தபோது சிறுமியாக அவரோடு பழகிய யதுகிரி, சென்னையில் உள்ள ஒரு சங்கத்தார் ‘நம் நாட்டின் மேல்’ பாடல் புனைய அறிவித்த போட்டிக்காகப் பாரதி “செந்தமிழ் நாடென்னும் போதினிலே”பாடலை எழுதியதாகவும், மூன்றாம் பரிசான 100 ரூபாயே கிடைத்ததாகவும் முதற்பரிசு, இரண்டாம் பரிசு பெற்ற கவிதைகளின் சுவடுகளைக்கூடக் காணோம் எனவும் இந்நிகழ்வை (பக். 28-30) விவரித்திருந்தார்.

  • இப்பாடல் தோன்றிய சூழலை அறிய விரும்பிய பாரதியின் தம்பி சி. விசுவநாத ஐயர் சோமசுந்தர பாரதியாருக்கு விவரம் வேண்டிக் கடிதம் எழுதியிருந்தார். இதற்குப் பதில் எழுதிய சோமசுந்தர பாரதியார் "தேசப்பற்றை ஊட்டும் தேசியப் பாடல்களுக்கு இரு பரிசுகளை அளிக்கும் ஒரு போட்டியைத் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி. விசுவநாத ஐயர் அறிவித்தார் எனவும், போட்டிக்குப் பாரதி பாடல் இயற்றி அனுப்பினார் எனவும், பாரதிக்குப் பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் வேறு இருவர் போட்டியில் பரிசுகளைப் பெற்றனர்" என்றும் எழுதியிருந்தார்.

  • இப்போட்டியில் முதல் பரிசு ( கோகலே ரானடே தலைப்பரிசு ) வென்றவர் பழம்பெரும் நாவலாசிரியர் அ. மாதவையா. 

  • கழுகுமலை ரா.ம. சுப்பையர் என்பவரே இப்போட்டியில் அ. மாதவையாவை அடுத்துத் தெரிவுசெய்யப்பெற்றுத் தங்க மெடல் பரிசு பெற்றவராவார்

  • இப்போட்டி குறித்து நாமக்கல் கவிஞர் எழுதியுள்ள குறிப்பு யாதெனில் " ‘நாட்டுக் கும்மி’ என்று பெயரிட்டு நானும் நூறு பாட்டுகளை அனுப்பினேன். சிலநாள் சென்றபின் அந்தப் பரிசுக் கமிட்டியின் காரியதரிசியிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் என்னுடைய பாட்டுகளிற் சில பாட்டுகளை நீக்கிவிட அனுமதி கொடுக்க வேண்டுமென்றும், அந்தப் பாட்டுகளை நீக்காவிட்டால் என்னுடைய கவிதையை கமிட்டியார் ஏற்றுக் கொள்ளுவது சிரமமாக இருக்கும் என்றும் எழுதியிருந்தார். அவர் நீக்கிவிட நினைத்த பாட்டுகள் நான் வெகுமுக்கியமான பாட்டுகளாக எண்ணினவை. மேலும் அந்தப் பாட்டுகளில் சிலேடைப் பொருளாக அமைக்கப்பட்டிருந்த பெரிய வர்களைப் (அரவிந்தர், திலகர், காந்தி) பரிசுக் கமிட்டியார் அவமதிப்பதாகவும் நினைத்து விட்டேன். அதனால் வாலிப முறுக்குள்ள வார்த்தைகளால் அவர்களுடைய கருத்தைக் கடிந்து கடிதம் எழுதிவிட்டேன். அந்தக் கடிதத்தின் பலனாக என்னுடைய பாட்டு பரிசுக்கான பாட்டுகளோடு சேர்க்கப்படவில்லையென்று பின்னால் தெரிய வந்தது. (என் கதை, பக். 196-197)

இனி இந்த விவகாரம் குறித்து பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்கள் கொண்ட துணிபு பின்வருமாறு:-

இந்தியாவின் அருமைபெருமைகள், தேசாபிமானம், கல்வி, கைத்தொழில், நவீன வளர்ச்சி ஆகியன குறித்துப் பாடல்கள் அமைய வேண்டுவது போட்டியின் அடிப்படை நிபந்தனையாகும் என்பதும் பரிசுபெற்ற இருவரும், பரிசு பெறாத நாமக்கல் கவிஞரும் இப்பொருண்மையிலேயே பாடல்கள் படைத்து அனுப்பியுள்ளனர் என்பதும் தெளிவாகின்றன.

இந்திய நாட்டை மையமிட்ட பாடல் போட்டிக்குத் தமிழ்நாட்டை மையமிட்ட “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” பாடலைப் பாரதி எழுதியிருக்க வாய்ப்பில்லை; எழுதி அனுப்பியிருத்தல் பொருத்தமில்லை. அனுப்பியிருந்தால் பாரதிக்குப் பரிசளிக்காமல் மாதவையாவிற்கும் மற்றவருக்கும் பரிசு வழங்கியமை நியாயமானதே என முதன்மைநிலையில் எண்ணுதல் வேண்டும்.

போட்டிப் பொருண்மையை உணர இயலாத நிலையினர் அல்லர் பாரதி. ஒருவேளை பிறழ உணர்ந்து செந்தமிழ் நாடு பாடலைப் படைத்தனுப்பியிருந்தாலும் நாமக்கல் கவிஞருக்கே உடன்பாடின்மையைத் தெரிவித்துச் சில பாடலை நீக்க அனுமதி வேண்டிய பரிசுக் குழுவினர் பாரதிக்கும் அடிப்படைப் பொருளே மாறியுள்ளமையைச் சுட்டிக்காட்டி வேறு பாடல் வேண்டியிருப்பர். அவ்வாறு ஏதும் நடந்ததாகக் குறிப்புகள் நமக்குக் கிட்டவில்லை. எனவே பாரதியின் பாடல் பரிசுக் குழுவினருக்குக் கிடைக்காதிருக்கக் கூடும்.

ஒருவேளை பிறழ எண்ணி எழுதியிருந்தால் அதனை உணர்ந்தபின் மீண்டும் படைத்த பாடலாக அல்லது போட்டியை ஒட்டி / போட்டிக்காக முதன்முறையாக இயற்றிய பாடலாகப் “பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்” எனத் தொடங்கும் பாடல் இருக்கலாம். போட்டிப் பொருண்மைக்கு மிகப் பொருத்தமாக அமையும்வண்ணம் அதே கால எல்லையில் இயற்றப்பட்ட அப்பாடல் விளங்குகின்றது. (பரலி சு. நெல்லையப்பர் பணியாற்றிய பாரதி என்னும் இதழ் வெளியீடுகளில் ‘செந்தமிழ் நாடு’, ‘பாரததேசம்’ ஆகிய பாடல்கள் அடுத்தடுத்து வெளிவந்தன என்னும் குறிப்பையும் பாரதியின் நாட்டுப்பாட்டு, 1919 நூலில் ‘செந்தமிழ் நாடு’கவிதையை அடுத்துப் ‘பாரத தேசம்’ கவிதை இடம்பெற்றமையையும் கருதுக.

இந்தியாவின் அருமைபெருமை, கைத்தொழில் தொடங்கித் தேசத்தின் நவீன வளர்ச்சி ஆகியனவற்றைப் பொருளாகக்கொண்டு, போட்டியின் விதிகளை முழுக்கமுழுக்க நிறைவுசெய்யும்வகையில் எழுதியதாக இப்பாடல் காட்சி தருகின்றது.

வெள்ளிப் பனிமலை, சிந்துநதி, சேரநன்னாடு, சுந்தரத் தெலுங்கு, கங்கைநதிப்புறம், காவிரி வெற்றிலை, சிங்க மராட்டியர், காசி நகர், காஞ்சி, ராசபுத்தானம் என இந்திய நிலப்பரப்பின் அருமைபெருமைகளும் பட்டினில் ஆடை, பஞ்சில் உடை, கட்டித் திரவியங்கள், ஆயுதம், காகிதம் செய்தல், ஆலைகள் கல்விச்சாலைகள் வைத்தல், கப்பல் செய்தல், வானை அளத்தல், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிதல், நேர்மையர் மேலவர் மற்றோர் கீழவர் என்னும் பேதமற்ற நிலை அடைதல் எனக் கைத்தொழில் தொடங்கி நவீன வளர்ச்சிவரை சிந்திப்பதாகப் போட்டி அறிவிப்பு எடுத்துரைத்த கூறுகளையெல்லாம் இப்பாடல் முழுதுற நிறைவுசெய்துள்ளமையைப் பாரதியியலார் இத்தொடர்பில் மனங்கொள்ளுதல் தகும்.

பாரதிதாசன் கவிதையில் குறிப்பிட்டதுபோல இக்கவிதையைப் பாரதி போட்டியை ஏற்பாடு செய்தவர்களுக்கு அனுப்பாமல் இருந்திருக்கக்கூடும் அல்லது அனுப்பிய அஞ்சல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் காவல்துறை / அஞ்சல்துறையால் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவரது அஞ்சல்கள் பல அக்காலகட்டத்தில் சென்று சேராமலும் வந்தடையாமலும் இருந்தமை அவரது கூற்றுகளாலும் உடனிருந்தவர்களின் கூற்றுகளாலும் நாம் அறிந்ததே. போட்டியை நடத்தியவர்களைப் பாடல் சென்றடையாததால் பரிசு கிடைக்காதிருந்திருக்கக்கூடும்.

பாரதிதாசன், யதுகிரி, சோமசுந்தர பாரதியார் ஆகியோரின் கூற்றுகள் நெடுங்காலத்திற்குப்பின் நினைவுகூரப்பட்டவை. எனவே மாறுபாடுகள் ஏற்படல் இயல்பே. பாரதிதாசன் மதுரைத் தமிழ்ச்சங்கம் எனக் குறிப்பிட, யதுகிரி சென்னைத் தமிழ்ச்சங்கம் எனக் குறிப்பிட்டமை இவ்வகையிலானதே. இடமாறுபாடு போலவே சுட்டும் பாடலும் மாறுபட்டிருக்கக்கூடும். “பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்” கவிதைக்குப் பதிலாகச் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” கவிதையைச் சுட்டியிருக்கலாம்.

பாரதியின் புதுவைவாசக் காலத்தில் தமிழ்நாட்டைச் சிறப்பிக்கும் வேறொரு பாடற் போட்டி நடத்தப்பட்டதா, அதற்காகச் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” பாடல் படைக்கப்பட்டதா என்னும் நோக்கிலும் அக்கால இதழ்களைத் தேட வேண்டும்.

பங்கேற்ற மூவரினதும் சோமசுந்தர பாரதியாரினதும் எழுத்துப் பதிவுகள் வழிப் போட்டிக்கான விதிமுறைகளை அறிய முடிந்துள்ளதே தவிர, வழக்கறிஞர் விசுவநாத அய்யர் விடுத்த அறிவிப்பை அக்கால இதழ்களின் வாயிலாக அறிய இயலவில்லை. கண்ட றிந்தால் மேலும் விளக்கம் கிட்டும்.

“செந்தமிழ் நாடு எனும் போதினிலே”, “பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார்” - செந்தமிழ் நாடு, பாரத தேசம் எனும் இருநிலையிலான பாடல்களும் ஒரேபோட்டிக்காக இருமுறை எழுதப்பெற்றவையா, இருவேறு போட்டிகளை ஒட்டி நண்பர்களின் வேண்டுகோள்களை ஏற்று எழுதப்பெற்றவையா என்பதை எதிர்காலம் தெளிவுபடுத்தட்டும்.

அன்புடன்,
நிரஞ்சன் பாரதி

Subbaier Ramasami

unread,
Feb 20, 2023, 11:46:33 AM2/20/23
to santhavasantham

காந்தியடி. வேகு சாந்தனடி.

இந்த. கான்கு பாட்டுகளும்நான்என்கவித்திறமை: யைக்காட்டுவதுபோல, விரும்பி எழுதின பாட்டுகள்‌... இந்தப்பாட்டுகள்‌ 1914-ம்வருஷத்தில்இயற்றப்பட்டவை என்பதை நினைவில்வைத்துக்கொண்டு பார்த்தால்தான்இவற்றின்அழகு புலனாகும்‌, அப்போது எனக்கிருந்த அரசியல்எண்ணங்களும்இதில்ஒருவாறு உருவாகின்றன. முதற்பாட்டில்பிரம்மனும்‌--அரவிர் கோஷாும்சிலேடை. இரண்டாவது பாட்டில்சிவபிரா னும்‌--பாலகங்காதர திலகரும்சிலேடை, மூன்றாவது பாட்டில்கோபாலகிருஷ்ணனும்‌ -- கோபால இருஷ்ண கோகலேயும்சிலேடை, நான்காவது பாட்டில்கந்தனும்‌-- காந்தியும்சிலேடை. காந்தியைப்பற்றிய இந்தக்கடைப்பாட்டு மிகவும்கருதத்தக்கது, 1914-ம்ஆண்டில்‌, காந்தியடிகள்இந்தி UTE DF வருவதற்கு முன்னால்‌, .அவருடைய மூமை இன்னதென்பதை இந்தியர்களில்வெகு சிலரே ஊ௫க்கக்கூடிய அந்தக்காலத்தில்‌, அவர்தென்னாப்பிரிக்காவில்அப்போது நடத்திக்‌' கொண்டிருந்த சத்யாக்ரெகத்தைத்தவிர வேறு விவரங்கள்ஈம்முடைய காட்டில்பரவாத தாளில்‌, அவரைப்பற்றி எழுதிய பாட்டில்அமைத்த பதங்கள்இப்போதும்எனக்கு இன்பம்கொடுக்கின்றன. “தாமரை மலரில்வீஜ்.றிருக்கும்மேலவனாகய பிரம்ம தேவனுக்கும்ஞானோபதேசம்செய்யக்கூடிய கந்தன்‌" என்‌.றும்சிலேடைப்பொருளில்‌ (*கர்மயோ௫யாக இருந்து இப்போது ஞானயோூயாக இருக்கின்ற) மேலே சொன்ன அரவிந்த கோஷுக்கும்கூட ஆன்ம பலம்இன்ன தென்று விளக்கிக்காட்டத்தகுந்த அருள்நிறைந்த. சாந்தன்காந்தியடிகள்‌' என்ற கருத்தையும்கொண்டது அந்தப்பாட்டு, மேலே உள்ள கான்கு பாட்டுகளில்கோகலேயைப்பற்றிய பாட்டைத்தவிர மற்‌. மூன்று பாட்டுகளையும் நீக்கிவிட வேண்டும்என்பது பரிசுக்கமிட்டி, காரியதரிசி யின்கடிதம்‌, பரிசு காட்டியவர்மிதவாதி ஸ்ரீ கோகலே யவர்களைப்பின்பற்றுகறவர்‌, பரிசும்‌ (கோகலே பரிசுஎன்று பெயரிடப்பட்டது. அரவிந்த கோஷ்பிரிட்டிஷ்‌.  மிகப்பெரிய விரோதியாக அப்போது கருதப்பட்டவர்‌, திலகர்வெகு தீவிரவாதி, திலகருடைய பெயர்‌: சொன்னாற்கூட மிதவாதிகளுக்கு எரிச்சல். மேலும்திலகர்‌ : கட்சிக்கும்கோகலே கட்?க்கும்பத்திரிகைகளில்வாக்கு. வாதம்பரவிக்கொண்டிருந்த காலம்‌. ஆதலால்அரவிந்தர்பெயரும்திலகர்பெயரும்பரிசுப்பாட்டில்இல்லாதிருப்பது நலம்என்று எண்ணினார்கள்போலும்‌: பாட்டில்அவவளவு பெருமை கொடுத்துப்பாராட்டுவதற்குத்தகுந்தவராக காந்தியடிகளை அப்போது... கருதியிருக்க மாட்டார்கள்‌. அதனால்தானோ என்னவோ அந்தப். பாட்டையும்நீக்விடச்சொன்னார்கள்‌.

இரண்டு மாதங்களுக்குப்பின்பரிசுபெற்ற பாட்டு களில்கொஞ்சம்கொஞ்சம்பத்திரிகைகளில்வெளி யாயின. என்னுடைய ஈண்பர்களிற்லர்என்னுடைய பாட்டுகளிற்லவற்றை அச்சிட்டுப்பத்திரிகைகளுக்கு அனுப்பி, என்னுடைய பாட்டுகளின்தகுதியைப்பாராட்டி, ஒரு விவாதத்தைக்கிளப்பினார்கள்‌. இந்தப்பேச்சு அங்குமிங்கும்பரவி, ஒரு நாள் நான் சேலக்துக்குப்போயிருந்த போது என்னுடைய ஈண்பர்ஸ்ரீ இடாம்பி அனந்தாச்சாரியார்‌.. பி. ., பி, எல்‌. என்னைக்கேட்டார்‌. பாட்டுகளைப்பாடிக்காட்டினேன்‌. அனந்தாச்சாரியார்௮தி தீவிரமான தேச பக்தருள்ஒருவர்‌. சேலத்தில்அப்போது வாலிப தேச பக்தர்களுக்கு அவர்ஒரு வழிகாட்டி, என்பாட்டுகளைக்கேட்டுப்‌. பரவசப்‌ _ பட்டு புகழ்ந்து பாராட்டினார்‌.  மறுகாள்அவரே என்னை சேலம்‌ ‘ Sits 'இன்ஸ்டிடியூட்‌' என்ற சங்கத்துக்கு அழைத்துச்சென்று அங்கே என்பாட்டுகளை அரங்கேற்றச்செய்தார்‌. சேலத்தில்அப்போது அந்த : லிட்டரரி இன்ஸ்டிடியூட்‌ " தான்அரசியல்பேச்சுகளுக்கெல்லாம்ஆஸ்தானம்‌. சிறந்த அரசியல்வாதிகளான அனைவரும்அதில்அங்கத்தினர்கள்‌. அவ்வூர்பிரமுகர்கள்எல்லாரும்தினந்தினம்பொழுது போக்காக அங்கே கூடுவார்கள்‌. மேற்படி இடத்தில்அன்றைக்கு, நான்அந்த நாட்டுக்கும்மியை' அரங்கேற்றியபோது ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்‌, ஸ்ரீ, பி. வி, நரசிம்மையர்‌, (இப்போது திருவண்ணாமலை ரமண ஆசிரமத்தில்ஸ்ரீ ஈரஸிம்ம சுவாமி களாக இருப்பவர்‌ )ஸ்ரீ வெங்கட சுப்பையர்முதலான பல பேரும்கேட்டு ரஸித்துப்பாராட்டினார்கள்‌. ராஜாஜி என்‌: னுடைய பாட்டுகளை மிகவும்மெச்சிஞர்‌, ஸ்ரீ. சி, விஜய ராகவாச்சாரியாரும்அந்தச்சங்கத்தில்ஒரு அங்கத்தினர்‌. ஆனால்அன்றைய தினம்அவர்அங்கு வரவில்லை. மறுகாள்காலையில்ஸ்ரீ ஆனந்தாச்சாரியார்என்னை ஸ்ரீ 'விஜயராகவாச்சாரியார்வீட்டிற்கு அழைத்துச்சென்ருர்‌. அகஸ்மாத்தாக ராஜகேரபாலாச்சாரியவர்களும்அப்போது அங்கு வந்து சேர்ந்தார்‌, விஜயராகவாச்சாரியாருக்கு மற்ற இரண்டு பேரும்என்னை அறிமுகப்படுத்தினார்கள்‌. விஜயராகவாச்சாரியார்மிகவும்கடுபிடி. யானவர்‌. அவருக்கு மூன்னால்யாரா யிருந்தாலும்கொஞ்சம்அஞ்சிப்பயந்து அடங்கி ஒடுங்கித்தான்பேசுவார்கள்‌. வீண்வார்த்தைகளுக்கோ விளையாட்டுப்பொழுது போக்குக்கோ அவருக்கு கேரமிருக்காது, என்னேரமும்ஜோலியும்‌, வேலையும்‌, சுருசுருப்பும்பரபரப்புக்தான்‌. அவரிடத்தில்எதையாவது சொல்ல வேணு  மானாலும்நெடுநேரம்நீட்டி கெளித்துப்பேசிக்கொண்ருக்க முடியாது. சுருக்கமாகச்சொன்னால்தான்நின்று கேட்பார்‌. காலத்தைச்செலவு செய்வதில்அவ்வளவு கணக்கா யிருப்பார்‌. அப்படிப்பட்ட அவர்அனந்தாச்சாரியாரும்ராஜ'கோபாலாச்சாரியாரும்என்தேச்யப்பாட்டுகளைப்பற்றி .பிரஸ்தாபிக்க உடனே மற்ற அலுவல்களை விட்டுவிட்டு பாட்டைக்கேட்க விரும்பினார்‌. நான்பாடினேன்‌. என்னுடைய சிலேடைப்பாட்டுகளை உடனே கண்டுகொண்டு அப்போதே ரஸித்துப்‌. புகழ்ந்தார்‌. அரைமணி நேரத்துக்குமேல்வெகு அமைதியாகக்கேட்டுவிட்டு இங்க லீஷில்‌ *ரொம்ப சந்தோஷம்‌. பாட்டுகள்மிக நன்றாக இருக்கன்றன. உங்களிடத்தில்நல்ல கவித்துவம்இருக்கின்றது. அது நாளுக்கு காள்விருத்தியடைந்து நீங்கள்இரு சிறந்த புலவனாக வேண்டுமென்று ஆசீர்வதிக்கிறேன்‌'' என்றார்‌. நான்பிறர்மெச்சப்‌ 'புலவன்‌' ஆனது அப்போதுதான்அது முதற்கொண்டு அனந்தாச்சாரி யாரும்‌, சாஜகோபாலாச்சாரியாரும்என்புலமையை மிக வும்போற்றி வந்தார்கள்‌.
Include related words (1 more titles)

Subbaier Ramasami

unread,
Feb 20, 2023, 11:48:31 AM2/20/23
to santhav...@googlegroups.com
செய்திக்கு நன்றி.  நாமக்கல் கவிஞரின் பாடல் லிஃகோ வெளியிட்ட அவரது பாடல் தொகுதியில் தமிழ்க் கும்மி என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது 

On Mon, Feb 20, 2023 at 6:24 AM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:

அன்பிற்குரிய இலந்தை Uncle,

 நீங்கள் கூறியது போல் தேசிய உணர்ச்சி கொண்ட 100 கும்மிப்பாடல்களை எழுத வேண்டும் என்பது தான் போட்டி விதிமுறை.

N. Ganesan

unread,
Feb 20, 2023, 12:44:23 PM2/20/23
to santhav...@googlegroups.com
On Mon, Feb 20, 2023 at 10:48 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
செய்திக்கு நன்றி.  நாமக்கல் கவிஞரின் பாடல் லிஃகோ வெளியிட்ட அவரது பாடல் தொகுதியில் தமிழ்க் கும்மி என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது 


தமிழ்க் கும்மி பாட்டின் தொடக்க வரி தாருங்கள்.
நாமக்கல் கவிஞர் பாடல்கள் -
https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp3k0xd&tag=நாமக்கல் கவிஞர் பாடல்கள்#book1/
இங்கே நாமக்கல் கவிஞர் பாடல்களைப் பயிலலாம்.

நாமக்கல் கவிஞர் எழுதிய திருக்குறள் ஒன்றின் உரை:
http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html

இரமண ஷட்கம் - நாமக்கல் கவிஞர். புகழ்மிக்க  ஸ்ரீ ஸ்கந்த ஷட்கம் இருக்கிறது.
http://nganesan.blogspot.com/2021/02/ramana-shatkam-namakkal-kavignar.html

’என் கதை’ பிடிஎஃப் ஆக உள்ளதா என, நாமக்கல் கவிஞர் மகன், ராஜா வெங்கட்ராமனைக் கேட்டுப்பார்க்கிறேன்.

நா. கணேசன்

Subbaier Ramasami

unread,
Feb 20, 2023, 7:11:42 PM2/20/23
to santhav...@googlegroups.com
பக்கம் 303   - நாட்டுக் கும்மி
கும்மியடி பெண்கள் கும்மியடியுங்கள்
     கொட்டுச் சரப்பணி சத்தமிட

N. Ganesan

unread,
Feb 20, 2023, 8:44:03 PM2/20/23
to santhav...@googlegroups.com
On Mon, Feb 20, 2023 at 6:11 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
பக்கம் 303   - நாட்டுக் கும்மி
கும்மியடி பெண்கள் கும்மியடியுங்கள்
     கொட்டுச் சரப்பணி சத்தமிட

On Mon, Feb 20, 2023 at 10:48 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
செய்திக்கு நன்றி.  நாமக்கல் கவிஞரின் பாடல் லிஃகோ வெளியிட்ட அவரது பாடல் தொகுதியில் தமிழ்க் கும்மி என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது 


நீண்ட பாடல். நாமக்கல் கவிஞரின் படைப்பு.

178. நாட்டுக் கும்மி

கும்மியடி பெண்கள் கும்மியடி யுங்கள்
கொத்துச் சரப்பளி சத்தமிட
நம்மையெ லாம்பெற்ற இந்திய நாட்டின்
நன்மையைக் கோரி யடியுங்கடி!

கடவுள் வணக்கம்

புத்தனென் றும்மஹ மத்தனென் றும்ஏசு
நாதனென் றும்மது சூதனென்றும்
நித்த முதித்தருள் நீதி யளித்திடும்
நிர்மல ஜோதியைப் போற்றுங்கடி!

பிரமன் துதி

நீதி நிலைக்க நினைந்தவ னாம்அருள்
ஜோதி யுருக்கொண்ட மேனியனாம்
ஆதி யறத்தை அளித்திடு வான்எங்கள்
அரவிந்த நாதனைப் போற்றுங்கடி!

சிவபிரான் துதி

ஆலமுண் டாலும் அசையா தான்பர
கால னடிகுண சீலனடி
பாலை முனிந்த பனிமொழி யாள்பதி
பாலகங் காதரன் பாடுங்கடி.

கோபாலன் துதி

தீதுசெய் வேந்தரைச் சீர்திருத் தம்செய்யத்
தூதுந டந்திடும் தூயனடி
கோதில் குணத்தவன் கோகுலத் தில்வந்த
கோபால கிருஷ்ணனைப் பாடுங்கடி.

வழிபடு கந்தன் துதி

கந்தம லரொடு மேலவர்க்கும் ஞானக்
கைப்பலம் காட்டிய கந்தனடி
கந்தம ணக்கின்ற ஜோதிய டிபுகழ்
காந்திய டிவெகு சாந்தனடி.

தற்கால நிலமை

கிட்டுங்க டிமலர் கொட்டுங்க டிகையைத்
தட்டுங்கடி கண்ணீர் சொட்டுங்கடி
மட்டில் புகழ்கொண்ட இந்திய தேவியின்
மாட்சிமை கெட்டதைக் கேளுங்கடி!

கெட்டோம் டிகுடி கெட்டோம டிநாம்
பட்டோம டிவெகு கஷ்டமடி
முட்டத் தரித்திரம் கிட்டி முறைக்குது
மூதேவி நம்மை முறைமை கொண்டாள்.

கஞ்சியற் றோம்பழங் கந்தையற் றோம்குல
வஞ்சிய ரேஎன்ன வஞ்சமடி
கெஞ்சுகின் றோம்மிக அஞ்சுகின் றோமென்ன
காலம டிவந்த கோலமடி.

மானமி ழந்தும தியிழந் துபுகழ்
தானமி ழந்துத வமிழந்து
ஞானமி ழந்துந லமிழந் துநாமும்
போன கதியினைப் பாருங்கடி!

காசு பணத்தைக்கை விட்டா லுங்கதிர்
வீசும் புகழை விடலாமோ?
வீசும் புகழையும் விட்டுவிட் டோம்சற்றும்
வெட்கமு மின்றி வெளியில்வந்தோம்!

நல்ல குடியிற் பிறந்தோமடி நாமும்
நல்ல நிலையி லிருந்தோமடி
தொல்லைப் பிறப்பும் புகழும் மறந்துநாம்
தொண்டுசெய் தொண்டரின் தொண்டரானோம்!

பேரும் புகழும் பெருமையுங் கொண்டவர்
பேரரின் பேரரின் பேரரடி
சீரும் சிறப்பையும் விற்றுவிட் டுநாமும்
சின்னத் தனத்தினைத் தேடிக்கொண்டோம்!

உத்தம ஜாதி மனிதர டிநாமும்
உத்தம மான குலத்தரடி!
பத்தினி ஜாதியின் பாவையே நாமிப்போ
பஞ்சப் பனாதிக ளானோமடி!

வீரர் குடித்தன வீரர டிநாமும்
வீரருள் வீரரின் பேரரடி!
சூரர் குடித்தனச் சூரர டியிப்போ
சோற்றுக்கும் நீருக்கும் சோருதடி!

வேந்தர் குடிவந்த மாந்தர டிவெகு
வெற்றி யடிநாம் பெற்றதடி!
சோர்ந்து சுழன்று சுழித்துத் திரிகின்றோம்
சொக்கு தடிமனம் வெட்குதடி!

அன்னிய ரெத்தினை வந்தா லும்மிக்க
அன்புடன் கொண்டு விருந்த ளிக்கும்
கண்ணிய மான குடியிற் பிறந்துநாம்
கஞ்சியு மற்றுக் கதறுகின்றோம்!

அன்னக் கொடிகள் பறந்து விருந்திடும்
ஆசார வாசலின் வீதியடி!
பின்னக் கழுதையும் பேயும் குடிகொள்ளப்
பெண்மணி யேஎன்ன காலமடி!

வெண்ணெயும் பாலும் பெருகி வழிந்திடும்
பண்ணைய மெங்களின் பண்ணையடி!
தண்ணீரு மின்றித் தயங்கத் தரித்திரம்
தங்குத டிமனம் பொங்குதடி!

நெல்லுங் குலமணிக் கல்லு முதிர்ந்திடும்
கொல்லைய டியெங்கள் கொல்லையடி!
கல்லுங் கரட்டொடு காடுமே டாயிப்போ
காணுத டிமனம் நாணுதடி!

கோடானு கோடி குடித்தனக் காரரின்
கூட்டமடி யெங்கள் கூட்டமடி!
நாடோடி யாகி நடுத்தெரு வில்நின்று
நாமும் புலம்பிடும் ஞாய மென்ன?

கண்ணும் மனமும் கருத்துங்கொண் டமட்டும்
காணும டியெங்கள் காணியடி!
கண்ணும் மனமும் கருத்துஞ் சுழன்றிடக்
கஞ்சியற் றோமடி வஞ்சியரே!

மன்னருள் மன்னரும் வந்து வணங்கிடும்
மன்னவர் மன்னரின் மைந்தரடி!
சின்னஞ்சி றுவரும் நின்று சிரித்திடச்
செய்வினை என்னடி சேடியரே!

நீதியும் நல்ல நெறிமுறை யுங்கொண்ட
ஜாதியடி எங்கள் ஜாதியடி!
நீதியும் நின்ற நெறிமுறை யுங்கெட்ட
நிந்தனை யென்னடி சுந்தரியே!

மானம் பெரிதென்று பிராணனை விட்டுயர்
மாட்சிமை கொண்டவர் மைந்தரடி!
மானத்தை விற்று வயிற்றை வளர்த்திடும்
மாயமு மென்னடி சேயிழையே!

வெள்ளியும் பொன்னும் விரிந்து
வீசுமடி எங்கள் வாசலிலே!
கள்ளியும் முள்ளும் கலந்து முளைத்திப்போ
காட்டுத டிமனம் வாட்டுதடி!

முத்தும் பவளமும் சிந்திக் கிடந்திட்ட
முற்றமடி யெங்கள் முற்றமடி!
சொத்தைப் பணத்திற்கும் செல்லாத காசுக்கும்
சோருதடி மனங் கோருதடி!

போரொடு நின்று புகழோ டிறந்திட்ட
தீரர் வழிவந்த தீரரடி!
தேரொடு நின்று தெருவோ டலைந்திடத்
தேற்றமு மென்னடிக் கோற்றொடியே!

இல்லையென் றோர்களுக்(கு) அள்ளிக் கொடுத்திட்ட
வள்ளல் வழிவந்த வள்ளலடி!
இல்லையில் லையில்லை யில்லையில் லையென்று
பல்லை இளிக்கிறோம் பாருங்கடி!

பார்த்த திசையெங்கும் பச்சைப்ப சேலேன்று
பார்க்கும டியெங்கள் பாளையத்தில்
பார்த்த திசையெங்கும் நீத்துக் கிடக்குது
பாவமு மென்னடி பூவையரே!

பட்டும்பட் டாடையும் கட்டிக் கழித்திட்ட
பட்டையக் காரனின் பந்தலிலே
கட்டக்கை யகலக் கந்தையு மின்றிநாம்
கத்துவ தென்னடி சித்திரமே!

மிஞ்சுவ ளங்கள் நிறைந்து சுகங்கள்
மிதந்து கிடந்திட்ட தேசத்திலே
பஞ்சமும் கொள்ளைப் பலவகை நோய்களும்
மிஞ்சுவ தென்னடி ரஞ்சிதமே!

பாலுந் தினுசுப் பழவகை யும்மூன்று
வேளையும் தின்று வெறுத்தவர்நாம்
பாழும் வயிற்றுக்குக் கூழுமின் றியிப்போ
பற்றுத டிவயிறு வற்றுதடி!

வேதமொ டுகுறள் நீதி முறைகளும்
ஓது மடியெங்கள் வீதியிலே
வாது வழக்கொடு வஞ்சனை மோசமும்
வஞ்சிய ரேயிப்போ மிஞ்சுதடி!

புத்தம் புதியவ ரானா லும்உயிர்
தத்தம் அவருக்குத் தந்தவர்கள்
ஒத்துப் பிறந்தவர் செத்துக் கிடந்தாலும்
ஒத்தி நடந்திடக் க்ற்றோமடி!

கட்டுக் கடங்காத கஷ்டங்கள் வந்தாலும்
விட்டுப் பிரியாத கட்டுடையோம்
விட்டுத் தனித்தனி எட்டிய தாலிந்த
வேதனை வந்தது மாதரசே!

கூடப் பிறந்த சகோதரர் கள்மிக
வாடி யிருந்து வருந்துகையில்
மோடி யிருந்து தனித்துச் சுகித்ததால்
மோசம் போனோமடி மொய்குழலே!

வாசம டிபுகழ் வீசுமடி எங்கள்
தேசம டிவந்த மோசமடி!
நாசம டிவெகு நாசம டிமனங்
கூசுத டிபழி யேசுதடி!

பொங்குத டிமனம் பொங்குத டிஉடல்
பொங்குத டிதுயர் தங்குதடி!
மங்குத டிமதி மங்குத டிமட
மங்கைய ரேயன்ன பங்கமடி!

எண்ணவெண் ணமனங் குன்றுத டிவினை
என்னென்று சொல்லுவேன் கன்னியரே!
பண்ணிய தொல்லைப் பழவினை யோவென்ன
பாவம டிஎவர் சாபமடி!

ஏன் இக்கதி யடைந்தோம்?

பாவமல் லவருஞ் சாபமல் லமுனி
கோபமுஞ் சாமியின் குற்றமல்ல ;
தாபம டிபெற்ற தாயைம றந்ததால்!
தாழ்வடைந் தோமடி தையலரே!

மாதாவின் பெற்ற வயிறெரிய நாமும்
மஹேச்வர பூஜையைச் செய்தமடி
ஆதலி னாலிந்த வேதனை வந்ததும்
ஆச்சரி யமல்ல ஆச்சியரே!

அந்தத் தாய் யார்?

தேசம டிஇந்து தேசம டிநம்மைப்
பாசமு டன்பெற்றுப் பாலித்தவள்
தேசம டிஇந்து தேசம டிஎங்கள்
தேவிய டிஎங்கள் ஆவியடி!

தேவிய டிஇந்து தேவிய டியெங்கள்
ஆவிய டிஉங்கள் ஆவியடி!
பாவிய டிவெகு பாவிய டிபடு
பாதக ரெங்களைப் பெற்றதனால்!

பெற்றவ ளிந்தியத் தேவிய டிபெயர்
இட்டவ ளிந்தியத் தேவியடி!
உற்றவ ளிந்தியத் தேவிய டிபால்
ஊட்டி வளர்த்தவ ளும்அவளே.

மாதமும் மாரி பொழிந்து செழித்திட்ட
மாநிலத் துயர்ந்த தேவியடி!
போதமும் வேதமும் முந்தி யுரைத்திட்ட
புண்ணிய ஞானக் கிழவியடி!

முப்பத்து முக்கோடி மக்கள டிஇந்த
மூப்புடை இந்தியத் தேவிபெற்றாள்
முப்பத்து முக்கோடி மக்களுந் தானுமாய்
முச்சந்தி வீதியில் கத்துகின்றாள்.

மூப்புடை இந்தியத் தேவியடி நம்மை
முன்னம் பயந்து வளர்த்தெடுத்தாள்
மூப்புடை இந்தியத் தேவிய டிநம்மை
இன்னும் புரந்து முகம்துடைப்பாள்.

இந்தியத் தேவிநம் மைப்பயந் தாள்கலை
இந்தியத் தேவிந மக்களித்தாள்
இந்தியத் தேவிந மைப்புரந் தாள்அந்த
இந்தியத் தேவியை நாம்மறந்தோம்.

எத்தனை காலஞ் சுமந்திருந் தாள்நமக்
கெத்தனை கஷ்ட மனுபவித்தாள்!
அத்தனை கஷ்டமும் நாமறந் தோமவள்
அத்தனை குற்றமு மேபொறுத்தாள்!

கோடானு கோடி பகைவர டிமுன்னம்
கொள்ளை யடித்திட வந்தவர்கள்
கோடானு கோடியும் தான்சகித் துத்தன்
குஞ்சு குழந்தையை ஆதரித்தாள்.

எண்ணிக்கை யற்ற அரசர டிஇந்த
ஏந்திழை செல்வத்தில் ஆசைகொண்டார்
எண்ணிக்கை யற்ற பகைவரடி அந்த
ஏந்திழை வென்று நமைப்புரந்தாள்.

அத்தனை கஷ்டமும் தான்சகித் துநம்மை
ஆதரித் திருந்த தேவியினை
மத்தரைப் போல மறந்தத னாலிந்த
மாநிலத் தேமிக ஈனமுற்றோம்.

அற்புத மான பொறுமையை டிஅவள்
அற்புத ஞானப் பெருமையடி!
அற்புதமான சிறுமைய டிஇப்போ
அற்பத் தனத்தினால் தேடிவைத்தோம்.

பெற்ற வயிறுமெ ரியாதோ? அவள்
பேதை மனமும் வருந்தாதோ?
பெற்ற குழந்தைகள் தன்னை மறந்ததைப்
பெண்ணு மொருத்தி சகிப்பாளோ?

பெற்ற மனமுங் கசிந்தழு தேஅந்த
பேதை யுகுத்திடுங் கண்ணீரால்
பெற்ற தனமும் புகழு மிழந்துநாம்
பேதை களானது பெண்ணரசே!

தாயை மறந்த குழந்தைக ளெப்படித்
தாரணி தன்னில் செழிக்குமடி?
தாயை யிகழ்ந்த குழந்தைக ளையிந்தத்
தாரணி நின்று பழிக்குமடி!

அன்னையும் தந்தையும் தெய்வமென்று முன்னம்
சொன்ன கிழவியின் வார்த்தையைப்போல்
அன்னையும் தந்தையும் அத்தையும் மாமனும்
அத்தனை யும்இந்து தேசமடி!

அந்தத் தேசத்தின் எல்லையும் சிறப்பும்

வெள்ளி மலையும் வடக்கா கவிரி
வெற்புடைச் சிங்களம் தெற்காகப்
பள்ளக் கடலடி வங்கா ளம்குண
பாரிச மேற்கி லரப்பிக்கடல்.

பரந்து கிடக்கின்ற தேசமடி எம்மைப்
பாலிக்கும் இந்தியத் தேவியடி!
சிறந்து விளங்கிய தேசம டிஅவள்
சீரும் சிறப்பையும் கேளுங்கடி.

வேத முதித்தது மிந்நாடே அருள்
வேதிகை நின்றது மிந்நாடே.
போத முதித்தது மிந்நாடே மிக்க
புண்ணிய பூமியென றாடுங்கடி!

ஞான முதித்தது மிந்நா டேஅருள்
ஞானிகள் நின்றது மிந்நாடே.
மோன மறிந்த முதல்நா டேவெகு
முத்த ரிருந்தது மிந்நாடே.

புத்தர் பிறந்தது மிந்நா டேஅவர்
போதம் வளர்த்தது மிந்நாடே.
சித்த ரிருந்தது மிந்நா டேவெகு
சித்திகள் பெற்றது மிந்நாடே.

சீதை பிறந்தது மிந்நா டேஅவள்
சீர்த்தி விளங்கிய திந்நாடே.
கீதை பிறந்தது மிந்நா டேவெகு
கீர்த்திகள் பெற்றது மிந்நாடே.

சீருடை யத்தம யந்தியோ டுபுகழ்
சிலம்புடைக் கண்ணகி தேவியையும்
பேருடை யாள்சா வித்திரி தேவியைப்
பெற்று வளர்த்தது மிந்நாடே.

ராம னிருந்தது மிந்நா டேஅந்த
பீம னிருந்தது மிந்நாடே
சோம னொடுபுகழ் சூரியன் மரபும்
ஜோதி பொழிந்தது மிந்நாடே.

கண்ணன் பிறந்தது மிந்நா டேகொடை
கர்ண னிருந்தது மிந்நாடே
அண்ண லடியரிச் சந்திர னும்மவன்
அன்புடைத் தேவியு மிந்நாடே.

முன்னுமில் லைஇனிப் பின்னுமில் லையென
முந்திய நீதியின் மூவேந்தர்
மன்ன ரடிசேர சோழரும் பாண்டியர்
மாட்சிமை கொண்டது மிந்நாடே.

ஏட்டி லடக்க முடியா துமனம்
எண்ணி எழுதவும் போதாது ;
பாட்டி லடக்க முடியா தபுகழ்ப்
பாவையும் மிந்தக் கதியானாள்.

இனி நாம் செய்யவேண்டுவதென்ன?

போனது போகட்டும் கண்மணி யே!இனி
யாகிலும் புத்தியு டனிருப்போம்.
மாநிலத் தாயை வணங்கிநின் றாலினி
மாநிலத் தேமிக நாமுயர்வோம்.

இந்தியத் தேவியைப் பூஜைசெய் யுமந்த
இந்திய ரெல்லோரும் ஒன்றடியே
எந்த மதத்திற்கும் எந்தக் குலத்திற்கும்
சொந்தம டிஅவள் தொந்தமடி!

ஏழையு மெங்களுக் கண்ணனடி செல்வப்
பேழையு மெங்களின் தம்பியடி
கோழையு மெங்கள் குலத்த னடிகுடி
காரனுங் கூடப் பிறந்தவனே.

நல்லவர் கெட்டவ ரென்பதன்றி மற்றும்
நாலு வருணமு மொன்றடியே
தொல்லைச் சுருதியின் சொல்லடி யேஇதைத்
தோகையே நீயும் மறக்காதே.

பறையரு மெங்கள் குலத்தர டிசுத்தப்
பார்ப்பன ருமெங்கள் பந்துவடி!
அரையனு மெங்களுக் கானவ னேயன்றி
அல்லவ னும்வெகு நல்லவனே.

அன்னிய ரானாலும் இந்திய நாட்டை
அடைந்தவர் எங்களுக் கண்ணரடி!
மன்னவ ரானாலும் இந்திய நாட்டை
மறந்தவர் தங்களை நாமறப்போம்.

எந்தக் குலத்தில் பிறந்தா லும்அவர்
எந்த நிலையி லிருந்தாலும்
இந்து நிலத்தில் பிறந்தவ ரெல்லோரும்
இந்தியத் தேவியின் மக்களடி!

முப்பத்து முக்கோடி மக்களடி நாங்கள்
முப்பத்து முக்கோடி சோதரர்கள்.
முப்பத்து முக்கோடி பேரு மொருமிக்க
முப்பொழு தும்அவள் பூஜைசெய்வோம்.

பூஜையென் றால்வெறும் பூஜையல்ல செல்வப்
புண்ணிய பூமியின் பிள்ளைகளே
ஆசையு டனவள் கைத்தொழில் வித்தையை
ஆதரஞ் செய்யுங் கடமையடி.

எண்ணிக்கை யற்ற தொழிலடி யேஇந்தப்
புண்ணிய பூமியுங் கண்டதடி.
எண்ணிக்கை யற்றவர் இந்தியர் தொழிலை
அந்நிய தேசங்கள் ஆளுதடி.

கைத்தொழில் கெட்டுக்க லங்குத டிதேசம்
கைத்தொழி லின்றிப் புலம்புதடி!
கைத்தொழில் தம்மை விருத்திசெய் தாலந்தக்
கண்ணுடைத் தேவியும் கண்விழிப்பாள்.

ஆயிரம் ஆயிரம் வித்தையடி இங்கே
ஆதரிப் பாரின்றிச் செத்ததடி
ஆயிரம் ஆயிரம் கைத்தொழி லாளிகள்
ஆதர வின்றி உயிர்துறந்தார்.

இந்தியத் தேவியின் கைத்தொழில் நாமும்
ஏற்றுப் புகழக் கடமைப்பட்டோம்
இந்தியத் தேவியின் வித்தைகளை நாமும்
எந்த விதத்திலும் ஆதரிப்போம்!

இந்திய தேசத்தில் உண்டா னபொருள்
எந்த விதத்திலு முத்தமமே!
இந்திய தேசத்தொ ழிலாளிநமக்
கெந்த விதத்திலும் சொந்தமதால்.

அன்னியர் சரக்கைத் தீண்டோமே நாமும்
அன்னியர் தயவை வேண்டோமே
அன்னியர் பொருளைத் தீண்டுந்தோ றும்அந்த
அன்னை வயிற்றி லடிப்பதுபோல்.

பயன்

என்று நினைந்து மனங்கசந் துநாமும்
இந்தியத் தேவியைப் போற்றிசெய்தால்
நின்ற துயரம் மறையுமடி இங்கே
நீடிய பஞ்சம் பறக்குமடி.

கண்டுகொண் டோமடி கண்மணி யேஇனி
காரண மின்னதெ னத்தெரிந்தோம்.
பண்டைச் சிறப்பினை நாமடை யஇந்துப்
பாவை பதத்தினைப் பூஜைசெய்வோம்.

கேளுங்க டிஇனிக் கேளுங்க டிவந்து
வீழுங்க டிஅவள் பாதத்தினில்
வாழுங்க டிஇனி வாழுங்க டிஅவள்
வாழ்த்தி யிருந்து வரங்கொடுப்பாள்.

கிட்டுங்க டிகையைத் தட்டுங்க டிமலர்
கொட்டுங்க டிஅவள் பாதத்தினில்
விட்டத டிசனி விட்டத டிபழி
விட்டத டிதுயர் விட்டதடி.

பஞ்சமும் நோயும் பறக்குமடி அந்தப்
பத்தினி தேவியை நாம்நினைந்தால்
பஞ்சமும் நோயும் பற்றுமடி அந்தப்
பத்தினி தேவியை நாம்மறந்தால்.

இல்லையில் லையென்று பல்லை யிளிப்பதும்
இல்லைய டிஇனி இல்லையடி!
இல்லைய டிபசி இல்லைய டிநோயும்
இந்தியத் தேவியை நாம்நினைந்தால்.

உத்தம மாகிய ராஜாங் கம்இனி
ஒப்பில தாகி உயருமடி
நித்திய மாக நிலைக்கும டிநல்ல
நீதியும் வேத நெறிமுறையும்.

பொங்கும டிபால் பொங்கும டியினி
புண்ணிய பூமி மனைதோறும்
மங்கும டிவினை மங்கும டீஇந்த
மங்கையை நாமும் மனதில்வைத்தால்.

ராச்சியம் பொங்கித் தழைத்தோங் கநாமும்
ராச்சியம் வேண்டி உழைத்திடுவோம்
ஓச்சிய கோலு முயிர்த்தோங் கநாமும்
ஒற்றுமை யோடும் உழைத்திடுவோம்.

நீதி நிலைக்க நினைத்து வருகின்ற
நிர்மல மாகிய ராஜாங்கம்
ஆதி அரசின் வழிமுறை யேநின்றிங்
காதித்தன் போல விளங்குமடி!

வாழி

வாழி மழைபொழி வானமொடு வரு
மேழி யுழவர் வழிவாழி!
வாழிய கைத்தொழில் வாணிபம் தம்மொடு
வாழ்விக்க நின்றிடும் ராஜாங்கம்!

வாழி முனிவர்கள் தேடி யளித்திட்ட
வேத வழிவரும் நீதியெல்லாம்!
வாழியர் ஞான முணர்ந்தோர் கள்வழி!
வாழிய இந்த உலகமெலாம்!

இந்தியத் தேவி தனக்கா கத்தங்கள்
சொந்த சுகத்தைத் துறந்தவர்கள்
எந்த மதத்திலும் எந்தக் குலத்திலும்
வந்தவர் வந்த வழிவாழி!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDo-vKETVA%3DMD8Z41bfuVywRqjh5zaJhvA0Lk4tT4Oqgw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages