எனது லிங்காஷ்டக மொழிபெயர்ப்பு முயற்சி - பகுதி 2
சாத்திடு குங்கும சாந்தமர் லிங்கம்
கோத்திடு தாமரை கேழ்த்தொளிர் லிங்கம்
சேர்த்திடு தீவினை தீர்த்திடு லிங்கம்
சீரடி போற்றி சதாசிவ லிங்கம். (5)
(சாந்து = சாந்தம் என்பதன் கடைக்குறை; சாந்தம் = சந்தனம்; குங்கும சாந்து = சந்தத்திற்காக இவ்விரண்டிற்கும் இடையே ஒற்று மிகவில்லை; கேழ்த்து = நிறம் விளங்கி)
தேவக ணம்துதி செய்திடு லிங்கம்
பாவமொ டன்பொடு பாவிடு லிங்கம்
சூழ்வெயில் கோடி சுடர்ந்திடு லிங்கம்
சீரடி போற்றி சதாசிவ லிங்கம். (6)
(பாவிடு = போற்றிடும்; வெயில் = சூரியன் (ஆகுபெயர்);)
எண்மல ரேட்டின் இணர்புனை லிங்கம்
மண்முதல் யாவும் வகுத்திடு லிங்கம்
எண்வகை இன்மை இரித்திடு லிங்கம்
சீரடி போற்றி சதாசிவ லிங்கம். (7)
(ஏட்டின் = ஏடுகளை உடைய; இணர் = பூந்திரள்; இன்மை = வறுமை; வகுத்திடும் = படைத்திடுமி; இரித்திடும் = அழித்திடும்)
குருபரர் விண்ணவர் கோன்துதி லிங்கம்
சுரர்வன மாமலர் தூவிடு லிங்கம்
உரைபரம் யாவினும் ஓங்குயர் லிங்கம்
சீரடி போற்றி சதாசிவ லிங்கம். (8)
(உரை பரம் யாவினும் = உயர்வு என்று சொல்லப்படுகின்ற எல்லாவற்றையும் விட)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/6FD144A5-568B-4BC5-9A04-8B183879FC21%40gmail.com.
![]() | |
On Feb 17, 2026, at 11:02 AM, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
எனது லிங்காஷ்டக மொழிபெயர்ப்பின் எல்லாப் பாடல்களையும் இங்கே காணலாம் :
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMDZ_ZSs-ssy%3D6RwN3mr%3DSfANnAFKsCEn9uUbb1iWnMQA%40mail.gmail.com.