வெண்பாவில் சங்கத் தமிழ்

16 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 30, 2025, 9:28:59 AM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
. வெண்பாவில் சங்கத் தமிழ்

             முல்லை முகை நகைக்கும்

இளமை மறந்தவர், எங்கோ பொருளின்
வளமை விழைந்துசென்றார் வாரார் - விளைமழையில்
முல்லை நகைக்கும் முகையின் தொகுதியெனும்
பல்லைமிகக் காட்டியெனைப் பார்த்து!


     மூலப் பாடல் (குறுந்தொகை-126)

இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?எனப்
பெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்குஎயிறு ஆக
நகுமே தோழி நறுந்தண் காரே

—ஒக்கூர் மாசாத்தியார்

விளக்கம்

பொருள் ஈட்ட வேண்டும் என்ற விருப்பத்தால் தலைவன் தலைவியைப் பிரிந்து எங்கோ வேற்றூர் சென்றான். கார் காலம் வந்தும் அவன் வரவில்லை.
வருந்திய தலைவி,” இளமை நலத்தையும் மறந்து,பொருளை விழைந்து சென்றவர் இன்னும் வரவில்லையே.
மழையில் விளைந்த முல்லை முகைகள் தம் பற்களைக் காட்டி என்னைப் பார்த்து நகைக்கின்றனவே” என்று தோழியிடம் கூறுகிறாள்.

                                            -தில்லைவேந்தன்.

Siva Siva

unread,
Aug 30, 2025, 9:36:00 AM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
NIce verse.

I think this situation - of people leaving their families and going far away to earn money - is common even in this age - Keralam to gulf countries, Bihar & UP to TN and Bangalore, etc.

V. Subramanian

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 30, 2025, 9:55:51 AM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
Thanks Sri Siva siva 
You are right.

           — தில்லைவேந்தன்.

Mohanarangan V Srirangam

unread,
Aug 30, 2025, 10:05:45 AM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
உங்கள் முயற்சி ஸ்ரீராகவையங்கார் அவர்களின் பாரிகாதை என்னும் நூலை ஞாபகப் படுத்துகிறது. நல்ல முயற்சி ஐயா. அருமை. 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hi-%3DTJLxoFVbzgNchZaZ0Khj21Nsws9GWkjwLcT-sBQPg%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 30, 2025, 10:08:47 AM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு மோகனரங்கன்

              — தில்லைவேந்தன்.

Kaviyogi Vedham

unread,
Aug 30, 2025, 11:11:48 AM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
abaaram thillai,
 yogiyar

--

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 30, 2025, 11:14:14 AM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
Thanks Yogiyar

      —தில்லைவேந்தன்.

On Sat, Aug 30, 2025 at 8:41 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
abaaram thillai,
 yogiyar

Arasi Palaniappan

unread,
Aug 30, 2025, 12:09:47 PM (7 days ago) Aug 30
to சந்தவசந்தம்
அருமை.
ஒக்கூர் மாசாத்தியார், செட்டி நாட்டுப் பகுதியில் உள்ள 
ஒக்கூரைச் சேர்ந்தவர்.

--

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 30, 2025, 12:28:41 PM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
பாராட்டுக்கும் தகவலுக்கும் நன்றி திரு பழனியப்பன் 

                           —தில்லைவேந்தன்

இமயவரம்பன்

unread,
Aug 30, 2025, 1:54:53 PM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
குறுந்தொகைப் பாட்டின் அரும்பொருளை எளிய தமிழில் உரைக்கும் வெண்பா மிக அருமை! 

On Aug 30, 2025, at 12:28 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 30, 2025, 6:02:20 PM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
நன்றி திரு இமயவரம்பன் 

     —தில்லைவேந்தன்.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 31, 2025, 8:21:24 AM (6 days ago) Aug 31
to santhav...@googlegroups.com
.            வெண்பாவில் சங்கத்தமிழ்(2)

                 காக்கை தந்த ஊக்கம்

நள்ளியின் கான்பசுக்கள் நல்குநெய், தொண்டியின்
வெள்ளை அரிசி மிகக்கலந்(து) -அள்ளியே
காக்கையதற்(கு) இட்டபலி கண்டு சிறிதென்பேன்
ஊக்கிக் கரைந்த(து) உணர்ந்து!


(கான்பசுக்கள் -கானகத்தில் மேயும் பசுக்கள்)
(பலி - காக்கை போன்ற உயிரினங்களுக்கு வைக்கும் சோறு)

விளக்கம்:

பொருள் ஈட்ட வேற்றூர் சென்ற தலைவனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் தலைவி
அப்போது காக்கை கரைகிறது. காக்கை கரைவது விருந்து வருவதைக் குறிக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள் தோழி.
என்வே, தலைவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் மகிழ்கிறாள் தலைவி.
இப்படிக் காக்கை கரையும் போதெல்லாம் அதைச் சுட்டிக் காட்டியே தோழி தலைவியின் துன்பத்தைப் போக்குகிறாள்.
அந்தக் காக்கைக்கு, நள்ளியின் கானகத்தில் ஆயர்கள் மேய்க்கும் பசுக்களின் சிறந்த நெய்யுடன், தொண்டியில் விளைந்த உயர்ந்த வெண்ணெல் அரிசிச் சோற்றைக் கலந்து நிறைய உண்ணக் கொடுத்தாலும்,அக்காக்கை கரைந்து தந்த ஊக்கத்தோடு ஒப்பிடுகையில், அது ஒரு சிறிய கைம்மாறுதான் என்று தோழி கூறுகிறாள்


                                            —தில்லைவேந்தன்


மூலப் பாடல் - குறுந்தொகை 210

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.

            - காக்கை பாடினியார் நச்செள்ளையார்.
..






Ram Ramakrishnan

unread,
Aug 31, 2025, 9:21:04 AM (6 days ago) Aug 31
to santhav...@googlegroups.com
காக்கைப் பாடினியார் பாடலுக்காக அமைத்த வெண்பா அருமை, வேந்தரே.

குறுந்தொகைப் பாடல்கள் உங்கள் வெண்பாக்களாலால் மெருகேறுகின்றன.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 31, 2025, at 08:21, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 31, 2025, 9:28:26 AM (6 days ago) Aug 31
to santhav...@googlegroups.com
அன்புக்கு நன்றி திரு ராம்கிராம்

            —தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 1, 2025, 8:42:19 AM (5 days ago) Sep 1
to santhav...@googlegroups.com
.          வெண்பாவில் சங்கத் தமிழ்(3)

                  பரங்குன்றம் உறைவான்!

தாமரையில் வண்டினம் தாம்துயின்று வைகறையில்
காமரு பொய்கைமலர்க் கண்முரலும் - மாமயிலோன்
கூடலின் மேற்கில் குளிர்பரங் குன்றமதை
நாடி அமர்ந்துறைவான் நன்று!


                   (காமரு - விருப்பமுடைய)

விளக்கம்:
தாமரை மலர்களில் துயில்கொள்ளும் வண்டுகள்,மறுநாள் வைகறையில் தாம் விரும்பும் பொய்கை மலர்களில் போயமர்ந்து ஒலியெழுப்பும்.
இத்தகைய இயற்கை எழில் கொஞ்சும் குளிர்ச்சி மிக்க திருப்பரங்குன்றம், கூடல் நகராம் மதுரையின் மேற்கில் அமைந்துள்ளது.
மாமயிலோன் முருகன் இப்பரங்குன்றத்தில் அமர்ந்து வாழ்வதற்கு உரியவன் ஆவான்.

                                               — தில்லைவேந்தன்.


           மூலப் பாடல்( திருமுருகாற்றுப்படை)
                         (திருப்பரங்குன்றம்)


மாடம் மலிமறுகின் கூடல் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய்அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன்
                  (வரிகள் - 71 — 77)
                                                —நக்கீரர்.
..

Ram Ramakrishnan

unread,
Sep 1, 2025, 8:41:29 PM (5 days ago) Sep 1
to santhav...@googlegroups.com
காமரு - அருமையான சொற்பிரயோகம்

கணிகண்ணன் பாட்டு நினைவிற்கு வருகின்றது.

👆கணிகண்ணன் பாட்டு நினைவிற்கு வருகிறது.

கணிகண்ணன் போகின்றான்!  காமரு பூங்கச்சி 
மணிவண்ணா நீகிடக்க வேண்டா!
- துணிவுடனே
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன்!
நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 1, 2025, at 08:42, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 1, 2025, 8:46:08 PM (5 days ago) Sep 1
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு ராம்கிராம்
மூலப் பாடலான திருமுருகாற்றுப்படையிலும்
இச்சொல் வருகிறது.
தங்கள் பாராட்டுக்கு நன்றி 

                 — தில்லைவேந்தன்.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 2, 2025, 5:45:29 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
.         வெண்பாவில் சங்கத் தமிழ்(4)

              குளிரால் விளைந்த கொடுமை

மந்தி குளிர்நடுங்கும்; மாமறக்கும் மேய்தலை;
வந்துபுள் வீழும் மரத்தினின்று;- முந்துபால்
ஆன்மறுத்துக் கன்றுதைக்கும்;ஆங்கு மலைகுளிர்ந்து
தான்மயங்கி நிற்கும் தவித்து!


              ( மந்தி - பெண் குரங்கு)
                   (மா - விலங்குகள்)
                      (புள் - பறவை)
                        (ஆன் - பசு)

விளக்கம்:

கூதிர் காலத்துக் ( ஐப்பசி, கார்த்திகை) குளிரின்
விளைவுகள் :
மந்தி( பெண் குரங்கு) குளிர் மிகுதியால் உடல் நடுங்கும்.
விலங்குகள் மேய்தலை மறந்துவிடும்.
பறவைகள் மரத்திலிருந்து தடுமாறிக் கீழே தரையில் விழும்.
பசு,கன்றுக்குப் பால் கொடுக்க மறுத்து அதை உதைத்து விரட்டும்.
அங்கிருக்கும் மலையும் குளிர்ந்து போய்த் தவித்து நிற்கும்.

                                     —தில்லைவேந்தன்.


          மூலப் பாடல் ( நெடுநல்வாடை)

மாமேயல் மறப்ப, மந்தி கூர
பறவை படிவன வீழ, கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் (9 - 12)

                                     —நக்கீரர்.


Arasi Palaniappan

unread,
Sep 2, 2025, 6:01:13 AM (4 days ago) Sep 2
to சந்தவசந்தம்
அருமை 

வெண்பாவில் வேந்தே!எம் மேனி குளிர்விக்கும் 
தண்பாவில் சங்கத் தமிழ்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 2, 2025, 8:06:14 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
அருமையான பாராட்டுப் பனுவலுக்கு நன்றி திரு பழனியப்பன் 

                            —தில்லைவேந்தன்

Ram Ramakrishnan

unread,
Sep 2, 2025, 8:23:54 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
 
அருமை, வேந்தரே.

கண்டு மனங்குளிரக் காவியத்தில் சாறெடுத்து
வெண்பாப் புனைந்தீர் விரைந்து.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 2, 2025, at 08:06, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 2, 2025, 8:29:20 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
அழகான பாராட்டுப் பாடலுக்கு மிக்க நன்றி திரு ராம்கிராம்
                            —தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 5, 2025, 11:13:04 AM (yesterday) Sep 5
to santhav...@googlegroups.com

.        வெண்பாவில் சங்கத் தமிழ்(5)

        மாலைப் பொழுதில் மகளிர் வழிபாடு

அரும்பவிழ்ந்து பிச்சிமணம் அப்பொழுதைச் சொல்ல
இரும்பு விளக்கினை ஏற்றிக் - கரும்பெனும்
சொல்லியர் கைதொழுவர் தூய மலருடன்
நெல்லும் கொடுதூவி நின்று.


             (கொடுதூவி - கொண்டு தூவி)

விளக்கம்:
மலரும் பருவத்தில் உள்ள பிச்சிப் பூக்கள், இதழ் மலர்ந்து வீசும் மணம், மாலைப் பொழுதின் வரவை அறிவிக்கிறது.
கரும்பினைப் போல் இனிமையான சொற்களைப்்பேசும் பெண்கள், இரும்பினால் செய்த விளக்கை ஏற்றி மலரும், நெல்லும் தூவிக் கைதொழுது வழிபடுகின்றனர்.

                                         — தில்லைவேந்தன்.


         மூலப் பாடல்(நெடுநல்வாடை)

செவ்வி அரும்பின் பைங்கால்பித்திகத்து,
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது,
                            (40-43)

                                                 —நக்கீரர்.
..

Reply all
Reply to author
Forward
0 new messages