வெண்பாவில் சங்கத் தமிழ்!

104 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 28, 2022, 1:28:26 AM4/28/22
to santhav...@googlegroups.com
.        வெண்பாவில் சங்கத் தமிழ்!


                 1) நீயறியும் பூவே.
          ,
                (நேரிசை வெண்பா)

தேனெடுக்கச் சோலைமலர் தேடியலை தும்பியே!
நானுவக்கும்  ஏதும் நவிலற்க - மீனெடுங்கண்
மங்கையிவள் கூந்தல் மணம்விஞ்சும் ஓர்மலரும்
இங்குளதோ என்றே  இயம்பு!

                          -- தில்லைவேந்தன்.

மூலப் பாடல்:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

                     --இறையனார்

        (குறுந்தொகை 2 ஆம் பாடல்)
          ,
               

             (குறுந்தொகை 2 ஆம் பாடல்)

Govindaraju Arunachalam

unread,
Apr 28, 2022, 1:35:07 AM4/28/22
to santhav...@googlegroups.com
ஆகா! வெண்பா மிகவும் அருமை!
         -இனியன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hh4z02DwqVuKxn4qN3hE5iZqCfg8Dn2_NeiiL_jevoKVA%40mail.gmail.com.
--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 28, 2022, 1:42:36 AM4/28/22
to santhav...@googlegroups.com
நன்றி கவிஞர் இனியன்

sai...@gmail.com

unread,
Apr 28, 2022, 1:57:32 AM4/28/22
to சந்தவசந்தம்
வெண்பா அழகு! ஆயினும் மீனெடுங்கண் என்னும் குறிப்பு மூலப் பாடலில் இல்லை! மூலத்தில் உள்ள மங்கை வருணணை இது:

http://rampsychiatrist.blogspot.com/2011/03/blog-post_10.html
பயலியது கெழீய நட்பின் - பல பிறவிகளிலும் நட்புடன் விளங்கும் (கெழி-நட்பு)
மயிலியல்-மயில் போன்ற
செறியியெற் றரிவை- செறிவான பற்களைக்(எயிறு) கொண்ட பெண்
கூந்தலின்-கூந்தலை விட
நறியவும் உளவோ- மணமிகுந்த ஏதேனும் உள்ளதோ
நீ அறியும் பூவே- நீ அறிந்த பூக்களிடம்

இத்தொடரின் நோக்கம் சங்கப் பாடலின் மூலத்தை மாற்றாமல், (கூடியவரை நம் கருத்தைத் திணிக்காமல்) எளிதாகப் பொருள் புரியும் வெண்பாவில் தருவதாகும். இதனால்தான் மூலப் பாடல் பொழிப்புரையும் தரவேண்டும் என்ற விதியைச் சேர்த்தேன். Only then we would bring ourselves to learn and appreciate the nuances of the original verse.

உங்கள் வெண்பாவைப் பிறவி, மயில், எயிறி போன்று விட்டுப்போன சொற்கள் அமைய மாற்றி எழுதுதல் நன்று. பஃறொடை, கலிவெண்பா யாப்பிலும் எழுதலாம்.

பரிந்துரை: வெண்பாவில் சங்கத் தமிழ் தொடர் எழுதும் அன்பர்கள் மூலப் பாடலைப் பதவுரை யாகப் பயின்று, மூலத்தில் காணும் முக்கிய சொற்கள் அவையாகவோ, அதே பொருள் கொண்ட வேறு சொற்களாகவோ தம் வெண்பாவில் பயிலுமாறு எழுதவேண்டும். மூலத்தின் பொழிப்புரையும் தரவேண்டும்.

★★★★★

rathnam

unread,
Apr 28, 2022, 5:06:58 AM4/28/22
to santhav...@googlegroups.com
இந்தப் பாட்டின் பொருள் சிறிதளவு விளங்கும் போது  இதை  அவர்தான் எழுதியிருக்க முடியும் என்று தோன்றும்.


On Thu, 28 Apr 2022 at 10:58 AM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
--

Subbaier Ramasami

unread,
Apr 28, 2022, 10:13:27 AM4/28/22
to santhavasantham
சிறப்பான வெண்பா!


--

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 28, 2022, 10:14:44 AM4/28/22
to santhav...@googlegroups.com
இலந்தையாருக்கு நன்றி

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 28, 2022, 11:57:31 AM4/28/22
to santhav...@googlegroups.com
.              வெண்பாவில் சங்கத் தமிழ் !

.                2)  காடுகள் பாடினவோ?

                        ( நேரிசை வெண்பா)

மேகமலைக் கோமான், விழைகண்ணி வாள்வேந்தன்,
ஈகையான் அண்டிரன் ஈர்ங்குன்றின் - ஆகுபுகழ்,
காடுகள் பாடினவோ? காணும் களிற்றுநிரை
பீடுறவே வந்ததெவண் பேசு!

              (எவண்- எவ்வாறு/ எப்படி)

                                   -- தில்லைவேந்தன்

.

மூலப் பாடல்,( புறம்-131)

மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ;
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? 

         -- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

உரை

ஆய் அண்டிரன் சிறந்த வாள்வீரன். வழை என்னும் மலரைத் தலையில் அணிபவன்.
மழை மேகம் தங்கும் மலையின் தலைவன்.
யானைகளைப் பரிசிலாகத் தருபவன்

இந்தக் காடுகளில் யானைகள்  நிறைய உள்ளனவே.. ஒரு வேளை இக்காடுகள் அவனது குன்றத்தைப் புகழ்ந்து பாடி இருக்குமோ?

rathnam

unread,
Apr 28, 2022, 12:23:08 PM4/28/22
to santhav...@googlegroups.com
...இந்தக் காடுகளில் யானைகள்  நிறைய உள்ளனவே.. ஒரு வேளை இக்காடுகள் அவனது குன்றத்தைப் புகழ்ந்து பாடி இருக்குமோ?...

எவ்வளவு எளிமை! எவ்வளவு ஆழம்!!  அருமையான தேர்வு... தில்லை வேந்தர் ஐயா.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 28, 2022, 12:37:10 PM4/28/22
to santhav...@googlegroups.com
நன்றி நண்பர் ரத்தினம்

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 29, 2022, 12:08:32 AM4/29/22
to santhav...@googlegroups.com
.     வெண்பாவில் சங்கத் தமிழ்!

           3)பாரி ஒருவன் தானா?

                 ( நேரிசை வெண்பா)

பாரி ஒருவனையே பாடும் புலவீர்காள்!
மாரியை ஏனோ மறக்கின்றீர்- பாரினைக்
காப்பது பாரியெனக் கண்டுரைப்பீர், மாரியும்
நேர்ப்படக் காக்கும் நிகர்த்து!

                          -- தில்லைவேந்தன்

.
.

மூலப் பாடல் (புறநானூறு 134.)

"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே"
                                    
                                   - கபிலர்.

விளக்கம்:

"பாரி", "பாரி" என்று  கொடைத் தன்மைக்குப் பாரி ஒருவனையே புலவர் பெருமக்கள் புகழ்வர்.   இந்த  உலகைக் காப்பது  பாரி ஒருவன் மட்டும் தானா?
மாரியும்( மழையும்) இங்கு இருக்கிறதே!

 இகழ்வது போல் புகழும் பாடல் இது.
பாரி மட்டும் தானா? மாரியும், உலகை வள்ளன்மையால் காக்கும் எனக்கூறிப் பாரியின் கொடைத்தன்மைக்கு நிகரானது மழையே என்று புகழும் பாடல் இது.

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 29, 2022, 9:12:49 AM4/29/22
to santhav...@googlegroups.com
.        ,
.           வெண்பாவில் சங்கத் தமிழ்!

                4) கொடையின் செயல்!

                     ( நேரிசை வெண்பா)

காலை மருதம் களிமாலை தாமிசைப்பார்,
மாலையின்  செவ்வழி மாற்றியே, - சாலவும்
வைகறையில்  பாணர் மறந்திசைப்பார், நள்ளியின்
செய்கைக் கொடையின் செயல்.

            (மருதம் -- காலைப் பண்)

          ( செவ்வழி- மாலைப் பண்)

         ( செய்கை - அறம் செய்யும் கை)

                                                --   தில்லைவேந்தன்

.
.

மூலப் பாடல்( புறம்-149)

நள்ளி வாழியோ; நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர் அதுநீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

                              - வன்பரணர்.

விளக்கம்:

சோழன் கண்டீரக் கோப் பெருநள்ளி, பாணர்க்கு வறுமை தெரியாதவாறு வேண்டியவை எல்லாம் அள்ளித் தந்ததான்.

வேண்டியவை  அனைத்தும் கிடைத்த மகிழ்ச்சியாலும், வளத்தாலும் அவர்கள் இசையின் வழிமுறைகளை  மறந்தனர். 

எனவே காலையில் பாட வேண்டிய மருதப் பண்ணை மாலையிலும், மாலைப் பண்ணாகிய செவ்வழியைக் காலையிலும் (மாற்றிப்) பாடினர்.

இது நள்ளியின் எல்லை மீறிய கொடையின் விளைவு  என்று வன்பரணர் கூறுகிறார்.

rathnam

unread,
Apr 29, 2022, 9:27:23 AM4/29/22
to santhav...@googlegroups.com
விடிந்ததால் பொழுதும் பண்ணும் தெரியவில்லை. நியாயம்தான்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 29, 2022, 8:52:38 PM4/29/22
to சந்தவசந்தம்
*நானுவக்கும்*  ஏதும் நவிலற்க - மீனெடுங்கண்

காமம் செப்பாது கண்டது மொழிமோ - தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக *நீ* கண்டதைச் சொல். http://vallinam.com.my/navin/?p=1425

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 29, 2022, 9:04:23 PM4/29/22
to santhav...@googlegroups.com

.        வெண்பாவில் சங்கத் தமிழ்!


.         5) பூத்தியோ நீ முல்லைப் பூ?

               ( நேரிசை வெண்பா)

சூடவும் கொய்யவும், சூட்டவும் செய்திலர்.
வாடிய நாட்டோர் மகிழ்ந்திலர் - நீடுவேல்
சாத்தன் மறைந்தான் தவித்திடும் ஒல்லையூர்,
பூத்தியோ நீமுல்லைப் பூ?

                           -- தில்லைவேந்தன்


.
.

     மூலப் பாடல்( புறம் - 242)


இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

                          -- குடவாயிற் தீரத்தனார்.


விளக்கம்:

வலிமையான் வேலேந்திய ஒல்லையூர்ச் சாத்தன் இறந்ததால், அவன் நாட்டில் இளைய வீரர்களும், பெண்களும், பாணனும், பாடினியும் வருத்தம் மிகுந்து, பூவைப் பறிக்கவோ, சூடவோ செய்யார்.
முல்லையே நீ மட்டும் மலர்ந்து பூத்தாயோ?

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 30, 2022, 8:33:10 AM4/30/22
to santhav...@googlegroups.com

.     வெண்பாவில் சங்கத் தமிழ்!

.

    6) ஒரு சூலில் ஈனுமோ பத்து?

.          . ( நேரிசை வெண்பா)

ஓடிய கொங்கர் உதிர்கள வேலினும்,
பாடியோர் யானை பலபெற்றார் - ஈடில்
ஒருசூலில் பத்தீனும் ஒண்பிடி,  ஆஅய்!
தருசெயல்நின் நாட்டிலுண்டோ சாற்று!

               ( பிடி - பெண் யானை)

( ஆஅய் -- ஆய் அண்டிரன் என்ற அரசன்)

                   -- தில்லைவேந்தன்
.

.விளக்கம்:

ஆய் அண்டிரனைப் பார்த்துக் கேட்பதாக அமைந்த பாடல் இது:

உன்னிடம் போர் செய்து, புறமுதுகிட்டு ஓடிய கொங்கர், போர்க்களத்தில் எறிந்து விட்டுப் போன வேல்களின் எண்ணிக்கையை விட மிகுதியான யானகளை உன்னைப்
பாடியவர்க்கு  நீ பரிசிலாக அளிக்கின்றாயே.


நீ அவ்வாறு தருவதற்கு, உன் நாட்டில் பெண் யானைகள் ஒரு சூலில் (கருப்பத்தில்) பத்துக் கன்றுகளைப் பெறுமா?

.

.

மூலப் பாடல்( புறம் -130)

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு,
இன்முகம் கரவாது, உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே! 

lns2...@gmail.com

unread,
May 1, 2022, 6:32:38 AM5/1/22
to சந்தவசந்தம்
very nice

Srini

lns2...@gmail.com

unread,
May 1, 2022, 6:34:09 AM5/1/22
to சந்தவசந்தம்
very nice

Srini

NATARAJAN RAMASESHAN

unread,
May 1, 2022, 7:13:42 AM5/1/22
to santhav...@googlegroups.com
Thanks Sri Srini

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
May 1, 2022, 7:14:14 AM5/1/22
to santhav...@googlegroups.com
Thanks Sri Srini

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
May 1, 2022, 10:47:13 AM5/1/22
to santhav...@googlegroups.com
.      வெண்பாவில் சங்கத் தமிழ்!


    7) ஒருநன்மை இல்லை உணர்!

              ( நேரிசை வெண்பா)

வேங்கை மரப்பூக்கள் வீழ்ந்திருக்கும் பாறையும்
தூங்குபுலிக் குட்டியாய்த்  தோன்றும்கான் - ஆங்கு
வருநர் களவிற்கு,  வானிலவே உன்னால்
ஒருநன்மை இல்லை உணர்! 

                                -- தில்லைவேந்தன்

.

விளக்கம்:

"வேங்கை மரத்தின் பூக்கள் உதிர்ந்து பாறை மீது பரவிக் கிடப்பது, இரவில் நிலவொளியில், புலிக்குட்டி படுத்திருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.
அப்படிப்பட்ட காட்டின் வழியாகத் தலைவியைத் தனியே பார்க்க வரும் தலைவனின் செயலுக்கு, நிலவே உன்னால் எந்த நன்மையும் இல்லை" என்று தோழி கூறுகின்றாள்.

.

    மூலப்பாடல் ( குறுந்தொகை -47)

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.

                     -- நெடுவெண்ணிலவினார்.

NATARAJAN RAMASESHAN

unread,
May 2, 2022, 10:48:18 AM5/2/22
to santhav...@googlegroups.com
.                வெண்பாவில் சங்கத் தமிழ்!

.           8) தங்கையென நாணுவளே!

                      ( நேரிசை வெண்பா)

புன்னை  மணலுள் புதைத்து மறந்தனம்;
பின்னை முளைவிடப் பெய்தனம் - நன்னெய்ப்பால்.
தங்கையென்றாள் அன்னை, தலைவி நகைத்திருக்கத்
தங்குநிழல் நாணுவளே தான்!

                                 -- தில்லைவேந்தன்

.

விளக்கம்:

தலைவன் தலைவியோடு கடற்கரையில் உள்ள புன்னை மரத்தடியில் பேசி மகிழ வருகிறான்.
அப்போது தோழி," முன்பு நாங்கள் விளையாடும் போது ஒரு புன்னை விதையை மணலுள் மறைத்து மறந்துவிட, அப்புன்னையும் முளைத்தது.
நாங்கள் நெய்கலந்த பாலை அதற்கு விட்டு வளர்த்தோம். அம்மரம் தங்கையாகும் தகவுடையது என்றாள் அன்னை.
அதனால், புன்னை நிழலின் கீழே உன்னுடன் சிரித்துப் பேசத் தலைவி நாணுவாள்" என்று கூறுகிறாள்.

..  



      மூலப் பாடல்( நற்றிணை -172)

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே-5அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!- நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே.

Govindaraju Arunachalam

unread,
May 2, 2022, 11:00:43 AM5/2/22
to santhav...@googlegroups.com
வெண்பாவில் வெளுத்துக் கட்டுகிறீர். 
பாராட்டுகள். 
   -இனியன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
May 2, 2022, 11:03:56 AM5/2/22
to santhav...@googlegroups.com
கவிஞர்இனியனின் அன்பான  பாராட்டுக்கு மிக்க நன்றி


NATARAJAN RAMASESHAN

unread,
May 2, 2022, 9:03:44 PM5/2/22
to santhav...@googlegroups.com
.             வெண்பாவில் சங்கத் தமிழ்!

.
                    9)  திங்கள்செய் கால்!

                      ( நேரிசை வெண்பா)

எட்டுத்தேர் நாளொன்(று) இழைதச்சன் திங்கள்செய்
கட்டுறுதி கொண்டிருக்கும் காலன்னோன் - மட்டில்லா
ஆற்றல் பொருநன் அதியனைப் போரெதிர்ந்து
மாற்றலரே வாராதீர் மன்!

                         ( கால்- சக்கரம்)
                 (பொருநன் - போர்மறவன்)
                      ( மாற்றலர்- பகைவர்)
                        ( மன் -- அசைச்  சொல்)

                                                 -- தில்லைவேந்தன்


விளக்கம்:
ஒரு நாளைக்கு எட்டுத் தேர்களைச் செய்யும் திறன்படைத்த தச்சன், ஒரு மாதம் உழைத்துச்  செய்த  தேர்ச் சக்கரத்தைப் போன்ற திண்மையும் உறுதியும் கொண்ட பெருமறவன் அதியன்.
ஆதலால், பகைவர்களே அவனை எதிர்த்துப் போர் செய்ய வாராதீர்.

.

                 மூலப் பாடல்( புறம் -87)

களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே!

                            -- ஔவையார்



NATARAJAN RAMASESHAN

unread,
May 3, 2022, 10:10:49 AM5/3/22
to santhav...@googlegroups.com
. .          வெண்பாவில் சங்கத் தமிழ்!


.        10) நெய்தலென மலரும் கண்!
 
                      ( நேரிசை வெண்பா)

உப்பங் கழியில் உறையும் இறால்மீனை
ஒப்பிப்புள் உண்ணும் உயர்கொற்கை -செப்பரிய
நற்றுறை வைகறை நண்ணுநறு நெய்தலென
மற்றவள்கண் தோன்றும் மலர்ந்து!

              ( மற்று - அசைச்சொல்)

                                       --  தில்லைவேந்தன்
.

.
விளக்கம்,:

தலைவனிடம் ஊடல் கொண்டிருந்த தலைவி, விருந்தினர்  வந்ததும்  கண்கள் மலர அவர்களை வரவேற்று உபசரித்தாள்.

"உப்பங்கழியில் இறால்மீனை பறவைகள் கூடி உண்ணும் சிறப்புடையது பாண்டியனின் கொற்கைத் துறை. அங்கு வைகறைப் பொழுதில் பூக்கின்ற நெய்தல் மலர்போலத் தலைவியின் கண்கள் விருந்தினரைக் கண்டதும் மலர்ந்து தோன்றின" எனத் தலைவன் மகிழ்ந்து கூறினான். 

.

 மூலப் பாடல்( ஐங்குறுநூறு- நெய்தல் பத்து-188)

இருங்கழிச் சேயிறா இனப்புன் ஆரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும்நெய்தல் போலத்
தகைபெரி துடை காதலி கண்ணே.
        
                                 -  அம்மூவனார்




NATARAJAN RAMASESHAN

unread,
May 3, 2022, 10:16:24 AM5/3/22
to santhav...@googlegroups.com
திருத்தம்

இறால்மீனை பறவைகள்— இறால்மீனைப் பறவைகள்




N. Ganesan

unread,
May 4, 2022, 3:00:45 AM5/4/22
to சந்தவசந்தம்
முன்பு,
வெண்பாவில் புகழேந்தி;

இன்று,
வெண்பாவில் தில்லைவேந்தன்!

நா. கணேசன்

NATARAJAN RAMASESHAN

unread,
May 4, 2022, 3:17:10 AM5/4/22
to santhav...@googlegroups.com
Dr கணேசனின் அன்பான பாராட்டுக்கு நன்றி
Credit goes to Sri GurunAthan RamaNi for encouraging me to write on thematic concepts like this.
சந்த வசந்தத்தில் இணைந்த இந்த ஒரு வருடத்தில் நான் கற்றுக் கொண்டவை ஏராளம்
இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன
மிக்க நன்றி
                    — தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
May 4, 2022, 8:50:32 AM5/4/22
to santhav...@googlegroups.com
.           வெண்பாவில் சங்கத் தமிழ்!

         11) இரவிலும் இல்லை உறக்கம்!

                      ( நேரிசை வெண்பா)

ஒண்டொடி மங்கையென் உள்ளத்தைக் கொண்டதால்
வண்டுமுரல்  தண்துறை. வண்நகர்த் -- தொண்டி
விரிகடல்  பேரொலிசெய் வீங்கலைபோல்  தூக்கம் 
இரவிலும் இல்லை எனக்கு!

     ( ஒண்டொடி- ஒளி பொருந்திய வளையல்,)
                  ( வீங்கலை -- பெரிய அலை)

                                -- தில்லைவேந்தன்
.

விளக்கம்,:

ஒளி பொருந்திய வளையலை அணிந்த பெண் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாள்.
அதனால், வண்டு ஒலிக்கின்ற குளிர்ந்த துறையையுடைய நகரான தொண்டியின் விரிந்த கடலில் எந்நேரமும் வீசியவாறு ஓசையெழுப்பும் பெரிய அலைகளைப் போலவே எனக்கும் தூக்கம் என்பது  இரவிலும்  இல்லை.

..

.

மூலப் பாடல்( ஐங்குறுநூறு- நெய்தல்   திணையின் தொண்டிப்  பத்து- 172)

ஒண் தொடி அரிவை கொண்டனள்,
நெஞ்சே!
வண்டு இமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல் ஒலித் திரை என
இரவில் நானும் துயில் அறியேனே

N. Ganesan

unread,
May 4, 2022, 8:58:41 AM5/4/22
to Santhavasantham
நன்று.

வண்டு முரலுதல்- இந்த வினைச்சொல் தரும் ஸம்ஸ்கிருதச் சொல்: முரலீ
என்பர் வடமொழி நிபுணர்கள்.
முரளிகிருஷ்ணன், முரலீக்ருஷ்ண, ....

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
May 4, 2022, 9:00:36 AM5/4/22
to santhav...@googlegroups.com
பாராட்டுக்கும் தகவலுக்கும் நன்றி Dr கணேசன்

Srinivasakrishnan ln

unread,
May 4, 2022, 9:22:34 AM5/4/22
to Santhavasantham
Truly a great compliment, coming as it does from Dr Ganesan.

Srini


--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/HLIV5C0Vpps/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/b123e73a-c616-4332-bfd4-b70940183528n%40googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
May 4, 2022, 8:03:51 PM5/4/22
to santhav...@googlegroups.com
.        வெண்பாவில் சங்கத் தமிழ்!

 12) கங்குலை ஏன் சுமக்க  வேண்டும்?
            
                 ( நேரிசை வெண்பா)


கொக்கின் முதுகெனக் கூம்பிய  ஆம்பலுடன்
ஒக்கவரு மாலை ஒளிவாழி - தக்கதெனத்
தான்மட்டும் இன்றித் தருதுயர் கங்குலைப்பின்
ஏன்சுமக்க   வேண்டும்  இயம்பு!

         (ஒக்க - ஒருமிக்க/கூட/ ஒருசேர)
     
                       (கங்குல்- இரவு)


                                      -- தில்லைவேந்தன்

.


விளக்கம்:

தலைவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் மாலைப் பொழுதைக் கண்டு தலைவி வருந்திக் கூறுவது:

கொக்கின் முதுகைப் போன்று ஆம்பல் மலர் குவிந்தவுடன் அதனுடன் ஒருசேர மாலையும்( வருத்தம் தர) வந்தது.
சரி போகட்டும். அது வாழ்க!
இப்படி வந்த மாலை தான் ஒன்று மட்டும் தனியாக இன்றித் தனக்குப் பின்(மிகுந்த துன்பத்தைத்  தரும்,) இரவையும் ஏன் சுமந்து  கொண்டிருக்க வேண்டும்?

.



     மூலப் பாடல்( குறுந்தொகை -122)

பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே. 

                                -- ஓரம்போகியார்

NATARAJAN RAMASESHAN

unread,
May 5, 2022, 8:10:05 PM5/5/22
to santhav...@googlegroups.com
.             வெண்பாவில் சங்கத் தமிழ்!

                13)   ஈங்கவர் வாரார் இல்!

                         (நேரிசை வெண்பா)

வேம்பின் ஒளிரும்பூ மெல்லத்  தரையுதிரும்;
தேம்படு சொல்லியர் தேம்பவும் - ஆம்பொழுதாம்
வீங்கிள வேனில் விரைந்துதான்  வந்தாலும்
ஈங்கவர் வாராரே இல்! 

விளக்கம்:

"வேப்ப மரத்தின் ஒளிமிக்க பூக்கள் மென்மையாகத் தரையில் உதிரும்.
தேன் போன்று இனிமையாய்ப் பேசும் மகளிர் வருந்துமாறு இளவேனில் விரைந்து வந்தாலும், இப்பருவத்தில் திரும்ப வேண்டிய அவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லையே!" என்று தலைவி ஏக்கத்துடன் கூறுகிறாள்

மூலப் பாடல்,( ஐங்குறுநூறு- பாலை- இளவேனிற் பத்து,-350)

அவரோ வாரார்; தான் வந்தன்றே
வேம்பின் ஒண்பூ உறைப்பத்
தேம்படு கிளவியவர் தெளிக்கும் பொழுதே!

                                 -- ஓதலாந்தையார்

NATARAJAN RAMASESHAN

unread,
May 6, 2022, 8:47:23 PM5/6/22
to santhav...@googlegroups.com
.                வெண்பாவில் சங்கத் தமிழ்!

                      14)  இனியை எமக்கு!

                         (நேரிசை வெண்பா)

நீர்த்துறைக்கண் ஊர்ச்சிறுவர் நீள்கோடு தாம்பற்றி
ஆர்த்துக் கழுவ அகமகிழும்- போர்த்தொழில்
வெங்களிறு போலினியை மேவுமெமக்(கு). ஒன்னார்க்குன்
பொங்குமதம் இன்னாவைப் போன்ம்.

          
             (  நீள் கோடு -- நீண்ட கொம்பு)
                     (ஒன்னார் -- பகைவர்)
       (போன்ம்-- போல இருக்கிறது/ போலும்)

                                             --     தில்லைவேந்தன்

.

   
விளக்கம்:

அதியனைப் பார்த்து ஔவையார் கூறுவது:

"ஊரில் உள்ள சிறுவர்கள் நீர்த்துறையில், போரில் வல்ல யானையின் நீண்ட கொம்பினை ஆரவாரத்துடன் கழுவுவர்.  அதனை அது  மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும். அதைப் போல் உன்னைச் சேர்ந்த எமக்கு நீ இனிமையானவன்.
ஆனால் உன் பகைவர்க்கு யானையின் மதம் போன்ற உன் சீற்றம் துன்பத்தையே தரும்"

.

               மூலப் பாடல்( புறம்-94)

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும, எமக்கே, மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும, நின் ஒன்னா தோர்க்கே!

                                    -- ஔவையார்

NATARAJAN RAMASESHAN

unread,
May 10, 2022, 9:14:41 PM5/10/22
to santhav...@googlegroups.com
.             வெண்பாவில் சங்கத் தமிழ்!

    
     15)  இரந்துயிர் கொண்டதோ கூற்று?

                          (நேரிசை வெண்பா)

செற்றும், சினந்தும்போய்த் திண்தேர் வளவனுயிர்
பற்ற இயலுமோ பாய்கூற்றால்? - உற்றங்(கு)
இரந்தேத்திப் பாடுநராய் ஈயெனவே வாங்கி
விரைந்ததோ வண்மை வியந்து?

                    (செற்றும்,--  பகைத்தும்)

                                               -- தில்லைவேந்தன்

.
.

விளக்கம்:

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் திண்மையான தேரினைக் கொண்ட பெரும் வீரன்.
பகை கொண்டும், சினம் கொண்டும் கிள்ளி வளவனின் உயிரைப் பாய்ந்து வரும்  அந்தக் கூற்றத்தால் பறிக்க இயலாது.

பின் அவன் எப்படி இறந்தான்?

ஒரு வேளை, பாடுவோரைப் போல் கூற்று   வந்து அவனைப் போற்றிப் பாடி அவன்உயிரை இரந்து பெற்று அவன் வள்ளன்மையை வியந்து சென்றதோ?
.



            மூலப் பாடல்( புறம்-226)

.
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்று  ஆகல் வேண்டும்-பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே,!

                  -- மாறோக்கத்து நப்பசலையார்

NATARAJAN RAMASESHAN

unread,
May 11, 2022, 9:19:16 PM5/11/22
to santhav...@googlegroups.com
..           வெண்பாவில் சங்கத் தமிழ்!
 

             16)போர்வை அளித்த அன்பு!

                        (நேரிசை வெண்பா)

வான மழையால் வளமார் மலைப்புறத்தின்
கான மயிலகவக் காரணமாய்  - ஆன
பெருங்குளிர் என்றளித்தான்  பேகனவன் போர்வை,
அருங்குடி  ஆவியர் அன்பு!

                                 -- தில்லைவேந்தன்





விளக்கம்:

வானம் பொய்யாது பெய்த மழையால் வளம்செறிந்த மலையின் பக்கத்தில் உள்ள காட்டில் மயில் அகவக் கேட்ட பேகன், குளிர் தாங்காமல் மயில்  துன்பப் படுவதாக எண்ணி அதற்குப்  போர்வை அளித்தான்.
இஃது அவன் பிறந்த ஆவியர் குடியின் அன்பால் விளைந்த செயலாகும்.






மூலப் பாடல் ( சிறுபாணாற்றுப்படை,-  வரிகள்- 84-87)


வானம் வாய்த்த வள மலைக் கவா அன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,
பெருங் கல் நாடன், பேகனும்

      - இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

NATARAJAN RAMASESHAN

unread,
May 14, 2022, 8:29:05 AM5/14/22
to santhav...@googlegroups.com
.            வெண்பாவில் சங்கத் தமிழ்!

       17) ஒருத்தி யான் தூங்கவில்லை!

                     ( நேரிசை வெண்பா)

நள்ளிரவு  யாமம் நவில்சொல் அவிந்தினிது
பள்ளியில் மக்கள் படுத்துறங்க, -  மெள்ள
வருத்தம் சிறிதின்றி மண்ணுலகும்  தூங்கும்,
ஒருத்தியான் தூங்கவில்லை ஓய்ந்து!

                             -- தில்லைவேந்தன்
.

விளக்கம்:

"நள்ளிரவு யாமத்தில் ஊர்மக்கள் பேச்சடங்கி இனிமையாகப் படுக்கையில் உறங்குவர். இந்த மண்ணுலகத்து உயிரனைத்தும் சிறிதும் வருத்தமின்றித் தூங்கும்.
யான் ஒருத்தி மட்டும் தூங்காமல் இருக்கிறேன்", என்று தோழியிடம் தலைவி பிரிவுத் துன்பத்தால்  தான் தூங்க முடியாமல் தவிப்பதைக் கூறுகிறாள்.

.

   மூலப்பாடல்( குறுந்தொகை-6)

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. 

                                   -- பதுமனார்

NATARAJAN RAMASESHAN

unread,
May 14, 2022, 10:20:23 PM5/14/22
to santhav...@googlegroups.com
.                 வெண்பாவில் சங்கத் தமிழ்!

                   18) குருகதுவும் கண்டதே!

                           ( நேரிசை வெண்பா)
 

என்னைமணம் கொள்கள்வன் இல்லையங்(கு) ஆருமெனப்
பின்னை எனைப்பொய்ப்பின் பேதைசெய்வ(து) - என்ன?
பெருகுபுனல் ஆரல் பிடித்துண்ண வந்த
குருகதுவும்  கண்டதே கொல்!

                      (ஆரல்-ஒரு வகை மீன்)
                              ( குருகு- நாரை)

                                                 -- தில்லைவேந்தன்

.

விளக்கம்:

"என்னை அவன் களவு மணம் செய்த போது யாரும் அங்கு இல்லை. 
அக்கள்வன் தான் ஒருவன் மட்டுமே அவ்வேளை அங்கு  இருந்ததாக எண்ணி, எனக்குக் கொடுத்த உறுதிமொழியைப் பொய்யாக்கி விட்டால் யான் என்ன செய்வது?
ஆனால்,   அங்குப் பெருகி ஓடிய நீரில் ஆரல் மீனைப் பிடித்து உண்ண வந்த ஒரு நாரையும் ( குருகு) நடந்ததைப் பார்த்தது",

 என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

   மூலப் பாடல்( குறுந்தொகை-25)

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. 

                                       -- கபிலர்

NATARAJAN RAMASESHAN

unread,
May 18, 2022, 2:02:17 AM5/18/22
to santhav...@googlegroups.com

.                 வெண்பாவில் சங்கத் தமிழ்!
.

                  19) எழுப்புவனோ இவ்வூரை?

                             ( நேரிசை வெண்பா)

முட்டுவனோ? தாக்குவனோ? மூளுமோர் காரணத்தால் 
எட்டுமொலி கூவி எழுப்புவனோ?- தொட்டலைக்கும்
தென்றல் தருநோய் சிறிதும் அறியாமல்
நன்றுறங்கும் இவ்வூரை நான்.

            (தொட்டலைக்கும் -- தொட்டு வருத்தும்)

                                          -- தில்லைவேந்தன்

.

விளக்கம்:

பொருள் ஈட்டச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை.
ஆனால் பகலும்,இரவும் தவறாமல் வந்தன.
இரவில், தலைவியைத்  தொட்ட  தென்றல்  தந்த  காம நோயால்  தூக்கமின்றித் தவித்தாள் அவள்.
அவள் நிலையறியாது ஊரார் இனிது உறங்கினர்.
இதனால் எரிச்சலும், சினமும் அடைந்த தலைவி,

" அவர்களை முட்டித் தள்ளுவேனோ? தாக்குவேனோ?
 அல்லது ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு உரக்கக் கத்தி  எழுப்புவேனோ?" என்று தோழியிடம் கூறுவதாக அமைந்த பாடல் இது.


.

    மூலப் பாடல்(குறுந்தொகை -28)

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே. 

                                    -- ஔவையார்

lns2...@gmail.com

unread,
May 18, 2022, 5:54:14 AM5/18/22
to சந்தவசந்தம்
அழகு!

Srini

NATARAJAN RAMASESHAN

unread,
May 18, 2022, 6:17:56 AM5/18/22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு Srini

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/f2f026b1-cdd4-4d74-b20d-b88a2ae97365n%40googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
May 18, 2022, 9:23:09 PM5/18/22
to santhav...@googlegroups.com
.              வெண்பாவில் சங்கத் தமிழ்!


                   20) தேரா மடமை தெளி!

                       ( நேரிசை வெண்பா)

மாரியும் தன்பருவம்  மாறியே பெய்வதால்,
காரெனக் கொன்றையும் கான்மலரும் - நேரிழைநீ
வாரார் தலைவரென வாடாமல் கொன்றையின்
தேரா மடமை தெளி!

( நேரிழை  - தகுதியான அணி அணிந்த பெண்)
                       ( தேரா -- ஆராயாத)

                                          -- தில்லைவேந்தன்

    

விளக்கம்:

கார் காலம் வந்ததால் மழை பெய்கிறது.  அப்பருவத்தில் இயல்பாக மலரும் கொன்றை காடெங்கும் பூக்கிறது.
பொருள் ஈட்டச் சென்ற தலைவன் கார் காலம் ஆகியும் வரவில்லையே என்று ஏங்குகின்றாள் தலைவி.

அவளது ஏக்கத்தைக் கண்ட தோழி,"அடியே , இப்பொழுது பெய்யும் மழை, காலம் மாறிப் பெய்யும் மழையாகும். இதனை அறியாத கொன்றை மரம் , கார் வந்ததாகத் தவறாக எண்ணி மலர்ந்தது்

இன்னும் கார் காலம் வரவில்லை.

ஆதலால், தலைவர் வரவில்லை என்று வருந்துவதை விடுத்து, ஆராயும் திறனில்லாத கொன்றையின் மடமையைப் புரிந்து கொள்வாயாக" என்று ( பொய்யுரை) கூறித் தேற்றுகின்றாள்.

.

    மூலப் பாடல்( குறுந்தொகை -66)

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே. 

             -- கோவதத்தர்( கோவர்த்தனார்)

Subbaraman NV

unread,
May 18, 2022, 9:37:37 PM5/18/22
to santhav...@googlegroups.com
Dear friend,
Good morning. Wishing a tremendous Thursday on the Guru Bhagawan Day,, it is "19th. May: PPP- Flying Beauty!" in Envius Thoughts in https://nvsr.wordpress.com for your kind read and response. Thanks.
With kind regards
Yours
DR. N V Subbaraman

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

NATARAJAN RAMASESHAN

unread,
May 19, 2022, 7:45:47 AM5/19/22
to santhav...@googlegroups.com
.                 வெண்பாவில் சங்கத் தமிழ்!


                             21)நோகும் உளம்!

                             (நேரிசை வெண்பா)

விண்மறைக்கும் பெய்மழை; வெள்ளநீர்  மண்மறைக்கும்;
கண்மறைக்கும்  கங்குல் கதிர்மறைவால். - திண்மறவர்
வேங்கை  கமழ்சிற்றூர்  மேவினை யாங்ஙனம்?
ஓங்குவெற்ப, நோகும் உளம்!

                                       - தில்லைவேந்தன்

.

விளக்கம்:

ஒரு நாள் நல்ல மழை பெய்து வானத்தை முழுவதும் மறைக்கிறது. 
மழை நீர் வெள்ளமாய் ஓடுவதால் நிலமும் தெரியவில்லை. 
மேடு எங்கே, பள்ளம் எங்கே என்பதும் தெரியவில்லை.
கதிரவன் மறைந்ததால் இருளில் கண்ணும் தெரியவில்லை.
அந்த இரவு நேரத்தில் அவளைச் சந்திக்க வருகிறான் தலைவன்.
"உயர்ந்த மலைநாட்டின் தலைவனே! நீ  இந்த இரவில்  (திண்மையான மறவர் வாழும்) வேங்கை மரத்தின் மலர் மணம் வீசும் எம் சிற்றூரின் வழியறிந்து வந்தது  எவ்வாறு?" என்று வியப்போடு கேட்கிறாள் தோழி.
அவன் துன்பம் கண்டு வருந்துவதாகவும் கூறுகிறாள்.

( இப்படி இடர்கள், இன்னல்கள் இடையே  வருவதை விடுத்துத் தலைவியை ஊரறிய மணந்தால் நேராக வரலாமே என்பதை மறைமுகமாக உணர்த்துகிறாள் தோழி )

                  

          மூலப் பாடல் ( குறுந்தொகை-355)

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே
நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே
எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே.

                                                 -- கபிலர்

NATARAJAN RAMASESHAN

unread,
May 20, 2022, 7:23:10 AM5/20/22
to santhav...@googlegroups.com
.            வெண்பாவில் சங்கத் தமிழ்!

.               22)வேண்டுபவை இவையே!

                          (நேரிசை வெண்பா)

பொன்னும், பொருளும், புவியினில் போகமும்,
அன்னவை  கேட்டுனை யாம்வேண்டோம்-  நின்னருளும், 
அன்பும்,  அறனும்  அளிப்பாய், இணர்க்கடம்பின்
மின்பொலி தாரோய் விழைந்து!

                      (இணர் -கொத்து)

      (மின்பொலி- மின்னல் போல ஒளிர்கின்ற)

                                         --தில்லைவேந்தன்

.

விளக்கம்:

"கொத்தாக இருக்கும், ஒளி விளங்கும்  கடப்ப மலரால் ஆன மாலையை  அணிந்தவனே
இந்த உலகினில் பொன்னும், பொருளும், இன்பமும் உன்னிடம் யாம் கேட்டுப் பெற நினைக்கவில்லை.
உன்னுடைய அருளும், அருளுக்குக் காரணமான  அன்பும், அவ்விரண்டின் பயனான அறமும்  எமக்கு விழைவுடன் அளிப்பாயாக" என்று செவ்வேளை வேண்டுகிறார் புலவர்.

.
.
மூலப் பாடல்,( பரிபாடல்- ஐந்தாம் பாடல் -செவ்வேள்- வரிகள்-  78-81)

              ...........................   யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! 

                        -- கடுவன் இளவெயினனார்

NATARAJAN RAMASESHAN

unread,
May 21, 2022, 5:45:24 AM5/21/22
to santhav...@googlegroups.com
.                  வெண்பாவில் சங்கத் தமிழ்!

                      23) பரங்குன்ற அழகு!

                           (நேரிசை வெண்பா)

வென்றிதரு யானையின் மேக இடிகேட்டுக்
குன்றதிரக் கூவும்நின் கோழியும்- நன்றுமத
வேழமும்  கேட்டதிர்க்கும்  மேவிக் குகையெதிர்க்கும்
ஆழுபரங் குன்ற அழகு!

(யானையின் மேக இடி-- யானையின் பிளிறல் போன்ற மேகத்தின் இடியோசை)

                    ( அதிர்க்கும் - முழங்கும்)

                    (எதிர்க்கும் - எதிரொலிக்கும்)

                                                          -- தில்லைவேந்தன்

விளக்கம்:

செவ்வேளே!
நின் வெற்றி தரும் யானையின்  பிளிறல் போன்று மேக  இடி ஒலிக்கும்.
அவ்வோசை கேட்டு நின் கோழிச் சேவல் குன்றம் அதிரும்படிக் கூவும். 
அதைக் கேட்டவுடன் நின் மத யானை முழங்கும்.
இப்படி மாறி மாறி எழும் ஓசைகள் மலைக் குகைகளில் போய் மோதி எதிரொலிக்கும்.
அந்தப் பேரொலியில் ஆழ்ந்திருக்கும் அழகை உடையது நின் திருப்பரங்குன்றம்.

.



மூலப் பாடல் ( பரிபாடல்- எட்டாம் பாடல் - செவ்வேள்- வரிகள் 17-21)

........... நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப,          
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை

                                       - நல்லந்துவனார்

NATARAJAN RAMASESHAN

unread,
May 22, 2022, 1:55:07 AM5/22/22
to santhav...@googlegroups.com
.        வெண்பாவில் சங்கத் தமிழ்!

             24)பெரும! உன் பீடு!

               (நேரிசை வெண்பா)

நீல  மணியும், நெடுங்கடலும்  நீள்முகிலும்
கோலம்  புரைமேனி  கொண்டவன்நீ- சாலக் 
கருமெய் முரணுடுக்கை, காணார்க்கு நேமி,
பெரும! உடையைவுன் பீடு!

            கருமெய்,-- கரிய மேனி
      முரணுடுக்கை-- மாறுபட்ட ஆடை
               காணார். -- பகைவர்
         நேமி -- சக்கரம்/ ஆழிப்படை

                              -- தில்லைவேந்தன்

.


விளக்கம்:       

திருமாலே,
நீலமணியையும், கடலையும், முகிலையும் போன்ற திருமேனி உடையவன் நீ. 
மிகக் கரிய உன் மேனியோடு மாறுபட்ட  பொன்னாடையும், உன்  பகைவரின் உயிருடன் மாறுபட்ட ஆழிப்படையும்
கொண்டிருப்பதும் உன்னுடைய பெருமைகளாகும்.


மூலப் பாடல்( பரிபாடல்- நான்காம் பாடல்- திருமால்- வரிகள்-6-9)

திருமணி திரைபா டவிந்த முந்நீர்
வருமழை யிருஞ்சூன் மூன்றும் புரையுமாமெய்
மாஅ மெய்யொடு முரணிய வுடு்க்கையை
நோனா ருயிரொடு முரணிய நேமியை

NATARAJAN RAMASESHAN

unread,
May 23, 2022, 11:30:21 AM5/23/22
to santhav...@googlegroups.com
.                வெண்பாவில் சங்கத்தமிழ்!

               25) அருவி விழு சாரற் பறம்பு!

                          (நேரிசை வெண்பா)

வண்டுண்ணும்  பூந்தேன்  மலர்சுர புன்னையைக்
கொண்டவழி  முல்லைக் கொடிக்குத்தன் -- மண்டுதேர்
நல்கிய  பாரியின்  நன்னாடு  வெள்ளருவி
பல்கிவிழு சாரற் பறம்பு

         மண்டுதேர்--விரைந்து செல்லும் தேர்
                            பல்கி --  பெருகி

                                      - தில்லைவேந்தன்

.

விளக்கம்:

வண்டு உண்ணும் தேன் துளிர்க்கும் மலர்கள் பூக்கும்  சுரபுன்னை நிறைந்த  வழியில் இருந்த முல்லைக் கொடிக்குக் கொழு கொம்பாக, விரைந்து செல்லும் தன்  தேரைக் கொடுத்தவன் பாரி..
அவன் நன்னாடு வெண்மையான அருவி பெருகி விழும் சாரலை உடைய பறம்பு மலையைக் கொண்டதாகும்.


.

மூலப் பாடல் (சிறுபாணாற்றுப்படை- வரிகள்- 87-91)

.                              .............சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக  நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல்.  
பறம்பிற் கோமான் பாரியும்..........

          - -இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

NATARAJAN RAMASESHAN

unread,
May 23, 2022, 9:53:37 PM5/23/22
to santhav...@googlegroups.com
"வெண்பாவில் சங்கத் தமிழ்"--

25 பாடல்களுடன் நிறைவு பெறுகிறது.
அன்புடன் பாராட்டிய அனைவர்க்கும் நன்றி.

                                -- தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
May 23, 2022, 10:01:37 PM5/23/22
to santhav...@googlegroups.com
A special thanks to Sri GuruNathan RamaNi

Ramamoorthy Ramachandran

unread,
May 24, 2022, 10:05:47 PM5/24/22
to Santhavasantham
இன்றுதான்  வெண்பாக்கள் அனைத்தையும் படித்தேன்! 
சங்கத்தார்  கூற்றைத் தனிவெண்பா  வால்பாடி 
எங்களுக்  கின்பமே  ஈந்திட்டார் -  மங்காப் 
புகழ்பெற்ற   தில்லையின்  வேந்தனாம்  அன்பர்
திகழ்கின்றார் எம்முள்  திளைத்து!

- புலவர் இராமமூர்த்தி 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
May 24, 2022, 10:08:13 PM5/24/22
to santhav...@googlegroups.com
பணிவான வணக்கமும் நன்றியும் புலவர் ஐயா

Reply all
Reply to author
Forward
0 new messages