வேலன்பால் மாலன்பால்

658 views
Skip to first unread message

sankara dass nagoji

unread,
Apr 29, 2018, 6:47:15 AM4/29/18
to சந்தவசந்தம்
சந்த வசந்த ஆசிரியர்களுக்கு வணக்கம்.

பெரியவாளின் அனுக்ரஹத்தால், எம்பெருமான் முருகனைப் பாடும் பணி பெற்றுள்ளேன்.

இந்த இழைக்குப் பெயர் சூட்டியவர் சிவசிவா அவர்கள். 

இன்று இலந்தையார் வீட்டில் நடைபெற்ற விழாவில், பேராசிரியர் பசுபதி அவர்கள் அளித்த ஆசியுரையை இலந்தையார் வாசிக்க, திருச்சி புலவர் இழையின் பெயரை அறிவித்துத் தொடங்கி வைத்தார்.

பேராசிரியர் பசுபதி அவர்களின் ஆசியுரை

தமிழ்க் கடவுளாம் முருகனுக்கும் தமிழ்ப் பொக்கிஷமாம் யாப்பிலக்கணத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. முருகனின் ஆறுமுகங்கள் போல், யாப்பிற்கும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற ஆறு முகங்கள் உள்ளன. அதனால், முருகனைப் போற்றித் துதி பாட, யாப்புக் கொஞ்சும் தமிழ்க் கவிதையை விடப் பொருத்தம் வேறெதற்கு இருக்க முடியும்?

சந்தவசந்தக் குழுமத்தில் ஐந்தெழுத்து ஆண்டவனைப் பற்றியும், எட்டெழுத்து இறைவனைப் பற்றியும் நம் உள்ளங்கள் பத்தியில் உருகும்படி கவிதைகள் எழுதிவரும் சங்கர தாசன் ( நாகோஜி ) விரைவில் ஆறெழுத்து அழகனைப் பற்றியும் மரபுக் கவிதைகள் எழுதத் தொடங்குவார் என்றறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

குருவருளும், திருவருளும் அவருக்கு நிறைய உண்டு; கூடவே, இந்த முயற்சியில் நக்கீரர், அருணகிரி போன்ற முருகனைத் துதித்த முன்னோரின் ஆசிகளும் அவருக்குக் கிட்டட்டும் என்று ஆண்டவனை வேண்டி, என் பரிபூரண ஆசிகளை அவருக்கு வழங்குகிறேன்.

சு.பசுபதி

டொராண்டோ, கனடா

17-04-18   

காப்பு

தும்பிக்கை யாண்டவனை நம்முள்ளத் துள்ளிருத்தி
நம்பியே நூல்பயில்வோம் நாம்.

மயிலேறி வந்த வடிவேலா என்றன்
பயம்போக்கிப் பாடப் பணி.

திருப்பரங்குன்றம்
அறுசீர் விருத்தம் - காய் மா தேமா ... காய் மா தேமா

தொண்டரது துயர்தீர் தேவும்
....சுடர்வேலை ஏந்தும் தேவும்
கண்டவுடன் கனியும் தேவும்
....கரிமுகனுக் கிளைய தேவும்
எண்டிசையோர் பணியும் தேவும்
....ஈசருக்கோர் மொழிசொல் தேவும்
பண்டமிழில் பரவும் தேவும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(1) -- 29-Apr-2018

- sankara dass

Vivek Bharathi

unread,
Apr 29, 2018, 7:09:15 AM4/29/18
to santhav...@googlegroups.com
புலவரது வாயால் புளகாங்கிதம் அடையக் கேட்டு, கேட்டவுடன் விருத்தமும் படைத்தேன். இங்கே நானும் திருப்பரங்குன்றத்தைப் போற்றி வெண்பாக்கள் எழுதுகிறேன். பராசக்தி காக்க!

திருப்பரங்குன்றம்

வள்ளிதெய் வானையுடன் வண்ணமயில் வாகனனாய்த்
துள்ளியமர்ந் தாட்சிசெயும் தூயவனுக் - குள்ளமெலாம்
ஆளக் கொடுத்திட்டால் அண்டிடுமோ ஆணவங்கள்,
மாளக் கொடுத்திடுவான் வேல்! (1)

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

இராஜ தியாகராஜன்

unread,
Apr 29, 2018, 8:49:33 AM4/29/18
to santhav...@googlegroups.com
வேலன்பால் மாலன்பால்..

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
18922610_1820299444652656_5803397383357930021_o.jpg

இராஜ தியாகராஜன்

unread,
Apr 29, 2018, 8:54:25 AM4/29/18
to santhav...@googlegroups.com
அருந்தமிழால் என்பது அருதமிழால் என்று அச்சானது.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 29, 2018, 10:02:11 AM4/29/18
to சந்தவசந்தம்

அழகிய தலைப்பு. ஆறுபடை வீட்டில் முதலான பரங்குன்றில் தொடங்கும் இருவர் பாடல்களும் அழகு. தொடர்ந்து வளர வாழ்த்துகள்.

அனந்த்  

2018-04-29 6:47 GMT-04:00 sankara dass nagoji <nag...@gmail.com>:
சந்த வசந்த ஆசிரியர்களுக்கு வணக்கம்.

பெரியவாளின் அனுக்ரஹத்தால், எம்பெருமான் முருகனைப் பாடும் பணி பெற்றுள்ளேன்.

இந்த இழைக்குப் பெயர் சூட்டியவர் சிவசிவா அவர்கள். 

இன்று இலந்தையார் வீட்டில் நடைபெற்ற விழாவில், பேராசிரியர் பசுபதி அவர்கள் அளித்த ஆசியுரையை இலந்தையார் வாசிக்க, திருச்சி புலவர் இழையின் பெயரை அறிவித்துத் தொடங்கி வைத்தார்.

காப்பு

தும்பிக்கை யாண்டவனை நம்முள்ளத் துள்ளிருத்தி
நம்பியே நூல்பயில்வோம் நாம்.

மயிலேறி வந்த வடிவேலா என்றன்
பயம்போக்கிப் பாடப் பணி.

திருப்பரங்குன்றம்
அறுசீர் விருத்தம் - காய் மா தேமா ... காய் மா தேமா

தொண்டரது துயர்தீர் தேவும்
....சுடர்வேலை ஏந்தும் தேவும்
கண்டவுடன் கனியும் தேவும்
....கரிமுகனுக் கிளைய தேவும்
எண்டிசையோர் பணியும் தேவும்
....ஈசருக்கோர் மொழிசொல் தேவும்
பண்டமிழில் பரவும் தேவும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(1) -- 29-Apr-2018

- sankara dass
திருப்பரங்குன்றம் 

Kaviyogi Vedham

unread,
Apr 29, 2018, 11:58:38 AM4/29/18
to santhavasantham
thodarga nagoji.. um pani. good,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
     
Subbaiyar Ramasami

unread,
Apr 29, 2018, 1:27:39 PM4/29/18
to santhavasantham
ஆளக் கொடுத்திட்டால் அண்டிடுமோ ஆணவங்கள், 
மாளக் கொடுத்திடுவான் வேல்! (1) 

ஆளக் கொடுத்திட்டால் அண்டிடுமோ ஆணவங்கள், 

என்பதில் பொருள் முற்றுப்பெற்றுவிடுகிறது. எனவே அடுத்த அடி மாளக் கொடுத்திடுவாய் வேல் என்பது பொருத்தமாக இல்லை. ஆணவங்கள் மாளக் கொடுத்திடுவாய் என்று நினைத்து எழுதப்பட்டாலும் வேறுவகையிலும் பொருள் கொள்ள முடிவதால் இதைக் கவனித்தல் நலம்

Siva Siva

unread,
Apr 29, 2018, 1:56:34 PM4/29/18
to santhavasantham
இனிய தொடக்கம்.

ஈர் ஐயங்கள்.

1)  / பண்டமிழில் பரவும் தேவும் /
அடியவர்கள் என்ற சொல்லை வருவித்து, "அடியார்களால் பண் பொருந்திய தமிழால் பரவப்படும் தே" என்று பொருள்கொள்ளவேண்டுமா?

2)
/ பண்டமிழில் பரவும் தேவும் /

"பண் திகழ" போன்ற பிரயோகத்தில் "பண்டிகழ" என்று புணரும்.
1.75.4 - " வண்டணைகொன்றை .... பண்டிகழ்வாகப்பாடி ...")

ஆனால், 'பண் பொருந்திய தமிழ்" போன்றுபொருள்படும் இடத்திலும் ணகரம் திரியாமல் வருமா? அறிந்தோர் சொல்லக்கூடும்.

"பண் + தமிழ்" - இது பண்புத்தொகை என்று எண்ணுகின்றேன்.
----
ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்திலிருந்து:

ணகர னகர வீற்றுப் புணர்ச்சி

138. ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், அல் வழியில் அவ்விரு மெய்களும் இயல்பாம். வேற்றுமையில் ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவுந் திரியும். அவ்விரு வழியிலும், வருந்தகரம் ணகரத்தின் முன் டகரமாகவும், னகரத்தின் முன் றகரமாகவும் திரியும்.

உதாரணம்.

அல்வழி --- வேற்றுமை

மண்சிறிது -- மட்சாடி

மண்டீது -- மட்டூண்

பொன் குறிது -- பொற்கலம்

பொன்றீது -- பொற்றூண்

கட்பொறி, பொற்கோடு எனப் பண்புத் தொகையினும் பட்சொல், பொற்சுணங்கு என உவமைத் தொகையினுந் திரிதலும் உண்டு.

மண் சுமந்தான், பொன் கொடுத்தான், என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், விண் பறந்தது, கான் புகுந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்துத் திரியாதியல்பாம். மண்கூடை, புண்கை, என ஒரோவிடத்து இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையினுந் திரியாமை கொள்க.

----

2018-04-29 6:47 GMT-04:00 sankara dass nagoji <nag...@gmail.com>:

Subbaiyar Ramasami

unread,
Apr 29, 2018, 2:13:25 PM4/29/18
to santhavasantham

பேச்சினினிலும் , வாழ்க்கைப் பிழைப்பினிலும் நற்கவிதை

வீச்சினிலும்,  நேச விரிப்பினிலும்- மூச்சுத்-

தரங்குன்றிப் போகாமல் தக்கபடி  காப்பான்

பரங்குன்றில் வாழும் பரன்

மூச்சு- உயிர்ப்பு

தெய்வ யானை தன்னையே
   தேவர் எல்லாம் பார்த்திட

செய்ய பரங் குன்றிலே
    சேனா பதி வேலவன்

மெய்வி ளங்கும் வண்ணமே
    வேண்டிக் கரம் பற்றினன்

உய்வ ளிக்கும் ஆலயம்
    உள்கு டைந்த குன்றமே!

இவ்வகை விருத்தம் எழுத்தெண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஓவ்வொர் அரையடிக்கும் ஏழு எழுத்துகள் இருக்கும்..  குழந்தைப்பாடல்களில் அதிகம் பயன்படுத்தப் படுவது

Siva Siva

unread,
Apr 29, 2018, 2:20:45 PM4/29/18
to santhavasantham
Further:
1)
/ ஆணவங்கள் /
ஆணவம் என்றுதானே வரும். ஆணவங்கள் என்ற பன்மை வழக்கும் உண்டா?

2) / வண்ணமயில் வாகனனாய்த்  துள்ளியமர்ந் தாட்சிசெயும் /
முருகன் மயில்மேல் துள்ளி ஏறுவதாகச் சொல்லும் உதாரணம் உள்ளதா?

2018-04-29 13:27 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
ஆளக் கொடுத்திட்டால் அண்டிடுமோ ஆணவங்கள், 
மாளக் கொடுத்திடுவான் வேல்! (1)  

ஆளக் கொடுத்திட்டால் அண்டிடுமோ ஆணவங்கள், 

என்பதில் பொருள் முற்றுப்பெற்றுவிடுகிறது. எனவே அடுத்த அடி மாளக் கொடுத்திடுவாய் வேல் என்பது பொருத்தமாக இல்லை. ஆணவங்கள் மாளக் கொடுத்திடுவாய் என்று நினைத்து எழுதப்பட்டாலும் வேறுவகையிலும் பொருள் கொள்ள முடிவதால் இதைக் கவனித்தல் நலம்

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Vivek Bharathi

unread,
Apr 30, 2018, 7:35:16 AM4/30/18
to santhav...@googlegroups.com
ஆம் ஐயா! பொருள் முற்றுப்பெறுகிறது. அடுத்த அடியினை மாற்றிவிடுகிறேன்.

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

2018-04-29 22:57 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

Vivek Bharathi

unread,
Apr 30, 2018, 7:42:48 AM4/30/18
to santhav...@googlegroups.com
நன்றி சிவசிவா ஐயா. ஆணவம் என்றே திருத்திக் கொள்கிறேன். மயில் மேல் துள்ளுகிறான் என்று பொருளில் நான் எழுதவில்லை, பீடத்தில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் படங்களைப் பார்த்துள்ளதால் துள்ளி பீடத்தில் அமர்ந்தான் என்று எழுதினேன். அதையும் திருத்தி விடுகிறேன்.

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

--

Vivek Bharathi

unread,
Apr 30, 2018, 7:47:11 AM4/30/18
to santhav...@googlegroups.com
தெய்வானை யோடு தெளிவான கைவேலும்
உய்வானைத் தாங்கும் உயர்கொடியும் - மெய்வானத்
தேவரின் சேனையும் தேடப் பரங்குன்றம்
மேவுக நன்மதுரை மேல்! (1)

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

Nagoji

unread,
Apr 30, 2018, 7:56:51 AM4/30/18
to santhav...@googlegroups.com
பரவும் என்பது இங்கு spread என்னும் பொருளில் எழுதியது.

பண்ணாகிய தமிழ் என்றால் பண்டமிழ் என்று வருமோ?
பண்புத் தொகையில் வெண்டாமரை போல் பண்டமிழ். 
பண் என்பதற்குத் தகுதி என்னும் ஒரு பொருள் உள்ளது தேடியதில்.

ஒருபாடல் - அறிவொளி அவர்கள் எழுதியது: 

- sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/H2vRjbSaOj0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

ramaNi

unread,
Apr 30, 2018, 10:10:03 AM4/30/18
to சந்தவசந்தம்
அருமையான தொடக்கம்! சிவசிவா என்று மட்டுமே பாடும் சுப்பிரமணியன் தந்த தலைப்பு பிரமாதம்! பசுபதியின் ஆசிகளும், நாகோஜியின் முதற் பாடலும், முருகன் தரிசனப் பரவசத்தை வழங்குகின்றன. ஆட்டம் தொடரட்டும்!

அன்புடன்,
ரமணி

Nagoji

unread,
Apr 30, 2018, 11:14:07 AM4/30/18
to santhav...@googlegroups.com
பிச்சைதரு செல்வன் தானும்
....பிழையாத வேற்கை யானும்
அச்சமறுத் தாட்கொள் வானும்
....அமரர்தமைச் சிறைமீட் பானும்
கச்சிவளர் கோட்டத் தானும்
....கண்கண்ட தெய்வம் தானும்
பச்சைமயில் மேற்செல் வானும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(2) -- 30-Apr-2018

பிச்சை - சிவன்

- sankara dass

Pas Pasupathy

unread,
Apr 30, 2018, 11:23:39 AM4/30/18
to Santhavasantham
” அப்பனைப் பாடும் வாயால் - ஆண்டி
சுப்பனையும் பாடும் “ சங்கரதாசனுக்குப் பாராட்டுகள்! 

Siva Siva

unread,
Apr 30, 2018, 11:28:31 AM4/30/18
to santhavasantham
/ பிச்சை - சிவன் /
உதாரணம் உள்ளதா?
அன்றேல், பிச்சன்?  

2018-04-30 11:14 GMT-04:00 Nagoji <nag...@gmail.com>:
Message has been deleted

Subbaiyar Ramasami

unread,
Apr 30, 2018, 12:57:48 PM4/30/18
to santhavasantham
ஆணவம் பலவழியாக வரும்.  தனம், இனம்,  இளமை  தருக்குக் கொள்ளாதே  என்கிறது மொழியாக்கம் செய்யப்பட்ட பஜகோவிந்தம். எனவே ஆணவங்கள் என்று சொல்வது தவறில்லை என்றே தோன்றுகிறது

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 30, 2018, 8:36:05 PM4/30/18
to santhavasantham
ஆணவம், அடக்கம், இரக்கம், கோபம், முதலிய பண்புகளைப் பன்மையிலும் சொல்ல இயலுமா?

ஒருவனுக்கு ஒரு குணம் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் எக்குணத்தையும் 1,2,3 என்று எண்ணிச் சொல்ல இயலாது என்று எண்ணுகின்றேன்.

Vivek Bharathi

unread,
Apr 30, 2018, 11:18:11 PM4/30/18
to santhav...@googlegroups.com
பரங்குன்று மேவும் பகவன்தாள் பொய்மைத் 
தரங்குன்றும் வாழ்க்கை தருமே - சரங்குன்றா 
தேவி யழித்தபின் தெய்வானை தோள்சேர்ந்த 
தேவன் முருகனடி தேடு! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
May 1, 2018, 12:10:51 AM5/1/18
to santhav...@googlegroups.com
தென்பரங் குன்றத்தில் தேவானை யைமணந்தே
மன்னு மதுரைநகர்ச் சொக்கரை- முன்னியே
மீனாட்சி யின்னருளால்
மேன்மை மிகப்பெற்ற
ஞானக் குமரனடி நாடு.
- புலவர் இராமமூர்த்தி .

Nagoji

unread,
May 1, 2018, 2:02:02 AM5/1/18
to santhav...@googlegroups.com
பிச்சன் என்பதே சரி.
பிச்சனருள் செல்வன் தானும் என்று திருத்திவிட்டேன்.
- sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/H2vRjbSaOj0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Nagoji

unread,
May 1, 2018, 2:03:25 AM5/1/18
to santhav...@googlegroups.com
கருமவினை அறச்செய் வானும்
....கார்வண்ணன் மருகன் தானும்
அருமறைகட் கப்பா லானும்
....ஆட்டுக்கி டாய்மே லானும்
தருமமிகத் தவம்செய் வானும்
....தடங்கிரியைத் தூள்செய் வானும்
பரமசிவன் பாலன் தானும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(3)  -- 1-May-2018

- sankara dass

Siva Siva

unread,
May 1, 2018, 8:32:25 AM5/1/18
to santhavasantham
/ கருமவினை  / = ?
கருமம் = வினை   அன்றோ?

/ அருமறைகட் கப்பா லானும் /
அருமறைகட் கெட்டா தானும் ?

8.5.75 - திருவாசகம் - திருச்சதகம் - 75

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலமிட்டு

உணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ ருண்மை இன்மையின்

வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து நின்ற ருளுதற்

கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ லோநி னைப்பதே

)

Vivek Bharathi

unread,
May 1, 2018, 8:46:00 PM5/1/18
to santhav...@googlegroups.com
திருப்பரங்குன்றம்

பொய்கைதரும் பூமணமும் பூம்பொழிலாள் நல்லமரத்
தெய்வானை தோள்சேர்ந்த தேமணமும் - மெய்மணக்கும்
பஞ்சா முதமணமும் பக்திநீறு செய்மணமும்
நெஞ்சில் நிலைக்கும் நினை! (3)

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

Nagoji

unread,
May 2, 2018, 4:12:40 AM5/2/18
to santhav...@googlegroups.com
பக்திநீறு - விளாங்காயைத் தவிர்க்கவும்.

 - sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/H2vRjbSaOj0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

Nagoji

unread,
May 2, 2018, 1:32:01 PM5/2/18
to santhav...@googlegroups.com
/ கருமவினை  / = ?
கருமம் = வினை   அன்றோ?

கருமமறுத் தாட்கொள் வானும்
....கார்வண்ணன் மருகன் தானும்

என்று மாற்றிவிட்டேன். நன்றி.

- sdn 
 
Nagoji

unread,
May 2, 2018, 1:32:53 PM5/2/18
to santhav...@googlegroups.com
சடைக்குள்ளே நீர்வைத் தாற்குத்
....தனியெழுத்தைப் போதிப் பானும்
படிக்கின்றார் உள்ளத் துள்ளே
....பயம்நீக்கி ஆடு வானும்
இடுக்கண்கள் இல்லா வண்ணம்
....என்றென்றும் துணைநிற் பானும்
படைக்கெல்லாம் முன்னிற் பானும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(4) -- 2-May-2018

- sankara dass

Vivek Bharathi

unread,
May 2, 2018, 10:21:49 PM5/2/18
to santhav...@googlegroups.com
திருப்பரங்குன்றம்

வேலன்கை வேலுக்கும் வேக மயிலுக்கும்
கோலமிகு வானமரக் கோதைக்கும் - சீலச்
சரவணப் பொய்கைக்கும் சாற்றும் வணக்கம்
மரணபயம் நீக்கும் மருந்து! (5)

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
May 2, 2018, 10:26:48 PM5/2/18
to santhavasantham
attagasam nanbaa!,
 yogiyar
--
     
Vivek Bharathi

unread,
May 2, 2018, 10:27:09 PM5/2/18
to santhav...@googlegroups.com
சரி அண்ணா!

பொய்கைதரும் பூமணமும் பூம்பொழிலாள் நல்லமரத்
தெய்வானை தோள்சேர்ந்த தேமணமும் - மெய்மணக்கும்
பஞ்சா முதமணமும் பால்நீறு செய்மணமும்
நெஞ்சில் நிலைக்கும் நினை! (3)

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

2018-05-02 13:42 GMT+05:30 Nagoji <nag...@gmail.com>:
பக்திநீறு - விளாங்காயைத் தவிர்க்கவும்.

 - sdn

Kaviyogi Vedham

unread,
May 2, 2018, 10:37:09 PM5/2/18
to santhavasantham
ம்ம்.. இப்போதுதான் நம்ம தெய்வானை தன் கணவனிடம்
 பாருடா! உன் பக்தன் என்னை நல்ல     மரத்(மரம் போன்ற)..தெய்வானை என்கிறான்
 என்று கண்ணைக் கசக்குவதாகத் தகவல் வந்தது. என் த்யான விஷனில் பார்த்தேன்.
 ஜாக்கிரதையாக இரு. முருகனிடம்! ஒரு பெண் கண்ணைக் கசக்கினால்
 அவனுக்குப் பொறுக்காதே!
 யோகியார்

Ramamoorthy Ramachandran

unread,
May 3, 2018, 10:02:41 AM5/3/18
to santhav...@googlegroups.com
ஆறு  திருமுகமும்   ஆறிரண்டு  கண்ணழகும்     
கூறு  திருப்புகழும்  கொற்றவன் - ஏறும் 
மயிலழகும்  வள்ளி  ஒயிலழகும்   ஏந்தும் 
அயிலழகும்  காட்டும்  அருள்!

அருளை  மிக்கவேண்டி  அண்டினார்க்  கென்றும்   
இருளாகும்  துன்பமே  இல்லை! -  ஒருவேலால்
தலைகீழ்  மரத்தினைத்   தாக்கியிரு  கூறாக்கும்
தலைவன்  அடிகாத்   தலால்.!

அன்புடன்      புலவர் இராமமூர்த்தி. 
   
2018-05-03 8:07 GMT+05:30 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:
ம்ம்.. இப்போதுதான் நம்ம தெய்வானை தன் கணவனிடம்
 பாருடா! உன் பக்தன் என்னை நல்ல     மரத்(மரம் போன்ற)..தெய்வானை என்கிறான்
 என்று கண்ணைக் கசக்குவதாகத் தகவல் வந்தது. என் த்யான விஷனில் பார்த்தேன்.
 ஜாக்கிரதையாக இரு. முருகனிடம்! ஒரு பெண் கண்ணைக் கசக்கினால்
 அவனுக்குப் பொறுக்காதே!
 யோகியார்

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 3, 2018, 10:53:47 AM5/3/18
to சந்தவசந்தம்
மிக அழகு.  குறிப்பாக இரு வெண்பாக்களின் பின்னிரு அடிகள் அருமை.

அனந்த்
மிக்கவேண்டி   -  மிகவேண்டி என்றால் தளையும் விளாங்காய்ச் சீரும் சரியாகும். 

Kaviyogi Vedham

unread,
May 3, 2018, 11:24:31 AM5/3/18
to santhavasantham
தலைவன் அடி... இருக்கட்டும்!
 கீழே இங்கேயெ அடிக்கிறதே!,
 
--------------------------------------------------------------ஒருவேலால்
தலைகீழ்  மரத்தினைத்   தாக்கியிரு  கூறாக்கும்
தலைவன்  அடிகாத்   தலால்.!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
     
Nagoji

unread,
May 3, 2018, 1:48:03 PM5/3/18
to santhav...@googlegroups.com
//தலைகீழ்  மரத்தினைத்   தாக்கியிரு  கூறாக்கும்
 தலைகீழ் மரம் - எனக்கு விளங்கவில்லை.

- sdn

Nagoji

unread,
May 3, 2018, 1:49:07 PM5/3/18
to santhav...@googlegroups.com
நைந்துருகி வாழ்த்து வாரின்
....நன்மனத்தை நாடு வானும்
ஐந்தினையும் அடங்கச் செய்யும்
....ஆறெழுத்தில் ஆடு வானும்
ஐந்திணையுள் தலைய தாய
....அருங்குறிஞ்சி அமரும் வேளும்
பைந்தமிழில் மகிழும் சேயும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(5) -- 3-May-2018

- sankara dass

Nagoji

unread,
May 3, 2018, 1:52:05 PM5/3/18
to santhav...@googlegroups.com
எதை அழித்த பின்?

 - sdn

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/H2vRjbSaOj0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Siva Siva

unread,
May 3, 2018, 2:15:04 PM5/3/18
to santhavasantham
/ தெய்வானை தோள்சேர்ந்த    /

ஆணைப் புகழும் பாடலில் "ஒரு பெண்ணின் தோள்சேர்ந்தவனே" என்பது போன்ற வர்ணனையும் இடம்பெறுவது உண்டா? 
(பெண்களைப் பாடும் போது ஆணின் தோள்களைச் சேர்வது வரக் கண்டுள்ளேன். 
உதாரணம்: திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.9 - 
....

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்

எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க

....
);

2018-05-01 20:45 GMT-04:00 Vivek Bharathi <tamiludanvi...@gmail.com>:
திருப்பரங்குன்றம்

பொய்கைதரும் பூமணமும் பூம்பொழிலாள் நல்லமரத்
தெய்வானை தோள்சேர்ந்த தேமணமும் - மெய்மணக்கும்
பஞ்சா முதமணமும் பக்திநீறு செய்மணமும்
நெஞ்சில் நிலைக்கும் நினை! (3)

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

Siva Siva

unread,
May 3, 2018, 2:16:30 PM5/3/18
to santhavasantham
2018-05-03 14:15 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:
/ தெய்வானை தோள்சேர்ந்த    /

ஆணைப் புகழும் பாடலில் "ஒரு பெண்ணின் தோள்சேர்ந்தவனே" என்பது போன்ற வர்ணனையும் இடம்பெறுவது உண்டா? 
(பெண்களைப் பாடும் போது ஆணின் தோள்களைச் சேர்வது வரக் கண்டுள்ளேன். 
உதாரணம்: திருவாசகம் - திருவெம்பாவை - ** 8.7.19
....

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்

எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க

....
);

Vivek Bharathi

unread,
May 3, 2018, 2:17:44 PM5/3/18
to santhav...@googlegroups.com
தெய்வானையைத் தோள் சேர்த்த என்று இட்டால் தவறிருக்காதல்லவா ஐயா?

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

2018-05-03 23:45 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
/ தெய்வானை தோள்சேர்ந்த    /

ஆணைப் புகழும் பாடலில் "ஒரு பெண்ணின் தோள்சேர்ந்தவனே" என்பது போன்ற வர்ணனையும் இடம்பெறுவது உண்டா? 
(பெண்களைப் பாடும் போது ஆணின் தோள்களைச் சேர்வது வரக் கண்டுள்ளேன். 
உதாரணம்: திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.9 - 
....

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்

எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க

....
);

2018-05-01 20:45 GMT-04:00 Vivek Bharathi <tamiludanvivekbharathi@gmail.com>:
திருப்பரங்குன்றம்

பொய்கைதரும் பூமணமும் பூம்பொழிலாள் நல்லமரத்
தெய்வானை தோள்சேர்ந்த தேமணமும் - மெய்மணக்கும்
பஞ்சா முதமணமும் பக்திநீறு செய்மணமும்
நெஞ்சில் நிலைக்கும் நினை! (3)

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

--

Siva Siva

unread,
May 3, 2018, 2:25:57 PM5/3/18
to santhavasantham
/ பூம்பொழிலாள் நல்லமரத்  தெய்வானை /
பூம்பொழிலாள் = ?
நல்லமரத்  தெய்வானை = ?

Vivek Bharathi

unread,
May 3, 2018, 2:48:13 PM5/3/18
to santhav...@googlegroups.com
அந்தச் சரவணப் பொய்கை என்னும் பூம்பொழிலை ஆளக்கூடிய நல்ல அமரர்களின் தெய்வானை

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

Pas Pasupathy

unread,
May 3, 2018, 5:09:47 PM5/3/18
to Santhavasantham
சூரன் கடைசியில் கடல் நடுவே மாமரமாகித் தலைகீழாய் நின்றான் என்பது  புராணம். 

Ramamoorthy Ramachandran

unread,
May 3, 2018, 8:38:54 PM5/3/18
to santhav...@googlegroups.com
மிக - மிக்க என்றாவது தட்டுப்பிழை! சரிபார்க்க வில்லை. மன்னிக்கவும். - புலவர் இராமமூர்த்தி. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
May 3, 2018, 8:42:47 PM5/3/18
to santhav...@googlegroups.com
பாருங்கள்! என்றானது என்றாவது என்றானது கைபேசி கைங்கரியம்! நாமொன்று தட்ட அதுவொன்று காட்டுகிறது! - புலவர் இராமமூர்த்தி. 

Nagoji

unread,
May 4, 2018, 7:54:26 AM5/4/18
to santhav...@googlegroups.com
தத்துவமொன் றோது வானும்
....தடங்கிரியைப் பொடிசெய் வானும்
முத்திதரு வித்தா வானும்
....மோனநிலை காட்டு வானும்
முத்தமிழில் மூழ்கு வானும்
....முகமாறால் நோக்கு வானும்
பத்தரது துயர்தீர்ப் பானும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(6) -- 4-May-2018

- sankara dass

Ramamoorthy Ramachandran

unread,
May 4, 2018, 12:35:07 PM5/4/18
to santhav...@googlegroups.com
அருளை மிகவேண்டி அண்டினார்க் கென்றும்
இருளாகும் துன்பமே இல்லை- ஒருவேல் 
தலைகீழ் மரத்தினைத் தாக்கிப் பிரிக்கும்
தலைவ னடிகாத் தலால்!
சரியா? -புலவர் இராமமூர்த்தி.

--

Ramamoorthy Ramachandran

unread,
May 4, 2018, 12:48:08 PM5/4/18
to santhav...@googlegroups.com
அறுகார்த் திகைமாதர் ஆறா னனத்தானை
இறுகி யணைத்தார் இதமாய் - நறும்பால் அளித்தார் அதனால் ஆண்மை மிகவே
களித்தானக் கார்த்திகே  யன்! -புலவர் இராமமூர்த்தி.
 
Ramamoorthy Ramachandran

unread,
May 4, 2018, 1:11:56 PM5/4/18
to santhav...@googlegroups.com
அறுகார்த் திகைமாதர் ஆறா னனத்துச் 
சிறுவரை ஓருருவ மாக்கி- நறிதாகும் 
பாலை அளித்தாரப் பாலன் பராசக்தி 
வேலேந்திப் பெற்றான் விருது. -புலவர் இராமமூர்த்தி.

Nagoji

unread,
May 4, 2018, 2:15:50 PM5/4/18
to santhav...@googlegroups.com
உமை அம்மைதானே ஓருருவம் ஆக்கினாள்? முதல் 2 வரிகளில் கார்த்திகைமாதர் ஓருருவமாக்கி என்பது போல் 
நான் பொருள் கொண்டது தவறா?

கந்தர் கலிவெண்பா.

அவ்வுருவம் ஆறினையும் தன்னிரண்டு 
கையால் எடுத்தணைத்துக்  கந்தனெனப் பேர்புனைந்து 
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச்
செய்ய முகத்தில் அணைத்து உச்சி மோந்து

- sdn

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/H2vRjbSaOj0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Nagoji

unread,
May 5, 2018, 11:39:39 AM5/5/18
to santhav...@googlegroups.com
கண்ணுதலில் தோன்றிட் டானும்
....கடுஞ்சூரைப் பிளந்திட் டானும்
விண்ணவரைச் சிறைமீட் டானும்
....வேலொளிரும் அங்கை யானும்
எண்ணரிய பேர்கொள் வானும்
....எழில்மிக்க மயிலூர் வானும்
பண்ணிசையில் மகிழு வானும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(7) -- 5-May-2018

- sankara dass

Subbaiyar Ramasami

unread,
May 6, 2018, 1:54:37 AM5/6/18
to santhavasantham
இதழகலி

நினைந்தேன் நெகிழ்ந்தேன்   நினையெண்ணிச் சிந்தை
நனைந்தேன், அடடா  நறுந்தேன் - இனித்தேன்
அதையன்றி இல்லையென் றிந்தேன், அதனால்
கதிகந்தா   நின்றன் கழல்

--

Nagoji

unread,
May 6, 2018, 2:50:39 AM5/6/18
to santhav...@googlegroups.com
arumai!

- sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/H2vRjbSaOj0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
May 6, 2018, 7:34:44 AM5/6/18
to santhav...@googlegroups.com
இதோ ஓர் இதழகலி!

ஐயன்நெற் றிக்கண் அளித்த தழலாகன்
தய்யல்தே வானை தங்கணவன் - எய்த
கணையா லரக்கன் கதியடையக் காத்தா
னியிணையற்ற தாளில் இணை!
- புலவர் இராமமூர்த்தி 

On Sun, May 6, 2018, 12:20 Nagoji <nag...@gmail.com> wrote:
arumai!

- sdn

2018-05-06 11:24 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
இதழகலி

நினைந்தேன் நெகிழ்ந்தேன்   நினையெண்ணிச் சிந்தை
நனைந்தேன், அடடா  நறுந்தேன் - இனித்தேன்
அதையன்றி இல்லையென் றிந்தேன், அதனால்
கதிகந்தா   நின்றன் கழல்
2018-05-05 21:09 GMT+05:30 Nagoji <nag...@gmail.com>:
கண்ணுதலில் தோன்றிட் டானும்
....கடுஞ்சூரைப் பிளந்திட் டானும்
விண்ணவரைச் சிறைமீட் டானும்
....வேலொளிரும் அங்கை யானும்
எண்ணரிய பேர்கொள் வானும்
....எழில்மிக்க மயிலூர் வானும்
பண்ணிசையில் மகிழு வானும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(7) -- 5-May-2018

- sankara dass

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/H2vRjbSaOj0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Nagoji

unread,
May 6, 2018, 8:40:08 AM5/6/18
to santhav...@googlegroups.com
Va ma pa varukkam are not allowed.
Sdn

Nagoji

unread,
May 6, 2018, 11:30:26 AM5/6/18
to santhav...@googlegroups.com
குற்றமிலா ஒற்றைச் சொல்லைக்
....கூற்றுதைத்தார்க் கோதிட் டானும்
முற்றுணர்ந்தோர் ஓரும் தேவும்
....முத்திதரும் மூலத் தேவும்
பொற்றொடியாள் வள்ளிக் காகப்
....புனந்தனிலே திரிதர் வானும்
பற்றறுத்த பாலன் தானும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(8) - 6-May-2018

- sankara dass

Nagoji

unread,
May 7, 2018, 11:29:09 AM5/7/18
to santhav...@googlegroups.com
கார்வளரும் கண்டத் தானின்
....காதினிலே சொல்லு வானும்
சூருடலைப் பிளந்திட் டானும்
....தூவடிவேல் ஏந்திட் டானும்
வார்குழலாள் வள்ளி உள்ளும்
....மார்புடைய மன்னன் தானும்
பாரளந்தான் மருகன் தானும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(9) -- 7-May-2018

- sankara dass

Nagoji

unread,
May 8, 2018, 12:09:04 PM5/8/18
to santhav...@googlegroups.com
தவமியற்றும் பாலன் தானும்
....தன்னிகரில் அழகன் தானும்
சிவமயமாய் விளங்கு வானும்
....தீந்தமிழில் தித்திப் பானும்
அவுணருயிர் வாங்கு வானும்
....ஆறுமுகக் கடவுள் தானும்
பவமறுக்கும் பரமன் தானும்
....பரங்குன்றில் அமர்ந்த தேவே...(10) -- 8-May-2018

திருப்பரங்குன்றப் பதிகம் நிறைவுற்றது.
முருகா சரணம்.

- sankara dass

Nagoji

unread,
May 9, 2018, 11:50:32 AM5/9/18
to santhav...@googlegroups.com
திருச்செந்தூர் - திருச்சீரலைவாய்
அறுசீர் விருத்தம் - மா மா காய் ... மா மா காய்

உலகம் புரக்கும் ஒருதேவன்
...ஒருவேல் ஏந்தும் தனிவீரன்
கலகம் செய்யும் அரக்கர்குலம்
...கலங்கி மடியச் செய்தீரன்
அலகில் சோதி அரன்மடியில்
...அமரும் பாலன் தமிழ்நாட்டுத்
திலகம் என்னத் திகழ்சீலன்
...செந்தூர் மேவும் செவ்வேளே...(1) -- 9-May-2018

- sankara dass

Nagoji

unread,
May 10, 2018, 11:55:32 AM5/10/18
to santhav...@googlegroups.com
ஆரா வமுதர் அகமகிழும்
...அழகு மருகன் ஆறுமுகன்
நீரார் முடியர் செவிக்கினியன்
...நீல மயில்மேல் வருசிறுவன்
கூர்வேல் விழியாள் உமைபாலன்
...குன்று தோறும் அமர்தேவன்
தீரா நோய்கள் தீர்த்திடுவான்
...செந்தூர் மேவும் செவ்வேளே...(2) -- 10-May-2018

- sankara dass

Vivek Bharathi

unread,
May 10, 2018, 1:59:20 PM5/10/18
to santhav...@googlegroups.com
திருப்பரங்குன்றம்

மயிலகவும் ஓசையும் மாமறைக ளோடு 
பயிலும் திருப்புகழ்ப் பாட்டும் - ஒயிலான 
காவடியின் துள்ளலும் காதுறக் கந்தனின்
சேவடியைக் கொள்வோம் சிரம்! 

--

Siva Siva

unread,
May 10, 2018, 9:37:05 PM5/10/18
to santhavasantham
/ ஆராவமுதர் /
இது திருமாலைக் குறிக்கும் சிறப்புப் பெயரா?

தேவாரத்தில் சிவனைக் குறிக்கவும் வரும்.

6.37.1
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
    அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
    குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
    பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
    யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

Nagoji

unread,
May 11, 2018, 2:47:35 AM5/11/18
to santhav...@googlegroups.com
ஆம். கும்பகோணம் சாரங்கபாணியே ஆரவமுதன்.
நிறைய ஆராம்து-களை (short names) கும்பகோணத்தில் பார்க்கலாம்.

- sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/H2vRjbSaOj0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Nagoji

unread,
May 11, 2018, 11:30:39 AM5/11/18
to santhav...@googlegroups.com
பாவ நாசம் செய்கழலன்
...படிறன் சூரற் கொருகாலன்
சேவ லோடு மயிலுடையான்
...தீனர்க் கெல்லாம் பெருந்துணைவன்
நாவல் பழத்தை உதிர்சிறுவன்
...நல்லோர் உளத்தில் உறைபெருமான்
தேவ சேனை உடன்வளரும்
...செந்தூர் மேவும் செவ்வேளே...(3) -- 11-May-2018

- sankara dass

Siva Siva

unread,
May 11, 2018, 1:42:03 PM5/11/18
to santhavasantham
--> / வளரும் / = ?

- sankara dass

Nagoji

unread,
May 12, 2018, 3:47:41 AM5/12/18
to santhav...@googlegroups.com
வளர்தல் என்பது தங்குதல், மகிழ்தல் என்னும் பொருள்களில்.

- sdn

Nagoji

unread,
May 12, 2018, 11:32:53 AM5/12/18
to santhav...@googlegroups.com
தத்தை வள்ளி அணைகேள்வன்
...தகர வித்தை தருபரமன்
பத்தி செய்வோர் உளத்துள்ளே
...பணிசெய் திருக்கும் பழியில்லான்
சத்தி வேலார் கரமுடையான்
....சங்கத் தமிழில் தங்கிடுவான்
சித்தி எட்டும் தொழுபரமன்
...செந்தூர் மேவும் செவ்வேளே...(4) -- 12-May-2018

- sankara dass

Subbaiyar Ramasami

unread,
May 12, 2018, 1:01:16 PM5/12/18
to santhavasantham
சித்தி எட்டும் தொழுபரமன் -  யார் யாரைத் தொழுகிறார்கள்?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

Nagoji

unread,
May 13, 2018, 2:50:49 AM5/13/18
to santhav...@googlegroups.com
அட்டமா சித்திகள் முருகனைத் தொழுகின்றனர் என்றெண்ணி எழுதியது.

எட்டும் என்பதில் உள்ள உம் இதனைத் தெளிவாக்குகிறது (சித்தியை என்று 2ஆம் தொகையை உம் தடுக்கிறது).

சித்தி எட்டும் தொழுத பரமன்  என்று வினைத்தொகையை விரிக்கின் இன்னும் தெளிவாகிறது என்பது என் கருத்து. . 

சிவசிவாவின் வரிகள்: ஆர்ந்தவனே அருநஞ்சை அரியயன்நே டொளித்தூணே

இங்கு அரி அயன் நேடு ஒளித்தூண் என்பதில், யாற்று நீர்ப் பொருள்கோள் படி, அரியும் அயனும் நேடுகிற என்பது தெளிவு.

- sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/H2vRjbSaOj0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
May 13, 2018, 3:14:59 AM5/13/18
to santhavasantham
மறை நான்கும் ஓதுபவன் என்றால் மறை நான்கையும் ஓதுபவன் என்று பொருள். அதைப்போல சித்தி எட்டும் என்பதை எட்டையும் என்றும் பொருள் கொள்ள வாய்ப்புண்டு என்பதனால் எழுந்த வினா அது.

இலந்தை

Nagoji

unread,
May 13, 2018, 3:16:03 AM5/13/18
to santhav...@googlegroups.com
திங்கள் அன்ன முகமாறும்
...திண்ணார் தோள்கள் பனிரெண்டும்
சங்கத் தமிழ்சொல் வாயாறும்
...தண்ணார் விழிகள் ஈராறும்
துங்க நீல மயிலொன்றும்
...துலங்க அண்டம் வலம்வருவான் 
செங்கை தன்னில் வேலொளிரும்
...செந்தூர் மேவும் செவ்வேளே...(5) -- 13-May-2018

- sankara dass

Siva Siva

unread,
May 13, 2018, 9:07:36 AM5/13/18
to santhavasantham
/ திங்கள் அன்ன முகமாறும் /
இவ்வித வர்ணனை - திங்கள் போன்ற முகம் - ஆணுக்கும் வருவதுண்டா?

Nagoji

unread,
May 13, 2018, 1:20:42 PM5/13/18
to santhav...@googlegroups.com
கதிர்மதியம் போல் முகத்தான் - திருப்பாவை.

 - sdn

Siva Siva

unread,
May 13, 2018, 2:23:15 PM5/13/18
to santhavasantham
Thanks. Good example.
May be a rare (or sole) example.

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 13, 2018, 8:28:11 PM5/13/18
to சந்தவசந்தம்
இன்னொரு காட்டு. சங்கரரின் சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரத்தில், களங்கம் இல்லாத ஆறு பூரணச் சந்திரர்கள் உதிக்குமானால் அவற்ரை முருகனின்  ஆறுமுகங்களுக்கு ஒப்பிடலாம் என்பார். 

ஸதா சாரதா.. என்று தொடங்கும் அந்த ஸ்லோகத்தின் தமிழாக்கம் (http://kaumaram.com/text_new/bhujangam_tm.html )

திருமுகச் சிறப்பு

   பனியென்று முளவாயோர் பங்கம் படாமல்
      பரிபூர்ண வொளியோடு பலதிக்கு நிலவை
         நனிவீசு மதிமூ விரண்டென்று முளவேல்
            நளிர் செந்தி லோனாறு முகமொக்கு மாலோ.       ...... 13

   எப்போதும் குளிர்ந்தனவாய், களங்கம் இல்லாதனவாய், பரிபூரணமான நிலவை எல்லாத் திக்கிலும் வீசுகின்ற மதியங்கள் ஆறு என்றைக்கும் உள்ளனவானால் அவை திருச்செந்திலாதிபனின் முகங்களுக்கு ஒப்பாகும். அவ்வாறு இல்லாமையால் முருகன் திருமுகங்கள் ஒப்பில்லாதனவாம்.

பங்கம் - களங்கம். நளிர் - குளிர்ச்சி. 

.. அனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

Siva Siva

unread,
May 13, 2018, 9:14:32 PM5/13/18
to santhavasantham

Saranya Gurumurthy

unread,
May 13, 2018, 9:21:35 PM5/13/18
to santhav...@googlegroups.com
கந்தன் கருணை திரைப்படத்தில் - "ஆருமுகமானப் பொருள் வான்மகிழ வந்தான்" என்ற பாடலில் ஒரு வரி - "தாமரையில் பூத்துவந்த தங்கமுகம் ஒன்று, தண்ணிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று.." என்று வரும். கண்ணதாசன் எழுதிய வரிகள். முன்னெடுத்துக்காட்டு இல்லாமல் அவர் எழுதியிருக்க மாட்டார் என கருதுகிறேன். 

சரண்யா

Nagoji

unread,
May 14, 2018, 12:12:09 PM5/14/18
to santhav...@googlegroups.com
தொந்திக் கரிக்குப் பின்தோன்றல்
...சொல்லுக் கடங்காத் தனிவள்ளல்
இந்தி ரற்கு மாப்பிள்ளை
...ஈச னார்கண் தருபிள்ளை
முந்தி அருளும் முனிவில்லான்
...முத்தி வழியைத் தரவல்லான்
சிந்தைக் குள்ளே ஆடுமகன்
...செந்தூர் மேவும் செவ்வேளே...(6) -- 14-May-2018

- sankara dass

Nagoji

unread,
May 15, 2018, 12:33:10 PM5/15/18
to santhav...@googlegroups.com
கவினார் மயில்மேல் ஏறிடுவான்
...கவிதை பாடத் தமிழ்தருவான்
அவியார் வேள்வி காத்திடுவான்
...அயில்வேல் ஒன்றை ஏந்திடுவான்
புவிவாழ் உயிர்கள் புரந்திடுவான்
...புத்தேள் தலையிற் குட்டிடுவான்
சிவனார் காதில் புகட்டிடுவான்
...செந்தூர் மேவும் செவ்வேளே...(7) -- 15-May-2018

- sankara dass

Siva Siva

unread,
May 15, 2018, 5:37:04 PM5/15/18
to santhavasantham
/ சிவனார் காதில் புகட்டிடுவான் /
சிவனார் காதில்  போதிப்பான்?
சிவனார்க் கொருமந் திரமுரைப்பான்?

Nagoji

unread,
May 18, 2018, 11:19:46 AM5/18/18
to santhav...@googlegroups.com
சிவனார் காதில்  போதிப்பான்  - sounds better and corrected the same.
Thanks.
- sdn

Nagoji

unread,
May 18, 2018, 11:24:46 AM5/18/18
to santhav...@googlegroups.com
பாவிற் பொலியும் பைந்தமிழன்
...பாம்பும் மயிலும் பணிபரமன்
நாவிற் பொலியும் நான்மறையன்
... நற்றே வானை அணைகேள்வன்
காவிற் பொலியும் கண்காணி
...கலிதீர் கந்தன் கதிர்வேலன்
சேவற் கொடியை உடைக்கடம்பன்
...செந்தூர் மேவும் செவ்வேளே...(8) -- 18-May-2018

கா - காவடித்தண்டு

- sankara dass

Nagoji

unread,
May 20, 2018, 12:49:36 PM5/20/18
to santhav...@googlegroups.com
கானில் வளரும் குறக்கொடியைக்
...காத லிக்கும் இளங்காளை
ஆனை முகனின் அருளாலே
...அவளை மணந்த ஆணழகன்
ஆனஞ் சாடும் அரனாரின்
....அனற்கண் தந்த அன்புமகன்
தேனில் இனிய தமிழ்தருவான்
...செந்தூர் மேவும் செவ்வேளே...(9) -- 20-May-2018

- sankara dass

Nagoji

unread,
May 21, 2018, 12:12:01 PM5/21/18
to santhav...@googlegroups.com
சூர றுத்த சுடர்வேலன்
...சொல்லுக் கெட்டாச் சுடர்முடியன்
பூர ணத்த மிழ்தருவான்
...பொல்லா வினையை வேரறுப்பான்
வார ணத்துக் கிளையபிரான்
...வள்ளிக் குறத்தி தனையணைவான்
சீர லைவாய்ச் சிவபாலன்
...செந்தூர் மேவும் செவ்வேளே...(10) -- 21-May-2018

திருச்செந்தூர்ப் பதிகம் நிறைவுற்றது.
முருகா சரணம்.

- sankara dass

Siva Siva

unread,
May 21, 2018, 10:15:09 PM5/21/18
to santhav...@googlegroups.com
/சுடர்முடியன்/ =?

/பூர ணத்த மிழ்தருவான்/

பூர ணன்செந் தமிழ்தருவான்?

சீரலைவாய்= செந்தூர் ?
--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Nagoji

unread,
May 22, 2018, 5:02:56 AM5/22/18
to santhav...@googlegroups.com
//சுடர்முடியன்/ =?
ஒளி வீசுகிற முடியுடையவன் என்ற பொருளில்.  

///பூர ணத்த மிழ்தருவான்/
//பூர ணன்செந் தமிழ்தருவான்?
அப்படியே மாற்றி விட்டேன்.

பூர ணன்செந்  தமிழ்தருவான்.

//சீரலைவாய்= செந்தூர் ?

இரண்டும் ஒன்றே. எனினும் கடல்பார்த்த கோயில் இருக்கும் இடமே சீரலைவாய். ஊர் செந்தூர். அந்த வகையில் எழுதியது.

 - sdn 

Ramamoorthy Ramachandran

unread,
May 22, 2018, 7:11:57 AM5/22/18
to santhav...@googlegroups.com
அலைவாய்ப் பதிகம்!

முக்கண்ணில்  ஒருகண்ணின்  சோதி  ரூபன், 
      மூவிரண்டு  தாயர்களின்  பாலை உண்டோன்!
மிக்கவனாம்  பிரமனையே  சோதித்  துள்ளான்,
       மேலில்லாத்   தந்தைக்கே  உபதே சித்தோன்!
அக்குறத்தி  முன்தோன்றிக்  காதல்  கூறி
        அயலவர்முன்  மரமாகி  அயர  வைத்தோன்!
தக்கபடி  வேண்டிடுவோர்   பெறுவார்  இன்பம்
         தாள்பணியும்   சீரலைவாய்த்   தலைவன் தானே!  -1 
        
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

Nagoji

unread,
May 22, 2018, 11:59:12 AM5/22/18
to santhav...@googlegroups.com
திருவாவினன்குடி - பழநி
அறுசீர் விருத்தம் - விளம் விளம் மா

ஒப்பிலா வேலுடை அழகே
....உறுதவம் புரிந்திடும் அழகே
அப்பனுக் கோதிடும் அழகே
....ஆவினன் குடிவளர் அழகே
சுப்பிர மணியெனும் அழகே
....தூயவெண் கோவண அழகே
எப்பொழு தென்னையாள் வாயோ
....ஈசனார் தந்தருள் இறையே....(1) -- 22-May-2018

- sankara  dass

Nagoji

unread,
May 22, 2018, 12:01:59 PM5/22/18
to santhav...@googlegroups.com
//தக்கபடி  வேண்டிடுவோர்   பெறுவார்  இன்பம்
  //       தாள்பணியும்   சீரலைவாய்த்   தலைவன் தானே!  -1 

தக்கபடி என்னும் வரி, ஈற்றடியின் மறு பாதிக்கும் ஏனைய அடிகளுக்கும் வேறாக இருப்பது போல் உள்ளது.

-  sdn 

Ramamoorthy Ramachandran

unread,
May 23, 2018, 2:42:13 AM5/23/18
to santhav...@googlegroups.com
தக்கபடி வேண்டிடுவார் துன்பந்தீரத் தாள்பணிவார்
என்று மாற்றலாமா?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Nagoji

unread,
May 23, 2018, 7:03:28 AM5/23/18
to santhav...@googlegroups.com
Yes, it sounds very good.
- sdn

2018-05-23 12:11 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
தக்கபடி வேண்டிடுவார் துன்பந்தீரத் தாள்பணிவார்
என்று மாற்றலாமா?

On Tue, May 22, 2018, 21:31 Nagoji <nag...@gmail.com> wrote:
//தக்கபடி  வேண்டிடுவோர்   பெறுவார்  இன்பம்
  //       தாள்பணியும்   சீரலைவாய்த்   தலைவன் தானே!  -1 

தக்கபடி என்னும் வரி, ஈற்றடியின் மறு பாதிக்கும் ஏனைய அடிகளுக்கும் வேறாக இருப்பது போல் உள்ளது.

-  sdn 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/H2vRjbSaOj0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Nagoji

unread,
May 23, 2018, 11:51:32 AM5/23/18
to santhav...@googlegroups.com
வேலொளிர் கரமுடை வீரா
....விண்ணவர் பணிசெயும் தேவா
ஆலடி அமர்ந்தவர் பாலா
....ஆவினன் குடிவளர் அறமே
காலடி உதித்தவர் போற்றும்
....கந்தனே கரிமுகற் கிளையோய்
சீலனே சிறியனேற் கிரங்காய்
....திருமுகம் ஆறுடை இறையே...(2) -- 23-May-2018

- sankara dass

Saranya Gurumurthy

unread,
May 23, 2018, 9:17:14 PM5/23/18
to santhav...@googlegroups.com
பெரியோர்களுக்கு வணக்கம்.

நானும் இவ்விழையில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.

அவனருளால் ஒரு பதிகம் வந்துள்ளது. குறைகளைச் சுட்டி, நிவர்த்தி செய்து, நிறைவாக்க வேண்டுகிறேன்.

திருப்பரங்குன்றம்

அறுசீர் விருத்தம்

அரையடி வாய்பாடு - மா மா காய்

தீரா வினைகள் களைவானும்
..தேவர் குறையைத் தீர்த்தானும்
ஆரா வமுதாய் இனிப்பானும்
..அழகின் உருவாய்த் திகழ்வானும்
காரார் தேகன் மருகோனும்
..கயிலை நாதன் சேயோனும்
பாரோர் போற்றும் பெரியோனும்
..பரங்குன் றமரும் பெருமானே.  1

பணிவுடன்,
சரண்யா
24.05.2018

Ramamoorthy Ramachandran

unread,
May 24, 2018, 3:08:08 AM5/24/18
to santhav...@googlegroups.com
தானேயப் பிரமனிடம் கேள்வி கேட்டான்
தமிழறிவை நக்கீரற் கூட்டி விட்டான்!
வானேறும் மயில்மீதில் வந்தே வள்ளி
மடிமீதி லேகிடக்க வரங்கேட் டிட்டான்!
ஞானத்துக் கிழவிக்குப்
பழமுதிர்த்தான்,
ஞாயிறெனக் கடல்மீதில் உதித்தான்! நல்ல
தேனோடு தினைமாவும் படைத்தார் முன்னே
செந்தில்நகர் வேலவனாய்ச் சிரிப்பானம்மா! (2)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
May 24, 2018, 3:29:49 AM5/24/18
to santhav...@googlegroups.com
அம்மாவின் திருக்கையில் வேலை வாங்கி 
அசுரருளத் திருக்கினையே அழித்து நின்றான்!

கைம்மாவின் துணையாலே வள்ளிமார்பைக் கணப்போதில் அடைந்திட்டான்! கவிதைபாடிச் 

செம்மாந்த கீரனுற்ற சிறைஉடைத்தான்,
சீரலைவாய்ப் படைத்தலைவ னானான்! அந்தப்

பெம்மான்றன் பிள்ளைத்தமிழ் பாடியோர்தன்
பெருநோயைச் செந்தூரில் தீர்த்திட் டானே!(3) 

Ramamoorthy Ramachandran

unread,
May 24, 2018, 3:50:03 AM5/24/18
to santhav...@googlegroups.com
தீர்த்தங்கள்  மூழ்கியவர் பாவம் போக்கும்
செயந்திநா தனைக் கண்டு தெரிசித்தன்றே

கூர்த்தமதி, தமிழ்ப்புலமை கொண்டா ரெங்கள் குமரகுரு பரப்புலவர் செந்தூர்க் கந்தற்

கார்த்தகலி வெண்பாவைப்
பாடும் ஆற்றல் 
அடைந்திட்டார்! அவர்வடநாட் டரசன்தன்னைப்

பார்த்தவுடன்  அவன்பணிந்தான்! 
கேதார் கட்டத் 
தாண்டவனை கங்கைநதி
கங்கைநதி வேண்டினாளே!(4)

Ramamoorthy Ramachandran

unread,
May 24, 2018, 3:52:19 AM5/24/18
to santhav...@googlegroups.com
'கங்கை நதி'  இருமுறை தட்டிவிட்டேன். மன்னிக்கவும். 
It is loading more messages.
0 new messages