தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன ……. தனதான
(திருப்புகழ் – விநாயகர் ஸ்துதி – நினது திருவடி சத்திம யிற்கொடி)
அரவ மணியுடை சுற்றிய வித்தக
அமரர் துயர்கெட நச்சது மிக்கென
அகலு மகிழ்வொடு மொக்கிய உத்தம ... தவசீலா!
அரிய மலர்கொடு பத்தியில் நத்திட
அணையு மனமதில் நிச்சய மெய்ப்பட
அவனி யடியவர் உய்த்திட நற்கதி ... அருள்வோனே
அரணு மழிபடும் முக்கணன் வெப்பொடு
அமர ரவர்பெறு சத்தியை இட்டருள்
அலகு மிலதெனும் முத்தியை இத்தலம் ... பெறவேணும்!
அயனு மரியொடு மத்தனை சித்தரும்
அகில முழுவதும் பொற்பதம் பற்றிட
அகசை இடமுற நர்த்தன அற்புதம் ... செயவாராய்
இரவு பகலென நித்திய சத்தியம்
எனது மனதினில் உற்பவ தற்பரம்
விரவு மலர்கொடு பத்தியில் முற்றிடு ... நிலைவேணும்!
இடறு பொடிபட நற்றிறம் பெற்றிட
இடிவு மொழிபட விற்பனம் பெற்றிவண்
நிரவு பவபிணி முற்றிலும் விட்டிட ... வினைதீராய்!
உரவு மனமிகு பத்தரொ டொற்றிட
உருவ மருவம துற்றிடு முக்கண
வரத மபயம ளித்திடு மெய்த்திரு ... உமைபாகா!
உவகை நிறைவது முப்பொழு துற்றிட
திரளு மடியவர் சித்தமு மெய்ப்பட
வருக தலமிதில் மெய்ப்பொருள் பெற்றியின் ... பெருமானே!
பதம் பிரித்து:
அரவம் அணி உடை சுற்றிய வித்தக
அமரர் துயர்கெட நச்சதும் இக்கு என
அகலும் மகிழ்வொடு மொக்கிய உத்தம – தவசீலா
(ஒளிவீசும் மணிகளை உடைய நாகத்தையும் ஆடைகளைய்ம் அணிகலன்களாகவும் சுற்றிக் கொண்டிருக்கும் ஞான வித்தகனே! தேவர்களின் பெருந்துயரம் நீங்கும் பொருட்டுப், பொங்கி வந்த ஆலால நஞ்சினை அகன்ற பேரானந்த மகிழ்வோடு உண்டு விழுங்கி உலகைக் காத்த உத்தமமான பெருந்தவச் செல்வனே. இக்கு – தேன், இக்குவம் – கரும்பு)
அரிய மலர்கொடு பத்தியில் நத்திட
அணையு மனமதில் நிச்சயம் மெய்ப்பட
அவனி அடியவர் உய்த்திட நற்கதி ... அருள்வோனே
(அரிதான மலர்களுடன் பக்தியின் விருப்பத்துடன் மனத்தில் நிச்சயம் செய்துகொண்டு உலகில் அடியவர்கள் தொழுதிட அவர்த்மக்கு உயரிய நற்கதி அளிப்பவனே)
அரணு அழிபடும் முக்கணன் வெப்பொடு
அமரர் அவர்பெறும் சக்தியை இட்டருள்
அலகும் இலது எனும் முத்தியை இத்தலம் …. பெறவேணும்
(திரிபுர அரண்களை மூன்றாம் கன்ணின் வெப்பம் அழித்துத் தேவர்கள் இழந்த சக்தியை மீட்டளித்த அருள் அளப்பரிய முக்தி என்னும் மேனிலையை இத்தலத்தில் உள்ளோர் பெற வேண்டும்).
அயனும் அரியொடும் அத்தனை சித்தரும்
அகிலம் முழுவதும் பொற்பதம் பற்றிட
அகசை இடமுற நர்த்தனம் அற்புதம் செயவாராய்
(பிரமனும் விஷ்ணுவும் மேலும் அனைத்துச் சித்தர்களும், அகிலத்தில் உள்லோர் அனைவரும் உன் பொற்பாதம் பற்றிட, பார்வதி தேவி உன் இடப்புறமிருக்க, உன் அற்புத நடனம் புரிய வந்தருள்வாய். அகசை – அகஜன் மகள் (இமயவான் மகள்))
இரவு பகலென நித்திய சத்தியம்
எனது மனதினில் உற்பவ தற்பரம்
விரவு மலர்கொடு பத்தியில் முற்றிடு ... நிலைவேணும்
(இரவு பகலென்ற நித்திய நிகழ்வில் எனது மனதில் எழுச்சிபெறப் பேரிறையே, பலவகையாகக் கலந்த நறுமண மலர்களைக் கொண்டு பூசித்துப் பக்தியில் முற்றிடும் நிலையைத் தருவாய்)
இடறு பொடிபட நற்றிறம் பெற்றிட
இடிவும் ஒழிபட விற்பனம் பெற்றிவண்
நிரவு பவபிணி முற்றிலும் விட்டிட ... வினைதீராய்!
(இடையூறுகள் அனைத்தும் தவிடுபொடியாகி, நல்ல நெறித் திறன் ஓங்கவும்; துன்பம் தரும் தீய சொற்கள் நீங்கி, மேலான மெய்யறிவு புலமை பெருகவும்; பரந்து நிற்கும் பிறவிப் பிணிகள் முற்றிலும் விலகிப் போகவும், என் தீவினைகளைத் தீர்த்தருள்வாயாக
இடறு (தடை), இடிவு (சொல் பலவீனம்), பவபிணி (பிறவி) ஆகிய மூன்றையும் நீக்கக் கோரி, அதற்கு மாற்றாக நற்றிறம் (ஆற்றல்), விற்பனம் (ஞானம்/புலமை), வினைதீர்ப்பு (முத்தி) ஆகிய மூன்றையும் இறைவனிடம் இரந்து கேட்கும் பிராத்தனை)
உரவு மனமிகும் பத்தரொடு ஒற்றிட
உருவம் அருவமது உற்றிடு முக்கண
வரத மபயம ளித்திடு மெய்த்திரு ... உமைபாகா!
(உறுதியான பக்தி மனம் கொண்ட மெய்யடியார்களின் கூட்டத்தோடு கூடி உனது பொன்னார் திருவடிகளைத் தழுவி வணங்கிட... உருவம், அருவம் ஆகிய அருட்கோலங்களை உற்று விளங்கும் முக்கண்ணனே! வரத அபயக் கரங்களைக் காட்டி அருள்செய்யும் மெய்யான திருவுருவம் கொண்ட உமையொரு பாகனே
இவ்வரிகளில் அடியார்களின் 'கூட்டுப் பக்தி', சிவபெருமானின் 'முத்திறத் தத்துவம்' (உருவம்/அருவம்), அஞ்சேல் என்று காக்கும் 'வரதாபயக் கரங்கள்' மற்றும் 'அர்த்தநாரீஸ்வரக் கோலம்' எனச் சைவ சித்தாந்தத்தின் முக்கிய அம்சங்கள் காட்டப் பெருகின்றன)
உவகை நிறைவது முப்பொழுதும் உற்றிட
திரளும் அடியவர் சித்தமும் மெய்ப்பட
வருக தலமிதில் மெய்ப்பொருள் பெற்றியின் ... பெருமானே!
(பேரானந்த மகிழ்ச்சியானது எப்போதும் என் நெஞ்சில் நிறைந்து பொருந்தவும், திரளாகக் கூடும் மெய்யடியார்களின் சிந்தனையில் உண்மைப் பொருளாகவே விளங்கிடவும்... அழியாத மெய்ப் பொருளாம் எம்பெருமானே! (அடியார்கள் உய்யும் பொருட்டு) இப்புனிதத் தலத்தினில் எழுந்தருளாய்))
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgwQvRXz3BwwdWZU_3i%2BvXC2JpCWB4yphYh7wH4CYCbwA%40mail.gmail.com.
On Jul 21, 2026, at 23:28, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF3eTdFDCvKeMK0rwF9Eqam5TcHRsiizEFC3qJsQrNyfvQ%40mail.gmail.com.
On Jul 21, 2026, at 23:32, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNa4vrPTZnVf8e6mHwfeygc7VZnHH94ZAXkHqmSU_Oc3w%40mail.gmail.com.
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன ……. தனதான
(திருப்புகழ் – விநாயகர் ஸ்துதி – நினது திருவடி சத்திம யிற்கொடி)
அரவ மணியுடை சுற்றிய வித்தக
அமரர் துயர்கெட நச்சது மிக்கென
அகலு மகிழ்வொடு மொக்கிய உத்தம ... தவசீலா!
அரிய மலர்கொடு பத்தியில் நத்திட
அணையு மனமதில் நிச்சய மெய்ப்பட
அவனி யடியவர் பெற்றிட நற்கதி ... அருளீசா!
அரணு மழிபடும் முக்கணன் வெப்பொடு
அமர ரவர்பெறு சத்தியை இட்டருள்
அலகு மிலதெனும் முத்தியை இத்தல ... முறவேணும்!
அயனு மரியொடு மத்தனை சித்தரும்
அகில முழுவது மொற்றுத லுற்றிட
அகசை இடமுற நர்த்தன அற்புத ... முளமேவும்!
இரவு பகலென நித்திய சத்தியம்
எனது மனதினில் உற்பவ தற்பரம்
விரவு மலர்கொடு பத்தியில் முற்றிடு ... நிலைவேணும்!
இடறு பொடிபட நற்றிற நித்திலம்
இடிவு மொழிபட விற்பன வித்தையும்
நிரவு பவமது முற்றும கற்றிட ... வினைதீராய்!
உரவு மனமிகு பத்தரொ டொற்றிட
உருவ மருவம துற்றிடு முக்கண
வரத மபயம ளித்திடு மெய்த்திரு ... உமைபாகா!
உவகை நிறைவது முப்பொழு தெத்தினம்
உலகி னடியவர் நச்சிவ ழுத்திட
உடனில் உனதிரு மெய்ப்பத முற்றிட ... வருவாயே!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOo%2BRzCuSyENTHHFc-xS4dFntQ7T7x91W2m9fcefabAsg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNYBPBMyP0qqhvSqQ%3D_QKUNLSo65kyU6ifX5K7_ok_HcQ%40mail.gmail.com.
On Jul 23, 2026, at 10:11, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/F9D1753E-4F64-4539-9044-6E0966A4618B%40gmail.com.
On Jul 23, 2026, at 11:23, Parthasarathy S <spart...@gmail.com> wrote:
மிக நன்றாக இருக்கிறது திரு ராம்கி ராம்.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2068c56c-1bf3-41bc-9195-4ea961ea5d23n%40googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiix3GEi5dsM0WGX%3DpP6ZO_5gP9RJbG18sc8RrnmY6prQ%40mail.gmail.com.
On Jul 23, 2026, at 18:56, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDKDRbu0PvGOo3N-k2T1HC2s7Yj9RtFOoPOnww8HMo%2BZg%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZa4%3Dohv%2B5fQ6sGeiq6qBGNgCEgYqNH33jhzKfkESYqXQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtj%2BhRWh-RrKwedxyoadCeYj%3Dm-z_j93XY2NS-96pNzr8w%40mail.gmail.com.