🪷🪷🪷அடியேனின் இன்றைய அறுசீர் ஆசிரியவிருத்தம், உங்கள் அனுபவத்திற்கு🪷🪷🪷
காலத்தில் கவலை மாற்றிக்
கருத்திலே என்னை வைத்துச்
சீலத்தில் இருக்கும் வண்ணம்
சிறப்புடன் வைத்த சிலையா!
தோலிட்டு மறைத்த ஊனில்
துறக்காதென் உயிர்க்கு யிரானாய்
ஆலத்து விடமே வாழ்வென்(று)
அறிந்துடன் அடிசேர்ந் தேனே! 1
புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்
--