11ஆம் திருமுறை- பாடல் எண் 1351

119 views
Skip to first unread message

K.R. Kumar

unread,
Oct 7, 2011, 12:10:53 AM10/7/11
to santhav...@googlegroups.com
இன்று முற்றோதல் செய்யும்போது கீழ்க்கண்ட பாடலைப் படித்தேன்.

ஏனமு  கத்தவ  புத்தரை  இந்திர  சித்து  மணம்புணர்  வுற்றான்
           ஈழவ  னார்சொரி  தொட்டி  இனங்களை  வெட்டி  இசித்தனர்  பட்டர்
தானம்  இரக்கிற  சீதை  மடுப்பது  சாதி  குடத்தொடு  கண்டீர்
          சக்கர  வர்த்திகள்  சிக்கர  மட்டுவர்   தத்துவ  முப்பரி  கண்டே
ஆன  புகழ்ப்பயில்  விப்ர  சிகாமணி  அத்தகு  மைப்புரை  யுங்கார்
          ஆர்பொழில்  நீடிய  சண்பையர்  காவலன்  வண்களி  யேன்எளி  யேனோ
சோனக  னுக்கும்எ  னக்கும்   எனத்தரை  யம்மனை  சூலது  கொண்டாள்
           தும்புரு  வாலியை  வென்று  நிலத்திடை  நின்று  துலுக்குகி  றாரே.

இந்த பாடல் நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில் பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று இடம்பெற்றிருக்கிறது.

இது கள்ளுண்டவன் பொருள் தொடர்பில்லாதவற்றை கூறும் கூற்றாக அமைந்தது என்று வர்தமானன் பதிப்பகத்தின் பன்னிரு திருமுறைகள் வெளியீட்டின்  18ஆம் தொகுதியில் பக்கம் 996ல் எழுதப்பட்டுள்ளது. பக்கம்  997ல் இவை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத செய்திகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நம்பியாண்டார் நம்பிகள் போன்ற ஞானம் பெற்ற அடியார்கள் பொருள் தொடர்பில்லாமல், இறைவன் சம்பந்தமில்லாமல் போகிறபோக்கில் 14 சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இயற்றி இருக்கிறார் என்று படிக்கும்போது மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

நம் குழுவில் உள்ள ஆன்றோர்கள் (அனைவரும்) இந்தப் பாடலைப் படித்துவிட்டு தங்கள் மேலான எண்ணங்களையும் கருத்துகளையும்  இந்த மடலில் பதியும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

அன்புடன்,
குமார்(சிங்கை)



Kaviyogi Vedham

unread,
Oct 7, 2011, 3:17:16 AM10/7/11
to santhav...@googlegroups.com
சப்பாஷ்.. சரியான ஆராய்ச்சி..
இப்ப என்ன பதில் வருதுன்னு பார்ப்போமா?(திணராமல் அன்பர்கள்/ஆய்வர்..)- பதில் சொல்க!)-
 2)- இதுபோல்தான் போன வருடம்.தீவிரமாய்த்-.தியானம் செய்கையில் ஆண்டாள் இப்பேர்ப்பட்ட பாடல்கள் sex கலந்து நான் எழுதவே இல்லை. என் பெயர் சொல்லி ஒரு ஐயங்கார் ஸ்வாமி கொங்கை என்றும்,(மானுடர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்?)-அல்குல் என்றும் சேர்த்துக்கொண்டு என் பாடல்களை தெய்வீகத் தன்மையிலிருந்து இறக்கிவிட்டனர் என்று ஒரு குறிப்பு வந்தது... திகைத்துப்போய் யான் நம் நண்பர் ஆய்வாளர்களிடம் விளக்கம்..கேட்கலாம் என எண்ணியிருக்கையில்.. சரி அப்புறம் பெரியவர்கள்..நம்மைத்திட்டுவர் என எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டேன்.
 யோகியார்

2011/10/7 K.R. Kumar <krish...@gmail.com>



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

K.R. Kumar

unread,
Oct 7, 2011, 5:24:59 AM10/7/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள யோகியாருக்கு நமஸ்காரங்கள்.

அடியேன் இந்த மடலை ஒரு விவாதத்திற்காக இடவில்லை. உண்மையிலேயே இதன் பின் உள்ள ஆழ்ந்த பொருள் என்ன என்பதைத் நாமனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற் நோக்கத்தினில்தான் இட்டேன். நண்பர்களின் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

உங்கள்  கேள்வியான ஆண்டாள் பாடல்களில் SEX பற்றிய ஒரு விளக்கம் சென்ற வாரம் சிங்கையில் நடந்த எங்கள் இலக்கிய வட்டக் கூட்டத்தில் கிடைத்தது. இந்த கூட்டத்திற்கு சைவத்திலும், வைணவத்திலும் குறிப்பாக தமிழிலும் மிகவும் ஆழங்கால் பட்டவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்தக் கூட்டத்தில் நடந்த  கலந்துரையாடலுக்குப் பின் அடியேன் அறிந்து தெளிந்து கொண்டது:

1)ஆண்டாள் பாசுரங்கள் எழுதியபோது அவளுக்கு வயது ஐந்து கடந்து ஆறு ஆண்டுகள்தானாம். இதற்கு பல அகச் சான்றுகள் உள்ளன என்று கூறினார்கள். ஆண்டாள் பாடல்களைப் படித்தால் இதை நம்பத்தோன்றுகின்றதா ? ஆனால் இதுதான் உண்மை. ஞானசம்பந்தர் 3 வயதில் அற்புதமாக திருப்பதிகங்கள் பாடினார் என்பது உண்மையால் ஆண்டாளும் 6 வயதில் பக்தி-தெய்வீகம் இறை ஞானம் கலந்த பாடல்களைப் பாடினாள் என்பதும் உண்மைதான்.

2)திருமுறைகளிலும் , 4000 த்திலும் மற்றும் பல இறை நூல்களிலும் பல இடங்களில் காமம் தொடர்புடைய பல சொற்கள் , வாசகங்கள் வந்துள்ளன. இவற்றை அளித்தவர்கள் ஆழ்ந்த ஞானிகள். பலர் இறை சக்தியை உணர்ந்தவர்கள். அவர்கள் இந்த மானிட உணர்ச்சிகளான காதல் காமம் (மிகவும் கீழ்த்தரமானது என்று பொதுவாகக் கருதப்படுகிறது ??!!) பற்றி எழுதினார்களா அல்லது அதன் பின்புறத்தில் ஆழ்ந்த பொருள் இருக்கின்றதா என்று யோசிக்க வேண்டும். பருத்த முலைகளும் பாம்பு போன்ற அல்குலும் என்னும் உவமானங்கள்  சாதாரண உடல் அங்கங்களைக் குறிப்பது போல் தோன்றினாலும் ஆழ்ந்து யோசித்தால் ஆழங்கால் பட்டவர்களுக்கு அவற்றின் குறிப்பு புரியும்.

3)இவற்றை பொதுவாக ”லௌகிக காமம்”, ”தெய்வீக காமம் / ஆன்மீக காமம்” என்று சான்றோர்கள்  கூறுவார்கள். ஆழ்ந்த ஞானியர்கள் பார்வையில் இறைவன் ஒருவனே “ஆண்”. மற்றவர் யாவரும் “பெண்”. சாதாரணமான சாமானியர்களான நம் பார்வையும் ஞானியர்கள் பார்வையும் வேறுபட்டிருப்பதால் நமது அறிவுக்குட்பட்ட காமம் கலந்த சொற்கள் லௌகிக காமம் என்னும் தளத்திலும் ஞானியர்கள் பார்வையில் இவை இன்னும் ஒரு படி மேலே உள்ள   ”தெய்வீக காமம்/ ஆன்மீக காமம்”  என்னும் தளத்தில் உள்ளனவாகக் கருதப்படவேண்டும்.

4)ஆறு வயதில் ஆண்டாள் எழுதிய “காமம் கலந்த சொற்கள்” கட்டாயம் லௌகிக காமமாக இருக்க முடியாது. ஆண்டாள் பிஞ்சிலேயே பழுத்தவள்(வெம்பினவள் அல்ல). ஆகவே அவளது பாடல்களில் வரும் காமம் கலந்த சொற்கள் “தெய்வீக காமம்” என்ற தளத்தில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப பொருள் காணவேண்டும்.

இந்த விளக்கம் அடியேனுக்கு ஏற்புடையதாகப் பட்டது. இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் மனநிலையைப் பொருத்தது.

அன்புடன்,
குமார்(சிங்கை)


2011/10/7 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Siva Siva

unread,
Oct 7, 2011, 2:00:09 PM10/7/11
to santhav...@googlegroups.com

2011-10-07
நல்ல வினா!

இப்பாடல் ''தானன தானன தானன தானன தானன தானன தானா" என்ற அழகிய சந்தத்தில் அமைந்துள்ளது.
உங்கள் வினாவைப் பார்த்தபின் தேடியதில் கண்ட பாடல்களும் விளக்கங்களும்:

----------
http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm
வைத்தியநாத தேசிகர் இயற்றிய "இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் - பாட்டியல்"
(
பதிப்பாசிரியர் - பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர், எம்.., பி. . எல்.,)
என்ற நூலில் காண்பது:

http://www.tamilvu.org/slet/l0B00/l0B00pd1.jsp?bookid=10&auth_pub_id=27&pno=168
கலம்பகத்தின் உறுப்புகளைப் பற்றிய விளக்கம்:
"
.......
களி - கட்குடியர் கள்ளையும் அது உண்டாகும் பனை முதலியவற்றையும் சிறப்பித்துக் கூறுவது.
......
ஊசல் - மகளிர் ஊசலாடும் சிறப்பினைக் கூறுவது.
கொற்றியார் - வைணவச் சின்னங்களுடன் பிச்சை எடுக்க வருவாளைக் கண்ட காமுகன் ஒருவன் கூறுவது.
பிச்சியார் - பிச்சை வாங்கச் செல்லும் சிவ வேடங்கொண்ட பெண்ணைக் கண்ணுற்ற காமுகன் ஒருவன் கூறுவது.
இடைச்சியார் - இடைக்குல மகளை வீதிவாய் மோர்விற்க வந்தஞான்று கண்ட காமுகன் கூறுவது.
வலைச்சியார் - மீன் உணக்கும் செம்படவப் பெண்ணைக் கண்ட காமுகன் கூறுவது.


கலம்பகம் பெரும்பாலும் நூறு பாடல்களை உடையதாகவே காணப்படும். "---
-------------

ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு என்ற நூலின் முற்பகுதியில் இருக்கும் கலம்பகத்தைப் பற்றிய விளக்கத்தில் காண்பது:
"
கலம்பகங்கள் மூன்றை இவர் பாடியுள்ளார். கலம்பகமென்பதற்குப் பலவகைப்பொருள் கூறப்படினும் பலவகை மலர்களும் கலந்தமைத்த கலம்பகமாலை யென்று பொருள் கொள்வதே பொருந்தும்; 'களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த, அலங்கலந்தொடையல்' (திவ். திருப்பள்ளி. 5); ‘பல பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பகமாகிய மாலை; (பெரும்பாண். 174, .) என்பவற்றைக் காண்க. கதம்பமென்பது இங்ஙனம் திரிந்தது போலும். இப்பிரபந்தத்தில் பலவகைப் பொருள்களும் அகப்புறத்துறைகளிற் பலவும் பலவகை யாப்புக்களும் விரவிக் கலந்தமையின் இப்பெயர் வந்தது.


சிலவகை மகளிரைக் கண்டு காமுற்ற இளைஞர்கள் தம் காமக்குறிப்புத்தோன்ற அவர்களோடு பேசும் உலகியல்பைத் தழுவி மதங்கியார், பிச்சியார், கொற்றியார், இடைச்சியார், வலைச்சியாரென்னும் உறுப்புக்கள் கலம்பகங்களில் அமைக்கப்படும். மதங்கி யென்பவள் வாள் சுழற்றி ஆடுபவள்; பிச்சியென்பவள் சிவவேடம் புனைந்து வருபவள்; கொற்றி வைணவ வேடத்தினள். இவ்வுறுப்புக்களில் அவ்வம்மகளிருடைய தொழிலுக்குரிய செய்திகள் தோற்றும்படி சிலேடையமைத்தல் புலவர் நெறி. இவற்றையன்றி மறம், குறம், சம்பிரதம், சித்து, களி, ஊர், அம்மானை, ஊசல், பாணாற்றுப்படையென்னும் உறுப்புக்கள் கலம்பகங்களில் வரும். மறமென்பது மறச்சாதி மகளொருத்தியை ஒரு மன்னன் மணம் பேசிவிடுப்ப அச்செய்தியை அறிவிக்கும் திருமுகத்தைக் கொணர்ந்த தூதனை நோக்கி அச்சாதியினர் தலைவன் சினந்து கூறுதல். குறத்தி குறிகூறுவது குறம். பிறரால் இயற்ற முடியாத அரிய செயல்களைத் தான் செய்து விடுவதாகத் தோற்றும்படி ஒருவன் கூறுவதாக அமைப்பது சம்பிரதம். இரசவாதம் செய்யும் ஆற்றலுடைய சித்தனாகத் தன்னை ஒருவன் கூறிக்கொள்வது சித்து; இவ்வுறுப்பில் இரசவாத சம்பந்தமான பொருள் தோற்றுவதோடு இயல்பாக உள்ள பொருளும் தோற்றும்படி அமைப்பர். சித்தர்களுடைய நூல்களில் வரும் செய்யுளைப்போல இச்செய்யுளிலும் அப்பா என்ற விளி வரும் (161). இவ்வாசிரியர் தாம் இயற்றிய இரண்டு கலம்பகங்களிலும் இவ்வுறுப்புக்குரிய செய்யுட்கள் இரண்டை அமைத்ததன்றிப் பண்டார மும்மணிக்கோவையிலும் இத்தகைய பொருளமைதியையுடைய செய்யுளொன்றை (589) அமைத்துள்ளார். கட்குடியன் கூறுவதாக அமைவது களி; கட்குடித்தலும் ஊனுகர்தலும் பெருமைதருஞ் செயல்களென்று தோற்றும்படி அக்கூற்று அமைந்திருக்கும். பாட்டுடைத் தலைவனது ஊரைச் சிறப்பிப்பது ஊர். மகளிர் அம்மானை யாடுதற்கும் ஊசலாடுதற்கும் உரிய செய்யுட்கள் முறையே அம்மானையும் ஊசலும் ஆகும். அம்மானை மூவர் பாடுவதாக அமைவது. இவ்வுறுப்புக்களுக்கு இலக்கியமாக உள்ள செய்யுட்களை இவ்வாசிரியர் சொற்பொருட்சுவை திகழப் பாடியுள்ளார்."

------

http://www.tamilvu.org/slet/l5F10/l5F10pd1.jsp?bookid=126&pno=482
காசிக்கலம்பகம்
40)
சோதி யொன்றிலொரு பாதி சத்தியொரு
.. ..
பாதி யும்பரம சிவமெனத்
..
தொகுத்து வைத்தவவி முத்த நாயகர்
....
துணைப்ப தம்பரவு களியரேம்
ஓதி யோதியி ளைப்பர் வேத
....
முணர்த்து த்ததுவ முணர்கிலார்
..
உணரும் வண்ணமனு பவத்தில் வந்திடுமொ
....
ருண்மை வாசக முணர்த்துகேம்
ஏதி னாலற மனைத்தி னும்பசு
....
வினைப்ப டுத்தனல் வளர்த்திடும்
..
யாக மேயதிக மென்ப தன்பர்த
....
மிறைச்சி மிச்சிலதி லிச்சையார்
ஆதி யாரறிவ ரதுகி டக்கமது
....
வருந்தி லப்பொழுதி லேபெறற்
..
கரிய தோர்பரம சுகம்வி ளைந்திடுவ
....
ததும் றுத்தவிர வில்லையே.

கள்ளுண்டு ஊனுகரும் வழக்க முடையவன் ஒருவன் தன் வழக்கத்தைச் சிறப்பித்துக் கூறுவதாக அமைந்தது இச் செய்யுள்.
யாகம் அதிகமென்பது ஏதினால். பசுவைப்படுத்தலால் யாகம் சிறப்புடையதாயிற்றென்பது களியின் கருத்து. அன்பர் தம் - கண்ணப்ப நாயனாருடைய. இறைச்சி - மாமிசம். மிச்சில் - எச்சில். கண்ணப்பநாயனார் உண்டு சுவை பார்த்த எச்சிலாகிய இறைச்சியில் விருப்பமுடையவராகிய ஆதியார் அதிகமென்பதை அறிவாரென இயைக்க. மது - கள். மறுத்த இரவு இல்லை - ஒழிந்த இராத்திரி இல்லை; ஒவ்வொரு நாளும் உண்பரென்றபடி. மறு தவிரவில்லையென உண்மைப் பொருளும் இதன் கண் அமைந்தது; மறு - குற்றம். (பி-ம்.) ‘மறுத்தவ்வை யில்லையே’.
-------------

http://www.tamilvu.org/slet/l5F10/l5F10pd1.jsp?bookid=126&pno=133
மதுரைக் கலம்பகம்
25)
அழகுற்றதொர் மதுரேசனை யமரேச னெனக்கொண்
..
டாடுங்களி யானின்றிசை பாடுங்களி யேம்யாம்
பொழுதைக்கிரு கலமூறுபைந் தேறற்பனை யினைநாம்
..
போற்றிக்கரு மூர்த்திக்கிணை சாற்றத்தகு மப்பா
பழுதற்றதொர் சான்றாண்மை பயின்றார்தின முயன்றாற்
..
பலமுண்டத னலமுண்டவ ரறிவார்பல கலைநூல்
எழுதப்படு மேடுண்டது வீடுந்தர வற்றால்
..
எழுதாத்தொர் திருமந்திர மிளம்பாளையு ளுண்டே.

கட்குடியர் கள்ளையும் அஃது உண்டாகும் பனைமுதலியவற்றையும் சிறப்பித்துக் கூறுவது இது. (பி-ம்.) *தாழிசை.
மதுரேசன் - மதுரையென்னும் நகர்க்கத் தலைவம்; மதுரை - கள்ளென்பது வேறு பொருள். மதுரேசனானமையால்தான் அமரேசனானா னென்பது களியின் கருத்து; அமரேசன் - மரணமில்லாத தேவர்களுக்குத் தலைவன். களியால் - களிப்பினால். இருகலம் - அறுத்த பாளையிற் செருகி வைத்திருக்கும் இரண்டு மண் கலயங்கள்; இரண்டுகலமென்னும் அளவை யென்பது வேறு பொருள். தேறல் - கள். சாற்றத்தகும் - சாற்றவேண்டும். சான்றாண்மை: சிலேடை. (பி-ம்.) ‘பயின்றாரிதின் முயன்றால்’. பலம் - பிரயோசனம், பழம். நலத்தை உண்டவர் அறிவார். கலைநூல் - கலைகள். ஏடு - பனையேடு. வீடு - முத்தி, குடியிருக்கும் வீடு. வற்று - வன்மையுடையது. பனையோலையால் வீட்டை வேய்தல் பற்றி, ‘வீடும் பறவற்றுய என்றான். எழுதாத்தோர் திருமந்திரம். - கள், உபதேசித்தற்கு உரிய வேதமந்திரம்.
------------

பூண்டி அரங்கநாத முதலியாரியற்றிய கச்சிக்கலம்பகம்
பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராயிருந்த வித்வான் மோசூர் கந்தசாமி முதலியாரவர்கள் எழுதிய விளக்க வுரையுடன்

http://218.248.16.19/library/l5410/html/l5410s31.htm
கச்சிக் கலம்பகம்
31)
அரவிந்த மலரின்கட் குடியனயன்
..
அமரர்சுரா பானத் தாரே,
வரமுறுகா விரிநதிக்கட் குடியனே
..
திருமருவு மார்பி னானும்,
தரணியின்கட் குடியர்பெருந் தவமுனிவர்
..
சித்தரும்விண் ணவர்க டாமும்,
கரவடமேன் திருக்கச்சிக் கண்ணுதலார்
..
பனையின்கட் குடியர் தாமே.

(
-ள்.) அயன் - பிரமன், அரவிந்த மலரின்கண் - தாமரை மலரினிடத்து, குடியன் - குடியிருப்பவன் (அரவிந்தமலரின் - தாமரை மலரில் பதுங்கிக்கொண்டு, கள் குடியன் - கள் குடிக்கும் இயல்புடையவன்.) அமரர் - தேவர்கள், சுராபானத்தாரே - தேவலோகத்திலிருந்துகொண்டு அமுதத்தைக் குடிப்பவரே ஆவர். (கள் குடிப்பவரே ஆவர்.) திரு மருவு மார்பினானும் - திருமகள் உறைகின்ற மார்பை உடைய திருமாலும், வரமுறு - மேன்மையுடைய, காவிரிநதிக்கண் - காவிரிநதிசூழ்ந்த (ஆற்றிடைக்குறையாகிய) திருவரங்கத்தில், குடியன் - குடியிருப்புக் கொண்டவன் (மார்பினானும் காவிரிநதியின் கிளைகளிடைத் தெளிந்துண்ணும் கட்குடியன்) பெருந்தவ முனிவரும் - பெரியதவமுடைய முனிவர்களும், சித்தரும் - சித்தர்களும், விண்ணவர்க டாமும் - ஆகாய வீதியே செல்லும் வேணாவியரும், தரணியின் கண் - பூமியில், குடியர் - குடியிருப்பவர், (தரணியில் பொய் வேடங் கொண்டு கள்குடிப்பவரே யாவர்,) கரவடமேன் - வஞ்சகமேன், திருக்கச்சி கண்ணுதலார் - திருக்கச்சியில் எழுந்தருளியுள்ள நெற்றிக் கண்களையுடைய ஏகாம்பரர், பனையின் கட் குடியர்தாமே - திருப்பனங்காடு என்னும் பதியில் குடியிருப்பவர். (பனந்தோப்பினிடத்துக் குடியிருப்பு உடையவர். பனையின் கள்குடியரே - பனைமரத்திலிருந்து பெறும் கள்ளை வஞ்சகமாகக்குடிப்பவரே யாவர்.)

சுரா - கள், சுரை - அமுதம். சுரா - சுரை.

கர வடம் எனப் பிரித்துக் கரத்தில் உருத்திராக்க மாலை ஏந்திக் கொண்டு, இரு கச்சிக் கண்ணுதலார் - கச்சியில் நுதற்கண்ணுடைய சிவபெருமானார், கட்குடியர் தாமே எனவும் பொருள் கூறலாம்.

திருப்பனையின்கண் எழுந்தருளும் சிவபெருமானார் இன்ப வடிவினர். அவ்வடிவினரை நான்முகனும், ஏனைய தேவரும், திருமாலும், முனிவரும், சித்தரும், வேணாவியரும் தியானித்து இன்ப முறுவர். ஆதலால் ‘நமரங்காள், நீவிரும் அவ்வின்பவடிவினரை நினைவு செய்து இன்பமடைவீராக’ என்று இன்பமுற்ற ஒருவன் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல் என்க.

குடியிருத்தல், குடிப்பது என்று இரட்டுறமொழிதற் பொருளில் குடி யென்னும் சொல் ஆளப்பெற்றுள்ள நயம் பாராட்டத்தக்கது.

மண்ணுலக விண்ணுலகங்களில் வாழ்வோர் யாவரும் குடிப்பவர்களே யாதலால் குடித்தல் இழுக்காகாது என்று களிமகன் தன்பால் இழுக்கின்மையைத் தெளிவித்து மற்றவர்களையும் கள்ளுண்ணும்படி அழைக்கும் உபாயம் இப்பாட்டில் நன்கு அமைந்துள்ளது.

முதலடியில் அமரர் என்னும் சொல் தேவரென்னும் பொருள் பட வந்திருத்தலால், மூன்றாம் அடியில் விண்ணவர் என்னும் சொல் சூரியனோடு ஆகாய வீதியே சென்று அச்சூரியனுடைய ஒளி முழுவதும் மக்கள்மீது படாதவாறு தடுத்துக்காக்கும் வேணாவியோர் என்று பொருள் கூறப்பட்டது. ‘விண்செலன் மரபினையர்க் கேந்திய தொருகை’ என்ற திருமுருகாற்றுப்படை யடிக்கு நச்சினார்க்கினியர் கூறியுள்ள பொருளை யுற்று நோக்குக.
----------------

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11038&padhi=038&startLimit=11&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

பதினொன்றாம் திருமுறை - 038 ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் - 11
ஏனமு கத்தவ புத்தரை யிந்திர சித்து மணம்புணர் வுற்றான்
..
ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்
தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
..
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப்பரி சுண்டே


ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்


..
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களி யேனெளி யேனோ
சோனக னுக்குமெ னக்குமெனத்தரை யம்மனை சூலது கொண்டாள்
..
தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலக்குகிறாரே.

தர்மபுரம் ஆதீன உரையில் குறிப்புரையில் காண்பது:
"
கலம்பக உறுப்புக்களுள் ஒன்றாகிய 'களி' என்பது பற்றி வந்தது இப்பாட்டு.
களி - களிப்பு; உணர்வழிந்த மயக்கம்.
கள்ளை உண்டு இவ்வாறான மயக்கத்தை எய்தினோன் கூற்றாக வருவதே 'களி' என்னும் உறுப்பு.
அது பொருளுடைக் கூற்றாகவே அமைதல் உண்டு.
ஆயினும் இங்கு இது கள்ளுண்டோன் பிதற்றும் பிதற்றுரையாகவே அமைந்துள்ளது. அதனால் இப்பாட்டில், 'ஆன புகழ்ப் பயில்....வண் களியேன் எளியேனோ' என்னும் பகுதி தவிர, ஏனைய பகுதி முழுதும் பொருள் படாப் பிதற்றுரைகளாம்."
----



2011/10/7 K.R. Kumar <krish...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Oct 8, 2011, 12:19:19 AM10/8/11
to santhav...@googlegroups.com
சரி இதுபற்றி இன்னும் ஆழமாக யோசிக்கிறேன். ஆயினும் சிவா, ஹரி, அநந்த்,பசுபதி  போன்ற அறிஞர்களின் விவாதம் இவண் உடனே தேவை. என் சிஷ்யப்பிள்ளைகள் இதுகுறித்துக்கேட்கிறபோது என்னால் சரியான பதில் சொல்ல இயலவில்லை. 3 வயசில ஏது அய்யா  “அது.”.தோன்றும் என்பர்,

K.R. Kumar

unread,
Oct 8, 2011, 12:48:19 AM10/8/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள சிவா சிவா,


நமஸ்காரங்கள்.

மிகத் தெளிவாக பல எடுத்துக்காட்டுகள் கொடுத்திருக்கிறீர்கள். கலம்பகம் என்றால் என்ன என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.

மிக்க நன்றி.

நீங்கள் எடுத்துக்காட்டிய பாடல்களுக்கெல்லாம் ஒன்றோ அல்லது சிலேடைப் பொருளோ இருக்கின்றன. ஆனால் அடியேன் எடுத்துக்காட்டிய பாடலுக்கு பொருள் ஒன்றுமில்லை, ஒரு குடிகாரனின் வெறும் பிதற்றல் என்பதை இன்னும் என்னால் ஏற்க முடியவில்லை.

மற்றொரு இழையில் நண்பர் ஒருவர், ”ஆழ்ந்து யோசிக்க யோசிக்க  சரியான நேரத்தில் தக்க தருணத்தில் இதன் பொருள்கள் புலப்படும்”  என்று கூறினார்.

இந்த நீண்ட பயணத்தைத் தொடங்குகிறேன்.


அன்புடன்,
குமார்(சிங்கை)

2011/10/8 Siva Siva <naya...@gmail.com>

K.R. Kumar

unread,
Oct 8, 2011, 12:53:29 AM10/8/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள சிவா சிவா,

இந்தத் தட்டச்சுத் தேடல் செய்யும் முறையை (தள முகவரி, தேடும் முறை) சொல்லித்தாருங்கள். தேவாரத்தளத்தில் தட்டச்சுத் தேடல் உபயோகிக்க அறிவேன். இதைத்தவிர வேறு தள முகவரிகள் தரும்படி விண்ணப்பித்துக் கொள்கிறேன்.


அன்புடன்,
குமார்(சிங்கை)

2011/10/8 Siva Siva <naya...@gmail.com>

K.R. Kumar

unread,
Oct 8, 2011, 1:00:39 AM10/8/11
to santhav...@googlegroups.com
இவர்கள் பிஞ்சிலேயே பழுத்தவர்கள். இறைஞானம் அடைந்தவர்கள். அவர்கள் பார்வையும் சாமானியர்கள் பார்வையும் ஒன்றல்ல; தெய்வீக நோக்கு, லௌகீக நோக்கு என்று மாறுபட்டன.

இதை ஏற்றுக்கொண்டால்தான் பதில் சொல்ல இயலும் என்பது அடியேனுடைய கருத்து.


அன்புடன்,
குமார்(சிங்கை)


2011/10/8 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Siva Siva

unread,
Oct 8, 2011, 8:08:19 AM10/8/11
to santhav...@googlegroups.com
/ இந்தத் தட்டச்சுத் தேடல் செய்யும் முறையை (தள முகவரி, தேடும் முறை) சொல்லித்தாருங்கள். /

Nothing special! Just use google with some suitable search strings to frame your need. Sometime, you may want to use 'site:' option (e.g.   site:tamilvu.org) in your search to limit the search to hits from that site only.

2011/10/8 K.R. Kumar <krish...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 8, 2011, 11:47:54 PM10/8/11
to santhav...@googlegroups.com

>>இப்பாட்டில், 'ஆன புகழ்ப் பயில்....வண் களியேன் எளியேனோ' என்னும் பகுதி தவிர, ஏனைய பகுதி முழுதும் >>பொருள் படாப் பிதற்றுரைகளாம்."


மேலெழுந்தவாரியாகக் குடிகாரனின் பிதற்றுரைகளாகத் தோற்றும் இப்பாட்டில், களி என்பது அங்கத உருவில் வெளிப்படுகிறது என்ற நோக்கில் படித்து நான் புரிந்துகொண்டது இது:

 

ஏனமு கத்தவ புத்தரை இந்திரசித்து மணம்புணர்வுற்றான் -  இது, காழிப்பிள்ளையார் காலத்தில் புத்த மதத்தைப் பரப்பியவர்களைக் கேலி செய்வது. (மொட்டைத் தலையால்) பன்றிபோல் முகங்கொண்ட புத்தர்களை அரக்கர்குலத்து இந்திரஜித் ஏற்று மகிழ்ந்தான் - இது, பௌத்த மதம் தமிழ்நாட்டிலில்லாமல் இலங்கையில் பரவியதைக் குறிப்பது.  


ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை 
வெட்டி யிசித்தனர் பட்டர்-   இழிந்தவர் ஆன பௌத்த, சமணவாதிகள் கொட்டிய குப்பைகளை (தொட்டி இனங்கள்) சம்பந்தப் பெருமான் வெட்டி இழுத்தெறிந்தார்.

 

தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்-   கீழ்மக்கள் (மேற்சொன்ன மதவாதிகள்; சீத்தை என்பது களியை ஒட்டிச் சீதையென இங்கு மருவியது) உண்டிக் கலம் ஏந்திப்  பிச்சை எடுத்து உண்பர்.

  
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம்
இப்பரி சுண்டேபெரும் பட்டங்களைத் தரித்துலவும் அவர்களது (தவறான) தத்துவமாகிய பரிசை உட்கொண்டவர் (உண்டவர்) அழுவார்கள்/துன்பப்படுவார்கள் ; சிக்கரம் - அழுகை)


ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை

யுங்கார்
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களி யேனெளி யேனோ

புகழ்மேவும் அந்தண குலத்திற்கு முடியிலணி மணியாக விளங்கும் அரசனை ஒத்த சம்பந்தரின் (சண்பையர்) வண்மை கண்டு நான் களிப்பேன்;


சோனக னுக்குமெ னக்குமெனத்தரை யம்மனை
சூலது கொண்டாள்-  தென்னகம் மட்டுமன்றிப்  வேறு நாட்டவருக்கும் (சோனகர்), அவரைப் பாடும் எனக்குமாக உமையம்மை சம்பந்தப் பெரியோனைப் பெற்றுத் தந்தாள்  


தும்புரு வாலியை வென்று நிலத்திடை
நின்று துலக்குகிறாரே. -இசை வல்லமையில் தேவருலகத் தும்புருவையும், எதிரிகளை வெல்லும் திறத்தில் வாலியையும் நிகர்த்த திருஞான சம்பந்தப் பெருமான் இம்மண்ணில் சிவனின் உயர்ந்த தன்மைகளை உலகுக்கு விளக்குகிறார்.

 

..அனந்த்

9-10-2011




2011/10/7 Siva Siva <naya...@gmail.com>

2011-10-07
நல்ல வினா!


பதினொன்றாம் திருமுறை - 038 ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் - 11
ஏனமு கத்தவ புத்தரை யிந்திர சித்து மணம்புணர் வுற்றான்
..
ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்
தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
..
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப்பரி சுண்டே

K.R. Kumar

unread,
Oct 9, 2011, 7:13:33 AM10/9/11
to santhav...@googlegroups.com
தன்யனானேன்.

தட்டுங்கள் திறக்கப்படும்...கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டீர்கள்.

நன்றியுடன்,

குமார்(சிங்கை)

2011/10/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Oct 10, 2011, 5:00:06 PM10/10/11
to santhav...@googlegroups.com
கலம்பகத்தில் ஏன் களி (கட்குடியர் கள்ளையும் அது உண்டாகும் பனை முதலியவற்றையும் சிறப்பித்துக் கூறுவது), கொற்றியார் (வைணவச் சின்னங்களுடன் பிச்சை எடுக்க வருவாளைக் கண்ட காமுகன் ஒருவன் கூறுவது), பிச்சியார் (பிச்சை வாங்கச் செல்லும் சிவ வேடங்கொண்ட பெண்ணைக் கண்ணுற்ற காமுகன் ஒருவன் கூறுவது), இடைச்சியார் (இடைக்குல மகளை வீதிவாய் மோர்விற்க வந்தஞான்று கண்ட காமுகன் கூறுவது), வலைச்சியார் (மீன் உணக்கும் செம்படவப் பெண்ணைக் கண்ட காமுகன் கூறுவது), போன்ற பகுதிகள் இருக்கின்றன என்பதன் தாற்பரியம் எனக்குப் புலப்படவில்லை. வேறு எவரேனும் சொல்லக்கூடும்.

ஏகபாதப் பாடல்களைப் பதம்பிரித்துச் செய்யுள் விகாரங்களையும் ஆராய்ந்து பொருள்கொள்வதுபோல், இப்பாட்டை இன்னும் ஆழ்ந்து ஆராயின் இன்னும் வேறு பொருள்களும் புலப்படக்கூடும்.

உதாரணம்:

தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்

தானம்² tāṉam - 5. The heaven of Indra; சுவர்க்கம்.
சீதை --> சீது¹ cītu - n. < šīdhu. A spirituous liquor; மது. சீதுபருகிக் கடிசிறைக்கொடு (இரகு. தேனுவந். 7).
மடுத்தல் - . To take food or drink; உண்ணுதல்.
சாதி - 6. That which is superior, genuine; தன்மையிற் சிறந்தது.
சாதி-த்தல் - 1. To bestow; அளித்தல். நற்புத்தமுதுஞ் சாதித்தருளிய நின்னருட்கு (அருட்பா. vi, கைம்மாறின். 5). 2. To distribute, as food; பறிமாறுதல்.

"வானோரும் வேண்டும் மதுவை உண்பது கொடுத்த குடத்தோடு" என்றும் பொருள்படுமோ?


2011/10/8 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

K.R. Kumar

unread,
Oct 11, 2011, 12:26:16 AM10/11/11
to santhav...@googlegroups.com
//கலம்பகத்தில் ஏன் களி (கட்குடியர் கள்ளையும் அது உண்டாகும் பனை முதலியவற்றையும் சிறப்பித்துக் கூறுவது), கொற்றியார் (வைணவச் சின்னங்களுடன் பிச்சை எடுக்க வருவாளைக் கண்ட காமுகன் ஒருவன் கூறுவது), பிச்சியார் (பிச்சை வாங்கச் செல்லும் சிவ வேடங்கொண்ட பெண்ணைக் கண்ணுற்ற காமுகன் ஒருவன் கூறுவது), இடைச்சியார் (இடைக்குல மகளை வீதிவாய் மோர்விற்க வந்தஞான்று கண்ட காமுகன் கூறுவது), வலைச்சியார் (மீன் உணக்கும் செம்படவப் பெண்ணைக் கண்ட காமுகன் கூறுவது), போன்ற பகுதிகள் இருக்கின்றன என்பதன் தாற்பரியம் எனக்குப் புலப்படவில்லை. //

இதே எண்ணங்கள்தான் இந்தப் பாடலைப் படிக்கும்போது என்னுள்ளும் தோன்றின. அதனால்தான் ஒரு சந்தேகமாக மடலிட்டேன்.

உங்கள் விளக்கம் (குடிகாரனின் அர்த்தமற்ற பிதற்றல் என்பதைவிட) ஏற்புடையதாக இருக்கின்றது.

அனந்த் அளித்த விளக்கமும்  புரிகிறது.

நீங்கள் கூறிய //இப்பாட்டை இன்னும் ஆழ்ந்து ஆராயின் இன்னும் வேறு பொருள்களும் புலப்படக்கூடும்.// என்பதை முழுமையாக வழிமொழிகிறேன்.


அன்புடன்,
குமார்(சிங்கை)



2011/10/11 Siva Siva <naya...@gmail.com>

naa.g...@gmail.com

unread,
Oct 24, 2011, 9:25:25 AM10/24/11
to சந்தவசந்தம்

On Oct 10, 11:26 pm, "K.R. Kumar" <krishra...@gmail.com> wrote:
> //கலம்பகத்தில் ஏன் களி (கட்குடியர் கள்ளையும் அது உண்டாகும் பனை
> முதலியவற்றையும் சிறப்பித்துக் கூறுவது), கொற்றியார் (வைணவச் சின்னங்களுடன்
> பிச்சை எடுக்க வருவாளைக் கண்ட காமுகன் ஒருவன் கூறுவது), பிச்சியார் (பிச்சை
> வாங்கச் செல்லும் சிவ வேடங்கொண்ட பெண்ணைக் கண்ணுற்ற காமுகன் ஒருவன்
> கூறுவது), இடைச்சியார்
> (இடைக்குல மகளை வீதிவாய் மோர்விற்க வந்தஞான்று கண்ட காமுகன் கூறுவது), வலைச்சியார்
> (மீன் உணக்கும் செம்படவப் பெண்ணைக் கண்ட காமுகன் கூறுவது), போன்ற பகுதிகள்
> இருக்கின்றன என்பதன் தாற்பரியம் எனக்குப் புலப்படவில்லை. //
>
> இதே எண்ணங்கள்தான் இந்தப் பாடலைப் படிக்கும்போது என்னுள்ளும் தோன்றின.
> அதனால்தான் ஒரு சந்தேகமாக மடலிட்டேன்.
>
> உங்கள் விளக்கம் (குடிகாரனின் அர்த்தமற்ற பிதற்றல் என்பதைவிட) ஏற்புடையதாக
> இருக்கின்றது.
>
> அனந்த் அளித்த விளக்கமும்  புரிகிறது.
>
> நீங்கள் கூறிய //இப்பாட்டை இன்னும் ஆழ்ந்து ஆராயின் இன்னும் வேறு பொருள்களும்
> புலப்படக்கூடும்.// என்பதை முழுமையாக வழிமொழிகிறேன்.
>
> அன்புடன்,
> குமார்(சிங்கை)
>

இன்ன்னொன்றும் இப்பாடல் பொருள் காண்பதில்
யோசிக்கலாம்.

பதினோராம் திருமுறை எல்லா ஏடுகளையும்
பார்த்துச் செம்பதிப்பு ஏற்படவில்லை. 19-ஆம் நூற்றாண்டில்
ஆறுமுக நாவலர் தனக்குக் கிடைத்த ஏடுகளைப்
பார்த்து 11-ஆம் திருமுறை அச்சிட்டார்.

20-ஆம் நூற்றாண்டில் முக்கியமான புலவர்கள்
எல்லோரும் சங்க இலக்கியங்களைத் தேடினர்.
சைவ சமய இலக்கியங்களின் செம்பதிப்புக்கான
முயற்சிகள் குறைவாயின. மேலும், 40-50 ஆண்டுகளாய்
தமிழக அரசியல் சூழ்நிலை சைவ இலக்கிய தேடலுக்கும்,
பராமரிப்பு, பரவலுக்கு உதவவில்லை.

11-ஆம் திருமுறை உள்ள எல்லா ஏடுகளையும்
நல்ல புலவர்கள் தேடி ஆராய்ந்தால் இன்னும்
இந்த விருத்தம் செப்பமடையக் கூடும். 11-ஆம்
திருமுறை இன்னும் நன்கு ஏடுகளைக் கொண்டு
ஆராயப்படவில்லை. ஓர் உதாரணம் தருகிறேன்.
திரு ஈங்கோய் மலை எழுபது என்னும் பிரபந்தம்
அதில் உள்ளது. மிக அழகான இயற்கை வருணனை
கொண்ட 70 வெண்பாக்கள். இதில் ஸ்ரீலஸ்ரீ
ஆறுமுக நாவலருக்கு 15 வெண்பாக்கள்
கிடைக்கவில்லை. 1940களில் மாயூரம்
(திருச்சிற்றம்பலம்) மு. அருணாசலம் அவர்களுக்கு
நெல்லை செப்பறை ஆதீனத்தில் கிடைத்த
ஏட்டுச்சுவடிகளில் ஈங்கோய்மலை எழுபது
முற்றிலுமாய்க் கிட்டிற்று. அச்சாக்கினார்.
பின்னர் பாலூர் கண்ணப்ப முதலியார் உரைவரைந்தார்கள்.

19-ஆம் நூற்றாண்டில் அச்சான எத்தனையோ
சைவ தலபுராணங்கள் அழிந்துகொண்டுள்ளன.
படிப்பாரும் மிக அருகிவருகின்றனர்.
மின்னூல் ஆக்கம் அரசாங்கம், தனியார்கள்
நேரம், மனிதவளம், காசு செலவுசெய்து
காப்பாற்றவில்லையென்றால் பல பொக்கிஷங்கள்
இல்லாமல் போய்விடும் என்பதுறுதி.
நல்ல நூலகங்கள் பல அழிந்துகொண்டுள்ளன
- சை.சி.நூ.கழக்ம், கன்னிமாராவிலேயே பல
ஆயிரக்கணக்கான நூல்கள் அழியும் தறுவாயில்.

நா. கணேசன்

Siva Siva

unread,
Oct 24, 2011, 6:20:12 PM10/24/11
to santhav...@googlegroups.com
நீங்கள் சுட்டியதன் பலனாக ஈங்கோய்மலை எழுபதில் ஒரு பாடலைப் பார்த்தேன். அழகிய பாடல்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11010&padhi=040&startLimit=69&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து
காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப வேயணைத்து
மாப்பிடிமுன் ஒட்டும்ஈங் கோயே மறைகலிக்கும்
பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.








--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
Reply all
Reply to author
Forward
0 new messages