யாப்பு - ஒரு ஐயம்

8 views
Skip to first unread message

Girija Varadharajan

unread,
Dec 1, 2021, 2:46:23 AM12/1/21
to santhav...@googlegroups.com

பின்  வரும் பாடலின் யாப்பு குறித்து ஐயம்.  

 

 

ஆடும் திருவடியைக் கண்டு – அதில்   

அன்பு மீதூரக் கொண்டு – கழல் 

கூடும் நெஞ்சுடையன் என்று – சிவன்   

கோவில் தினந்தோறும் சென்று – பலர்

பாடும் பதிகமெலாம் கேட்டு- நற்   

பண்பைச் சிந்தையிலே நாட்டு. – ஒரு

கேடும் உனையணுகா வண்ணம் – நம் 

கேள்வன் காத்திடுவான் திண்ணம்.  (1)

 

 

நண்பர் ஒருவர்   இது  எந்த வகை யாப்பு எனக் கேட்கிறார்.

 

இதற்கான விடை, எனக்குத் தெரிய வில்லை.  “பாரதியின் தேடிச்  சோறு நிதம் தின்று என்ற  பாடலைப் போல என்று  மட்டும் தான்  பதில் சொல்ல முடிந்தது.

 

இவ்வகைப் பாடல்  எந்த வகை யாப்புக்குக்ள் அடங்கும் என்பதைச் சான்றோர்கள் விளக்கினால் பயன் பெறுவேன்.

 

 

அ கி வரதராஜன்

 

 

 

Sent from Mail for Windows

 

Kaviyogi Vedham

unread,
Dec 1, 2021, 8:00:02 AM12/1/21
to santhavasantham
வேறென்ன  அதே சிந்துவகைப்பாடல்(வெண்டளையுடன்!)-
ஆயின் நீர் இப்படிப் பிரிக்கோணும்..


ஆடும் திருவடியைக் கண்டு – அதில்   

அன்புமீ தூரக் கொண்டு – கழல் 

கூடும் நெஞ்சுடையன் என்று – சிவன்   

கோவில் தினந்தோறும் சென்று – பலர்

பாடும் பதிகமெலாம் கேட்டு- நற்   

பண்பைச்சிந் தையிலே நாட்டு. – ஒரு

கேடும் உனையணுகா வண்ணம் – நம் 

கேள்வன்காத் திடுவான் திண்ணம்.  (1)

 சரியா நண்பர்களே

யோகியார்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/BN0PR04MB795203952B491795520A4C6BDD689%40BN0PR04MB7952.namprd04.prod.outlook.com.

Saidevo ramaNi

unread,
Dec 1, 2021, 8:05:21 AM12/1/21
to சந்தவசந்தம்
சிந்துப் பாடல்கள் பொதுவாக இரண்டு அடிகளில் அமைவன. நான்கடிச் சிந்துகளும் உண்டு என்று பசுபதியார் தம் க.இ.க. நூலில் குறித்திருக்கிறார்.
ரமணி

Pas Pasupathy

unread,
Dec 1, 2021, 9:26:58 AM12/1/21
to Santhavasantham
 இங்கே பலர் சொன்னது போல், இது நான்கடிச் சிந்து.  மா காய் தேமா  என்ற வாய்பாடு மூலமாகவே  இதன் இசையமைதியைப்  புரிந்து கொள்ளலாம்.  

நான்கடிச் சிந்துகளைப் பாரதியும், பாரதிதாசனும் நிறையப் பாடியுள்ளனர். 

Subbaier Ramasami

unread,
Dec 1, 2021, 10:19:15 AM12/1/21
to santhavasantham
இது நான்கடி முச்சீர் சமநிலைச் சிந்து.

முனைவர் இளங்குமரன் இலக்கணத்தின் படி பார்த்தால் மாறு படும்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages