எனது தந்தை திரு.வெங்கடாசலம், மடிந்து ஒரு வருடம் ஆகிறது. தனது இறுதிக் காலத்தில், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட நேரத்தில், வாய் ஓயாமல் அவர் பாடியது நாரயணீயத்தின் 100 வது சதகம். இதன் பின்னணி எனக்குப் பிறகு தெரிந்தது. நாரயணிய பட்டருக்கும் பக்கவாதம் இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஒரு வருடம் பூர்த்தியாகும் வேளையில், என் சகோதரிகள் இந்தியாவில் திவசம் செய்து அவரை ஸ்வர்கத்திற்கு வழியனுப்பி வைத்தார்கள். அமெரிக்காவில் இருந்த படி என்னால் செய்ய முடிந்தது இந்த மொழியாக்கம் மட்டுமே! இதை சந்தவசந்தத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நாராயணீயம்100 வது தசகம் - தமிழாக்கம்
உண்மையை உணர்த்தும் உபநிடதம் சூழந்திட
மண்ணிலே யோகிகள் மன்றாடித் தொழுதிட
கண்ணைக் கவரும் காயம்பூ ஒளியில்
என்னெதிரே தெரிந்திடும் எழிலான இளைஞனே
முன்னிடுகையைத் தொடர்ந்து, ஆங்காங்குக் காணும் ஒற்றுப் பிழைகளைச் சரிசெய்யலாம். காட்டாக,
முழுதானக் கடவுளாய், கழலடிப்
பணிந்திடக் கால்நுனித் தெரியுமே - ஒற்று மிகை
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Absolutely great! May your father continue to bless you all from his heavenly abode!N V Subbaraman
படிக்க மனதுக்கு இதமாக இருக்கிறது ...இருக்காதா பின்னே அது கண்ணனின் கவிதை அல்லவா! .அன்புடன்,மீ.விசுவநாதன்
இரண்டு வருடம் முன்பு என் சினேகிதி மைதிலி மற்றும் லலிதா என்பவர்களுடன் குருவாயுருக்குப் போனபோது மைதிலி, “உஷா ஸ்பெஷல் நிர்மால்யம் பார்க்கப் போகிறோம்” என்றாள். அவளது உறவினர் ஒருவர் மூலம் அனுமதி வாங்கிக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. இரவெல்லாம் தூங்கவில்லை. உடலும் மனமும் பரபரத்தது. விடியற்காலை ஒரு மணிக்கு எழுந்து குளித்து விட்டு மேற்கு கலவரா வாதிலுக்கு (கதவு) அருகில் வந்தோம். இரண்டேகால் மணிக்கு அந்தக் கதவு வழியாக உள்ளே அனுமதிக்கப் பட்டோம்.எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் கோவிலுக்குள் நாங்கள் ஒரு பத்து பேர் மட்டுமே கொடிமரத்திர்க்கருகில் நின்றிருந்த போது எனக்கு அது கனவா நனவா என்றே புரியவில்லை. நாங்கள் நின்றிருக்க்கையில் இன்னும் இருவர் வந்தனர். அதில் ஒருவர் மலையாள சூப்பர் ஸ்டாரில் ஒருவரான சுரேஷ் கோபி.
மனசுக்குள் நாம ஜெபத்துடன் நின்றிருக்கையில் அந்தக் காட்சி....! குளித்து ஈர முண்டுடன் சற்றே உடல் உதரவேகமாக வந்து கொண்டிருந்தார் கோவிலின் மேல்சாந்தி. (மேல்சாந்தி ஸ்நானம் கழிஞ்சு வன்னு)பாடல்வரி என் மனசுக்குள் ஓடிற்று. அவர் உள்ளே சென்ற சற்று நேரத்தில் நாங்களும் உள்ளே அழைக்கப்பட, மூடிய சந்நிதிக் கதவுகளுக்கு வெளியே நாங்கள். நின்றோம். உடம்பு நடுங்கியது எனக்கு. எதிர்பாராமல் கிடைக்கும் சிறப்பு நிர்மால்ய தரிசனமல்லவா? கோவிலுக்கு வெளியில் இதைக் காண்பதற்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கையில் நாங்கள் சன்னிதி முன் அதை முதலில் காண நின்றிருக்கிறோம் என்பது எத்தகைய பேறு.
சடாரென நடை திறக்கப் பட்டது. முந்தைய இரவு அலங்காரங்களோடு நிர்மால்ய தரிசனம் தந்தான் அவன். அவசரமாய் விழி நீரை துடைத்துக் கொண்டு உற்றுப் பார்த்தேன். அதேநேரம் கோவில் வெளிக் கதவு திறக்கப்பட பக்தர்கள் கூட்டமும் முண்டியடித்து வந்தது. நான் சட்டென சுரேஷ் கோபியின் அருகில் ஒதுங்கி நிற்க அவரது பிராபல்யத்தால் எங்களுக்கும் அங்கே நிற்க சற்று நேரம் அனுமதி கிடைத்தது.அலங்கராம் கலைக்கப் பட்டு முழு விக்கிரகமும் பளிச்சென எண்ணைக் காப்பில் மின்னியது. அடுத்து வாகப் பொடி சார்த்து.
(கேசவனுண்ணி கண்ணன்டே மேனி கேஸாதி பாதம் எண்ண தேச்சு. வாசன வாகப் பொடிசார்த்தி, வாசுதேவன் மேனி நீராட்டி) உள்ளே பாடல் ஒலித்தது.போதும்டாப்பா போதும். இந்த ஜென்மம் நற்பயனடைந்தது.
தொடர்ந்து சங்காபிஷேகமும் பார்த்து விட்டு கண்ணீரோடு வெளியில் வந்து விட்டேன். இப்போதும் என் மனசுக்குள் அந்தக் காட்சிகள் பத்திரமாக இருக்கிறது. தினமும் விடியல் மூன்று மணிக்கு அதைத்தான் பார்க்கிறேன்.”