ஊழி பலவாகும் நம்வினைகள் தீர்க்கவே
ஓர்ந்து நரசிங்கன் தீர்ப்பதுவும் நொடியிலே
ஆழி தனில்பள்ளி அரிதுயிலில் ஆழ்ந்துமே
ஆழி தொட்டுநம்மின் பகைமுடிக்க விரைவனே
வாழி யெனப்பொழுதும் வாழ்த்துவரை நெஞ்சிலே
வாடி யவர்தேயா திருந்திடவே அருள்வனே
நாழி பலவேண்டா நாமமொன்றை ஓதவே
நாடி யச்சிறுவன் நல்வழியில் நடப்பமே
புதுஅக்ரஹாரம் எஸ் பார்த்தசாரதி, பெங்களூர்