முருங்கைக்காய்

20 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 10, 2026, 8:01:14 AMMar 10
to santhavasantham

Another vegetable veNbA!


2026-03-08

முருங்கைக்காய்

----------------

(வெண்பா)


வாய்மணக்கும் சொல்லுங்கால் வாங்கிவரும் கைம்மணக்கும்

பாய்மடுவாம் சாம்பாரில் பாங்குறப் - போய்விரவும்

சோறுமணக் கும்காய்கள் சூழவியல் ஆள்கட்டில்

ஏறு(ம்)முருங் கைக்காய்க்கீ டேது.


பதம் பிரித்து:

வாய் மணக்கும் சொல்லுங்கால்; வாங்கி வரும் கைம்-மணக்கும்;

பாய்-மடுவாம் சாம்பாரில் பாங்குறப் போய், விரவும்

சோறு மணக்கும்; காய்கள் சூழ்-அவியல் ஆள்-கட்டில்

ஏறு(ம்); முருங்கைக்காய்க்கு ஈடு ஏது?


வி. சுப்பிரமணியன்

Kaviyogi Vedham

unread,
Mar 10, 2026, 11:12:18 AMMar 10
to santhav...@googlegroups.com
abaram  siva.
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO2_n_pwoAB8HPeHtOWamsEC3_fS7Szkv9FQhXC%2BxKJWA%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 10, 2026, 11:23:27 AMMar 10
to santhav...@googlegroups.com
Thanks Kaviyogiyar.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Mar 12, 2026, 1:34:24 PMMar 12
to santhav...@googlegroups.com
முருங்கையிலே சாம்பார் முனைந்துண்டால்  பின்பு
வருஞ்சுகமே நெஞ்சில் மணக்கும்- விருந்தாய்
முருங்கை இலை,விதை  முகிழ்க்கா  மலரும்
ஒருங்கே உணவாகும் மே!

மொத்தமும் நன்மருந்தாய் மூண்டிருக்கும் சீர்முருங்கை
வித்தகம் சொல்லும் விளம்பரங்கள்-  எத்தனையோ
பார்க்கின்றேன், எல்லாம் பலமடங்கு விற்கின்றார்
ஊர்ப்புறத்தில்  ஏராளம் உண்டு.

சர்க்கரை நோய்க்குத் தகவு மருந்துவிதை
தக்க இலைப்பொடியோ  சார்புரோட்டின் - சிக்கெனவே
காயெடுத்துச் சாம்பார் கச்சிதமாய்ச் செய்துவிடின்
காயடித்த பேர்க்கும் களி.

இலந்தை



Siva Siva

unread,
Mar 12, 2026, 2:51:31 PMMar 12
to santhav...@googlegroups.com
Nice.
சர்வரோகநிவாரணி முருங்கை!

V. Subramanian

On Thu, Mar 12, 2026 at 1:34 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
...

Ram Ramakrishnan

unread,
Mar 12, 2026, 3:34:23 PMMar 12
to santhav...@googlegroups.com
ஆகா! முருங்கைக் காய் வெண்பாக்கள் அருமை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



On Thu, Mar 12, 2026 at 1:34 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

OAGAI NATARAJAN

unread,
Mar 13, 2026, 2:02:28 AMMar 13
to santhav...@googlegroups.com
பருமனில் வெண்டைநீள் பார்க்கில் புடலை
கருக்கொள் விதைபுடைக்கும் காயாம் - முருங்கைக்கே
ஏதாகும் காய்ச்செடி  என்றாலோ அஃதங்கே
வேதாளம் தொங்கும் மரம் 

Arasi Palaniappan

unread,
Mar 13, 2026, 5:00:27 AMMar 13
to சந்தவசந்தம்
வேதாளம் தொங்குமென வீட்டின்பின் நட்டாலும் 
ஆதாரம் நல்கும் அரியமரம் - ஈதாம் 
முருங்கைஉண(வு) உண்டார் முதுமையிற்கோல் இன்றி 
வெறுங்கையொடு போதல் வியப்பு!

முருங்கைக்காய், கீரை, பூ அனைத்தும் உடலுக்கு நலம் பயப்பன! 

"முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான் "

பழமொழி 

அரசி. பழனியப்பன் 

Siva Siva

unread,
Mar 13, 2026, 9:32:05 AMMar 13
to santhav...@googlegroups.com
Nice.

Siva Siva

unread,
Mar 13, 2026, 9:37:07 AMMar 13
to santhav...@googlegroups.com
Nice. I did not know about this proverb.
Thanks.

/ முருங்கைஉண(வு) உண்டார் /

முருங்கை தினம்உண்டார் ?

/ போதல் வியப்பு /
போவர் விளப்பு - will this fit as well?

வி. சுப்பிரமணியன்

Arasi Palaniappan

unread,
Mar 13, 2026, 9:47:28 AMMar 13
to சந்தவசந்தம்
👍🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Mar 13, 2026, 9:50:37 AMMar 13
to சந்தவசந்தம்
முருங்கைக் காய், கீரை, பூ என்பதனால் உணவு என்று கொண்டேன்.

தினம் என்றும் கூறலாம்!

போவர் வியப்பு என்பது சரியாகத் தோன்றாமையால்,
போதல் வியப்பு என்று அமைத்தேன்.

நன்றி 

On Fri, 13 Mar 2026, 7:07 pm Siva Siva, <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 13, 2026, 10:01:58 AMMar 13
to santhav...@googlegroups.com
If the proverb say they will be walking without support, then why do you call it as a surprising thing?

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Mar 13, 2026, 10:06:06 AMMar 13
to சந்தவசந்தம்
🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

sudha's creations

unread,
Mar 13, 2026, 11:06:33 AMMar 13
to santhavasantham
இன்றுவரை தெரியவில்லை ஏன் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது என்று... யாராவது தெரிந்தால் சொல்லலாம்.. ஏன் அதற்கு அந்தப் பேரு வந்தது என்று..
ஆனால் எனக்கு தெரிந்து.. சமையலில் முனைப்பு இல்லாத ஒரு பெண் கூட முருங்கைக்காய் சாம்பார்.. வைக்க நினைத்துத் தயாரித்தால்... அதன் வாசனை
முழுவதும் மணக்கும் வீடு..

அடுப்படி  ஒரு பெண்ணின்.வாழ்க்கையின் இனிமைகளை கற்றுத்தரும் ஒரு அற்புதமான பரிசோதனைச் சாலை...
பள்ளிப்படிப்பின் பெருமைகளோ பரிசுகளோ... எதுவாக இருந்தாலும் இன்று சமையல் நன்றாக இருந்தது என்று கணவர் தரும் பாராட்டு... அது அடுத்த நாள் சமைக்க தூண்டும் மனதிற்கான பன்னீர் தூறல்..
வாழ்த்துக்கள் சிவசிவா சார்..
அன்புடன் சுதா வேதம்..

Ram Ramakrishnan

unread,
Mar 13, 2026, 11:09:59 AMMar 13
to santhav...@googlegroups.com
எனக்குத் தெரிந்த வரையில் விக்ரமாதித்தன் கதையில் சரியான பதிலை ஒவ்வொரு முறையும் விக்ரமாதித்தன் தந்ததனால் வேதாளம் முருங்கை ஏறியது என்றுப் படித்ததாக ஞாபகம்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

sudha's creations

unread,
Mar 13, 2026, 12:22:48 PMMar 13
to santhavasantham
முருங்கை மரம் எளிதில் சாய்ந்து விடக்கூடியது.. எனக்குத் தெரிந்து எந்த கோயிலிலும் முருங்கை மரம் ஸ்தல விருட்சமாக இருந்து பார்த்ததில்லை.. இதெல்லாம் கூட ஒரு காரணமாக இருக்குமோ என்று சிந்திக்கிறேன்..
சுதா வேதம்

--

Rajagopalan Soundararajan

unread,
Mar 13, 2026, 1:26:25 PMMar 13
to சந்தவசந்தம்
தேடியதில் கிடைத்தது: 
"முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்பது முருங்கை மரத்தின் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை உணர்த்தும் ஒரு பழமொழியாகும். அதாவது, முருங்கை நட்டு அதனைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள், முதிர்ந்த வயதிலும் கம்பு (தடி) ஊன்றி நடக்காமல், நோயின்றி ஆரோக்கியமாக வெறுங்கையுடன் (சுறுசுறுப்பாக) நடப்பார்கள் என்பதை இது குறிக்கிறது, வறுமையை அன்று.

Rajagopalan Soundararajan

unread,
Mar 14, 2026, 6:27:56 AMMar 14
to சந்தவசந்தம்

“மோரிங்கா*” என்றே முரசறைந்து மேதினியோர்

பாரித்துக் கொள்வர் பயன்

[*- முருங்கை products are branded as Moringa in the West]

Siva Siva

unread,
Mar 14, 2026, 8:25:08 AMMar 14
to santhav...@googlegroups.com
Nice.
Reply all
Reply to author
Forward
0 new messages