வண்ண விருத்தம் முயற்சி 15 (ராம்) - சோமவாரப் பிரதோஷப் பாடல்

5 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Aug 10, 2026, 7:32:30 PM (4 days ago) Aug 10
to santhavasantham
 

வண்ண விருத்தம் முயற்சி 15 (ராம்)

சோமவாரப் பிரதோஷப் பாடல்

சந்தக் குழிப்பு:

தானான தானதன தனதான தானான தானதன தனதான

தானான தானதன தனதான           தனதான

 

(மனத்தில் தோன்றிய சந்தத்தில் எழுதிய பாடல்)

-------------------------------------------------------------------------------------

 

ஆனாய நாயனரின் இசையாலும் ஆடோடு மாடினமும் அசையாது

ஆகாய வாதிபனுன் நசைமீறி             அருளீவாய்

ஏனாதி நாயனரின் புகழாலும் ஏராரும் மாவீரரும் நிலைமாறி

ஏலாத நீறணிவர் கொடுவாளில்         உனதானார்

 

தேனாகு மாவடியர் சிவனாரின் ஆகாமி மேவிடவும் மழுவாலே

தீராத மாவினையும் உடனேக            அருள்நாதா

தேடாத ஊரறிகில் உறுபூசை சீராக அமையாத விடராலே

தீராத கோபமுறும் மழுவீசர்                     அருள்நேசர்

 

மேனாளில் நாயகனின் வழியேகி மாவோலை காணுறுக யெனவாகி

வேறாகி வாழுவகை யவர்சேர           லுனதாணை

வேகாமல் மேதினியில் மனம்நாளும் சீரான நாமசிவ மயமாகி

வேறாகும் மேனியதும் வயதாகும்        வினையீவாய்

 

மானோடு சீருமையள் இடமாகி வாதாடி நாவரசர் குழலூதி

ஏனாதி வீரரென எனவாகும்              இவர்போலே

மாதோடு நீவருமவ் வடிவாயின் னாளாகும் நேசமெனும் எரிதீபம்

மாடாக நானுணரும் நொடியீது           பெருமானே.

 

 

பதம் பிரித்துப் பொருளுரை:

 

ஆனாய நாயனரின் இசையாலும் ஆடோடு மாடினமும் அசையாது

ஆகாய திபன் உன் நசைமீறி           அருளீவாய்

 

(ஆனாய நாயனார் வேய்ங்குழலில் வாசித்த ஐந்தெழுத்து இசையின் இனிமையால், ஆடுகளும் மாடுகளும் தம் மெய்மறந்து அசையாமல் நின்றன. அண்டம் பரவிய இறைவனே! உனது அளவுகடந்த திருவுள்ளத்தால் அவருக்கு அருள் தந்தாய்)

 

ஏனாதி நாயனரின் புகழாலும் ஏராரும் மாவீரரும் நிலைமாறி

ஏலாத நீறணிவர் கொடுவாளில்         உனதானார்

 

(ஏனாதிநாத நாயனாரின் பெரும் புகழால், அவருடன் போரிட வந்த அழகிய மாவீரனான அதிசூரன் தன் நிலைமாறி (போர்முறையை விடுத்து),  திருநீற்றை நெற்றியில் அணிந்துகொண்டு வந்தான். அதைக்கண்ட ஏனாதியார் "இவர் சிவனடியார்" என எண்ணித் தன் கொடுவாளை வீசாது, அவனது வாளுக்குத் தம்மையே இரையாகிப் பின் உன் அருளைப் பெற்றார்)

 

 

தேனாகு மாவடியர் சிவனாரின் ஆகாமி மேவிடவும் மழுவாலே

தீராத மாவினையும் உடனேக            அருள்நாதா

 

தேன் போன்ற இனிய பக்தியுடைய சிவபெருமானின் அடியாரான எறிபத்தர், சிவனடியாருக்குத் துன்பம் இழைத்த பட்டத்து யானையையும், அதன் பாகர்களையும் தம் மழுவாயுதத்தால் வெட்டி வீழ்த்தினார்.,அவ்வாறு வினைசெய்தவருக்கும்  அருள் ஈந்த நாதனே)

 

தேடாத ஊர் அறிகில் உறுபூசை சீராக அமையாத டராலே

தீராத கோபமுறும் மழுவீசர்                     அருள்நேசர்

 

(ஊர் மக்கள் அறியாத மறைவான இடத்தில் மணலால் சிவலிங்கம் அமைத்து, பசுக்களின் பாலைக் கொண்டு செய்த தூய பூசை சீராக அமையாதவாறு தந்தை வந்து இடையூறு செய்ததால், தீராத சினம்கொண்டு மழுவை வீசியவர் (சண்டேசுவரர்). அத்தகைய அன்பரின் கோபத்தையும் அருள்மனதோடு ஏற்றுக் கொண்ட அருள் செய்யும் நேசனே)

 

மேனாளில் நாயகனின் வழியேகி மாவோலை காணுறுக யெனவாகி

வேறாகி வாழுவகை வர்சேரல்        உனதாணை

 

(முன்னாளில் (திருவெண்ணெய்நல்லூரில்) திருமணப் பந்தலில் தோன்றிய இறைவனாகிய நீ, வழக்காடி சுந்தரரைத் தடுத்து நிறுத்தி, பழமையான அடிமை ஓலையைக் காட்டி "இவன் என் அடிமை" என்றாய். அதன்பின் அவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டுத், தடுத்து ஆட்கொள்ளப்பட்டு இறைநெறியில் வாழும் பேற்றைப் பெற்றது உனது திருவருள் ஆணையாகும்)

 

வேகாமல் மேதினியில் மனம்நாளும் சீரான நாமசிவ மயமாகி

வேறாகும் மேனியதும் வயதாகும்        வினையீவாய்

 

(அப்பர் கடலில் தன்னைக் கட்டிய கல்லோடு தப்பியதையும், சமணர்களின் சுண்ணாம்புக் காளவாயில் வேகாமல் பிழைத்ததையும் நினைவுகூர்ந்து) உலகத்தில் துன்பத் தீயில் வேகாமல், நாள்தோறும் மனம் சீரான 'நமசிவாய' எனும் அஞ்செழுத்து மயமாகி நிற்குமாறு செய்ய வேண்டும். என முதுமையால் உடம்பு வேறுபட்டுத் தளரும் காலம் வரை பலவிதமான துன்பமடைத்தபின் அவருடைய வினையைத் தீர்த்து முக்தி யளித்தாய்)


மானோடு சீருமையள் இடமாகி வாதாடி நாவரசர் குழலூதி

ஏனாதி வீரரென எனவாகும்              இவர்போலே

 

((மானைக் கையில் ஏந்தியவனும், சீர்மிகு உமையவளைத் தன் இடப்பாகத்தில் கொண்டவனுமாகிய சிவபெருமானே (சமணர்களோடு) வாதாடி வென்ற திருநாவுக்கரசரும், வேய்ங்குழல் ஊதிய ஆனாய நாயனாரும், ஏனாதிநாத நாயனாரைப் போன்ற மாவீரர்களும் ஆகியவர்களுக்கு உன் அருளைத் தந்து போல்))

 

மாதோடு நீவருமவ் வடிவாய் இந்நாள் ஆகும் நேசமெனும் எரிதீபம்

மாடாக நான் உணரும் நொடியீது        பெருமானே.

 

((உமையம்மையோடு நீ எழுந்தருளி வரும் அந்த அம்மையப்பத் திருக்கோல வடிவில் அடியேனுக்குக் காட்சி தரும் நாளிதுவே! என் நெஞ்சில் எரியும் அன்பெனும் சுடர்விளக்கைச் செல்வமாகக்கொண்டு (மாடாக = செல்வமாக / சிறப்பானதாக), நான் உன்னை உணர்ந்துகொள்ளும் அரிய நொடி இதுவே ஆகும், பெருமானே))

 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Ram Ramakrishnan

unread,
Aug 10, 2026, 8:39:14 PM (4 days ago) Aug 10
to santhavasantham
சிறு திருத்தம்:
ஏனாதி நாயனரின் புகழாலும் ஏராரும் மாவீரரும் நிலைமாறி

என்பதனை:

ஏனாதி நாயனரின் புகழாலும் ஏராரும் மாவடியரும் நிலைமாறி

என்று மாற்றுகிறேன்.

சந்தத்திற் கேற்ப 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Siva Siva

unread,
Aug 10, 2026, 9:54:59 PM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
ஆனாய நாயனார்
ஏனாதி நாயனர்

Sound a bit odd.
I generally try to minimize seyyuL vikArams which do not have prior usage.

/ஆனாய நாயனரின் இசையாலும்/
ஆனாயர் ஊதுகுழல் இசையாலும்

/ஏனாதி நாயனரின் புகழாலும்/
ஏனாதி யாருடைய புகழாலும்

may possibly fit.

/ அழகிய மாவீரனான அதிசூரன் / 
Why is a bad person who killed the devotee described as above?

Some other pattern issues - see below.

V. Subramanian



On Mon, Aug 10, 2026 at 7:32 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

Ram Ramakrishnan

unread,
Aug 10, 2026, 10:05:50 PM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. சிவா.

விகாரமின்றி அமைத்தல் நலம் என்ற உங்களது கருத்து ஏற்புடையதே.

நாயனரின் என்றவிடங்களில் ஊதுகுழல், யாருடைய அன்றே மாற்றுகிறேன்.

அதிசூரன் என்பது அவனது இயற்பெயர். அவனும் வாள்வித்தையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவன் எனப் பெரியபுராணக் கதை கூறுகிறது.
ஆனால் அழகிய என்ற சொல் என்னை மீறி வந்து விட்டது. அதனைக் குறிபிலிருந்து நீக்குகிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOg7nykhra48VpFTLt26tVxbHLKsN0DknFoeps6SNuqxQ%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Aug 10, 2026, 10:18:44 PM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
வண்ண விருத்தம் முயற்சி 15 (ராம்) (திருத்தங்கள் செய்தமைத்த மீள்பதிவு)

சோமவாரப் பிரதோஷப் பாடல்

 

தானான தானதன தனதான தானான தானதன தனதான

தானான தானதன தனதான           தனதான

 

(மனத்தில் தோன்றிய சந்தத்தில் எழுதிய பாடல்)

-------------------------------------------------------------------------------------

 

 

ஆனாயர் ஊதுகுழல் இசையாலும் ஆடோடு மாடினமும் அசையாது

ஆகாய வாதிபனுன் நசைமீறி             அருளீவாய்

ஏனாதி யாருடைய புகழாலும் ஏராரும் மாவடியரின் நிலைமாறி

ஏலாத நீறணிவர் கொடுவாளில்         உனதானார்

 

தேனாகு மாவடியர் சிவனாரின் ஆகாமி மேவிடவும் மழுவோடு

தீராத மாவினையும் உடனேக            அருள்நாதா

தேடாத ஊரறிகில் உறுபூசை சீராக அமையாத விடராலே

தீராத கோபமுறும் மழுவீசர்                     அருள்நேசர்

 

மேனாளில் நாயகனின் வழியேகி மாவோலை காணுறுக யெனவாகி

வேறாகி வாழுவகை யவர்சேர           லுனதாணை

வேகாமல் மேதினியில் மனமேவும் வேரான நாமசிவ மயமாகி

வேறாகும் மேனியதும் வயதாகும்        வினையீவாய்

 

மானோடு சீருமையள் இடமாகி வாதாடி நாவரசர் குழலூதி

ஏனாதி வீரரென எனவாகும்              இவர்போலே

மாதோடு நீவருமவ் வடிவாயின் னாளாகும் நேசமெனும் எரிதீபம்

மாடாக நானுணரும் நொடியீது           பெருமானே.

 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 10, 2026, 10:46:06 PM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com

சந்தமும் பாடலும் அருமை. 

அனந்த்

>> அசையாது ஆகாய - புணர்கையில் சந்தம் மாறும். 

GOPAL Vis

unread,
Aug 10, 2026, 11:02:08 PM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
மிக அருமையான சந்தம், பாடல். 

ஆனாயர் ஊதுகுழல் இசையாலும் ஆடோடு மாடினமும் அசையாது

ஆகாய வாதிபனுன் நசைமீறி             அருளீவாய்

ஏனாதி யாருடைய புகழாலும் ஏராரும் மாவடியரின் நிலைமாறி

ஏலாத நீறணிவர் கொடுவாளில்         உனதானார்


மாடினமும் --> மாடுகளும்?

அசையாது ஆகாய --> புணர்ச்சி. 

மாவடியரின் --> சந்தம் (தானதன)


கோபால். 

On Tue, Aug 11, 2026 at 7:48 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
வண்ண விருத்தம் முயற்சி 15 (ராம்) (திருத்தங்கள் செய்தமைத்த மீள்பதிவு)

சோமவாரப் பிரதோஷப் பாடல்

 

தானான தானதன தனதான தானான தானதன தனதான

தானான தானதன தனதான           தனதான

 

(மனத்தில் தோன்றிய சந்தத்தில் எழுதிய பாடல்)

-------------------------------------------------------------------------------------

 

ஆனாயர் ஊதுகுழல் இசையாலும் ஆடோடு மாடினமும் அசையாது

ஆகாய வாதிபனுன் நசைமீறி             அருளீவாய்

ஏனாதி யாருடைய புகழாலும் ஏராரும் மாவடியரின் நிலைமாறி

ஏலாத நீறணிவர் கொடுவாளில்         உனதானார்

 

..................

Ram Ramakrishnan

unread,
Aug 10, 2026, 11:04:01 PM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அனந்தஜீ.

புணர்ச்சிப் பிழையைத் திருத்துவேன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 10, 2026, at 22:46, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Aug 10, 2026, 11:07:03 PM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு கோபால்.

மாடுகளும் - திருத்தம் அருமை.
மாவடியர் என்றிருக்க வேண்டும்.
புணர்ச்சிப் பிழை அனந்த் ஜீயும் சுட்டினார் 

திருத்தம் செய்வேன்.
 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 10, 2026, at 23:03, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

மிக்க நன்றி, அனந்தஜீ.

இமயவரம்பன்

unread,
Aug 11, 2026, 5:23:04 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அழகான சந்தம், அருமையான பாடல்

Ram Ramakrishnan

unread,
Aug 11, 2026, 8:10:19 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 11, 2026, at 05:23, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages