I came across a clip on YouTube.
It had an interesting rhythm. Are any of you aware of this composition? Do you have any info on the author?
https://www.youtube.com/watch?v=O_0PVXI4RJ0
Amba Stavam by Brahmashri Sadashivan
वन्देऽहन्तेऽनन्ते सुपदर -
विन्दे विन्दे शन्ते निजसुख -
कन्देऽमन्दे स्पन्दे शुभकरि
बहुदयहृदययुते ।
வந்தே³(அ)ஹந்தே(அ)னந்தே ஸுபத³ர -
விந்தே³ விந்தே³ ஶந்தே நிஜஸுக² -
கந்தே³(அ)மந்தே³ ஸ்பந்தே³ ஶுப⁴கரி
ப³ஹுத³யஹ்ருʼத³யயுதே.
தானா தானா தானா தனதன
தானா தானா தானா தனதன
தானா தானா தானா தனதன - தனதன தனதனனா.
V. Subramanian
மேலே உள்ளது 3-அடிப் பாடல். இதன் சந்த அமைப்பை ஒட்டி 4-அடிப் பாடலாக எழுதிய பஞ்சகத்தின் முதற்பாடல் கீழே:
2023-10-15
பொது - "உறுதுணைப் பஞ்சகம்"
----------------
(சந்த அமைப்பு -
தானா தானா தானா தனதன
தானா தானா தானா தனதன
தானா தானா தானா தனதன
தானா தானா தானா தனதன - தனதன தனதனனா )
(4 அடிகளில் ஓரடி நீளம் மிக்கு வருவதால், ஆசிரிய இணைக்குறட்டுறை - என்று கருதலாம்போல்)
1)
முன்போர் நஞ்சே உண்டாய் அமுதென
அன்பால் அன்றோர் கல்லால் அடிபெறும்
இன்பா பெண்சேர் பண்பா ஒலிதிகழ்
இன்பா உன்பூ மென்றாள் இடநிதம் இணையடி உறுதுணையே.
ஒலி திகழ் இன்-பா உன் பூ-மென்-தாள் இட நிதம் இணையடி உறுதுணையே - ஓசைநயம் மிக்க சொற்கள் திகழும் இனிய பாமாலைகளை உன் அழகிய மென்மலர்ப்பாதத்தில் தினமும் இட்டு வணங்கினால், இருதிருவடிகளும் எந்நாளும் உற்ற துணை ஆவன;
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMZHa0KZkYchp4tepGADrXrzU%3DECoE%2Bxr-Csg3Bi4DMpQ%40mail.gmail.com.