மார்கழி வெண்பாக்கள் -2025-26

7 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Dec 25, 2025, 7:58:47 PM (2 days ago) Dec 25
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _*அடியேனின் இன்றைய மார்கழி வெண்பா – நாள் 11*_ 🪷🪷🪷
*செற்றார் திறலழிக்கும் சீதரனைச் சேர்ந்திங்கு*
*குற்றமில் வாழ்வடையக் கோதைதமிழ் – கற்றிடுவாய்!*
*சுற்றத்தின் பற்றெலாம் பெற்றவன்பால் வையென்றாள்*
*எற்றைக்கும் நெஞ்சமதில் ஏத்து*


_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Dec 26, 2025, 10:58:35 PM (17 hours ago) Dec 26
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _*அடியேனின் இன்றைய மார்கழி வெண்பா – நாள் 12*_ 🪷🪷🪷
*சினத்தில் இலங்கை யரசை யழித்த*
*மனத்துக் கினியனைப் பாடி - நனைய*
*நினைத்து நமைக்காய் எழுவன் எனவே*
*கனையெனும் கோதைதாள் காப்பு*


_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

VETTAI ANANTHANARAYANAN

unread,
6:16 AM (10 hours ago) 6:16 AM
to santhav...@googlegroups.com
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

அழகிய வெண்பாக்கள். 
> நமைக்காய் - நமக்காய்?
அனந்த்

Parthasarathy S

unread,
9:24 AM (7 hours ago) 9:24 AM
to சந்தவசந்தம்
நமக்காய் என்றிருக்க வேண்டும். எழுத்துப்பிழை. மன்னிக்க.
Reply all
Reply to author
Forward
0 new messages