எழுத்துதொலை தூரத்திலிருந்தேஎன்னைத் தாக்கினாய் - ஆதலால்நீ ஒரு ஆயுத எழுத்து ;உன்னை ஓயாதுசுற்றினேனே - ஆதலால்நீ ஒரு வட்டெழுத்து ;உயிரோடு உறவாடினாயே - ஆதலால்நீ உயிரெழுத்து ;தலைகீழாக்கினாயே- இனிநீ தான் தலையெழுத்து ;யோசித்தேன் - எனக்குநீ தான் துணையெழுத்து ;கடைசியாக ஒன்று ;ஒற்று எழுத்தாய்
உன்னை விடாது
எழுத்து வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபங்கி, திரிபதாதி,
நிரோட்டகம் ஆகியவற்றை விளக்குகின்றது.
உரை : ஓரெழுத்து ஒரு மொழியாய்ப் பொருள் சுட்டி நின்று பின்னர்
ஒரு எழுத்துச் சேர்த்தால் வேறொரு சொல்லாய்ப் பொருள் சுட்டி அமைதலே
எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்று பெயர். சொல்லப்பட்ட
மொழிகளில் உள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி விட்டால் வேறு பொருள்
தரும்படி அமைப்பது ஒற்றுப் பெயர்த்தல்.
ஒரு பாட்டாக இருப்பதை மூன்றாகப் பிரித்து எழுத மூன்று பாட்டாக
அமையுமானால் அது திரிபங்கி எனப்படும். மூன்று எழுத்துக்களை உடைய
ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும்
நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும்
அமையுமானால் திரிபதாதி எனப்படும். உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து
உயிரெழுத்துக்களும், ப, ம, வ, நீங்கிய பதினைந்து மெய்யெழுத்துக்களால்
உண்டான எழுபத்தைந்து உயிர்மெய் எழுத்துக்களும், (15x5) ப, ம, வ என்ற மூன்று
மெய்யெழுத்துக்களும் இம்மூன்று மெய்யெழுத்துக்களால் உண்டான
முப்பத்தாறு உயிர்மெய் எழுத்துக்களும் சேர்த்து மொத்தம் (5 + 75 + 3 + 36)
119 எழுத்துக்கள் இல்லாமல் பாடுவது நிரோட்டம் என்று அழைக்கப்படும்.
விளக்கம் : ஒற்றுப் பெயர்த்தலுக்குத் தண்டி உரை தரும் விளக்கம்
வேறு. திரிபதாதி என்பதைத் தண்டி திரிபாகி என்று குறிப்பிட்டுள்ளது.
நிரோட்டம் என்பது இதழோடு இதழ் ஒட்டாதது என்று பொருள்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta