குண்டலகேசியின் கதை ( குறுங்காவியம்)

283 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 11, 2021, 12:00:14 AM10/11/21
to santhav...@googlegroups.com


.                     குண்டலகேசியின் கதை-1


முன்னுரை:

தமிழின்  ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி, பௌத்த சமயத்தைச் சார்ந்த நூலாகும். இந்நூல் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை... இதில் 19 பாடல்கள் மட்டுமே  கிடைத்துள்ளன.

இப்பாடல்களைக் கொண்டு காப்பியத் தலைவியின் வரலாற்றை அறிய இயலாது.
எனினும், பொதுவாக நாட்டிலும், இலக்கியத்திலும் வழங்கி வரும்  கதையில்  கற்பனையும்  கலந்து 
"குண்டலகேசியின் கதை"யைப் படைத்துள்ளேன்.

வணிகர்க் குலப் பெண்ணான குண்டலகேசியின் கதை, உள்ளத்தை  உருக்குவது,   ஊழின் வலிமையை   உரைப்பது,    உலக உண்மைகளை
உணர்த்துவது. இனி நூலுக்குள் நுழைவோம்:




            புத்தன் வணக்கம்


முற்றும் தன்னை உணர்ந்தானை,
      முழுதும் அமைதி நிறைந்தானை,
குற்றம் மூன்றும் களைந்தானை,
     கூடும் வினைகள் தடுத்தானை,
பற்று       நீங்கி      உயர்ந்தானை,
     பான்மை உணர்ந்து பகர்ந்தானை,
வெற்றுப் பிறவி அறுத்தானை
      வீழ்ந்து திருத்தாள் பணிவோமே

( குற்றம் மூன்று -- மனம்,மொழி,மெய்களால் உண்டாகும் குற்றம்)



             தமிழ்த்தாய் வாழ்த்து


குழலோடு யாழும் முழவோடு சேர்ந்து
     கொண்டாடும் இன்பத் தமிழே
அழலோடு புனலும் அழித்தாலும் அழியா
     அழகான தொன்மைத் தமிழே
நிழலோடு வெயிலும் விளையாடும் சோலை
     நிகரான தண்மைத் தமிழே
எழிலோடு விளங்கும், புகழோடு துலங்கும்
     இந்நாட்டின் அன்னைத் தமிழே!



                பூம்புகாரின் சிறப்பு


முற்றத்தில் உலர்நெல்லை உண்ப தற்கு
     முனைகின்ற கோழியினை விரட்ட வேண்டிக்
கற்றிகழும் காதணியைக் கழற்றி வீசும்
     கயல்விழியார் உறைகின்ற  அகன்ற வீட்டில்
மற்றந்தக் கனங்குழையும் சிறுவர் தேரின்
     வழியடைத்து விளையாட்டைத் தடுத்தல் அன்றி
உற்றிடுமோர் பகைத்தொல்லை எதுவும் இல்லா
     ஓங்குபுகழ் கொண்டிருக்கும் பூம்பு காரே!



உப்பளங்கள் வெண்மணலாய்ப் பரந்தி ருக்கும்,
     ஓவியமாய்க் காட்சிதரும் பொய்கை, ஏரி,
அப்புறமும், இப்புறமும்  சிறந்தி ருக்கும்.
     அறம்நிலைக்கும் அட்டில்களின் சோற்றுக் கஞ்சி
எப்புறமும் வடிந்தோடும் வீதி தோறும்,
     எருதுகளின் சண்டையினால் சேறாய் மாறும்.
செப்பரிய தவப்பள்ளி, வேள்விச் சாலை,
     திகழ்மருங்குப் பெரும்புகழின் பூம்பு காரே!

         ( அட்டில்கள் -- சமையற்  கூடங்கள்)



                 பூம்புகாரின் தெருக்கள்


கடல்வழியே வந்திறங்கும் குதிரைக் கூட்டம்,
     கால்வழியே வருகின்ற மிளகு மூட்டை,
வடமலையின் பொன்மணிகள்,மேற்கில் உள்ள
     மலைவிளைந்த சந்தனமும், அகிலும்,
தெற்குக்
கடல்பிறந்த ஒண்முத்தும், கங்கை மற்றும்
     காவிரியின் நீர்வளத்தால் விளைபொ ருட்கள்
இடமெங்கும் குவிப்பதனால் தவித்துப் போகும்
      ஈடில்லாப் பூம்புகாரின் பெருந்தெ ருக்கள்

( கால்--- சக்கரம்-- இங்கு வண்டிகளைக் குறிக்கும்)



       பல்வகை வீதிகள்


பட்டு விற்கும் வீதிகளும்
     பவளம் விற்கும் வீதிகளும்
பிட்டு விற்கும் வீதிகளும்
     பிறங்கு பாணர் வீதிகளும்
கொட்டிக் கிடக்கும் பல்பொருட்கள்
     கூவி விற்கும் வீதிகளும்
மட்டில் தொழில்செய் வீதிகளும்
     வயங்கும் வளமார் புகார்நகரில்.



      அங்காடியில் விற்கும் பொருட்கள்


வண்ணமும் விற்பர், சுண்ணமும் விற்பர்,
     மணங்கமழ் புகைப்பொருள் விற்பர்,
உண்பொருள் கூலம், ஒண்ணிறப் பூக்கள்,
     உப்பு,மீன், கள்ளுமே   விற்பர்.
வெண்கலம், இரும்பு, செம்பினில் செய்த
     விதவிதப் பொருட்களும் விற்பர்
கண்கவர் ஆடை, பொன்மணி  அணிகள்
     கலையெழில் கொஞ்சிட விற்பர்.

                    ( கூலம் -- தானியம்)


   
.      வணிகர் இயல்பு


நடுநிலை பிறழா நெஞ்சர்
     நவில்வது யாவும் வாய்மை
கொடுபொருள் குறைக்க மாட்டார்
     கொள்பொருள் மிகையாய்க் கொள்ளார்
வடுவிலா வாணி கத்தில்
     வரவினை வெளியே சொல்வார்.
கெடுநிலை இல்லாக் கோல்போல்
       கேண்மையோர் வணிக மாந்தர்.

        ( கோல் - துலாக்கோல்/தராசு)
( கேண்மையோர் - நட்புக் கொள்பவர்கள்)



            பத்திரை பிறப்பு

பெருங்குடி வணிக னுக்குப்
     பிறந்தனள் பத்தி ரையாள்
அருங்குணப் பண்பு மிக்காள்
      அழகுடன்.நெஞ்சில் அன்பும்
ஒருங்கவே இயைந்த நல்லாள்
       உரைத்திடும் இனிய சொல்லாள்
சுருங்கிய இடையு டையாள்
       சுந்தர வடிவு  டையாள்.


( இவளுக்குப் பெற்றோர் இட்ட பெயர்
பத்தா தீசா. 
பத்ரா என்றும் அழைக்கப்பட்டாள்)

(தொடரும்)
 
                             - தில்லைவேந்தன்


Kaviyogi Vedham

unread,
Oct 11, 2021, 1:09:54 AM10/11/21
to santhavasantham
ம்ம்.. பலே அழகான தொடக்கம். சொல்லருமை கொண்டே
 வரப்போம் காவியம்.. தில்லைக்கு ஒரு ஷொட்டு..தொடர்க,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgPGQ6f8WOigyQfRZ7szkMzAOfFMSpSEdCBxWACPN2%3DWQ%40mail.gmail.com.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 11, 2021, 1:12:26 AM10/11/21
to santhav...@googlegroups.com
புத்தனை வணங்கித் தொடங்கியது அழகு. தமிழ்த்தாய் வாழ்த்தின் சந்தமும் பொருளும் அழகு.

அறம்நிலைக்கும் அட்டில்களின் சோற்றுக் கஞ்சி
எப்புறமும் வடிந்தோடும் வீதி தோறும்,
     எருதுகளின் சண்டையினால் சேறாய் மாறும்.
செப்பரிய தவப்பள்ளி, வேள்விச் சாலை,
     திகழ்மருங்குப் பெரும்புகழின் பூம்பு காரே!

பூம்புகார் கவிதை அருமை! அங்காடிகளும் அங்கு விற்கும் பொருட்களும் அழகு என்றால் வணிகரின் இயல்பு அவர்களுக்கு மணிமகுடம் சூட்டிவிட்டது. ஆகா, கதாநாயகியையும்
முதல் இடுகையிலேயே காட்டி விட்டீர்கள்.

சிலம்பின் பூம்புகார் கண்ணெதிரில் விரிகின்றது. நல்ல தொடக்கம். வாழ்க! நா.பா அவர்களின் " மணிபல்லவம்" , கி.ரா. கோபாலன் அவர்களின் " மாலவல்லியின் தியாகம்" எல்லாம் நெஞ்சில் ஆடுகின்றன.

சிவ.சூரியநாராயணன்.



On Mon, Oct 11, 2021 at 9:30 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 11, 2021, 1:38:50 AM10/11/21
to santhav...@googlegroups.com
கவியோகியாருக்கும், சிவசூரி அவர்களுக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றி.

பட்டினப் பாலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் படித்தவற்றையே என் நடையில் தந்துள்ளேன்.

வருணனைகளின் வரும் காட்சிகளின் சிறப்புக்கு அப்பெரும் புலவர்களே காரணம்.

ஊக்கம் தரும் பாராட்டுகளுக்கு அடியேனின் பணிவான வணக்கமும் நன்றியும்

                     — தில்லைவேந்தன்


Lalitha & Suryanarayanan

unread,
Oct 11, 2021, 2:03:10 AM10/11/21
to santhav...@googlegroups.com
சிலம்பு முதலியவற்றை அடியொற்றித்தான் நான் சுட்டியிருக்கும் இரு நாவல்களும் கற்பனை செய்யப் பட்டிருக்கின்றன. அதுதான் முறையே. தாங்கள் சரியான பாதையில் முறையாகச் செல்கின்றீர்கள். நீங்கள் படைக்கும் குண்டலகேசியைப் படிப்பது சந்த வசந்தத்தின் பேறு. வாழ்க!

சிவசூரி.

saidevo

unread,
Oct 11, 2021, 2:38:32 AM10/11/21
to santhav...@googlegroups.com
தில்லைவேந்தனாரின் குண்டலகேசியின் கதைக் குறுங்காவியம் படிக்கக் குதூகலமாகச் செல்கிறது. எளிய, சொல்லாட்சி வியக்கவைக்கிறது.

ரமணி


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 11, 2021, 3:39:58 AM10/11/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு ரமணி.
சந்தவசந்தத்தைப் பற்றி எனக்குச் சொல்லி அதில் என்னைச் சேர வைத்த  தங்கள் அன்பான  உதவிக்கும் மிக்க நன்றி.

யோகி ஶ்ரீ சுத்தானந்த பாரதியாரின் “ குண்டலகேசி நாடகம்” நூலின் PDF தந்து உதவிய பேராசியர் பசுபதி அவர்களுக்கும் நன்றி

                  - தில்லைவேந்தன்


K.R. Kumar

unread,
Oct 11, 2021, 5:52:39 AM10/11/21
to santhav...@googlegroups.com
தில்லைவேந்தன் ஐயா,

வணக்கங்கள். 

இதுநாள் வரை குணடலகேசியின் பெயர்தான் கேள்விப்பட்டுள்ளேன். இன்றுதான் கதையைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ளேன். 
மிகச் சிறப்பு.!

மிக்க நன்றி.

குமார்(சிங்கை)

Sent from my iPhone

On 11 Oct 2021, at 15:39, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 11, 2021, 6:24:50 AM10/11/21
to santhav...@googlegroups.com
திரு குமார் (சிங்கை) அவர்களுக்கு நன்றி


NATARAJAN RAMASESHAN

unread,
Oct 11, 2021, 9:29:25 PM10/11/21
to santhav...@googlegroups.com

. .                  குண்டலகேசியின் கதை - 2


முன் கதைச் சுருக்கம் :

இயற்கை அழகும்,செல்வ வளமும், சமயப் பொறையும், வணிகச் சிறப்பும் கொண்டது பூம்புகார்  நகரம்.

இந்நகரின் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை. அழகும், அறிவும், அன்பும், அருளும் நிறைந்தவள்..

இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும்  சென்று கொண்டிருந்த இவள் வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களை இனிக் காண்போம்:

.

பத்திரையின் தாய் இறத்தல்


சிறந்திடும் இன்ப வாழ்வில்
     திருப்பமும் வந்த தம்மா.
அறந்திகழ் அன்புத் தெய்வம்
     அன்னையும் மறைந்தாள் ஓர்நாள்.
பிறழ்ந்தது கனவு, தன்னைப்
     பெற்றவள் பிரிவி னாலே
உறைந்தனள் துன்பத் தாலே
      ஊழ்வலி அறிந்தார் யாரே?



       பத்திரை வளர்தல்


தாயவள் பிரிவால் வாடித்
     தவித்தனள் பத்தி ரையாள்.
சேயவள் மகிழ்ச்சி கொள்ளச்
     சிறப்புடன் வளர்த்தான் தந்தை.
ஆயநற் கலைகள் எல்லாம்
      அறிந்திடும் வழிகள் செய்தான்.
தூயவள் அவளும் காலம்
     சுழன்றிட வளர்ந்து வந்தாள்.


ஆற்றினில் ஆடி,  வீழும்
     அருவியில் குளித்துத் தென்றல்
காற்றினைப் போல்தி ரிந்து,
     கவலைகள்  தமைம றந்தாள்.
மாற்றிலாப்  பொன்போல்  செல்வ
       வளங்களைப் பெற்று வாழ்ந்தாள்
சாற்றிடும்  அவள்சொல் கேட்டுத்
     தந்தையும் நடந்து கொண்டான்



      பத்திரையின் அழகு


ஓவியப் பாவை அன்னாள்
     ஒளியுமிழ் மின்னல் கண்ணாள்
கூவிடும்  குயில்போல் சொற்கள்
      கொண்டனள்  புருவ  விற்கள்
பூவென மலர்மு கத்தாள்
      பொன்னென ஒளிர்கு ணத்தாள்
காவியத்  தலைவி  என்று
      காண்பவர் வியப்பார் நின்று.



 மாடத்தில் இருந்து  பத்திரை கண்டவை


ஆனதோர் நாளில், வாழும்
     அழகுமா ளிகையின் மாடம்
தானதில் சென்றாள் தன்னைச்
     சார்ந்திடும் தோழி யோடு.
வானமும் முகிலும் சோலை
     வனப்புடை நிலமும்  கண்டாள்.
தேனுணும் வண்டாய் உள்ளம்
      சிலிர்த்திட உவகை கொண்டாள்.


அப்புறமும், இப்புறமும் மக்கள் செல்லும்
     ஆளரவம் மிகுதெருவோ யாரும் இன்றித்
துப்புரவாய்க் காட்சிதரும் விந்தை கண்டாள்
      துடிப்புடனே காரணத்தை அறிந்து கொள்ள
ஒப்பிமனம் தோழியினைக் கேட்டுப் பார்த்தாள்
     ஒன்றுமவள் அறியவில்லை. அந்த நேரம்
அப்பப்பா, தெருவினிலே கண்ட  காட்சி
      அப்படியே குருதியினை உறைய வைக்கும்.




கள்வனைக் கொல்ல   இழுத்துச் செல்லுதல்.


வழிப்பறி செய்வான்,  வம்புகள் செய்வான்,
          வன்மையும், திண்மையும் கொண்டான்
    வனப்புறு தோளன், சினத்துருக் காளன்
          வஞ்சகக் கொலைமிகு கொடியன்,   
அழிப்பதும் உயிர்கள், அடிப்பதும் கொள்ளை,
          அறிந்திடான் அன்பெனும் சொல்லை.
    அமைதியும் அறமும் நாட்டினில்  சிதைத்தான்
           அச்சமே மனங்களில் விதைத்தான்
பழிப்புறு கள்ளன் கயிற்றினால் கட்டிப்
           பாவியைக் கொலைக்களம் நோக்கிப்
    பத்திரை வாழும் தெருவழி இழுத்துப்
            பற்றியே காவலர் போனார்.        
கழிப்பதும் களைகள், காப்பதும் பயிர்கள்,
            காவலன்  மன்னவன்   கடமை.
    களவுடன் கொலையாம் கொடுமைசெய் காளன்
             கதையினை முடித்திட விரைந்தார். 


(கள்வனின் பெயர் - காளன். சத்துவான் என்றும் கூறுவதுண்டு)




கள்வன் மேல் பத்திரை காதல் கொள்ளுதல்


வடிவதன் அழகும்,   புறமொளிர்   விறலும்,
      மயக்கிட  உருகினள்  பேதை.    
கொடியவன்  அவன்மேல் உடனடிக் காதல்
      கொண்டனள் கொடியெனும்  கோதை.     
நெடியவல் விதியோ? வளைந்தநல் மதியோ?
     நெகிழ்ந்திடும்  இளமையின் சதியோ?        
மடியவே மன்னன் ஆணையும்  உளதால்
      வருந்தலே வாழ்க்கையின்  கதியோ?

    (புறமொளிர் விறல்- வீரத் தோற்றம்)


( தொடரும்)

                             -- தில்லைவேந்தன்

 


 











VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 11, 2021, 10:11:57 PM10/11/21
to சந்தவசந்தம்
அருமையான தொடக்கத்துடன் காவியத்திற்கான இலக்கணம் பிறழாது செல்கிறது.

அனந்த்
>மற்றந்தக் கனங்குழையும் சிறுவர் தேரின்
     வழியடைத்து விளையாட்டைத் தடுத்தல் அன்றி
>உற்றிடுமோர் பகைத்தொல்லை எதுவும் இல்லா

இவ்வருணனையை இரசித்தேன்.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 11, 2021, 10:19:07 PM10/11/21
to santhav...@googlegroups.com
பேராசிரியர் அனந்த் அவர்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி


Kaviyogi Vedham

unread,
Oct 12, 2021, 3:38:06 AM10/12/21
to santhavasantham
nadai azagu. nanraga selkirathu.
 pl continue

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 12, 2021, 5:06:26 AM10/12/21
to santhav...@googlegroups.com
கவியோகியாருக்கு நன்றி


Ramamoorthy Ramachandran

unread,
Oct 12, 2021, 7:21:13 PM10/12/21
to Santhavasantham
ஞானியாம் புத்தர் வாழ்த்தில்
       நயத்துடன் நமது வேழம்,
ஆனையை வாழ்த்தல் போலே
      ஆரம்பித் துயர்வு கண்டார்,
சோனையோர் மலையைத் தொட்டே
       சுழன்றுவீ ழருவி யாகி
நானிலம் குளிரப் பாய்ந்து 
        நற்கவி யாறோடட்டும்!
- புலவர் இராமமூர்த்தி 
       


On Tue, Oct 12, 2021, 14:36 NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
கவியோகியாருக்கு நன்றி


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 12, 2021, 7:46:50 PM10/12/21
to santhav...@googlegroups.com
புலவருக்குப் பணிவான வணக்கமும் நன்றியும்

                 — தில்லைவேந்தன்


NATARAJAN RAMASESHAN

unread,
Oct 12, 2021, 8:12:40 PM10/12/21
to santhav...@googlegroups.com



.                  குண்டலகேசியின் கதை -3


முன் கதைச் சுருக்கம் :

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.

சிறு வயதில் தாயை இழந்தாலும் அன்புத் தந்தையின் அரவணைப்பில்  மகழ்ச்சி அடைந்தாள்.

ஒருநாள்,  அரசனின் வீரர்கள், கொடிய கள்வன் காளன் என்பவனைக் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்வதைக் கண்டாள். அவன் மீது காதல் கொண்டாள்.......




     பத்திரை நிலை


ஓதிய கல்வி, கேள்வி,
     ஒன்றுமே உதவ வில்லை.
ஈதலும், அறமும் கொண்ட
     இல்லதன் பெருமை விட்டாள்.
கோதிலாத் தந்தை காத்த
      குலமுறை மரபும்  விட்டாள்.
காதலால் நாணும்  கெட்டாள்,
     காரணம்  அறிய மாட்டாள்



எயிற்றிலே நஞ்சை ஏந்தும்
     எழில்கொளும்  அரவம் உண்டு   
வயிற்றிலே முத்தைத் தாங்கும்
     வனப்பிலாச் சிப்பி உண்டு
பயிற்றியே விளக்கும் கல்வி
      பாங்குடன்  கற்ற போதும்,
கயிற்றினால் ஆடும் பாவை
       காதலால் ஆனாள் பாவை.

       ( எயிற்றில் -- பல்லில்)

        



 தோழியிடம் தன் காதலைக் கூறுதல்


என்னுயிர் அனையாய்  நானிங்(கு)
     இயம்பிடும் சொற்கள் கேளாய்!
இன்னுயிர் தங்க வேண்டின்
      இவனையான் மணக்க வேண்டும்
மின்னெனச் செல்வாய், எந்தை
      விரும்பிட இதனைச் சொல்வாய்
மன்னனைப் பார்த்துப் பேசி
      மாற்றிட வேண்டும் ஆணை.




     தோழியின்  அறிவுரை


கள்ளினை அமுதாய் எண்ணிக்
     களிப்புடன் பருக லாமோ?
முள்ளினை மலராய் எண்ணி
      முடிதனில்  சூட லாமோ?
புள்ளினை வேடன் கையில்
     புகலெனக் கொடுக்க லாமோ?
கள்ளமும் சூதும் கொண்ட
      கயவனை விரும்ப  லாமோ?




செய்தி அறிந்த  தந்தை புலம்புதல்


மங்கையின் தோழி, செய்தி
     வணிகனைக் கண்டு சொன்னாள்.
வெங்கதிர் தளர்ந்து மேற்கில்
     வீழ்வதைப் போலச் சாய்ந்தான்.
தங்கிய புகழும் போனால்,
     தள்ளரும் மானம் போனால்,
எங்குலப் பெருமை போனால்,
    இங்குநான் வாழேன் என்றான்.



இந்தவோர்  இழிவு   நேர
     என்பிழை செய்தேன் கொல்லோ!
முந்தையோர் முறைகள் யாவும்
     முடிந்தன கொல்லோ! என்றன்
சொந்தமும் நட.பும் ஊரும்
     சொல்வதைப் பொறுப்பேன் கொல்லோ!
சிந்திடும் கண்ணீர் மல்கச்
      செப்பினன் உயிரைத் தாங்கி.



    பத்திரையிடம் தந்தை கூறுவது


வழிவழியாய் வந்தகுடிப்  பெருமை விட்டு
     வழிப்பறிசெய் கொள்ளையனை விழைந்தாய் போலும்
பழிவருமே தந்தைக்கு மறந்தாய் போலும்
      பற்றென்மேல் வைத்ததெல்லாம்  துறந்தாய் போலும்
விழிவிரித்த வலையினிலே விழுந்தாய் போலும்
      வெல்லுமதி முழுதினையும் இழந்தாய்
போலும்
அழிவென்ற வழிவிரும்பி நடந்தாய் போலும்
     அன்புடனே சொல்கின்றேன்,  கடந்து போவாய்.



கேட்டவை எல்லாம் தந்தேன்
     கேட்டினைத்  தரவே மாட்டேன்.
காட்டுவாழ் புலிஅன் னானைக்
       கடிமணம் புரிய ஒப்பேன் 
ஊட்டியே வளர்த்த பெண்ணை
      உயிருடன் இழக்க மாட்டேன்
நாட்டினில் வேறு நல்லோன்
       நன்மணம் செய்து வைப்பேன்.




         பத்திரை மறுமொழி.


உளத்தினால் விரும்பி விட்டால்
     உறுமணம் என்றே சொல்வர்.
வளத்தினால், புகழால் ஓங்கி
       வாழ்வதால் தயங்கு கின்றாய்.
அளத்தலில் அன்பால் மெள்ள
       அவனையான் திருத்தி, வாழ்வில்
விளைத்திடும் விந்தை கண்டு
        வியந்துநீ மகிழ்வாய் என்றாள்.



பொம்மையால் மகிழ்ந்த காலம்
     போனதே, பின்னர் என்றன்
அம்மையால் மகிழ்ந்த காலம்
     அதுவுமே போன தந்தோ!
இம்மையில் மகிழ மீண்டும்
      இந்தவோர்  வாய்ப்புத் தந்தால்
செம்மையாய் வாழ்ந்து  காட்டிச்
     சிறப்பதைக்  காண்பாய் நீயும்!

(தொடரும்)

                     -- தில்லைவேந்தன்
 





Subbaier Ramasami

unread,
Oct 13, 2021, 10:00:41 AM10/13/21
to santhav...@googlegroups.com
வளமான தமிழ், வகையான நடை

பட்டினப்பாலை நினைவுக்கு வருகிறது
உணங்குணாக் கவர்ந்த கோழி எறிந்த கொடுங்கார் கனங்குழை,

விலங்குபகை அல்லது கலங்குபகை அறியா    - பட்டினப்பாலை

வாழ்க!

இலந்தை

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 13, 2021, 10:05:35 AM10/13/21
to santhav...@googlegroups.com
இலந்தையாருக்கு மனமார்ந்த நன்றி


NATARAJAN RAMASESHAN

unread,
Oct 13, 2021, 9:35:13 PM10/13/21
to santhav...@googlegroups.com

.                   குண்டலகேசியின் கதை - 4


முன் கதைச் சுருக்கம் :

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
தந்தையின் அறிவுரையும் கேட்காமல் தன் காதலில்  பிடிவாதமாக இருந்தாள்.
அவள் கண்ணீரால் கரைந்த வணிகன் வேறு வழியில்லாமல் கொலைத் தண்டனையிலிருந்து காளனை விடுவிக்க முற்படுகிறான்...........




.   தந்தை உரைத்த  ஆறுதல்


"விழிபுனல்  மண்ணில்  விழுந்தோட
மொழிபல    பேச    முயலாதே
பழிபல எண்ணிப் பதைத்தாலும்
வழிபல   தந்தை  வகுப்பேனே"




             தந்தை கூறுவது


"பூந்தளிர் அன்னாள், என்றன்
      பொன்மகள் கண்கள்  நீரை
ஏந்திடும் நிலையைக் கண்டேன்
      எரிதழல்  மெழுகாய் ஆனேன்.
மாய்ந்திடக் காளன்,  வீரர்
        வாளினை வீசும் முன்னே
வேந்தனைச் சென்று காண்பேன்
       விரைவனே கோயில் இன்னே!


       ( கோயில் -- அரசன் மனை)
        ( இன்னே - இப்பொழுதே)




மண்ணிலே உள்ள செல்வம்
       வாய்த்திடும் போதும், பெற்ற
பெண்ணவள் தாயும் இல்லாள்,
       பெருந்துயர் உற்று வாடிக்
கண்ணிலே நீர்சொ ரிந்தால்,
       காண்பவன் தந்தை கொல்லோ!
வெண்ணிறக் குடையோன் மன்னன்
       விதியினை மாற்றச் செய்வேன்!"




அரசனைக் கண்டு விடுதலை வேண்டுதல்


கண்டனன் பெண்ணின் துன்பம்,
     கடிதினில் தேரில் ஏறிக்
கொண்டனன், அரண்ம னையைக்
     குறுகினன் வேந்த னுக்கு
விண்டனன் நிகழ்ந்த வற்றை.
      வேண்டினன் விடுத லையை.
பண்டுதொல் மரபில் வந்த
       பார்பதி சீற்றம் கொண்டான்.

              ( பார்பதி -- அரசன்)




சீற்றத்துடன் அரசன் கூறுவது


கன்றினுக் காகத் தேரின்
     காலிலே மகனைக் கொன்றும்,
அன்றொரு  புறவுக் காக
      அரிந்துதன் தசையைத் தந்தும்,
நன்றறம்  காத்த மன்னர்
      நலிவிலாக் குடியில் வந்தேன்
என்றுநீ  அறியாய் போலும்,
      என்முனே வராதே போ!போ!




பித்தெனப் பெண்ணைப் பெற்றாய்,
     பெருங்குடி வணிக னோநீ?
கத்தியும் பொன்னே   என்று
     கண்ணிலே குத்த லாமோ?
இத்தரை   காக்கும் மன்னன்
     என்முறை பிழைக்க லாமோ?
புத்தியும் கெட்டுப் போனாய்
       போவென வெகுண்டு சொன்னான்!




.         வணிகன் நயவுரை!



வணங்கிய வணிகன் சொன்னான்,
     " வாழ்கநின் கொற்றம் மன்னா!
இணங்கியே ஏற்றுக் கொண்டேன்
      இயம்பிய கருத்தும் நன்றே!
பிணங்கிடும் மகளைக் கண்டு
     பெற்றவன் என்ன செய்வேன்?
உணங்கிடும் உள்ளத் தோன்நான்
     உரைப்பதைச் சற்றுக் கேளாய்!

     ( உணங்கிடும் - வருந்திடும்)



குலமுறை அறிவேன், உன்றன்
     கோதறு குணமும், நீதி
நிலவிடும் தன்மை மற்றும்
      நேர்மையும் அறிவேன் மன்னா!
சிலமுறை விதியின் சூழ்ச்சி
       தெரிந்திடாப் பேதை ஆனேன்.
அலமரும் என்னைக் காக்க
     ஆருளர் உன்னை விட்டால்?



கொற்றவன் தந்தை ஆவான்
     குடிகளுக் கென்று முன்னோர்
சொற்றனர். பத்தி ரைக்குச்
     சுற்றமும் தாயும் இல்லை.
உற்றதோர் தந்தை போல
     உதவிட வேண்டும் நீயே.
மற்றவன் திருந்தி வாழ
     வாய்ப்பினை நல்கு வாயே!"



                   விடுதலை!


தள்ளரும் உலகின் தன்மை
     சாற்றியே வணிகன் நெஞ்சை
அள்ளிடும் விதத்தில் கூற,
     அரசனும் சினத்தை விட்டுக்
கள்வனின் விடுத லைக்குக்
     கட்டளை இட்டான். வாழ்வில்
துள்ளிடும் விதியின் ஆட்டம்
     தொடங்கியே தொடர்ந்த தம்மா!


( தொடரும்)

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 14, 2021, 11:15:02 AM10/14/21
to santhav...@googlegroups.com


.                  குண்டலகேசியின் கதை- 5


முன் கதைச் சுருக்கம்:

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
மகளின் மனதை மாற்ற முடியாத வணிகன்,மன்னனிடம் நயமாகப் பேசி மன்றாடி அவனை விடுவிக்கிறான்........




மன்னனுக்கு வணிகன் நன்றி தெரிவித்தல்


இன்முகத்  தோடு  மன்னன்
     இருங்கழல் பணிந்து வீழ்ந்தான்.
பொன்மணி,அணிகள், யானை,
     புரவிகள்   பலவும்   தந்தான்
என்மன மகிழ்ச்சிக் காக
      இவற்றைநீ ஏற்ற ருள்வாய்
வன்முறை  இன்றிக்  காளன்
       வாழ்ந்திடச் செய்வேன் என்றான்.



             மன்னன் கூற்று
 

கொட்டியே கொடுத்த போதும்
     கோமுறை பிழைத்தல் செய்யேன்
மட்டிலா  அன்பு  மிக்கு
     மன்னனைத் தந்தை யாகச்
சுட்டிய சொல்லென் உள்ளம்
     தொட்டதால் இணங்கி விட்டேன்
கிட்டிய   விடுத  லையைக்
     கேடுறா வண்ணம் காப்பாய்
    
      ( கோமுறை -- அரச நீதி)



         வணிகன் மறுமொழி
    

வாழி வேந்தே! வாழிகொற்றம்!
     வளமார் நாடு வாழியவே!
சூழும் புகழ்சால் தொன்மைமிகு
     சோழர் குடியும் வாழியவே!
பாழி லாதுன் ஆணையினைப்
     பக்கு வமாகக் கடைபிடிப்பேன்.
ஆழும் அன்பு மகள்மணத்தை
      அடியேன் நடத்த வாழ்த்திடுவாய்





காதல் நோய் கொண்ட  பத்திரை, தனிமையில் வாடுகிறாள். தன் பிரிவுத் துன்பத்தைப் பெருகச் செய்வதாக, அன்றில் பறவையையும், நிலவையும், தென்றலையும் வெறுத்துக் குறை கூறுகிறாள்:




அன்றில் பறவையைக் கடிந்து கொள்வது



அன்றில் புள்ளே நீயென்றும்
     அன்புத் துணையைப் பிரிவதுண்டோ?
இன்று நானும் தனித்திருக்க
      ஏனோ உரத்துக் கூவுகின்றாய்?
நன்று நீளும் இரவுக்குள்
      நலிந்தென் உயிரும் பிரிந்துவிட்டால்
கொன்ற பழியும் உனக்காகும்
     கொஞ்சம் அமைதி காப்பாயே!



        நிலவை வெறுப்பது



வெள்ளை நிலவே நீயின்று
     வெயிலாய்  வெம்மை வீசுவதேன்?
கொள்ளை அழகுக் குளிர்நிலவாய்க்
     கூறும் கவிஞர் பொய்யர்கொல்?
முள்ளின் தொகுப்போ உன்கதிர்கள்?
     மூண்ட பகையும் நமக்குண்டோ?
தள்ளிப் போவாய் வேறிடமே
      தனியே தவிக்க விட்டுவிடு!




          தென்றலை விரட்டுவது



மலையில் இருந்து மணம்சுமந்து
     வருவாய் தென்றல் எனநினைத்தேன்.
உலையின் தீயாய் வெப்பத்தை
      உன்றன் மூச்சாய் விடுகின்றாய்!
இலையோ ஈரம் உன்நெஞ்சில்
       இரக்கம் என்மேல் வரவிலையோ?
நிலையைக் கண்டு நின்றுவிடு
       நெருங்கி டாமல் சென்றுவிடு!




                      திருமணம்


மகளின் நிலைமை கண்டிரங்கி
      வணிகன் செயலில் உடனிறங்கித்
தகவு சார்ந்த சான்றோரைத்
       தனது மனைக்கு வரவழைத்தான்
புகன்ற கருத்தைச் செவிமடுத்தான்
       பொழுதைத் தள்ளிப் போடாமல்            
மிகவும் சிறப்பாய்த் திருமணத்தை
     விரைவில் நடத்த முடிவெடுத்தான்    
       
                         
           

யானை மீதேறி மகளிர் திருமணச் செய்தியை அறிவித்தல்


தேனின் மொழியாள் பத்திரைக்கும்
     சிந்தை கவர்ந்த காளனுக்கும்       
வானின் மீன்கள் நன்னிலையில்
     வயங்கும் நாளில் மணமென்று
மானின் சாயல் இளமடவார்
     வளைகள் குலுங்கி இசையொலிப்ப
யானை    எருத்தம்    மீதேறி
     எங்கும் நகரில் அறிவித்தார்!

      ( எருத்தம் - கழுத்து/ பிடரி)
       

(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 14, 2021, 11:23:36 AM10/14/21
to santhav...@googlegroups.com
நன்று, மிக நன்று !

சிவசூரி.

K.R. Kumar

unread,
Oct 14, 2021, 11:23:50 AM10/14/21
to santhav...@googlegroups.com
அன்புள்ள தில்லை வேந்தன் ஐயா,

அடுத்து நடக்கப்போவது என்ன என்னும் ஆவலைத் தூண்டுவது போல் கவிதை அமந்திருக்கிறது.

வாழ்க! வளத்துடன் !!

குமார்(சிங்கை)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 14, 2021, 11:32:58 AM10/14/21
to santhav...@googlegroups.com
திரு சிவசூரி அவர்களுக்கும், திரு குமார் (சிங்கை) அவர்களுக்கும் நன்றி






    
     






 


















     
    




   
     



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgK6sm54tqTJWKvyhnfbuWP4GLE2LfVu7WtBbeJSwe-kA%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 15, 2021, 8:31:38 AM10/15/21
to santhav...@googlegroups.com

.                   குண்டலகேசியின் கதை -6



முன் கதைச் சுருக்கம்:

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
மகளின் மனதை மாற்ற முடியாத வணிகன்,மன்னனிடம் நயமாகப் பேசி மன்றாடி அவனை விடுவித்தான்.
இனி, அவர்களின் திருமணத்தைக் காண்போம்........




        கதிரவன் தோற்றம்


பேரெழில் பத்தி ரையாள்
     பெட்புடன் காளன் தன்னைச்
சீருடன் மணக்கும் காட்சிச்
     சிறப்பினைக் காண்ப தற்குத்
தேரினில்  குதிரை  ஏழு
     செலுத்தியே கிழக்கு வானில்
காரிருள்  பகைவி  ரட்டிக்
     கதிரவன் வந்தான் மாதோ!




          திருமண ஊர்வலம்


ஈர்ந்தண் முழவு  ததும்பிடவும்
     யாழும் குழலும் விளங்கிடவும்
ஆர்ந்து முரசம் அதிர்ந்திடவும்
     ஆழி சங்கம் முழங்கிடவும்
சேர்ந்து முத்து  வெண்குடைகள்
     திசைகள் தோறும் எழுந்திடவும்
ஊர்ந்து மணநாள் ஊர்வலமும்
     ஊரே வியக்கச் சென்றதம்மாழ





மணவிழாவிற்கு வந்த பல்வகை மக்கள்


பெடையன நடையார் வந்தார்
     பேரிளம் பெண்கள் வந்தார்
விடையன இளையோர் வந்தார்
     மெய்தளர் முதியோர் வந்தார்
உடைப்பெரும் செல்வர் வந்தார்
     உயர்நிலை இருப்போர் வந்தார்
நடைமெலி நல்கூர்ந் தாரும்
       நாட்டமே மிக்கு வந்தார்

( பெடையனம்- பெண்அன்னம் )
( பேரிளம் பெண்கள் -- வயது முதிர்ந்த பெண்கள்)
      ( நல்கூர்ந்தார் -- வறியவர்)  





         திருமண விருந்து


காலை வந்த ஊர்மக்கள்
     களித்துப் பொங்கல், வெண்சோறு,
சாலச் சிறந்த கறிவகைகள்,
     தயிர்சேர் இனிய புளிப்பாகர்
ஞாலம் விரும்பும் நறுங்கனிகள்,
      நாவை மயக்கும் நல்லினிப்பு
மேலும் மேலும் கேட்டுண்டு
     மேவும் விருந்தின் சுவைபுகழ்ந்தார்!


(தயிர்சேர் இனிய புளிப்பாகர் -- தயிர் கலந்து செய்த , இனிய புளிப்பையுடைய மோர்க்குழம்பு)






                  மணவிழா    மண்டபம்



மண்டபத்தின் வாயிலிலே இரும ருங்கும்
     வாழையுடன் கமுகுமரம் தலைவ ணங்கும்
கண்டவர்கள் மனமயங்கும் நீலப் பட்டின்
     கவின்மிகுந்த விதானத்தில் முத்துத் தொங்கும்
வண்டினங்கள் மொய்க்கின்ற மணக்கும் பூக்கள்
      வண்ணவண்ண மாலைகளாம் இங்கும் அங்கும்.
பண்டையர்தம் முறையினிலே அலங்க ரித்த
      பாங்கினுயர் மணவறையில் மகிழ்ச்சி பொங்கும்.
    





      மணமக்கள் மண்டபம் வந்தடைதல்



வெண்புரவி மீதேறித் திண்தோள் காளன்
     மேன்மைமிகு மண்டபத்தை வந்த டைந்தான்
மண்புகுந்த நிலவனைய பத்தி ரையாள்
      மகிழ்ச்சியுடன் மணிச்சிவிகை ஊர்ந்து வந்தாள்
பண்புகுந்த இன்னியங்கள் முழங்க மேளம்
     பருவரைமேல் இடியொலிபோல் அதிர ஆங்குக்
கண்புகுந்த மணக்கோலக் காட்சி யாலே
     கண்பெற்ற பயனடைந்தார் நகர மாந்தர்

       ( இன்னியங்கள் -- இசைக்கருவிகள்)
                 ( பருவரை -- பெரிய மலை)






                     திருமணம்


வெள்ளி முளைக்கும் வைகறையில்
     வேள்வித் தீயை வலம்வரவும்
அள்ளிப் பூக்கள் அவர்மேலே
      ஆன்றோர், பெரியோர் சொரிந்திடவும்
கள்ளி ருக்கும் மலர்க்கூந்தல்
     காதல் மங்கை பத்திரைக்கும்
துள்ளும் இளமைக் காளனுக்கும்
      தூய மணம்தான் சிறந்ததுவே!

Lalitha & Suryanarayanan

unread,
Oct 15, 2021, 8:49:40 AM10/15/21
to santhav...@googlegroups.com
அழகான வருணனைகள் ! திருமணத்தில் நேரில் பங்கு கொண்டது போன்ற உணர்வு!

சிவசூரி.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 15, 2021, 9:04:41 AM10/15/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு சிவசூரி


Subbaier Ramasami

unread,
Oct 15, 2021, 11:08:23 AM10/15/21
to santhav...@googlegroups.com
ARUMAI ARUMAI

On Fri, Oct 15, 2021 at 7:31 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

.                   குண்டலகேசியின் கதை -6





     
    




   
 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 15, 2021, 11:13:21 AM10/15/21
to santhav...@googlegroups.com
பாராட்டுக்குப் பணிவான வணக்கமும் நன்றியும் தலைவரே


NATARAJAN RAMASESHAN

unread,
Oct 16, 2021, 9:55:53 AM10/16/21
to santhav...@googlegroups.com

.                  குண்டலகேசியின் கதை - 7


முன்கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
தந்தையின் செல்வாக்கால் அவனை விடுதலை பெறச் செய்து மணந்து கொள்கிறாள்.
மண வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தொடங்கியது ........
விதியும் பின் தொடர்ந்தது




மணமக்கள் சோலைக்குச் செல்லுதல்


கடிமணம் முடிந்த பின்னர்க்
     காணவே வந்தோர் வாழ்த்தி
விடைபெற, ஓய்வெ டுக்க
     விரும்பியே கணவ னோடு
மடமயில் பத்தி ரையாள்
     மலர்விரி சோலை புக்காள்.
கடமையும் முடிந்த தென்று
     கருதினான் அன்புத் தந்தை




மலர்ப்படுக்கை கண்டு வியத்தல்


தேனைப் பொழியும் நறுமலர்கள்
     தென்றல் வீசத் தாமுதிர்ந்து 
வானின் மீன்கள் கீழிறங்கி
      வயங்கும் அழகோ எனவிளங்கும்.
தானும்  அவனும்  உறங்குதற்குத்
      தரையில்  வண்ண மலர்ப்படுக்கை
ஏனோ இயற்கை விரித்ததென
      எண்ணி மங்கை மனம்வியக்கும்!





சோலைக் காட்சிகள் கண்டு இல்லம் சேர்தல்


மலரினை வண்டு மருவுதல் கண்டும்,
     மடநடை  அனமொடு  சேவல்
உலவிடக் கண்டும், உயர்கிளை மேலே
     உலகினை மறந்திரு கிளிகள்
குலவிடக் கண்டும், வரியுடல் அணில்கள்
     கொஞ்சியே குதித்திடக்  கண்டும்,
நிலவெனும் முகத்தாள் நெஞ்சினில் இன்பம்
     நிறைந்திட மனைதனைச் சேர்ந்தாள்.




                விதியின் நாடகம்
     
    
இல்லற வாழ்வில் இன்பமே கண்டார்
     இருவரும் ஒருவராய் வாழ்ந்தார்
அல்லொடு பகலும் அன்பிலே மூழ்கி
     அன்றிலின் இணையெனத் திகழ்ந்தார்
கல்லெனும் நெஞ்சக் காளனும் காதல்
     களிப்பினில் தன்னிலை விட்டு
நல்லவ னாக மாறிட, விதியின்
     நாடகம்  தொடங்கிய  தம்மா!



பாலென ஒளியைப் பாரினில் நிலவு
     பாங்குடன் பொழிந்தவோர் இரவில்
சேலெனும் விழியாள் நாயக னுடனே
      சென்றனள் மேனிலை மாடம்
கோலமார் எழிலில்  மனங்களில் மையல்
       கொழித்திடத் தென்றலும் தழுவச்
சாலவும் தம்மை மறந்தவர் இடையே
       சட்டென விளைந்ததே ஊடல்





        கள்ளும் கள்ளமும்


கள்ளினை விரும்பி மாந்திக்
     காளனும் நிலைம றந்தான்.
கள்ளமும்,  சூதும்,  உள்ளக்
     கதவுகள் திறந்து கொண்டு
துள்ளியே வெளியே பாயச்
       சொல்லிய தீய  சொற்கள்
அள்ளியே  வீழும் தீயின்
     அருவியாய் ஆன தந்தோ

     


            காளனின் கடுஞ்சொல்


"காளையாம் என்னைக் காதலில் அடையக்
     கருதிய காரிகை  பலரும்
நீளமாய் வந்து வரிசையில் நிற்க
     நீயதில் முந்தியே நின்றாய்
ஆளையும் உருவ அழகையும் விரும்பி
     அடைந்திட நாணமும் விடுத்தாய்",
தேளெனக் கொட்டிய கொடுஞ்சொலைக் கேட்டுத்
       திகைத்தவள் மறுமொழி இறுத்தாள்.


    
    
        பத்திரையின் உறுத்தும் விடை


"நாடியே பொருளைத் திருடிடும் திறமை
     நாயக,  என்னிடம்  காட்டி
வாடிய பெண்ணின் உளத்தினைக் கவர்ந்தாய்
        மறக்கிலை உன்தொழில் இன்னும்"- 
ஊடலில் மங்கை உளறிய சொற்கள்
       உறுத்தவே கறுவினான் சினத்தால்.
ஆடவன் அவனும் ஆத்திரம் அடைந்தும்
         அவளறி யாவணம் மறைத்தான்

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 17, 2021, 9:24:53 AM10/17/21
to santhav...@googlegroups.com

                  குண்டலகேசியின்  கதை-8


முன்கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள். 
மகிழ்ச்சியான மணவாழ்க்கையில், ஒருநாள் ஊடலின் போது அவனைத் ,'திருடன்'என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான்.....


                   கவிக் கூற்று


நெருப்புத் துளியோர் காடெரிக்கும்;
     நெஞ்சின் சினமோ வீடெரிக்கும்;
விருப்பை வெறுப்பாய் மாற்றுபவை
     வீண்சொல் மற்றும் இன்னாச்சொல்.
வரப்பு வேண்டும் வயலுக்கு,
     வரம்பு வேண்டும் வார்த்தைக்கு.
திருப்பு முனையாய் ஓருசொல்லே 
      திகழும் உலக வாழ்க்கைக்கு. 




 சினம் கொண்ட காளன் அமைதி காத்தல்


அடிப்பட்ட வேங்கையென  ஆனான் காளன்,
     ஆனாலும் பூனையைப்போல் அமைதி காத்தான்.
வெடிப்பட்ட நிலம்ஊரை விழுங்கும் அன்றோ?
      வெறுப்புற்ற மலைப்பாம்பின் பசியும் நன்றோ?
கடிப்பதற்கு மிகத்துடிக்கும் கருநா கத்தைக்
     கையினிலே எடுத்தேந்திக் கொஞ்ச லாமோ?
படிப்பதனால் பத்திரைக்குப்  பயனென்? வாழ்வின்
     பான்மையினை அறியாளாய் இருந்தாள் அந்தோ!




நீறு பூத்த நெருப்பானான்
     நெஞ்சம் முழுதும் வெறுப்பானான்
சீறும் அரவாய்ப் பழிதீர்த்துத்
     தீமை புரியக் காத்திருந்தான்
தேறும் அறநூல் ஓராதான்
     சிறுமை நெறியும்  மாறாதான்
கூறும் இனிய மொழிநம்பிக்
     கோதை நல்லாள் வாழ்ந்திருந்தாள்.





காளனின் வஞ்சகப் பேச்சு


உன்மனம் மகிழ வேண்டும்
     உன்முகம் மலர வேண்டும்
நன்முறை நமது வாழ்வு
     நடந்திட வேண்டும் என்று,
வன்முறை விரும்பும் காளன்
      வஞ்சக வாயி னாலே
இன்மொழி பலவும் பேச
     ஏந்திழை நம்பி விட்டாள்



ஆங்கோர் உயர்ந்த நெடுவரைமேல்
     அருளைப் பொழியும் குலதெய்வம்
பாங்காய்க் கோயில் கொண்டுளதால்
      படையல் இட்டுப் பணிந்திடவே
ஓங்கும்   அன்பு   மீதூற
     உவந்து நாமும் செல்வோமே
தீங்கு   நம்மை   அணுகாமல்
     தெய்வம் காக்கும் எந்நாளும்!

     ( நெடுவரை -- பெரிய மலை)



விடுத லையும் உற்றேனே
     விரும்பும் உன்னைப் பெற்றேனே
கெடுதல் யாவும் அற்றேனே
     கிடைத்தற் கரிய நற்றேனே!
நெடுநல் வாழ்வு மற்றிங்கு
     நிலைக்கச் செய்த தெய்வத்தை,
வடுநல் விழியாள் உன்னுடனே
     வணங்கச் செல்லல் முறையன்றோ?

  ( வடுநல் விழி -- மாவடு போன்ற கண்,)



பொன்னுடனே மணியாவும் பதித்துச் செய்த
     பொலிநகைகள் அனைத்தையும்நீ அணிந்து கொண்டு
மின்னொன்று பெண்ணென்று வடிவம் பூண்டு
     விண்ணிறங்கி  மண்மிசைதான்  வந்த தென்று
முன்நின்று  பிறர்வியக்க  வருவாய், அங்கு
     மூவுலகும் அறியாத 'முத்தி' 'கிட்டும்!
கன்னெஞ்சன் வஞ்சத்தைக்  காணாப் பேதை
     களிப்புடனே உடன்செல்ல ஒருப்பட் டாளே!

M. Viswanathan

unread,
Oct 17, 2021, 10:54:30 PM10/17/21
to Santhavasantham
அன்புக் கவிஞர் தில்லைவேந்தன் அவர்களுக்கு,
வணக்கம்.

"வண்டமிழ்ச்  செல்வ மான
    மனங்கொள் காவி யச்சீர்
குண்டல கேசி தன்னைக்
    கொஞ்சு கவிதை யாக்கி
நண்பராம் தில்லை வேந்தன்
    ஞாலம் அறியத் தந்து  
மண்ணிலே நிலைத்து நிற்கும்
    மங்காப் புகழைப் பெற்றார்.."

அன்பன்,
மீ.விசுவநாதன்
18.10.2021 08.23 am 

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 17, 2021, 11:24:45 PM10/17/21
to santhav...@googlegroups.com
அன்புக்கு நன்றி மீ வி அவர்களே


NATARAJAN RAMASESHAN

unread,
Oct 18, 2021, 8:27:31 AM10/18/21
to santhav...@googlegroups.com
  .            குண்டலகேசியின் கதை-9

முன்கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள். 
ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,'திருடன்'என்று சொன்னதால் கடும் சினம் கொண்டு, அவளைப் பழிவாங்க நினைத்தான். 
அங்கொரு மலை உச்சியில்  குலதெய்வக் கோயில் இருப்பதாகக் கூறி அவளை அழைத்துச் செல்கிறான்......




         வழியில் கண்ட வனப்புமிகு காட்சிகள்

                மலைப் பகுதியின் எழில்

ஆடையென மேகநிரை மாமலையை மூடும்
     அழகுமயில் அதைக்கண்டு  சிறகுவிரித் தாடும்
ஓடையிலே விலங்கினங்கள் நீரருந்தி ஓடும்
     உயர்மரத்துக் கிளையுகந்து வான்முகட்டைச் சாடும்
பேடையினை ஆண்பறவை இலைநடுவே தேடும்
     பெண்குயிலும் துணையுடனே சேர்ந்திசைப்பண் பாடும்
வாடையினால் சிலபறவை கூடுகளில் வாடும்
     வனப்புடைய  வண்ணமலர் செடிகொடிகள் சூடும்!



மேகத்தின் நிழல் போன்ற யானைக் கூட்டங்கள்

அகிலும் மணக்கும் சந்தனமும்
     அடர்ந்த  மலையின் சாரலிலே
முகிலின் பரந்த கரியநிழல்
     மொத்தம் வந்து படிந்ததெனத்
திகழும் யானைக் கூட்டங்கள்
     சேர்ந்து நெருங்கி உறங்கினவே 
நிகரில் மருப்பும் ஒளிவீசும்
     நெளியும் மின்னாய்க் கண்கூசும்

        ( மருப்பு -- யானைக்கொம்பு)




      தினைப்புனம் காக்கும் பெண்கள்

நெடுமரத்தின் உச்சியிலே நிலைத்தபரண் மீதமர்ந்து
தடதடவென் றடிக்கின்ற தட்டையொடு தழலொலித்து
விடுகதிர்கள் கவர்கிளிகள் விலகிடவே அவைவிரட்டும் 
சுடர்தொடிக்கை மடவார்கள் சூழ்ந்ததினைப்  புனம்கண்டார்.

      ( தட்டை, தழல் -- கிளிகளை வெருட்டும் கருவிகள்)
                 தட்டுவதால் ஓசை எழுப்புவது தட்டை
                 சுழற்றுவதால் ஓசை எழுப்புவது தழல்




                                 கானகச் சிறப்பு

வானாடு பறவையினம் வண்முகிலுள் போய்மறையும்
கானாடு பிணைமறிகள்  கலையுடனே தாம்விரையும்
தேன்நாடு பொறிவண்டு  செறிமலர்கள் இதழுறையும்
கான்நாட்டின் காட்சிகளைக்  கண்டவரின் மனம்நிறையும்!

                       ( பிணை- பெண் மான்)
                          ( மறி - மான் குட்டி)
                          ( கலை - ஆண் மான்)



               

                           வஞ்சகம் கண்டிலள்


பஞ்சுநிகர் மஞ்சுதவழ் மாமலையும், அம்மலைமேல்
விஞ்சியுயர் விண்தொட்டு விளையாடும் வியன்மரங்கள்,
கொஞ்சுகுளிர் வீழருவி கோலமிகு காட்சிகளை
வஞ்சியவள் கண்டனளே வஞ்சகம்தான் கண்டிலளே



                போகாதே எனத் தடுத்த பறவைகள்


முத்தன்ன வெண்ணகையாய் மொய்குழலாய் மென்னடையாய்    சித்திரையின் முழுநிலவாய்ச் சிரிப்பவளே பத்திரையே
இத்தரையில் கொடியவன்பின் இனிப்போதல் விடுவையெனக்
கத்தினவே  புள்ளினங்கள் காவென்றும் கீயென்றும்



    செல்லாதே  எனத்தடுத்த மரக் கிளைகள்


சேலாடு விழியுடையாய், செல்லற்க, செல்லற்க,
வேலோடு வழிப்பறிசெய் வீணன்பின் செல்லற்க,
நூலோதிப் பயனென்ன? நோக்கறிந்து பிழைப்பையெனக்
காலாடு மரக்கிளைகள் கைகளினால் தடுத்தனவே

                            ( கால் -- காற்று)
                ( காலாடு -- காற்றில் ஆடும்)


(தொடரும்)
                                          -- தில்லைவேந்தன்



Lalitha & Suryanarayanan

unread,
Oct 18, 2021, 9:11:21 AM10/18/21
to santhav...@googlegroups.com
கற்பனையும் கவிதைகளும் அருமை !

சிவசூரி.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 18, 2021, 9:20:40 AM10/18/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு சிவசூரி


NATARAJAN RAMASESHAN

unread,
Oct 20, 2021, 3:59:42 AM10/20/21
to santhav...@googlegroups.com

.                   குண்டலகேசியின் கதை -10

முன்கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள். 
ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,'திருடன்'என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான். 
அங்கொரு மலை உச்சியில்  குலதெய்வக் கோயில் இருப்பதாகக் கூறி அவளை அழைத்துச் செல்கிறான்......




         இருவரும் மலையேறுதல்


புலியைத் தொடரும் மானாக, -- தூண்டில்
     பொன்னை விழுங்கும் மீனாக,
வலையை விரிக்க வருவேடன் -- இரையில்
     மயங்கிச் சிக்கும் புறவாக,  
கொலையில் கொடிய வெறியான்பின்-- தாவிக்
     குதிக்கும் ஆட்டு மறியாக,
மலையில் ஏறும் காளன்பின், -- அந்தோ
     மங்கை சென்றாள் பேதைமையால்!





   தன் உள்ளக் கருத்துத் தோன்றுமாறு காளன் பாடுதல்



அலையலையென விளைபிறவிகள் அவைதுயர்கொடு வரவும்
வலைபுகுந்திடும் கயல்நிரையென மடிந்திறுதியைத் தரவும்
நிலையிழந்திடும் வகைகலந்திடும் நினைவழிந்திடும் உலகில்
கலையுணர்ந்தவர் சுகம்பெறுவதில் கழியுவகையை  விழைவர்!


அறமெனவொரு வழிநெறியினை அறிவுரையென அளிப்பர்
சிறுமயலெனச் சுகக்கடலதைச் சிடுசிடுமுகம் சுளிப்பர்
திறமறிந்தவர் உளம்மகிழ்ந்திடத் திளைத்திடுவரச் சுகத்தில்
மறமிகுந்தவர் மதுமையல்களில் மனங்களித்திட நினைப்பர்!


இதுநாள்வரை முறையேயென  எமையேய்த்திடச் சிலபேர்
இதுதீதென, அதுதீதென இழிவாய்மொழி புகன்றார்
விதிதானொரு கொடுவாளென வெறும்வாதமும் புரிந்தார்
மதுவூறிடும் சுகம்தேடிடும் வழிபோவதெம் தொழிலே!


நரைகூடிடும் திரைமூடிடும் நமன்கூவிடும் புவிமேல்
உரைநீதிகள் உதவாதவை ஒருபோதிலும் மதியேன்
விரைவாயினிச் சுகமேவிட விளையாடுதல் முனைவேன்
தரைவாழ்வினில் மகிழ்வேனெனைத் தடுப்போரிவண் உளரோ?



 
     பத்திரையின் வேண்டுகோள்


 கருத்தில் ஊறிக் கலந்திருந்த -- பழைய
      கள்ள நச்சுக் கொள்கைகளை
வருத்தம் சிறிதும் இல்லாமல் -- இசையில்
     வடித்தான் காளன்.  பத்திரையாள்,
பெருத்த வணிகக் குலப்பெண்ணை -- மணந்து
     பெருமை பெற்ற தகவுடையாய்!
பொருத்தம் இல்லாப் புன்மொழிகள் -- விடுத்துப்
      புகழ்வாய் இறையின் பெயரென்றாள்.



.          காளன் மறுமொழி


சரியென் கண்ணே விளையாட்டைத்
     தவறாய் எண்ணிக் கலங்காதே
விரிவெண் முகிலின் விண்ணுலக
      மேன்மை முத்தி நிலையளிக்கும்
அரிய அருள்செய் குலதெய்வம்
       ஆங்குக் கொண்ட கோயில்காண்!
விரைவில் சென்று படையலிட்டு
         வேண்டும்  வரத்தைப்  பெறுவோம்வா!
      


       
       குலதெய்வம் காண அழைத்தல்


கொடுக்கின்ற கையினையும் கொடுக்கால் கொட்டும்
   கொடுந்தேளின் மிகக்கொடியோன் கூறும் யாவும்
விடுக்கின்ற வெங்கணைகள் ஆகித் துன்பம்
     விளைக்கின்ற தன்மையினை  அறியா மங்கை
நடுக்கின்றி நம்பியவன் கையைக் கோத்து
     நாமுடனே குலதெய்வம் காண்போம் என்றாள்
வெடுக்கென்று முன்சொன்ன சொல்லால் நெஞ்சில்
        வெறுப்பென்ற கனல்வளர்த்தோன் புன்ன கைத்தான்!

Lalitha & Suryanarayanan

unread,
Oct 20, 2021, 4:59:41 AM10/20/21
to santhav...@googlegroups.com
உவமைகளும் சந்தங்களும் பாடல்களும் நன்று,

சிவசூரி.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 20, 2021, 5:08:09 AM10/20/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு சிவசூரி


NATARAJAN RAMASESHAN

unread,
Oct 20, 2021, 9:50:46 PM10/20/21
to santhav...@googlegroups.com
.                    குண்டலகேசியின் கதை -11


முன் கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள். 
ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,'திருடன்'என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான். 
அங்கொரு மலை உச்சியில்  குலதெய்வக் கோயில் இருப்பதாகக் கூறி அவளை அழைத்துச் செல்கிறான்......



 கோயிலில் படையல் இடுதல்


அருள்மணம் கமழும் கோயில்,
     அறநெறி நுழையும் வாயில்,
பொருள்வழிச் செல்வோர்  உண்மைப்
     பொருளினை விழையும்  ஓரில்,
இருள்மனம் வழியைக் காண,
      எல்லொளி ஞானம் சேரில்.
இருவரும் வணங்கிப்  பின்னர்
       இட்டனர் படையல் நேரில்.

                (எல் - சூரியன்)

           ( சேரில் -- சேர் இல் )




                    கவிக் கூற்று


கற்புநெறி பிறழாத குடிப்பி றந்த
     காரிகையாள், காமத்தின் கவர்ச்சி யாலே 
இற்பிறந்த பெருமையெலாம் விட்டுத் தாழ்ந்தாள்
        இழிபிறவி ஒருகள்வன் வலையில் வீழ்ந்தாள்
கற்பிளவை ஒத்தசினக்  காளன், நம்பும்
     காதலியைப் பழிதீர்க்க எண்ணம் கொண்டான்.
நெற்பயிரின் சிறப்பதனை, மேயும் மேதி,
     நினைத்திடுமோ,வருந்திடுமோ, நெஞ்சம் கொஞ்சம்

                     ( மேதி -- எருமை)





மலையுச்சியில்  துன்பத்தைப் போக்கும்  அழகைக் கண்டு மகிழலாம் என்று வஞ்சகமாகக் காளன் அழைத்தல்



மலையிடையினில் பிறந்திடுமொரு மணியெனமிகை அழகே,
அலையிடையினில் விளைந்தெழுகுளிர் அமுதெனவொளிர்  நிலவே,
தொலைமுகடதில் சிலநொடிகளில் துயரறுமெழில் உளதே,
கலகலவென உளமகிழ்வுறக் கடிவிரைவினில் வருவாய்!



கலைமகளென நிலமிசையுனைக் கவிமொழிந்திடும் கனியே,
சிலையுருவெனத் திருமகளெனத் திகழ்வுறுமலர்த் திரளே,
தொலைமுகடதில் சிலநொடிகளில் துயரறுமெழில் உளதே,
கலகலவென உளமகிழ்வுறக் கடிவிரைவினில் வருவாய்!



கொலைபுரிபவன்  மணம்புரிந்தவென் கொழுமலரிளங்  கொடியே,
விலையளித்திடும் விதியழைத்திடும் விடுதலையினைப் பெறவே,
தொலைமுகடதில் சிலநொடிகளில் துயரறுமெழில் உளதே,
கலகலவென உளமகிழ்வுறக் கடிவிரைவினில் வருவாய்!

    (தொலைமுகடு -- தொலைவில் தெரியும் மலையுச்சி)





தோன்றிய தீய நிமித்தங்களைப்  புறக்கணித்துப் பத்திரை செல்லுதல்



இடப்புற மரத்தில் ஆந்தை
     எழப்பிய அலறல் கேட்டாள்
மடக்கொடி ஆடை முள்ளில்
      மாட்டியே கிழியக் கண்டாள்
நடக்கையில் காட்டுப் பூனை
       நடுவிலே போகக் கூந்தல்
தொடுத்தபூ தலையில் வாடத்
      தளர்வுறு மனத்தாள்  சென்றாள்




ஓவியப் பூவின் உள்ளே
     உறைந்திடும்  தேனும்  உண்டோ?
பாவியின் உடல்வ னப்பில்
      பண்புதான் சிறப்ப துண்டோ?
சாவினைத் தருவ தற்குச்
      சற்றுமே  தயக்கம் இல்லான்
வாவென அழைக்க மங்கை
      வல்விதி வழியில் சென்றாள்.     

(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 20, 2021, 10:10:46 PM10/20/21
to santhav...@googlegroups.com
ஓவியப் பூவின் உள்ளே
     உறைந்திடும்  தேனும்  உண்டோ?

---  அருமை ! காவிய இலக்கணத்தைப் பின்பற்றி நன்று நடக்கிறது.

சிவசூரி.











































































--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 21, 2021, 1:37:58 AM10/21/21
to santhav...@googlegroups.com
திரு சிவசூரி அவர்களுக்கு நன்றி





NATARAJAN RAMASESHAN

unread,
Oct 21, 2021, 9:20:17 PM10/21/21
to santhav...@googlegroups.com
.                  குண்டலகேசியின் கதை- 12

முன் கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.
ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’ என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான்.
இருவரும், அங்கொரு மலையில் குலதெய்வக் கோயிலில் படையிலிட்டு வழிபட்டனர்.
பிறகு இயற்கை அழகைக் காணலாம் என்று கூறி மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான்…….

 


               மலை உச்சிக்குச் செல்லுதல்

 

சுடுநெருப்புள் சென்றுவிழும் மலரே அன்னாள்,
     சொற்பிழையால் விளைதுயரம் அறியா மின்னாள்
கடுவனொடு மந்திவிளை யாடக் கண்டாள்
      களிப்புற்றாள், விருப்புற்றாள், மேலே சென்றாள்
நெடுமலையின் முடியதனை முத்த மிட்ட
     நீள்கொண்மூ எழில்கண்டு தனைம றந்தாள்
அடுதொழிலன், கொடுங்குணத்தன் சிரித்துக் கொண்டான்
     அடுத்தவினை தொடுத்திடவே முன்னே சென்றான்

                          ( கொண்மூ – மேகம்)

 



     உச்சியிலிருந்து பத்திரை கண்ட காட்சி

 

பொம்மைகளாய்த் தோன்றுகின்ற மாளி கைகள்,
     புல்வெளியாய்க் காட்சிதரு கான கங்கள்,
வெம்மைமிகு விலங்கொன்றின் விரித்த வாயாய்
      விழுபவரை  விழுங்குகின்ற  பள்ளம்  கண்டாள்.
அம்மம்ம, அழகென்ற போதும், நெஞ்சில்
     அழியாத அச்சத்தைத் தருதல் கண்டாள்.
“இம்மையிலே முத்திதரும் இடத்தைப் பாராய்
       இப்போதே பெறச்செய்வேன்” என்றான் காளன்





                       கவிக்கூற்று

 

குளிர்தென்றல் புயலாக மாறிப் போனால்
     கொடிசெடிகள், மரமெல்லாம் சாய்ந்தி டாவோ?
ஒளிர்நிலவு பெருநெருப்பைப் பொழிந்தால், இந்த
     உலகுயிர்கள் கருகிப்போய் மாய்ந்தி டாவோ?
நளிர்நீரும் நஞ்சானால் வேட்கை தீர
      நானிலத்து மக்களெலாம் எங்குச் செல்வர்?
இளமங்கை நம்பிவந்த கணவன், வஞ்சம்
      இழைக்கையிலே ஏந்திழைதான் என்ன செய்வள்?

 



காளன், தன் தீய எண்ணத்தைத் தெரிவித்தல்

 

பஞ்சணையில் கொஞ்சுவதால் மயங்கி உன்றன்
     பணியாளாய் இருப்பனென்று நினைத்தாய் போலும்,
கொஞ்சமும்நீ மதிப்பதில்லை, திருடன் என்று
     கூசாமல் எனையன்று பழித்து ரைத்தாய்.
வெஞ்சினத்து வீரர்களும் அஞ்சும் என்னை
      வெறுப்பேற்றும் ஆணவத்தை எங்குப் பெற்றாய்?
நஞ்சனைய சொல்லினைநான் மறக்க மாட்டேன்,
     நாணமிலாச் சிறுமகள்நீ இறக்க வேண்டும்!

 



    பத்திரை நடுக்கத்துடன் கூறுவது

 

குலதெய்வத்தின் மீதாணை! தாய்மீ் தாணை!
      குலங்காக்கும் எந்தையவன் மீதும் ஆணை!
நிலங்காக்கும், அறம்காக்கும், நீதி காக்கும்,
      நிகரில்லாச் சோழமன்னன் மீதும் ஆணை!
துலங்குமொரு காதலினால் உனைம ணந்தேன்
      சூதறியேன், தீதறியேன் நம்பு வாயே!
கலங்கடலில் கரைகாணும் விளக்காய் உன்னைக்
       கருதுமெனைப் பிழைகூறல் நன்றோ சொல்வாய்?

 



கேடெதும் நினைக்கா துன்னைக்
     கேள்வனாய்க் கொண்டேன், காதல்
ஊடலில் சொன்ன சொல்லுக்(கு)
     உலகினில் பொருளும் உண்டோ?
 நாடியுன் அன்பை மட்டும்
      நயந்திடும் என்னை நம்பு
தேடிநான் உன்னைக் கண்டேன்
      தெய்வமாய் மனத்தில் கொண்டேன்.

              ( கேள்வன் – கணவன்)

 

திவலையை அலைவெ றுத்தால்
     திரைக்கடல்  வற்றி டாதா?
அவமெனக் குதலைச் சொல்லில்
      ஆத்திரம்  கொள்ள லாமா?
கவவுக்கை நெகிழ லாமா?
       காதலி வருந்த லாமா?
தவறென நினைத்தால் அன்பால்
       சற்றுநீ  மன்னிப்  பாயா?

          ( திவலை – நீர்த்துளி)

 ( குதலைச் சொல்- குழந்தையின் மழலைச்சொல்)

          (கவவுக்கை–அணைத்த கை)

 



     காளன் கடுமொழி

 

புல்லென ஆன போதும்
     பொலிவுறு கொழுநன்  என்றும்,
கல்லென ஆன போதும்
    கணவனே தெய்வம் என்றும்,
சொல்லிய எல்லாம் பொய்யோ?
     சொல்லடி! செருக்கால், அம்பை
வில்லெதும் இன்றி என்மேல்
      விடுத்தனை உன்னைக் கொல்வேன்!


            ( கொழுநன் – கணவன்)

 



பூண்டநகை அனைத்தையுமே கழற்றிப் போடு,
     புதுவாழ்வு தொடங்குவனுன் செல்வத் தோடு.
மாண்டபின்னர் உன்னுடலில் நகைகள் வீணே
      வரும்வாழ்வின் முதலீடாய்க் கொள்வேன் நானே.
ஈண்டிருந்து கீழ்தள்ளிக் கொல்வேன் உன்னை
       என்முடிவில் மாற்றமிலை அறிவாய் பெண்ணே
ஆண்டவனை வேண்டிக்கொள் சாகும் முன்னே,
        அமைதியுறும் ஆன்மாவும் ஏகும் விண்ணே!

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 22, 2021, 8:44:51 PM10/22/21
to santhav...@googlegroups.com

.             குண்டலகேசியின் கதை-13


 

.முன் கதைச் சுருக்கம்


பூம்புகார் வணிகன் மகள் பத்திரைகொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,'திருடன்'என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப்பழிவாங்க நினைத்தான்.

இருவரும்அங்கொரு மலையில் குலதெய்வக் கோயிலில் படையிலிட்டு வழிபட்டனர்.

பிறகு இயற்கை அழகைக் காணலாம் என்று கூறி மலை உச்சிக்கு அழைத்துச் சென்றவன்,அவளைக் கீழேதள்ளிக் கொல்லப் போவதாகவும்.நகைகளைக் கழற்றித் தருமாறும் கூறுகிறான்........

...

 

 

.            பத்திரையின் எண்ணம்

 

காதலித்துக் கைப்பிடித்த கணவன் காளன்

    கறைமனத்துக் கயவனெனக் கண்டாள் அந்தோ!

வாதுசெயும் நேரமிலை வன்ம னத்தான்

    வஞ்சகத்தைத் தந்திரம்தான் வெல்லும் அன்றோ?

பேதையர்கள் யாருமவன் வலையில் வீழ்ந்து

    பெருந்துயரம் இனியடைதல் தடுக்க எண்ணிக்

கோதுநெறிக்  கொடியவனாம்  முள்ளை வேறோர்

      கூர்முள்ளால் களைந்தெறிய உறுதி கொண்டாள்.

 

              (கோதுநெறி -- குற்ற வழி )



 

.           கவிக்கூற்று

 

பொறுத்திடும் பூமித் தாயும்

     பொறுமையின் எல்லை மீறி

வெறுத்திடும் போது பொங்கி

     வெடித்துயிர் விழுங்கல் உண்டு.

முறத்தினால் புலியைத் தாக்கும்

     மொய்வரைப் பெண்ணும் உண்டு

கறுத்தவன் இன்னா செய்தால்

     காரிகை  பூவா கொய்வாள்?

 

   ( கறுத்துசினந்துவெறுத்து)

      (இன்னா - துன்பம்)

 


 

.        பத்திரை நிலை

 

இடிக்கும் உரலில் விட்டதலை,

       இருப்பு லக்கை தப்பிடுமோ?

கெடுக்கும் கீழ்மைக் குணமுடையோன்

      கேள்வன் என்றால் மங்கையவள்

உடுக்கும் புடைவை பாம்பன்றோ?

      உண்ணும் கீரை நஞ்சன்றோ?

தடுக்க   இயலாத்   துயரத்தாள்

    தளர்ந்தாள்நொந்தாள்சினமுற்றாள்

        ( கேள்வன் - கணவன் )      


 

புகைந்திடும் உளச்சி னத்தைப்

    பூமுகம் மறைக்கவேங்கைக்

குகையினில் சென்ற மானாய்க்

     குமைந்தனள் பத்தி ரையாள்.

நகைகளைக் கழற்றிப் போட்டாள்;

      நாயகஉனக்கேஎன்றாள்.

தகவிலான் கொடுமை  தீர்க்கத்

     சடுதியில் வகுத்தாள் திட்டம்.

 

தகவிலான்தகுதி இல்லாதவன்நல்லொழுக்கம் அற்றவன்)

 

       ( சடுதியில் - விரைவில்)

 

 


 

.      கணவனிடம் வரம் கேட்டல்.

 

 

மெல்லியலார் என்றெண்ணிப் பெண்க ளுக்கு

    மெய்வருத்தம்மனவருத்தம் கொடுக்கும் தீயக்

கல்லியல்புக் காளையர்க்குப் பாடம் சொல்லக்

    காரிகையாள் திடம்கொண்டாள்பிறகு சொன்னாள்,

வல்லவனே நான்வணங்கும் தெய்வம் நீயே,

       வலம்வருவேன் மூன்றுமுறை இறக்கும் முன்னே.

இல்லறத்தாள் நான்விரும்பும் இவ்வ ரத்தை

    எனக்களித்தால் என்பயணம் இனிதாய் ஆகும்”.

 

 

         காளனின்  ஆணவப் பேச்சு

 

மேலாடை தனில்நகைகள் கட்டிக் கொண்டான்.

      “மேலுலகம் செலும்பெண்ணே வரத்தைத் தந்தேன்

காலாலே கணவன்மார்  இட்ட வேலை

      காரிகையார் தலையாலே செய்தல் வேண்டும்

நூலோர்கள் சொல்நெறியை இன்று ணர்ந்தாய்

        நுனிமலையில் மூன்றுமுறை என்னைச் சுற்றி

மேலான கதியடைவாய்” என்றான்மங்கை

     விரைவாகச் சுற்றியவன் பின்னே நின்றாள்.

   

 

 

பத்திரை அவனைக் கீழே தள்ளுதல்

 

     

ஊன்றக் கொடுத்த தடியாலே

    உச்சி மண்டை பிளப்பானை,

ஈன்ற தாயின் நல்லாளாம்,

     இல்லாள் கொல்லத் துடிப்பானை,

சான்றோர் பழிக்கும் வினைசெய்யச்

     சற்றும் தயங்கா மனத்தானை,

ஆன்ற  பள்ளம் தனில்வீழ

     ஆங்கோர் நொடியில் தள்ளினளே

       ( ஆன்ற - வாய் அகன்ற)

 

 

.               கவிக்கூற்று

 

தற்கொல்லி எனவந்த தன்கணவன் தனைத்தள்ளி,

முற்கொல்லி எனவுலகோர் மொழிகின்ற பெயர்பெற்றாள்,

இற்செல்விஎழிற்செல்வி் இழுவிதியின் கைச்செல்வி,

கற்சிலையாய் நின்றவளின் கையறவை என்சொல்வேன்!

 

(கையறவை-கணவனை இழந்த நிலைதுன்பம்இயலாமை)

 

(தொடரும்)


                                — தில்லைவேந்தன்







Lalitha & Suryanarayanan

unread,
Oct 22, 2021, 9:59:05 PM10/22/21
to santhav...@googlegroups.com
ஒவ்வோர் இடுகையும் உவமையணி நிறைந்ததுவாய் எழிலுற அமைத்துள்ளீர்கள். பாராட்டுகள்.
சிவசூரி.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 22, 2021, 10:06:08 PM10/22/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு சிவசூரி


NATARAJAN RAMASESHAN

unread,
Oct 24, 2021, 9:15:39 PM10/24/21
to santhav...@googlegroups.com

.              குண்டலகேசியின் கதை - 14



முன் கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள். 
ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,'திருடன்'என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று கொல்ல முனைகிறான். ஆனால் அவள் தந்திரமாக அவனைக் கீழே தள்ளிக் கொல்கின்றாள்.........




. பத்திரை வருந்திப் புலம்புதல்


பொன்பொருள், வீடு, தோற்றப்
       பொலிவுடன் இளமை சேர்ந்தால்,
இன்பமே விளையும் என்பர்
       எனக்கது நடக்க வில்லை!
முன்புநான் செய்த வற்றால்
      மூண்டதோ இந்தத் தொல்லை? 
அன்பினால் நாயின் வாலை
       அசைத்தனன்  நிமிர வில்லை!
                    
       

காதலும் தோற்றேன் என்றன் 
     கணவனைக் கொன்று தீர்த்தேன்
கோதிலாக் குடிப்பி  றப்பும்
     குன்றிடப் பழியும்  சேர்த்தேன்
தீதிலா  உறவை   மீண்டும்
      சென்றுநான் காண மாட்டேன்.
ஏதுநான் செய்வேன் ஐயோ
      எங்குநான் செல்வேன் அந்தோ?




கால்போன போக்கில் நடந்து செல்லல்
.    

ஆல்போன்ற தொல்வணிகக் குலத்தில் தோன்றி
      அருங்கல்விக் கேள்வியெலாம் மறந்து விட்டுச்
சேல்போன்ற விழிமங்கை சிந்தை கெட்டுச்
        சிறுகாம வலைப்பட்டு துன்ப முற்றுச்
சால்பற்ற கள்வனுக்கு வாழ்க்கைப் பட்டுச்
       சரிவினிலே கொடியவனைத் தள்ளி விட்டுக்
கால்போன போக்கினிலே நடந்து சென்றாள்
      கல்முள்ளும் மெல்லடியால் கடந்து சென்றாள்




அழகிய கூந்தலைப் பனங்கருக்கால் பறித்தல்


மனையை வெறுத்தாள், மகிழ்ச்சி வெறுத்தாள்,
வினையை வெறுத்தாள், விதியை வெறுத்தாள்,
தனையும் வெறுத்தாள், தலையின் குழலைப்
பனையின் கருக்கால் பறித்தாள் எறிந்தாள்

                   (குழல் -- கூந்தல்)




             சுருண்ட முடி வளரக் குண்டலகேசி ஆதல்


வண்டினங்கள் மொய்க்கின்ற மலர்சுமந்த கருங்குழலைக்
கண்டவர்கள் உளம்வருந்தக் களைந்தனளே பத்திரையாள்
மண்டுகின்ற சுருள்முடியும் வந்தங்கு வளர்ந்திடவும்,
குண்டலத்துக் கேசியெனக் கொண்டனளே புதுப்பெயரை.


               (குண்டலகேசி-- சுருண்ட முடி கொண்டவள்)






எதிரில் வந்த புத்த மதத் துறவியிடம் தன் கதையைக் கூறுதல்


சுமையுடலால்  சோர்வடைந்து துயருற்றுத் திரிகையிலே
தமையுணர்ந்த புத்தனவன் தகவுடைய அடியவராம்
அமைதிநிலை துறவியவர் அவளெதிரில் நடந்துவர,
இமைவிரியக் கண்டவளும் எடுத்துரைத்தாள் துயர்க்கதையை


(தொடரும்)
                                           -- தில்லைவேந்தன்

Lalitha & Suryanarayanan

unread,
Oct 24, 2021, 10:24:54 PM10/24/21
to santhav...@googlegroups.com
மேகக் கூந்தலைக் களைந்தாள், தன் தேகத் தெழிலை வெறுத்தாள்,
சோகக் கடலில் ஆழ்ந்தாள் எனச் சொல்லும் கவியின் சொற்களில் தோய்ந்த பெருந்துயர் ஆழ்ந்தோம், நாமும் தோளில் அவள் துயர் சுமந்தோம்.! - சிவசூரி.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 24, 2021, 10:30:24 PM10/24/21
to santhav...@googlegroups.com
அருமையான பின்னூட்டம் திரு சிவசூரி.
படைப்பவனுக்கு ஊக்கம் அளிக்கும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 25, 2021, 9:04:59 PM10/25/21
to santhav...@googlegroups.com


.                 குண்டலகேசியின் கதை - 15 ( நிறைவுப் பகுதி)



முன் கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள். 
ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,'திருடன்'என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று கொல்ல முனைகிறான். ஆனால் அவள் தந்திரமாக அவனைக் கீழே தள்ளிக் கொல்கின்றாள்.
மனம் வெறுத்துக் கால் போன போக்கில் அலைந்தவள் , வழியில் கண்ட புத்த மதத் துறவியிடம் தன் கதையைக் கூறுகின்றாள்.........





.    குண்டலகேசியின் கலக்கம்

போகும் இடமெது புரிய வில்லையே 
ஆகும் நிலைமையும் அறிய வில்லையே
நோகும் உளத்தினில் நூறு கவலைகள் 
பாகு கனிமொழி பகர்ந்து கலங்கினள் 



   புத்த மதத் துறவி ஆறுதல் கூறுதல்      


கலங்கும் மங்கையைக் கண்ட துறவியும்
இலங்கும் துயரமும் இடரும் போகுமே
துலங்கும் புத்தனின் தூய திருவடி
நலங்கொள் அமைதியை நல்கும் என்றனன்


 
புத்தன் பெருமையை எடுத்துரைத்தல்


பிறப்பின் தன்மையைப் பெரிதும் அறிந்தவன்
சிறப்பு மிகுந்தவன் தெளிவு தருபவன்
வெறுப்பும் அற்றவன் விருப்பும் செற்றவன்
குறிப்பு ணர்ந்தவர் கொள்ளும் கொள்கையன்


மாரன் அம்பினை மனத்தில் வென்றவன்
ஓரும் அறவழி உணர்ந்து நின்றவன்
ஊரும் உலகமும் உயிரும் உய்ந்திடச்
சேரும் மழையெனச் செய்யும் அருளினன்

               ( மாரன் -- மன்மதன்)




             துறவியின் அறவுரை



கருவாக உயிர்த்திருந்து மண்ணில்  வந்தோம்
     கையிலொரு பொம்மையுடன் குழந்தை ஆனோம்
உருவிலொரு மிடுக்கொளிரும் இளமை பொங்க
     உறுவதெலாம்  இன்பமெனத் திளைத்துப்  போனோம்
வரவிருக்கும் மூப்பதனை  மறந்தே போனோம்
     வாழ்க்கையிலும் காலை,பகல்  இரவு மேவும்.
ஒருவாறு  வாழ்வியல்பை உணரும் வேளை
     ஓடிவிட்ட காலவெள்ளம் வருமோ மீள.



ஓவாமல்  அலைகின்ற கடல்போல் ஆசை 
      உள்ளத்தில் எழுகின்ற வாழ்வின் ஓசை
தாவாத கிளையுண்டோ மனக்கு ரங்கு, 
      தள்ளாடி விழுஞ்சேற்றில் விளையும் தீங்கு.
மூவாசைப் புதைசேற்றில் வீழ்ந்து விட்டு
      மூள்சினமும் களவும்பொய் கொள்வார் கெட்டு.
காவாத நல்லொழுக்கப் பயிரை மேயக்
       காமமெனும் முரட்டாடு சீறிப் பாயும்



தின்பது, தின்று தூங்கித்
     திரிவது வாழ்வில்  வந்த
இன்பமாய் மனத்தில் எண்ணி
     இன்னலின் வலையில் வீழ்வோம் 
ஒன்பது வாயில் ஓட்டை 
      ஒழுகிடும் அழுக்கின் மூட்டை
என்பது புரிந்து விட்டால்
      இவ்வுடல் பற்று நீங்கும்




ஆளென வளர்ந்து வந்தோம்
     அழகினில் பெருமை கொண்டோம்
வாளென நாள்கள் வாழ்வை
     வகிர்தலை அறிய மாட்டோம்
மீளவும் பிறவி  என்னும்
      வெவ்விய தன்மை, புத்தன்
தாளினை அடைந்துய் வோர்க்குத்
       தரையினில் உண்டோ அம்மா!

            ( வகிர்தல் - அறுத்தல்)





மனம் தெளிந்த குண்டலகேசி துறவு பூணுதல்



விண்டநல் மொழிகள் காதில்
      வியனுல(கு) அமுதாய்ப் பாயக்
குண்டல   கேசி   உள்ளம்
       கொண்டது தெளிவின் எல்லை
பண்டுநான் இன்னல்  உற்றேன்
       பரிவுடன் அறமும் அன்பும்
மண்டிடும் புத்தன் காட்டும்
       வழியினிச் செல்வேன் என்றாள்



அழகினைத் துறந்தேன் உள்ள
     ஆசையை அறவே விட்டேன்
பழகிய   உறவும்     நட்பும்
      பற்றுமே மறந்தேன் முற்றும்
அழுகையில்  பிறந்த வாழ்க்கை
       ஆசையாம் துன்பத் தீயில்
மெழுகென அழிதல் கண்டேன்
        மெய்ந்நெறித் துறவு பூண்டேன்.



                புத்த மடத்தில் பயி்ற்சி பெறுதல்


துறவியுடன் புத்தமதத் தூயமடம் தனையடைந்தாள்
பிறவிகளின் உண்மைகளும், பிறப்பிறப்பின் தன்மைகளும்,
அறம்விளக்கும் நன்மைகளும், ஆசைகளின் புன்மைகளும்,
திறமையுடன் பலசமயம்  செப்புநெறி பயின்றறிந்தாள்.




           வாதத் திறமை


பூவொரு புயலாய் மாறிப்
     புலன்களை வென்றாள்.எங்கும்
நாவலோ நாவல் என்று
     நாட்டினாள் கொடியை நாட்டில்.
மேவிய வாதம் எல்லாம்
      வெற்றியும்  பெற்றாள்.மக்கள்
யாவரும் வணங்கிப் போற்றும்
      இணையிலாப் புகழும் உற்றாள் 


( அக்காலத்தில், நாவல் மரக் குச்சியைத் தரையில் ஊன்றி, " நாவலோ நாவல்" என்று கூறி, " நான் வாதத்திற்கு ஆயத்தமாக உள்ளேன்.என்னுடன் வாதிட யாராவது வருகிறீர்களா?" என்று அறைகூவல் விடுப்பது வழக்கம்)






   குண்டலகேசியின் தொண்டும், சிறப்பும்


வறியவர்க்கும் எளியவர்க்கும் முதிய வர்க்கும்
     வாழ்வினிலே யாருமின்றித் தவிப்ப வர்க்கும்
அறவியிவள் உதவியவர் துயர்து டைத்தாள்
       அறச்செல்வி இவளென்று பெயர்ப டைத்தாள்
நெறியுரைத்த  புத்தனவன் வழிந டந்தாள்
        நிலையழிந்தும் நெஞ்சுயர்த்தித் தடம்ப தித்தாள்           
செறிவுடைய செந்தமிழின் காவி யத்தில்
       சிறப்புடனே  தனக்கெனவோர்  இடம்பி டித்தாள்!

                ( அறவி- பெண் துறவி)



                வாழ்த்து!


மடல்விரி நறும்பூ  வாக
      மகிழ்ச்சியின் மணமே சூழ்க!
இடரெலாம் மறைந்து போக
        இன்பமும் அன்பும் வாழ்க!
கடலொடு விண்ணும் மண்ணும்
      கடுவெளி அனைத்தும் வாழ்க!
சுடரொளி   வையம்    வாழ்க!
     துலங்கிடும்  உயிர்கள் வாழ்க!


                  (நிறைவுற்றது)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 25, 2021, 10:44:12 PM10/25/21
to santhav...@googlegroups.com
வேந்தர்கள் ஆலயம் எழுப்புவது வழக்கந்தானே ! தில்லை வேந்தரும் அம்மார்க்கம் சென்றீர், குண்டல கேசிக்குக் கோவில் எழுப்பினீர். கல்லால் இல்லாமல் செந்தமிழ்ச் சொல்லால் எழுப்பினீர் ! செதுக்கிய சிலைகள் இல்லை, ஆனால் புதுக்கிய உவமை பலவேந்தி உலவும் அழகுமிகு பாக்களை எங்கும் நிலைநாட்டியுள்ளீர் ! சிலம்பு, பட்டினப்பாலை, மணிமேகலை, வள்ளுவம் என்று கண்ணில் பட்ட இடமெல்லாம் பழந்தமிழ்ப் பாடல்கள் எதிரொலிக்க, உங்கள் பதமொலித்த விதம் கவர்ந்தது. மன்றில் பலர் உள்ளத்தைக் கவர்ந்த கள்ளர் நீங்கள் !

இன்று நீங்கள் இட்டுள்ளவற்றுள் நான் மீண்டும் மீண்டும் படித்து இன்பில் திளைத்தவற்றைக் கீழே இட்டு மகிழ்கிறேன்.

ஓவாமல்  அலைகின்ற கடல்போல் ஆசை 
      உள்ளத்தில் எழுகின்ற வாழ்வின் ஓசை
தாவாத கிளையுண்டோ மனக்கு ரங்கு, 
      தள்ளாடி விழுஞ்சேற்றில் விளையும் தீங்கு.
மூவாசைப் புதைசேற்றில் வீழ்ந்து விட்டு
      மூள்சினமும் களவும்பொய் கொள்வார் கெட்டு.
காவாத நல்லொழுக்கப் பயிரை மேயக்
       காமமெனும் முரட்டாடு சீறிப் பாயும்

வாளென நாள்கள் வாழ்வை
     வகிர்தலை அறிய மாட்டோம்

அழுகையில்  பிறந்த வாழ்க்கை
       ஆசையாம் துன்பத் தீயில்
மெழுகென அழிதல் கண்டேன்

பூவொரு புயலாய் மாறிப்
     புலன்களை வென்றாள்.எங்கும்
நாவலோ நாவல் என்று
     நாட்டினாள் கொடியை நாட்டில்.
மேவிய வாதம் எல்லாம்
      வெற்றியும்  பெற்றாள்.மக்கள்
யாவரும் வணங்கிப் போற்றும்
      இணையிலாப் புகழும் உற்றாள் 

அறவியிவள் உதவியவர் துயர்து டைத்தாள்
       அறச்செல்வி இவளென்று பெயர்ப டைத்தாள்

மேலும் பற்பல காவியங்கள் நீங்கள் படைப்பீர்களாக !

சிவசூரி.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 25, 2021, 11:09:59 PM10/25/21
to santhav...@googlegroups.com
அன்புள்ள திரு சிவசூரியின் பாராட்டுரையால் உள்ளம் நெகிழ்ந்தேன்.அடியேனின் சிறிய முயற்சிக்கு இப்படியொரு பாராட்டை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
உண்மையைச் சொல்வதானால் ஆழ்ந்த இலக்கியப் புலமையோ,இலக்கண அறிவோ அற்றவன் நான்.
தமிழ் இலக்கியச் சோலையில் நுனிப் புல் மேயும் ஆடு நான்.
அன்பான சொற்களுக்கு எப்படி
நன்றி சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன்.

கவிமாரி அவர்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் பணிவான வணக்கமும் நன்றியும்

உங்கள் வாழ்த்து என்னை மேலும் பல காவியங்களைப் படைக்கத் தூண்டும்.

நன்றி

                — தில்லைவேந்தன்


K.R. Kumar

unread,
Oct 26, 2021, 1:18:40 AM10/26/21
to santhav...@googlegroups.com
அன்புள்ள தில்லைவேந்தன் ஐயா,

சிறு வயதில் குண்டலகேசியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கதையைப் பற்றி ஒன்றுமே அறியேன்.

உங்களது சிறப்பான பாடல்களால் கதையையும் கருத்தையும் அறிந்து கொண்டேன்.

மிக்க நன்றி.

குமார்(சிங்கை)

Sent from my iPhone

On 26 Oct 2021, at 11:10, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 26, 2021, 1:41:59 AM10/26/21
to santhav...@googlegroups.com
அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி திரு குமார் ( சிங்கை)


Ramamoorthy Ramachandran

unread,
Oct 26, 2021, 10:43:16 AM10/26/21
to Santhavasantham
குண்டல கேசிப் பெயர்ப் பொருளைக்
கொண்டவள் வாழ்வின் குறை தீர்க்கும் 
  
பண்டைய பெருமை,  பயமின்மை, 
பரிவினை நீத்த பான்மைதனை

விண்டெமக் குரை,'தில் லைவேந்தன்' 
விளங்கும் சந்த வசந்தத்தார்

கொண்டா டும்புகழ்  பெற்றுப் "பாக்
கொற்றவ"  ராக விளங்குகவே!
- புலவர் இராமமூர்த்தி 



On Tue, Oct 26, 2021, 11:11 NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி திரு குமார் ( சிங்கை)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 26, 2021, 10:47:12 AM10/26/21
to santhav...@googlegroups.com
புலவரின் பாராட்டுக் கவிதைக்குப் பணிவான வணக்கமும் நன்றியும்

Subbaier Ramasami

unread,
Oct 29, 2021, 11:31:46 PM10/29/21
to santhav...@googlegroups.com
முழுதும் படித்தேன். செப்பமான எதுகைகள் அழகான உவமைகள் , மிடுக்கான நடி கொண்டு குறுங்காவியம் நடந்தது

இப்படி ஒழுங்கான கதாநாயகன் இல்லாத அந்த மூல  நூலை எப்படி ஐம்பெரும் காப்பியங்களில்  ஒன்றாகச் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. 



On Tue, Oct 26, 2021 at 9:47 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
புலவரின் பாராட்டுக் கவிதைக்குப் பணிவான வணக்கமும் நன்றியும்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 30, 2021, 2:22:54 AM10/30/21
to santhav...@googlegroups.com
பாராட்டுக்கு மிக்க நன்றி இலந்தையார் அவர்களே
பணிவான வணக்கம்


VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 31, 2021, 10:43:28 PM10/31/21
to சந்தவசந்தம்
அன்புள்ள நடராஜன்,
 
 இக்குறுங்காவியப் படைப்பால் “மன்றில் பலர் உள்ளத்தைக் கவர்ந்த கள்ளர் நீங்கள்” என்று  சிவசூரி கூறியது உண்மை. நான் காவியக் கவிதைகள் யாவையுமாக முழுமையாகப் படித்து வாராதிருந்தாலும், கதையின் போக்கையும் கவிதை அழகையும் கவனித்து வந்தேன். 

தற்செயலாக, நான் என்றோ சென்னையில் (மயிலாப்பூர்) நடைபாதைக் கடையில் வாங்கிப் படிக்காமல் வைத்திருந்த ‘நீலகேசி மூலமும் உரையும்’ என்ற நூல் நினைவுக்கு வந்தது: “Neelakesi, the original text and the commentary of Samaya Divakara Vamana Muni; edited and published by Prof. A. Chakravarti, Principal Goverment Coolege Kumbakonam" , 1936. முதல் பகுதியில் பதிப்பாளரின் நீண்ட (>350 பக்கங்கள்) ஆங்கில முன்னுரையும் பின் மூல நூலும் உள்ளன.  முன்னுரையில் பல சுவையான தகவல்கள் காண்கின்றன. 
    
தொட்டால் கிழியும்படியாக உள்ள 483 பக்கங்கள் கொண்ட அதைப்  புரட்டியதில் குண்டலகேசிக்குப் பின்னவளாக, காளியின் வடிவினளான  நீலகேசி என்பவள் சமண குரு ஒருவரை அழிக்கச் சென்று அது இயலாமல் சமணத் துறவியாகிப் பலரை வாதத்தில் வென்றதாகத் தெரிகிறது. நீங்கள் இறுதியில் சுட்டியநாவல் மரக்குச்சியை ஒட்டிய வாதத்தில் குண்டலகேசியை ((மேலும் பல மதவாதிகளையும்)  நீலகேசி வென்றதாகக் கதை செல்கிறது. 

இப்போது இந்நூல் கிட்டுமாயின் வாங்கிப் படிக்கலாம்.

அனந்த்


On Monday, October 25, 2021 at 9:04:59 PM UTC-4 தில்லைவேந்தன் wrote:


.                 குண்டலகேசியின் கதை - 15 ( நிறைவுப் பகுதி)
                வாழ்த்து!


மடல்விரி நறும்பூ  வாக
      மகிழ்ச்சியின் மணமே சூழ்க!
இடரெலாம் மறைந்து போக
        இன்பமும் அன்பும் வாழ்க!
கடலொடு விண்ணும் மண்ணும்
      கடுவெளி அனைத்தும் வாழ்க!
சுடரொளி   வையம்    வாழ்க!
     துலங்கிடும்  உயிர்கள் வாழ்க!


                  (நிறைவுற்றது)

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 31, 2021, 11:16:04 PM10/31/21
to santhav...@googlegroups.com
பேராசிரியர் அனந்த் அவரகளின் அன்பான பாராட்டுக்குப் பணிவான வணக்கமும் நன்றியும்.

தாங்கள் குறிப்பிட்டுள்ள நீலகேசியைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

தங்கள் பின்னூட்டம் பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.

நன்றி


     
     

























--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Pas Pasupathy

unread,
Nov 1, 2021, 10:51:01 AM11/1/21
to Santhavasantham
 அந்த நூல்   இங்கே  உள்ளது.

பசுபதி

On Sun, 31 Oct 2021 at 23:16, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
பேராசிரியர் அனந்த் அவரகளின் அன்பான பாராட்டுக்குப் பணிவான வணக்கமும் நன்றியும்.

தாங்கள் குறிப்பிட்டுள்ள நீலகேசியைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

தங்கள் பின்னூட்டம் பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.

நன்றி

--

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 1, 2021, 11:11:04 AM11/1/21
to santhav...@googlegroups.com
பேராசிரியர் பசுபதி அவர்களுக்கு நன்றி


Reply all
Reply to author
Forward
0 new messages