Re: வாட்ஸ்ஆப்பில் வந்தவுரு

1 view
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Jul 2, 2026, 9:17:05 AM (yesterday) Jul 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com


🙏
*தொழு மனமே*

திருச்சிற்றம்பலம்

நடப்பதும் மறைப்பதும் சிறப்பெனும் வனப்பதன்
தடத்தருள் யாதிலும் தனித்துவம் மிகுத்ததும்
படத்தர வப்புனற் பனிமதிச் சடைமுடி
விடக்கழுத் துடைவடி வினைத்தொழு மனமே!

நடமிடல் மனங்களுள் சிறந்துணர் வதுயார்
கடவுளென் றுள்ளுயிர் கலந்துணர் வதுவாய்
சடமுடன் சலனமும் உடையவை யதுவாய்
இடமருள் சிவனடி இணைதொழு மனமே!

செய்யிலன் செவ்வண செய்வன எவைக்கும்
செய்யருட் செய்திறன் செய்பொரு ளவைக்கும்
செய்யுவன் செய்யான் சிவனவன் சாட்சி!
செய்யுயிர்ச் சோதியன் சீர்தொழு மனமே!

மெய்யிலன் மாமறை மெய்ப்பொருள் அவனை
மெய்யென வேநிறை வினில்மிளிர் பவனை
மெய்வெளிக் காலமுக் குணங்கடந் தவனை
மெய்யொளிச் சோதியன் மிகைதொழு மனமே!

அருவுரு வெனவும் அனைத்துரு எனவும்
கருவுரு பொருளதன் காரணம் எனவும்
குருவுரு எனவும் குலவிடும் சிவனின்
திருவுரு ஒருமிதந் தினந்தொழு மனமே!

திருச்சிற்றம்பலம்

மீ. ரா
2-7-2026
image0.jpeg
Reply all
Reply to author
Forward
0 new messages