பாண்டியன் போற்றிய பட்டினப்பாலை மண்டபம்
By -கி.ஸ்ரீதரன்
பத்துப்பாட்டு' எனும் தொகை நூல்களுள் ஒன்று கடியலூர் உருத்திரங்கண்ணணனார் பாடிய பட்டினப்பாலை. இதில் சோழ நாடு, காவிரி ஆறு, கரிகாலனின் வீரம், வெற்றி, காவிரிப்பூம்பட்டினம், கடல் வணிகம், வாணிகச் சிறப்பு முதலிய பல வரலாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. கடற்கரை ஊரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு பற்றி பேசுவதால் இது "பட்டினப்பாலை' எனப்பட்டது.
இதன் பாட்டுடைத் தலைவன் கரிகாலன் என்பது "சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது' எனும் நச்சினார்க்கினியர் உரையால் அறியலாம். சோழ மன்னன் கரிகாலன், பட்டினப்பாலையை இயற்றிய புலவர்க்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசு கொடுத்தான் என்பதைக் கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
""தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பண்டு பட்டினப்பாலை கொண்டதும்''
இது மட்டுமல்ல, பட்டினப்பாலை அரங்கேறிய 16 கால் மண்டபத்தையும் கரிகாலன் பரிசாகக் கொடுத்துவிட்டான். இச்செய்தியை சங்கர சோழன் உலா, தமிழ்விடு தூது, பாண்டி மண்டல சதகப் பாடல்களும் குறிப்பிடுகின்றன.
108 வைணவத் தலங்களுள் ஒன்றான திருவெள்ளறை திருக்கோயிலில், "நாழி கேட்டான் வாசல்' எனப்படும் வாயிலின் சுவரில் காணப்படும் கல்வெட்டு தமிழ் இலக்கியத்தைப் போற்றிய அரிய செய்தியைக் கூறுகிறது.
சோழ மன்னரது ஆட்சி வலிமைக் குன்றியவுடன் பாண்டிய மன்னர்களில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1238) சோழ நாட்டின் மீது படையெடுத்து பெரும் பகுதியை அழித்தான். ஆனால் பட்டினப்பாலை அரங்கேற்றப்பட்டதன் நினைவாக இருந்த 16 கால் மண்டபத்தை அப்படியே விட்டுவிட்டான் பாண்டிய மன்னன் என்பதை கீழ்க்காணும் கல்வெட்டுப் பாடல் கூறுகிறது. இப்பாடலின் வழி, தமிழின்பால் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக அம் மண்டபத்தை அழிக்காமல் பெருமை சேர்த்தான் பாண்டிய மன்னன் என்ற உண்மை விளங்குகிறது. பாடல் வருமாறு:
""வெறியார் துவளத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே!''
தினமணியில் தெரிவு: http://nganesan.blogspot.com
அருமையான பதிவு. கல்வெட்டுப்படத்தை என் சேமிப்பில்இணைத்துக்கொண்டேன்.முதல் வரியில் “துளவத்தொடை” என்றுள்ளது.சுந்தரம்.
"வெறியார் துளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே!”
அரிய இந்தப் பாட்டுக்கு 20-ஆம் நூற்றாண்டு ஆசிரியர்கள் என்ன எழுதியுளர் எனப் பார்ப்போம்.
நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அற்புதமான பகிர்வு......மிக்க நன்றி.
2016-06-01 19:50 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, May 31, 2016 at 11:01:13 AM UTC-7, dorai sundaram wrote:அருமையான பதிவு. கல்வெட்டுப்படத்தை என் சேமிப்பில்இணைத்துக்கொண்டேன்.முதல் வரியில் “துளவத்தொடை” என்றுள்ளது.சுந்தரம்.சரியாகப் பிடித்துவிட்டீர்கள். தமிழில் மெட்டாதீஸிஸ் உண்டு. மதுரையை மருதை, குதிரையைக் குருதை என்பதுபோல, துளவ என்னும் சொல்லை துவள என்று மாற்றியுள்ளார் தினமணியில் கி. ஸ்ரீதரன் என்னும் கட்டுரையாசிரியர்.முதலில் ”செந்தமிழ்” (மதுரை), ஆய்விதழ், 41-ஆம் தொகுதியில் அச்சாகியுள்ளது. தி. வை. ச. பண்டாரத்தாரா? சுந்தரேச வாண்டையாரா? - எனப் பார்க்கவேண்டும். ஆனால், அதற்குமுன்பே, ச. வையாபுரிப்பிள்ளை பார்த்துக் கட்டுரை எழுதியுள்ளார். அவர் “தளவத்தொடை” எனப் படித்திருக்கிறார். அதனை எல்லோரும் அப்படியே பின்பற்றியுள்ளார்கள். துளவம் என்றால் துழாய்(=துளசி.இந்தத் தமிழ்ச் சொல் வடமொழிக்கு தமிழ் தந்தது. கல்வெட்டின் மெய்ப்படி காட்டும் சொல் துளவம் தான். தளவு/தளா என்றெல்லாம் சங்க இலக்கியம் குறிப்பிடும் தளவம் முல்லைப்பூக்களாகும்.துளவம் பச்சை நிற இலை. தளவம் = வெண்மையான பூ. தளவம் மெட்டாதீஸீஸ் ஆகி தவளம் என்ற சொல்லாக வடமொழிக்குத் த்ராவிடமொழியில் இருந்து சென்றிருக்கிறது என எண்ணுகிறேன்:ஆடுமாடு என்ற மரபுத்தொடர் போல, காடைகவுதாரி என்கிறோம். காடை = Quails, கவுதாரி = Partridges. கதுவாலி என்னும் பழந்தமிழ்ப் பெயர் கவுதாரி என்று metathesis ஆகிவிட்டது.லாகவம் > லாவகம், புழைக்கடை > புடக்காளி (கொங்குவழக்கு) ..... தளவம் என்றால் முல்லை இனங்கள். தமிழ்நாட்டில் ஒரு 30+ வகை முல்லைச் செடிகள் உண்டு. எல்லா முல்லைப் பூவும் பூத்தபின் வெண்மை நிறம்தான். வடமொழியில் தவளம் என்றால் வெண்மை, தளவம் (தளா, தளவு என்றெல்லாம் தளவம் சங்கத் தமிழில் சொல்லப்பட்டுள்ளது) metathesis ஆகி தவளம் என்று வடமொழியில் பயில்கிறது என்று குறிப்பிட்டேன். மெய்ர்ஹாப்ர் குறிப்பிடும் சொற்பிறப்பை விட இந்த கருதுகோள் சிறப்பு என்றார் அசோகன் பார்ப்போலா (சிந்து ஆய்வுப் பேராசிரியர், ஃபின்லாந்து).கட்டளைக் கலித்துறை (திருவெள்ளறைக் கல்வெட்டுச் செய்யுள்):"வெறியார் துளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே!”
அரிய இந்தப் பாட்டுக்கு 20-ஆம் நூற்றாண்டு ஆசிரியர்கள் என்ன எழுதியுளர் எனப் பார்ப்போம்.
நா. கணேசன்
2016-05-31 22:51 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>: