By Sriram Senkottai, சென்னை
First Published : 02 October 2014 07:16 PM IST
தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் காலமானார்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆழ்ந்த இரங்கல்2 அக்டோபர், 2014 8:08 பிற்பகல் அன்று, Subbaier Ramasami <elan...@gmail.com> எழுதியது:வள்ளலார் காந்தி விழா வருடாவருடம் கொண்டாடுவார். நான் அவர் நடத்திய பல விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவரது அழைப்பை ஏற்று பொள்ளாச்சி கோயம்பத்தூர் வடலூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து என்னும் குறளுக்கேற்ப வாழ்ந்தவர். பல தமிழ் இலக்கிய வெளியீடுகள் சலுகை விலையில் கிடைக்கப் பண உதவி செய்தவர்நிறைவாழ்வு வாழ்ந்தவர். அவர் ஆன்மா இறையடி நீழலில் தங்குக1இலந்தை2014-10-02 19:56 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் இது மிகப்பெரிய இழப்பு.அனந்த்2014-10-02 10:07 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் காலமானார்
காந்தியைப் போற்றி, வள்ளல்
கருணையைப் பற்றி வாழ்ந்தார்
காலமெல் லாம்தமிழ்க்
காவலே சேவையாக
ஏந்திய கையெதற்கும்
இல்லையென் னாம லீந்தார்
இறுதிவரை சுறுசுறுப்பாய்
இனிமையாய் வாழ்ந்துவந்தார்
சாந்திதான் பெறுவார், அஃதில்
சந்தேகம் இல்லை, ஆனால்
தமிழ்ச்சபை களையிழந்து
தளர்ந்துதான் போயிருக்கும்
அண்ணலைப் பார்க்கவேண்டி
அண்ணல்தான் அழைத்தாரோ? நம்
வள்ளலைக் காணவேண்டி
வள்ளல்தான் வாவென்றாரோ?
கண்ணுக்குக் கண்ணாய் நின்ற
சமுதாய ரத்தினத்தைக்
கண்ணற்ற காலன் வெளவிக்
கவர்ந்துசென் றானோ ஏதோ?
ஊராண்ட மன்னவர்கள்
உலகிலே காணா உச்சி
உழைப்பாலும் வண்மையாலும்
தொட்டதே நம்பொள்ளாச்சி
பாராண்ட தலைவரெல்லாம்
பண்பாளர் முன்னே என்னே?
பைந்தமிழ்த் தேனியெங்கோ
பறந்தோடிச் சென்றதம்மா!
நீரோடும் கண்களோடும்
நினைவற்ற நெஞ்சினோடும்
தேரோடும் தெருவிலெங்கும்
திரண்டுள்ள மக்களோடும்
ஓரோரம் நானும் நின்றே
உயிராற வணங்குகின்றேன்
உயர்ந்தாரைப் போற்றலல்லால்
உய்யவழி இல்லை வேறே..
இருகரம் தேயத் தேய
இசைவோடு தந்தோர் சென்றார்
இம்பர்விட் டும்பருக்கும்
ஈவதற் காகத் தானோ?
பொருதாமல் தந்துதந்தே
புன்னைகை செய்தே வென்ற
பொள்ளாச்சி வள்ளல் அவரும்
போய்ச்சேர்ந்தார் புவி இளைக்க,,,,
இசைக்கவி ரமணன்..
03.10.2014 / வெள்ளி / 09.50
--
ஏன் நேரடியாகவே இவண் இடக்கூடாதா?..(yogiyaar)*******************************இதோ ரமணன் கவி..
--
--
ரொம்ப அருமையான தகவல். கொடுத்த தகவல் வள்ளலுக்கு நன்றி,யோகியார்
--
--
நல்ல தகவல் தேனீ அய்யா நீர்!.. எங்கிருந்தெல்லாமோ எடுத்துவந்து இலக்கியக்கூட்டில் அடைக்கின்றீரே!..வாழ்க!,.(வல்லமை பார்த்தேன் நீர் கசிந்தது.. கே. ரவி என் 45 வருட நீண்ட நண்பன்!)_யோகியார்
வழக்கறிஞர் கே. இரவி வல்லமையில் நா.ம.வை நினைவுகூர்ந்துள்ளதைப் படித்தேன்.நல்ல பதிவு.அன்பன்,மீ.விசுவநாதன்
ஆம் நானும் பார்த்தேன். என்ன அழகாக நா.ம அவர்கள் எழுதியுள்ளார்கள்!நல்ல ரசனையுள்ளம் அவருக்கு.வாழ்க அவர் புகழ்,யோகியார்