KATTAlAIK KALITHTHUrAI

46 views
Skip to first unread message

SUBBAIER RAMASAMI

unread,
Oct 2, 2011, 11:58:48 PM10/2/11
to சந்தவசந்தம்
கட்டளைக்கலித்துறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய காரைக்கால் அம்மையார்  விளாஞ்ச்சீரை ஒதுக்கவில்லை. பிற்காலத்தில் இலக்கணத்தைக் கடினமாக்கிய புலவர்காள் இரண்டு காரணங்களுக்காகச் செய்தார்கள்
1 ஓசையை இன்னும் சிறக்கச் செய்யலாம் என்ற உண்மையான ஆர்வம்
2 இலக்கணத்தைக் கடினமாக்கி என்னால் இது முடியும், உன்னால் முடிகிறதா என்று பார் என்ற போட்டி உணர்ச்சியால் ஏற்பட்டது.
 
விளாஞ்சீர் வருதல் நன்றல்ல என்று வகுத்தவர்கள் ஒன்றைமறந்துவிட்டார்கள்.  காய்ச்சீர்கள் இடையே எல்லல கட்டளைத்துறை இலக்கியங்கலிலும் பரவலாக பய்னபடுத்தப்படுகிறது. விளாஞ்ச்சீரை எளிதாகக் காய்ச்சீராக மாற்றிவிடமுடியும். எ.கா.:மூலமே   என்பதை மூலம்நீ என்று மாற்றிச் சரிசெய்துவிடமுடியும்.
 
காரைக்காலம்மமயார் பாடலில் விளாஞ்சீ.ர்
 
 
மனையா ளையுமக்கள்   தம்மையும் தேறியோர் ஆறுபுக்கு 
 
 
 
இலந்தை
 
 
 
 
 

Kaviyogi Vedham

unread,
Oct 3, 2011, 3:15:17 AM10/3/11
to santhav...@googlegroups.com
ஆம் உண்மை இலந்தை!..எனினும் இயல்பாய் வருகையில் நாங்கள் அத்தகைய கஷ்டத்தைப்பொருட்படுத்துவதில்லை.
(உதாரணம்..இவ்வகையில் யான் சொல்லி மீனாட்சிஅம்மையை ககதுறையில் 36 பாடல்கள் பாடி வெகு இயல்பாய் அநந்த் அவர்கள்
 எனக்கு அனுப்பினார். அவற்றை இரண்டு இதழ்களாகப்பிரித்து அம்மன் தரிசனத்தில் இடச்செய்து மகிழ்ந்தேன்)-
யோகியார்

2011/10/3 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
 
 
 
 

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

Pas Pasupathy

unread,
Oct 3, 2011, 5:10:29 PM10/3/11
to santhav...@googlegroups.com
விளாச்சீருக்கும், மாங்காய்ச் சீருக்கும் உள்ள தொடர்பை
அவர்கள் மறக்கவில்லை.
 
யாப்பருங்கலக் காரிகைப் புத்துரையில் குமாரசுவாமிப் புலவர்

சொல்வது:

“ வெண்டளை வழுவாதேனும் இறுதியசை நெட்டெழுத்தாய் நிற்கும் மாங்காய்ச் சீர்களும், இறுதியசை குறினெடிலாய் நிற்கும் விளச்சீர்களும் இடையில் வருதல் நன்றன்று. வருமாயின் இசைவழுவி இழுக்கடையும்”
( நெடில் நடுவில் வரும் காய்ச் சீர்கள் இலக்கியத்தில் பரவலாக வருகின்றன.ஒருவேளை, அதனால்தான் புத்துரை அதைப் பற்றி ஒன்றும்
சொல்லவில்லையோ?)
 

தேவாரத்திலும் ‘புண்ணியா’ என்று வருவதைச் சிவசிவா காட்டி இருக்கிறார். ஆனால், நான் பார்த்தவரை,  பிற்கால அருணகிரி, குமரகுருபரர் பாடல்களில் இத்தகைய சீர்கள் வரவில்லை.
 
 
 
 
இந்தப் பரிந்துரைகளைப் பற்றிச் சில கேள்விகள் எழுகின்றன.
 
 எனக்குத் தெரிந்து தாமோதரம் பிள்ளை, குமாரசுவாமிப் புலவர்
இருவர்தாம் இவற்றைப் பற்றிப் பேசியுள்ளனர். தமிழ் நாட்டில்
எவரும் இவற்றைப் பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. ஏன்?
 
( கேள்வி-பதிலில் கூட கி.வா.ஜ, இரா.திருமுருகன் போன்றோர்
இவற்றைப் பற்றிய தம் கருத்துகளைச் சொன்னதாகத் தெரியவில்லை.
யாராவது தா.பி, புத்துரை படித்துக் கேள்வி கேட்டால் தானே? :-)) இரா.திருமுருகனிடம் அவர் கருத்தைக் கேட்கத் தவறியதற்கு இப்போது வருந்துகிறேன். கோபாலய்யர் அவர் நூல்களில் இதைப் பற்றி எழுதி உள்ளாரா ? தெரியாது.)
 
 
அண்மையில், முனைவர்  மணிகண்டன்  தாமோதரம் பிள்ளையின்
கட்டுரையை மீள்பதிப்புச் செய்ததாகத் தெரிகிறது. எனக்கு அது
கிட்டவில்லை. அதில் வேறு விவரங்கள் இருக்கலாம்.
 
 வெண்பாவுக்குரிய ஓசைக்கு மேல் ‘க.க.துவுக்கு
ஒரு மேலதிக ஓசைக் கட்டுப்பாடு ‘வேண்டும் என்று தமிழ் நாட்டில்
யாரும் நினைக்கவில்லையோ?. ( அ.கி.பரந்தாமனார் காரிகைப் புத்துரையைப்  பற்றிச் சொல்கிறார். ஆனால், அவருடைய நூல் இதைப் பற்றிப் பேசவில்லை. )
 
பொதுவாகவே, நுண்மையான விஷயங்களைத் தவிர்ப்பதே
தமிழிலக்கண நூல்களின் கொள்கையென நினைக்கிறேன்.
 

 
2011/10/2 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
 
 
 
 

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Siva Siva

unread,
Oct 3, 2011, 6:07:37 PM10/3/11
to santhav...@googlegroups.com
This is from a  discussion in Santhavasantham in September 2008:

----
நெடிலில் முடியும் காய்ச்சீர் -  இன்னும் சில உதாரணங்கள்:
 
அப்பர் தேவாரத்திலிருந்து:
 
4.103.2
கற்றார் பயில்கட னாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேனெடுங் கண்ணி வியன்கரமே
நற்றா ணெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே
 
4.103.3
தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவாய வென்னும் மஞ்செழுத்தும்
சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே
 
4.103.6
பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே
மனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர் மயக்கநீக்கி
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி யான்செயு மிச்சைகளே.
 
(இதில் ஈற்றுச்சீரில் விளாங்காயும் வருகிறது.)
 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
-------

2011/10/3 Pas Pasupathy <pas.pa...@gmail.com>


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Oct 3, 2011, 6:14:38 PM10/3/11
to santhav...@googlegroups.com
More from that same thread in September 2008:

----

திருவாசகம்
- நீத்தல் விண்ணப்பம் - 2

கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவுங் கண்டுகொண் டாண்டதெக் காரணமே.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11033&padhi=040&startLimit=82&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC 

நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி
11.33.81)
மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச்சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வந்திருக் கோச்செங்க ணானென்னுஞ் செம்பியனே.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11034&padhi=040&startLimit=69&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

நம்பியாண்டார் நம்பி அருளிய ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

11.34.69)
நிதியுறு வாரற னின்பம்வீ டெய்துவ ரென்னவேதம்
துதியுறு நீள்வயல் காழியர் கோனைத் தொழாரினைய
நதியுறு நீர்தெளித்(து) அஞ்ச லெனவண்ண லன்றோவெனா
மதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

----

2011/10/3 Siva Siva <naya...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Oct 4, 2011, 2:58:07 AM10/4/11
to santhav...@googlegroups.com
உண்மையிலேயே நம்ம சிவாவும் இலக்கணக்கெட்டிக்காரர்தான். மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.
 யோகியார்

2011/10/4 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2011, 3:27:15 PM10/4/11
to santhav...@googlegroups.com
க.க.து.-வில் ஈற்றுச்சீருக்குச் சில (பல!) விதிவிலக்குகள் உண்டு- கனிச்சீர் வருதல், 4-அசை பூச் சீர் வருதல், விளம் இடையில் வரும்படி ஒற்று நீக்கி அலகிடுதல் போன்ற அவற்றில் விளாங்காய்ச் சீர் வருதலையும் சேர்த்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. (வெண்பா ஈற்றுச்சீரின் கட்டுப்பாட்டால் அவதியுற்றோருக்கு, க.க.து. ஈற்றுச்சீர் தென்றல் போலச் சுகமளிக்கும் -:)).

பாவகைகளில் வெண்பா சிறப்பாகக் கருதப் படுவதன் காரணம் அதில் உள்ள யாப்புக் கட்டுப்பாடுகளே (விளாங்காய்ச் சீர் தவிர்த்தல் அவற்றில் ஒன்று). அதற்குப் பின் வந்த கட்டளைக் கலித்துறையில், மேலும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது மட்டுமன்றி, ஆசிரியப் பாவில் பயிலும் இயற்சீர்களில் ஒன்றான விளாச்சீரைத் தவிர்ப்பதையும், க.க.து.வின் ஓசைக்கான ஒரு சிறப்பாக அமைத்திருப்பதாகக் கருதலாம். இது யாப்பின் பரிணாம வளர்ச்சியே என்று கொண்டு அந்தக் கட்டுப்பாடுகளைக் கூடியவரை பின்பற்றுதலே நல்லது. க.க.து.வில் காரிகை போன்ற நீண்ட பாடல் தொகைகளை அமைக்கையில் ஒரு சில விதிவிலக்குகள் தேவைப்படலாம்.   

அனந்த்

 
2011/10/3 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2011, 3:32:17 PM10/4/11
to santhav...@googlegroups.com
>வெண்பாவுக்குரிய ஓசைக்கு மேல் ‘க.க.துவுக்கு ஒரு மேலதிக ஓசைக் கட்டுப்பாடு ‘வேண்டும்
> என்று தமிழ் நாட்டில் யாரும் நினைக்கவில்லையோ?.

கிட்டத்தட்ட அனைத்து வெண்பாக்களும் ஓசைநயம் தொட்டு விளாங்காய்ச் சீர் இன்றி அமைந்திருப்பதன் காரணத்தைப் பற்றிப் பேசாதவர்கள் க.க.து. ஓசையைப் பற்றி
எழுதாமல் போனதில் என்ன அதிசயம்? :-))


>பொதுவாகவே, நுண்மையான விஷயங்களைத் தவிர்ப்பதே
>தமிழிலக்கண நூல்களின் கொள்கையென நினைக்கிறேன்.

:-)))

அனந்த்


2011/10/3 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2011, 3:37:31 PM10/4/11
to santhav...@googlegroups.com
இன்று கண்ட ”விளாங்காய்”ச் சீர் பயிலும் வெண்பா ஒன்று:

ஏரியும் ஏற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளமெல்லாம் - தேரின்
அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு.
(பொருநராற்றுப்படை)

இங்கு, அளபிடை இன்னிசை வகையாதலால் அலகு பெறாததெனக் கொள்ளவேண்டும் எனத் தோன்றுகிறது.

அனந்த்  

2011/10/4 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Oct 4, 2011, 9:08:40 PM10/4/11
to santhav...@googlegroups.com
சமீபத்தில் நான் கட்ட்ளைக்கலித்துறை காவியம் எழுதிய போதுநான் செயதசில
ஆய்வுகளின் விளைவுகளில் ஒன்று. முன்னும் பின்னும் சரியான ஓசையுள்ள
சீர்களை அமைத்தால் விளாஞ்ச்சீரும் காய்ச்சீரும் மிக நயமாக உட்கார்ந்து
கொள்கின்றன..
எ.:கா
உன்னையா ஐயுற்றேன், உன்னையா சோதித்தேன் உத்தமியே
என்னையேன் இன்னும் நீ ஏற்றுகின் றாயோ எழிலரசி?
என்னநான் சொல்லுவேன்,எங்குநான்செல்லுவேன் ஏந்திழையே
முன்னையான் செய்தவம் மூண்டதோ இவ்விதம் முத்தமிழே!


இலந்தை

>>> *எவரும்* இவற்றைப் பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. ஏன்?

>>>> மனையா ளையுமக்கள் தம்மையும் *தேறியோ*ர் ஆறுபுக்கு

Siva Siva

unread,
Jul 15, 2017, 9:13:10 AM7/15/17
to santhavasantham

அளபெடையை எப்படி அலகிட வேண்டும்?

உதாரணமாக:

1)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

கெடுப்பதூஉம் - இது கருவிளங்காய் எனில், = (கெடுப்) குறில்குறில் + (பதூ) குறில்நெடில் + (உம்) குறில் ?


2)
திருவாசகம் - சிவபுராணம் -
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20

வணங்ங்கி - இதனை எப்படி அலகிடுகின்றனர்? புளிமாங்காயா கருவிளமா?

3)

http://ww.kalvithagaval.com/books/TM/9th/Std09-Tamil-2.pdf

Pages 2-3.

Inline image 1

குடிதழீஇ = விளங்காய்ச்சீர் ஆகுமா?

அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Siva Siva

unread,
Jul 15, 2017, 9:14:57 AM7/15/17
to santhavasantham
2017-07-15 9:13 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

அளபெடையை எப்படி அலகிட வேண்டும்?

உதாரணமாக:

1)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

கெடுப்பதூஉம் - இது கருவிளங்காய் எனில், = (கெடுப்) குறில்குறில் + (பதூ) குறில்நெடில் + (உம்) குறில் ?


2)
திருவாசகம் - சிவபுராணம் -
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20

வணங்ங்கி - இதனை எப்படி அலகிடுகின்றனர்? புளிமாங்காயா கருவிளமா?

3)

http://ww.kalvithagaval.com/books/TM/9th/Std09-Tamil-2.pdf

Pages 2-3.

Inline image 1

குடிதழீஇ = விளங்காய்ச்சீர் ஆகுமா?

குடிதழீஇ = "விளாங்காய்ச்சீர்" ஆகுமா? 

Hari Krishnan

unread,
Jul 15, 2017, 9:56:40 AM7/15/17
to சந்தவசந்தம்
2017-07-15 18:43 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

அளபெடையை எப்படி அலகிட வேண்டும்?

உதாரணமாக:

1)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

கெடுப்பதூஉம் - இது கருவிளங்காய் எனில், = (கெடுப்) குறில்குறில் + (பதூ) குறில்நெடில் + (உம்) குறில் ?



இதே அதிகாரத்தில் உள்ள

 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

என்பது இசைநிரை அளபெடை.  இசையை நிறைப்பதற்காக வந்தது.   ஆகவே அலகு பெறும்.

மேற்படிப் பாட்டில் இரண்டு இடங்களிலும் அலகு பெறாது.  இன்னிசை அளபெடை.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Jul 15, 2017, 10:35:03 AM7/15/17
to சந்தவசந்தம்
2017-07-15 18:44 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:



3)

http://ww.kalvithagaval.com/books/TM/9th/Std09-Tamil-2.pdf

Pages 2-3.

Inline image 1

குடிதழீஇ = விளங்காய்ச்சீர் ஆகுமா?

குடிதழீஇ = "விளாங்காய்ச்சீர்" ஆகுமா? 

ஏன் கேட்கிறீர்கள் என்று விளாங்கவில்லை.

அங்கே எங்கே காய்ச்சீர் இருக்கிறது?  குடிதழீஇ, அடிதழீஇ இரண்டுமே கருவிளா.

Subbaiyar Ramasami

unread,
Jul 15, 2017, 10:54:35 AM7/15/17
to santhav...@googlegroups.com
இலக்கணம் நோக்கி அளபெடை அலகு பெற்றும் அலகு பெறாமலும் வரும் என்பது சொல்லப்பட்டுள்ளது. இதற்கு வேறு வரையறை இரு[ப்பதாகத் தெரியவில்லை.

இலந்தை.



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages