பாரதியின் மனப்பெண் கவிதை - ஒரு விளக்கவுரை

373 views
Skip to first unread message

Anand Ramanujam

unread,
Mar 4, 2023, 9:25:02 PM3/4/23
to santhav...@googlegroups.com
"மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!" என்று தொடங்கும் பாரதியின் மனப்பெண் கவிதையின் உட்பொருளை நான் உணர்ந்தவாறு விளக்க முயன்று இக்கட்டுரைத்தொடரை எழுதுகின்றேன். இவ்விழைக்கு அன்பும் ஆதரவும் அளிக்குமாறு வேண்டுகிறேன்.

முன்னுரை

'செல்வம் என்பது சிந்தையின் நிறைவே' என்னும் ஆன்றோர் வாக்கு. ஒருவனிடம் பொருட்செல்வம் மிகுதியாக இருந்தாலும், மனநிறைவு இல்லையென்றால் அவன் வறியவனாகவே கருதப்படுவான். நெஞ்சில் உரமுமின்றி நினைவில் தெளிவுமின்றி நிற்பவர்களுக்கு அன்பு, அறிவு, அருள் என்னும் உடைமைகள் இருந்தாலும் அவை யாவும் பயனற்றுப் போய்விடும். ஊக்கம் நிறைந்த மனமே சிறந்த உடைமையாகும் என்னும் இவ்வுண்மையை 'உள்ளம் உடைமை உடைமை' என்று திருக்குறளும் சாற்றுவதைக் காணலாம். 

அதனால் மனத்தை அதன் போக்கில் போகவிடாமல், உயர்ந்த நோக்கின்படி வழிநடத்திச் செல்லும் தலைவனாக நாம் இருக்கவேண்டும். நாம் வேண்டியபடி உள்ளம் சென்றால்தான், உள்ளம் வேண்டியபடி உடல் செல்லும்; ஐம்புலன்களும் பக்குவப்படும். 

மனத்தின் தன்மையைத் தெளிவாக உணர்ந்த சித்தனான பாரதியும், 'பேயாய் உழலும்' மனத்தை 'நில்' என்று சொல்லி நிலைநிறுத்தப் பார்த்தான்.  'எனது உளமே! சஞ்சலம் தவிர்த்து சிவானந்தப் பேற்றை நாடி நாள்தோறும் சார்ந்து நிற்பாய்' என்று அறிவுறுத்தியும் பார்த்தான். இந்தக் கட்டளையும் அறிவுரையும் உள்ளத்தை ஒன்றும் செய்யவில்லை; மனம் உழல்வதையும் நிறுத்தவில்லை. 

அதனால், சிந்தையைத் தெளிவாக்க வேறொரு யுக்தியைக் கையாண்டான். 'மனத்தைக் கனிவுடன் கூப்பிட்டுப் பார்ப்போம்; வாழ்த்துவோம்; பின்பு அதன் குறைகளைச் சுட்டிக்காட்டுவோம்; அதன் பெருமைகளையும் சொல்வோம்; இறுதியில் புத்தி புகட்டுவோம்; ஊக்கமும் கொடுப்போம்' என்னும் முடிவுக்கு வந்தான். 

அவ்வாறு மனத்துக்கு அறிவுறுத்த நினைந்தபோது ஓர் உளவியல் ஞானியாகவே மாறினான் பாரதி. மனத்தின் செயல்பாடுகளை நுண்ணறிவுடன் ஆராய்ந்து செய்த இந்த ஆத்ம விசாரத்தின் விளைவாக உதித்ததுதான் அவனது 'மனப்பெண்' கவிதை. இந்தக் கவிதையின் ஆழ்ந்த கருத்தை வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்கப் பின்வரும் பதிவுகளில் முயன்று பார்ப்போம்.

இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Mar 7, 2023, 6:27:29 AM3/7/23
to santhav...@googlegroups.com
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!

மனமெனும் பெண்ணே!

புலவர்கள் பொதுவாக நெஞ்சை ஓர் உயர்திணைப் பொருளாகப் பாவித்து அதனுடன் பேசுவதுபோல் அமைந்த கவிதைகளை இயற்றுவது வழக்கம். 

கேட்குந போலவும் கிளக்குந போலவும்
இயங்குந போலவு மியற்றுந போலவும்
அஃறிணை மருங்கினு மறையப் படுமே.

என்னும் தொல்காப்பிய நூற்பாவின்படி, கேளாதனவற்றைக் கேட்பன போலக் கருதி விளிப்பது யாப்பியல் மரபு. மேலும், ‘புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே’ என்கிறார் தொல்காப்பியர். அதாவது, பொதுவாக  நெகிழ்ச்சி அடையும்போதும் உணர்ச்சி வசப்படும்போதும் பறவைகள் மற்றும் மனத்தை விளிப்பது வழக்கம். 

அதேபோல், பெண்ணை விளித்து (மகடூஉ முன்னிலையாக) கவிதை இயற்றுவதும் உண்டு.  குதம்பைச் சித்தர், அழகணிச் சித்தர் போன்ற  சித்தர்களின் பாடல்களிலும் பாரதியின் கண்ணன் பாடல்களிலும் இதனைப் பெரிதும் காணலாம். 

‘மனப்பெண்’ என்னும் கவிதையிலோ மனத்தையும் பெண்ணையும் விளிக்கும் இவ்விரண்டு மரபினையும் ஒருசேரக் கலந்து மனத்தைப் பெண்ணாகப் பாவித்துப் புதுமை செய்திருக்கிறான் பாரதி.

வாழி!

நல்ல செய்து நரரை உயர்த்தவும்
அல்ல செய்துஅங்கு அளற்றிடை ஆழ்ப்பவும்
வல்லது இந்த மனம்.

'நன்மை புரிந்து மனிதர்களை உயர்த்தவல்லது மனம்; அதேசமயம், தீமையைச் செய்து தாழ்த்தவல்லதும் மனமே' என்கிறது பிரபுலிங்கலீலை என்னும் நூல். 'வாழ்கின்றாய் வாழாத நெஞ்சே' என்று திருவாசகம் கூறுவதையும் காணலாம். அதாவது, வாழ்வது போல் நினைத்துக்கொண்டு உண்மையில் வாழ்க்கையை வீணடிப்பதுதான் மனத்தின் போக்காக இருக்கிறது.  அதனால்தான், 'மனமே நீ வளமாக வாழ்ந்தால்தான் நானும் நலமுற வாழமுடியும்; அதனால் சிறாப்பாக வாழ்ந்து என்னையும் வாழ்வித்திடுவாய்' என்னும் கருத்தை 'வாழி' என்னும் ஒரே வார்த்தையில் தெளிவுபட மொழிகின்றான் பாரதி. 

நீ கேளாய்!

புத்தி வேறு மனம் வேறு என்று சொல்வார்கள். புத்தியின் சொல்படி கேட்டு இயங்குவது மனம். ஆனால் மனம் பல சமயம் தனது சூழ்நிலையின் தூண்டல்களால் பல்வேறு விதமாகத் துலங்கப்பட்டு அலைபாய்வது உண்டு. அத்தகைய சமயங்களில் புத்தியானது மனத்திற்கு ஒரு நல்ல ஆசானாக இருந்து அறிவுரை சொல்லவேண்டியது முக்கியம். அவ்வாறு தன்னைப் புத்தியாகப் பாவித்துத் தன் பகுத்தறிவில் பட்ட ஞானத்தைத்   தன் மனத்திற்கு அறிவுறுத்தும் வகையில் அமைந்தது தான் பாரதியின் 'மனப்பெண்' கவிதை.   

பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.

மேற்கண்ட மூன்று வரிகளையும் சுருக்கி இங்கு 'கேளாய்' என்னும் ஒரே சொல்லில் ஒடுக்குகிறான் பாரதி. 'நான் அறிவுறுத்தும்படி கேட்டு நட!' என்று சொல்லும் போது கனிவு, தலைமை, கண்டிப்பு போன்ற மெய்ப்பாடுகளையும் காட்டுகிறான்.

இதேபோல், அறிவுக்கும் மனத்துக்கும் இடையே நிகழும் உரையாடலைச் சிவஞான போதம் என்னும் நூல் அழகுறச் சித்திரிப்பதையும் காணலாம்.

ஈன மாகிய கவலையை நீக்கியைம் பொறியினி லிணங்காமல்
தானமொத்துநான் சொல்மொழி கேட்டுநீ சரியென்று மகிழ்வாயே.

'நெஞ்சமே! கீழ்மையான நிலைக்குத் தள்ளும் கவலைகளையெல்லாம் நீக்கிவிட்டு நான் சொல்வதைக் கேள்! அதுமட்டுமன்று, எனது அறிவுரையைச் சரி என்று சந்தோஷமாக ஏற்றுக்கொள்!" என்று சொல்கிறார் சிவஞான போதத்தின் ஆசிரியரான மெய்கண்ட தேவர்.


இரா. ஆனந்த்

lns2...@gmail.com

unread,
Mar 7, 2023, 7:55:04 AM3/7/23
to சந்தவசந்தம்
*உளவியல் ஞானியாகவே மாறினான் பாரதி* - முழுதும் உண்மை :)

Srini

lns2...@gmail.com

unread,
Mar 7, 2023, 8:01:10 AM3/7/23
to சந்தவசந்தம்
ஆகா! மேற்கோள் நிறைந்த இடுகை. படிக்க சுகமாக இருக்கிறது :)

Srini

Anand Ramanujam

unread,
Mar 7, 2023, 8:34:56 AM3/7/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. Srini!

இரா. ஆனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/3ca693d8-5eb2-422e-8b11-93792a79fc53n%40googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 8, 2023, 9:02:41 AM3/8/23
to santhav...@googlegroups.com
பாரதியின் பாடல்களுக்கு உரை எழுதி ஒருவர் நூல் வெளியிட்டிருக்கிறார். ஆனந்த் இராமாநுஜமும் அப்படி ஒரு நூலை வெளியிட்டால் நன்றாக இருக்கும். எழுதும் கட்டுரைகள் காற்ரோடு போய்விடக்கூடாது.

இலந்தை

On Sat, Mar 4, 2023 at 8:25 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

Anand Ramanujam

unread,
Mar 8, 2023, 9:43:44 AM3/8/23
to santhav...@googlegroups.com
தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும் நல்லாசிகளுக்கும் மிக்க நன்றி, இலந்தையார் அவர்களே!

விரைவில் வெளியிட முயற்சி செய்கிறேன். 

- இரா. ஆனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Mar 10, 2023, 7:37:19 AM3/10/23
to santhav...@googlegroups.com
ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்

பலவிதமான விஷயங்கள் நம் மனக்கண் முன்னே விரிகின்றன. ஆனால் மனத்தின் கவனத்தை ஒரு சமயத்தில் ஒரு பொருள்தான் கவர்கின்றது.  அந்தப் பொருள் நல்லதாகவும் இருக்கலாம்; அன்றி தீமை தருவதாகவும் இருக்கலாம். 

"ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன்"
என்று காரைக்கால் அம்மையார் சொல்வதுபோல் நம் முழுக் கவனத்தையும் அந்தப் பரம்பொருள்மேல் வைத்து வாழ்ந்தால் எல்லாம் நலமாகும். ஆனால், பொதுவாக அம்மையாரைப் போல தெய்வநெறியில் வாழும் சிந்தை அமைவது அரிதாகத்தான் இருக்கிறது. அதேசமயம், நமக்குத் தீமைதரக்கூடிய விஷயங்களில் மனத்தைச் செலுத்துவது எளிதாகவே அமைகிறது. அதற்குக்காரணம், தீய சிந்தனைகளுக்கும் எதிர்மறையான எண்ணங்களுக்கும் கவலைகளுக்கும் நம் மனம் முக்கியத்துவம் கொடுத்துப் பற்றிக் கொள்கிறது. இடையே நல்ல சிந்தனைகள் வந்தாலும் சற்று நேரத்திற்கெல்லாம் அவற்றை விடுத்து மீண்டும் மீண்டும் அந்தத் தீய நினைவின் பக்கமே நம் மனம் சாய்கிறது.

மனத்தின் இந்த இழிவான செயல்பாட்டையே ஊஞ்சல் ஆட்டம் என்கிறான் பாரதி. ஊஞ்சல் புறப்பட்ட இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும்;  பின்பு அவ்விடத்தை விட்டு விட்டுப் புறப்பட்ட இடத்திற்கே வரும்; இப்படியே மாறி மாறி அலைந்து திரியும். அப்பர் பெருமானும் இந்த ஊசல் ஆட்டத்தை ‘உறு கயிறு ஊசல்’ என்றும் ‘மறு கயிறு ஊசல்’ என்றும் பிரித்துக் காட்டுவதைக் காணலாம்.
"உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி,
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம்

இத்தகைய மன ஊசலை மனப்போர் என்கிறார் திருமழிசை ஆழ்வார். அருச்சுனன் எவ்வளவு மன உறுதி படைத்தவனாக இருந்தாலும், பாரதப் போரின் தொடக்கத்தில் 'போர் செய்யலாம்; செய்யக் கூடாது' என்று அவன் மனத்தில் குழப்பத்துடன் கூடிய போராட்டம் மிகுந்திருந்தது. அவனுடைய இந்த மனப்போரை முடித்துவைத்து அறத்தை நிலைநிறுத்த வல்ல சினப்போர் புரிய வைப்பதற்காகவே இறைவன் அவனுக்கு இரதசாரதியாக இருந்து கீதையை மொழிந்தருளினான் என்கிறார் ஆழ்வார். மனப்போராட்டம் இருக்கும்வரையில் நாம் செய்யவேண்டிய நல்ல காரியங்கள் யாவும் தடைபடும் என்றும் இறைவன் துணையுடன் அந்த மனப்போரைத் தவிர்த்துத் தெளிவு கொள்ளலாம் என்றும் இந்தக் பாசுர வரிகள் நமக்குப் புரிய வைக்கின்றன.

புகழ்ந்தாய்
சினப்போர்ச் சுவேதனைச்  சேனா பதியாய்
மனப்போர் முடிக்கும் வகை.
- திருமழிசை ஆழ்வார்

Anand Ramanujam

unread,
Mar 12, 2023, 10:13:36 PM3/12/23
to santhav...@googlegroups.com

அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்

"உள்ளமோ ஒன்றில் நில்லாது" என்பது ஆழ்வார் திருவாக்கு.  ஒன்றையே உறுதியாகப் பற்றும் தன்மையைப் போலவே நிலையின்றி ஓடி அலையும் இயல்பும் மனத்துக்கு உண்டு. அவ்வாறு ஒன்றை விட்டு மற்றொன்றைப் பற்றி உழலும் மனத்தைக் 'கிருமி நெஞ்சம்' என்கிறார் தாயுமானவர்.  
பற்றுவெகு விதமாகி ஒன்றைவிட்டு ஒன்றனைப்
    பற்றிஉழல் கிருமிபோலப் பாழ்ஞ்சிந்தை 

மனம் ஏன் அலைபாய்கிறது என்பதை உளவியல் நோக்கில் ஆராய்ந்து பார்ப்போம். சூழ்நிலையின் தூண்டலுக்கேற்பத் துலங்கும் தன்மை வாய்ந்தது மனம் என்று அறிவியலார் கூறுவர்.  இவ்வாறு பல்வேறு வகைப்பட்ட தூண்டல்களுக்கு எதிர்க்கிளர்தலாகவே நம் வாழ்வு அமைகின்றது.  நாம் ஒரு பொருளின் மீது கவனம் செலுத்தும்போது சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டு கவனிக்கப்படும் பொருளுக்கு முற்றிலும் மாறுபட்ட உணர்வு மனத்தில் உதிக்கலாம். அந்த மாறுபட்ட உணர்வுக்கும் தற்போதுள்ள உணர்வுக்கும் இடையே நடக்கும் மோதலின் முடிவில் வெற்றிபெற்ற உணர்வின்பால் மனம் திரும்புகிறது. இதைத்தான் 'அடுத்ததை நோக்குதல்' என்கிறான் பாரதி.  இவ்வாறு அடுத்து நோக்கும் பொருள் நன்மை வாய்ந்ததாக இருந்தால் எல்லாம் நலமாகும். ஆனால்,  கவன மாற்றம் ஏற்படும்போது அதற்குத் தூண்டலாக இருக்கும் உணர்வு தீயதாக இருந்தால் அது மனத்தைச் சஞ்சலத்தில் ஆழ்த்தி விடும். 

மேலும், அவ்வாறு அடுத்துப் பற்றிக்கொண்ட பொருளிலிருந்தும் சில காலம் கழித்து கவனம் சிதறலாம். அதற்குக் காரணம் அலுப்பாகவோ, வெறுப்பு, அதிருப்தி, சோர்வு  போன்றவையாகவோ இருக்கலாம். அவ்வாறு  கவனம் மாறிய மனம்  மற்றொரு உணர்வின் தூண்டுதலால் அடுத்த பொருளைப் பற்றிக் கொள்ளக் கூடும்.  ஒரு குரங்கினைப்போல் மாறி மாறிப் பாயும் மனத்தின் இந்தத் தன்மையைத்தான் பாரதியும் 'அடுத்தடுத்து உலவுதல்' என்கிறான். 

இவ்வாறு அலைபாயும் நெஞ்சத்தை ஒரு வேடனுடன் ஒப்பிடுகிறார் வள்ளலார். காட்டில் வேட்டையாடச் செல்லும் வேடன் ஓர் இடத்தில் நிலைத்து நிற்கமாட்டான்; விலங்குகளைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிவான். அதுபோல, சுகத்தைத் தேடி ஐம்புலன்களின் போக்கிலேயே  மனம் அலைந்து  திரிகின்றது.  அதனால்தான், 'சும்மா அலையும் என் வேட நெஞ்சம்' என்கிறார் வள்ளல் பெருமான்.

எந்த இடத்திலும் நிலையாக இல்லாமல், எப்பொழுதும் ஏதாவது விஷயங்களைப் பற்றி அலைபாய்ந்து கொண்டிருக்கும் சித்தத்தை  எப்படி நன்னெறியின் பக்கம் செலுத்துவது? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் ஶ்ரீ ரமணர் அருளிச்செய்த இந்தப் பகவத்கீதாசாரப் பாடல் அமைகின்றது. 'எந்த விஷயத்தைப் பற்றிக்கொண்டு வெளிமுகமாக அலைகின்றதோ, அந்தந்த விஷயத்திலிருந்து மனத்தை உள்முகமாகத் திருப்பி அதை எப்பொழுதும் ஆன்ம சொரூபத்திலேயே நிலை பெறச் செய்யவேண்டும்'. 
எதுவும் திரமின்றி என்றும் அலை சித்தம்
எது எதனைப்பற்றியே ஏகும் – அதனின்று
ஈர்த்து அந்தச் சித்தத்தை எப்போதும் ஆன்மாவில்
சேர்த்துத் திரம் உறவே செய்.
- ஶ்ரீரமணரின் பகவத்கீதாசாரம்

NATARAJAN RAMASESHAN

unread,
Mar 12, 2023, 10:16:01 PM3/12/23
to santhav...@googlegroups.com
நல்வாழ்த்துகள் திரு ஆனந்த்


.

Anand Ramanujam

unread,
Mar 12, 2023, 10:40:44 PM3/12/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு.தில்லை வேந்தன்!

Anand Ramanujam

unread,
Mar 14, 2023, 4:53:45 PM3/14/23
to santhav...@googlegroups.com

மதியின் சொல் கேளா மனம்

நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்

கிண்டக் கிளரும் தன்மை உடையது மனம். இயற்கையின் நிகழ்வுகள் மனத்தைக் கிண்டுவதற்குச் செவி, வாய், கண், மூக்கு, உடல் என்னும் புலன்கள் ஐந்தும் காரணமாகின்றன.
இப்புலன்கள் மனத்திற்கு வாயில்களாக அமைவதால் இவற்றின் வழியாகத் தான் இயற்கையின் தாக்கல்கள் மனத்திற்குள் நுழைந்து அதைத் துலங்க வைக்கின்றன. இந்த வாசல் கதவுகளை அடைத்து வைத்தால் எந்த ஒரு தூண்டலும் மனத்தை அண்டாது என்பது உண்மைதான். ஆனால்  இவ்வாறு புலன்களை அடக்குவது என்பது சாத்தியமா?  இக்கேள்விக்கு பதிலளிப்பதுபோல் இந்தத் திருமந்திரப் பாடல் விளங்குவதைக் காணலாம்.
'அஞ்சும் அடக்குஅடக்கு' என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇல்லை;
அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே 
- திருமந்திரம்

விருப்பு வெறுப்புகளால் தூண்டப்பட்டு நில்லாது சுழன்றோடும் மனத்தைத் தேவர்களாலும் அடக்கமுடியாது. அப்படியே அதை அடக்கினாலும் அதனால் எந்தப் பயனும் பெறமுடியாதபடி ஜடப்பொருளாக அல்லவா மாறிவிடும்! ஆதலால், அதனை அடக்க முயல்வது மூடத்தனம் என்பதைப் புரிந்துகொண்டு, அறிவின் துணையுடன் 'மாத்திரைப் பொழுது மறித்து உள்ளே’ நோக்கிப் பார்ப்பதே மனத்தை அமைதிப்படுத்துவற்கான வழி என்கிறார் திருமூல நாயனார்.

திருமந்திரத்தை ஓதி உணர்ந்த பாரதியும், சுற்றித் திரிந்து உழலும் மனத்துக்குப் புத்தி புகட்டப் பார்த்தான்.  அவ்வாறு பார்க்கும்போது, இரண்டு விதமான மனச்செயல்பாடுகள் அவனது அறிவுக்குப் புலப்பட்டன. ஒன்று 'நன்றே நினை' என்று சொல்லும் போது மனம் 'சோர்ந்து கைநழுவுதல்'. மற்றொன்று, 'தீயதைத் தவிர்' என்னும் போது 'விடாது போய் விழுதல்'.

ஆக்க நினைவுகளை எண்ணுவதும்  நற்செயல் புரிதலும் நம் மனத்துக்குச் சற்றுக் கடினமான காரியங்களாகவே  தெரிகிறது. அதற்குப் பலவகையான காரணங்களை உளவியலார் முன்வைக்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று நம் எதிர்மறை எண்ணங்களே. நன்மை பெறக்கருதித் துணிகின்ற காரியம் வெற்றிகரமாக முடியவில்லையென்றால் தனக்கு நீங்காப் பழி வந்து விடுமோ என்னும் கவலை ஒரு காரணமாக இருக்கலாம். தடங்கல்கள் வந்தால் என்ன செய்வது என்னும் எண்ணமும் கருதிய பலன் கிடைக்குமா என்னும் எதிர்பார்ப்பும்  நமக்குத் தயக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த எண்ணங்கள் எல்லாம் சேர்ந்து  வாட்டுவதால் ஒருவகையான மனச்சோர்வு வந்து நம்மைத் தாக்குகிறது. எவ்வளவு நல்ல காரியமாக இருந்தாலும் இவ்வளவு மனவுளைச்சலுடன் இதைச் செய்ய வேண்டுமா? அதைவிட இதைச் செய்யாமல் விட்டுவிட்டால் சுகமாக இருக்கலாமே என்று தான் மனத்துக்கு முடிவில் நினைக்கத் தோன்றுகிறது.  அதானால்தான், 'சோர்ந்து கை நழுவுவாய்' என்கிறான் பாரதி.

அதேபோல், நாம் எதையெதை நினைக்கக்கூடாது என்று சொல்கிறோமோ, அவற்றின்பால் ஈர்க்கப்படுவதும் மனத்தின் இயல்பாகும்.  ஏனெனில், அடக்கப்பட்ட எண்ணங்கள் எவ்வாறேனும் கிளர்ந்தெழும் என்பது உளவியல் நியதி. உதாரணமாக, கருங்குரங்கை நினைக்கவேண்டாம் என்று நாம் முயற்சி செய்தால், அந்தக் கருங்குரங்கே நம் மனக்கண் முன் வந்து மீண்டும் மீண்டும் தோன்றுவதை நாம் உணரலாம்.  

சிலருக்கு எந்தப் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்தாலும் இருண்ட முடிவுகளே தோன்றும். அந்தச் சமயங்களில்  மனமும் நினைவுகளும் இருளடைந்துவிடாமல் காப்பது  புத்தியின் கடமையாகும்.  ஆனால், மதியானது 'இருள்தரும்  நினைவுகளைத் தவிர்ப்பாய்' என்று மனத்துக்கு அறிவுறுத்தும்போது, உள்ளம் அந்த இருட்டைப் பற்றியே எண்ணிக்கொண்டுத் துன்பக்குழியில் விழுந்துத் தடுமாறும்.  இதையே 'விடாது போய் விழுவாய்' என்கிறான் பாரதி.  

இவ்வாறு அறிவென்னும் ஆசான் அறிவிக்கும்  வாழ்க்கைப் பாடத்தைக் கற்பதில் மனமாகிய சிறுவன்  நாட்டம் காட்ட மறுக்கிறான். குருவினை அவமதிக்கும் சீடன் போல மனச்சிறுவன் தனக்கு அறிவுரை கூறும் மதியை மதிக்காமல் தான் போன போக்கில் செல்வான். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் வள்ளலாரும்  'மனமான ஒருசிறுவன் மதியான குருவையும் மதித்திடான்  என்று மனத்தின் சொல்கேளாத்தன்மையை இறைவனிடம் சொல்லி முறையிடுவதையும் நாம் இங்குக் கருத்தில் கொள்ளலாம்.

இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Mar 17, 2023, 1:13:20 PM3/17/23
to santhav...@googlegroups.com
தொட்டதை மீள மீளவும் தொடுவாய்

'கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும் கழிந்தன கடவுள் நாள் எல்லாம்' - பட்டினத்தார்

பொதுவாக நம் மனத்துக்குப் பிடித்த ஒரு சம்பவத்தை அனுபவிக்கும்போது, அது மீண்டும் மீண்டும் நிகழ வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறோம். இந்த நாட்டத்தின் விரைவால் இழுத்துச் செல்லப்பட்ட மனம் தன் அறிவை இழந்து அந்தச் சம்பவத்தின் அல்லது பொருளின் ஆதிக்கத்தில் கிடந்து அடிமைப்படுகிறது. தான் நுகர்ந்தவற்றை மீண்டும் மீண்டும் நுகர விரும்பும் இந்த இழிவு நிலைமையைத் தவிர்க்குமாறு மனத்துக்கு இங்கு அறிவுறுத்துகிறான் பாரதி.    

நாம் ஒரு பொருளை தேடிச் செல்லும்போது, அந்தத் தேடல் நம் கொள்கையுடன் பொருந்தாதது என்று நம் அறிவுக்குப் புலப்படலாம். அந்தச் சமயங்களில் நம் வாழ்வுக்குச் சிறிதும் ஒவ்வாத அப்பொருளின்மீதுள்ள நாட்டத்தைத் தவிர்த்து நம் அறிவின் சொற்படி கேட்டு நடத்தல் வேண்டும். மேலும் பல சமயங்களில், நம் முன்னனுபவத்தில் விளைந்த பட்டறிவும் பக்குவமும் தரும் வழிகாட்டலின்படி ஒரு பொருளைப் பற்றவோ விடவோ நாம் தீர்மானிக்க வேண்டும். 

ஆனால், தான் பிடித்துக்கொண்ட பொருளின் மீதான பற்றை அறிவு தடுத்தாலும் மனமானது அவ்வளவு எளிதில் விடுவதில்லை; பார்த்ததையே பார்த்தும் கேட்டதையே கேட்டும் பேசியதையே பேசியும் பேதலிக்கிறது; பிடித்த பொருளை விடுவது போல் விலகி நின்று, மீண்டும் மீண்டும் அப்பொருளின்பால் ஈர்க்கப்பட்டு அதை நோக்கி நகர்கிறது. இதைத்தான் தாயுமானவரும் 'பற்றினதைப் பற்றும்' என்கிறார்.  

பட்டினத்தாரும் தாயுமானவரும் பாரதியும் சொல்லும் இந்தப் பேருண்மையை நாம் உளவியல் துணைகொண்டு ஆய்ந்து பார்க்கலாம். 'தொட்டதை' என்ற சொல் இங்கு 'துய்த்துணர்ந்ததை' அல்லது 'அனுபவித்ததை' என்ற பொருளில் வருகிறது. அதாவது, முன்னர் துய்த்துணர்ந்த ஒரு பொருளை மீண்டும் அனுபவிக்குமுன் அதனை இன்றைய புதிய நிலைக்கேற்ப உள்ளதா என்று பொருத்திப் பார்ப்பது அவசியம். இவ்வாறு பொருத்தம் கண்டு பொருந்திப் பார்க்காமல், தொட்டதை மீண்டும் தொட்டுணர்ந்தால், அந்தப் பொருளின் தன்மை இப்போது மாறியுள்ள சூழ்நிலையில் பெருத்த தீமையை விளைவிக்கக் கூடும். அதனால், வெறும் உணர்ச்சியின் உந்துதலாலோ பழக்கத்தின் ஈர்ப்பாலோ ஒரு பொருளை மீண்டும் மீண்டும் நாடுவது மூடச்செயலாகும். 

முன்னைய துய்த்துணர்வைப் பயன்படுத்திக்கொண்டு அறிவாராய்ச்சி செய்தால், பற்றியதை மீண்டும் பற்றலாமா அல்லது பற்றறுக்கலாமா என்ற முடிவுக்கு வர முடியும். இவ்வாறு மாறிய நிலைக்கு ஏற்றவாறு தன் செயலையும் மாற்றிச்செய்வதே அறிவார்ந்த செயலாகும். பழகிப் போன ஒரு செயலையும் இவ்வாறு ஆய்ந்து நோக்கித் திருத்திக் கொண்டால், விட்ட பழக்கம் மீண்டும் தொற்றிக் கொள்ளாமல் நம்மால் தவிர்த்திட முடியும் என்ற தத்துவத்தை இங்கு உணரவைக்கின்றான் பாரதி.

இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Mar 17, 2023, 9:15:39 PM3/17/23
to santhav...@googlegroups.com

புதியன விரும்பு

புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்

விளக்கம்:

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது உலகறிந்த உண்மை. ஆனால் மாற்றத்தினால் ஏற்படக்கூடிய எதிர்பாராத விளைவுகளைச் சந்திக்க மனித மனம் தயாராக இல்லை. பழகிப்போன பொருள்களிலும் தெரிந்த விஷயங்களிலுமே சுகம் கண்டு வாழ்ந்த மனம் புதிதாக ஒன்று நிகழும்போது, இதுகாறும் தான் அனுபவித்துக்கொண்டிருக்கும் அமைதிநிலைக்கு ஊறு விளைந்திடுமோ என்று எண்ணி அஞ்சுகிறது. மேலும், தான் அறிந்தவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் உண்மையைக் கண்கூடாகப் பார்க்கும்போது, புதிதான அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதற்கு மாற்றாக அக்கருத்தை மறுத்து வெறுக்கிறது. பழமையைப் பற்றிக்கொண்டு புதுமையைப் புறக்கணிக்கும் மனத்தின் இந்தச் செயலைத் தான் 'புதியது காணில் புலனழிதல்' என்கிறான் பாரதி. 

'புலன் அழிதல்' என்றால் 'ஐம்புலன்களும் கலங்குதல்' என்று பொருள். புதியதைக் கண்டால் துன்புறும் அதே கணத்தில், ஏதேனும் நம் வாழ்வில் மாற்றம் நிகழாதா என்று ஏங்கவும் செய்கிறோம். ஆனால், அந்த மாற்றம் வாய்க்கும்போது அதனால் வாழ்க்கை எவ்வாறு திசைமாறிப் போய்விடுமோ என்றும் அஞ்சி நிலைகுலைகிறோம். இவ்வாறு புதுமையை ஏற்றுக்கொள்ளத் தயங்கி அதை விரும்புவதும் வெறுப்பதுமாக இருதலைக் கொள்ளி எறும்பைப்போலத் தவிக்கிறோம். இந்த நிலையையே, 'புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்' என்னும் வார்த்தைகள் சித்திரிக்கின்றன.

இவ்வாறு புதுமையைக் கண்டால் அஞ்சுவதற்குக் காரணம், பன்னெடுங்காலமாகப் பழக்கங்களாலும் மரபுநிலைகளாலும் நம்முள் ஊன்றியிருக்கும் நிலையிறுத்தலே (Conditioning) ஆகும். இந்த நிலையிறுத்தலின் தளைகளிலிருந்து விட்டு விடுதலையாகி மாற்றத்தைத் தழுவுவதைத் தடுப்பது மனத்தில் எழுந்த தற்காப்பு உணர்வே (Protecitve-instinct) எனலாம். தான் இதுவரையில் அறிவு என்று கருதியிருந்தது உண்மையில் அறியாமையே என்று ஒத்துக்கொண்டால் அவமானப் பட நேரிடுமே என்ற நாணம்தான் அந்தத் தற்காப்பு உணர்ச்சிக்குக் காரணம் என்று உளவியலார் மொழிவர்.

மாற்றத்தைச் சந்திக்க விடாமல் தடுக்கும் இந்தத் தற்காப்பு உணர்ச்சியால் மனம் பலவிதமான எதிர்நிலைச் செயல்களைப் புரிகிறது. முதலில் கண்ணெதிரே புதுமையைக் கண்டாலும், அது புதுமையே இல்லை என்று சாதிக்கிறது; மேலும், புதுமையைக் காட்டிலும் பழமையே சிறந்தது என்றும் பறைசாற்றுகிறது; மாற்றமே இல்லாத வாழ்வில் பரவியிருக்கும் ஒரு மந்தநிலையை அமைதி என்று தவறாகக் கருதச் செய்கிறது; புதுமையை ஏற்றுக்கொண்டு வாழ்வில் பொலிந்தவர்களை வெறுத்தொதுக்கி வைக்கிறது. 

இத்தகைய மனமெலிவுக்கு இடங்கொடாமல் 'புதியதோர் உலகு செய்வோம்' என்று வீரத்துடன் மாற்றத்தை எதிர்நோக்கும் மறவர்களுக்கு வாழ்க்கை என்றும் இனிமையாக அமையும் என்பதைப் பாரதியின் இந்த வரிகள் சாற்றுகின்றன.

கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
    கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்    
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?

Anand Ramanujam

unread,
Mar 19, 2023, 1:25:20 PM3/19/23
to santhav...@googlegroups.com
பழையன பற்றேல்

அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்

பழமை என்னும் சொல் பாரதியின் இந்தக் கவிதை வரிகளில் எந்தப் பொருளில் ஆளப்பட்டுள்ளது என்பதை முதலில் நாம் கவனிக்கவேண்டும். பழமை என்றால் மரபு அல்லது பாரம்பரியம் அல்லது தொன்மை என்று ஒரு பொருள் உண்டு. ஆனால் பாரதி பழமையை இந்தப் பொருளில் கையாளவில்லை என்று தெரிகிறது. 

உளவியல் ரீதியாகப் பார்த்தால் தற்போதைய நடைமுறை வாழ்வுக்கு ஒவ்வாதவற்றையும் நாம் பழமை எனக் கொள்ளலாம். சூழ்நிலை மாறுபடும்போது தான் மாறாமல்  பற்றினதையே பற்றும் மனம் என்று முன்னர் கண்டோம். இவ்வாறு மனம் தனக்குப் பரிச்சயமானதையும் பழக்கப்பட்டதையும் பற்றிக்கொள்வதற்குக் காரணம் அவற்றால் கிடைக்கும் ஒருவித சுகமும் ஆறுதலுமே எனலாம். இவ்வாறு சுகப் பிரதேசத்தின் (Comfort zone) வரையறைக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டு வாழும் மனம் புதுமையை நாடாது. அடிக்கடி மதுவைப் பருகும் வண்டு போல, உள்ளம் தான் முன்னர் பழகிய பொருள்களை மீண்டும் மீண்டும் நாடிச் சென்று சுகம் காண்கிறது.  

பழையன கழிதலும் புதியன புகுதலும் 
வழுவல கால வகையி னானே.
-நன்னூல்

நேற்றைய புதுமை இன்றைய பழமையாதல் உலகத்து இயற்கை. அதுபோல், நேற்றைய அறிவு இன்றைய அறியாமையயாதலும் உண்மை. கணப்பொழுதும் நிகழும் இத்தகைய மாற்றங்களுக்குத் தக்கபடி தன்னை ஒவ்வொரு நொடியும் புதுப்பித்துக்கொண்டிருக்கும் அறிவே அறிவாகும். அவ்வாறு இல்லாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று பழைய அறிவையே பற்றிக்கொண்டு வாழ்தல் பேதைமை ஆகும். ஆனால், அறிந்துகொண்ட ஒரு விஷயம் மனத்தில் பதியும்போது அதை உள்ளம் அவ்வளவு எளிதில் விடுவதில்லை. புதிய கருத்துகள் முளைத்தபோதும் தன்னைச் சுற்றி உலகமே மாறும்போதும் தான் கொண்ட அறிவுநிலையிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் தனக்கிருக்கும் பிடிப்பைத் தளரவிடாமல் மனம் பற்றிக்கொள்கிறது. அத்தகைய மனம் புதுமையைச் சந்திக்கும் திறன் பெறாமல் நாளடைவில் சோர்ந்து வீழ்ந்து மடியும். இதைத் தான் 'பரிந்து போய் வீழ்வாய்' என்கிறான் பாரதி. 

நாம் அறிந்தவற்றிலிருந்து விடுதலை பெறும்போதுதான், கல்வி ஆரம்பமாகிறது; புதுப்புது கருத்துகளால் நம் அறிவு பொலிவுறுகிறது; மனம் தெளிவடைகின்றது. நம் மனம் என்னும் கோப்பை முழுவதும் பழமை என்னும் தேநீர் நிரம்பி இருக்கும்போது, புதுமை அங்கே நுழைதல் அரிதாகிறது. அந்தக் கோப்பையில் தங்கிய பழமையையெல்லாம் நீக்கி வெற்றிடமாக்கினால்தான் 'பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனாகிய' இறைவனை நம்மால் உட்கொள்ள முடியும்.'கற்றன விட்டேன்' என்று சொல்லும்போது, இந்த அறிவு விடுதலையையே குறிப்பிடுகிறார் திருமூலர்.

இரா ஆனந்த்

Ramamoorthy Ramachandran

unread,
Mar 20, 2023, 10:56:04 AM3/20/23
to Santhavasantham
அறிதோறு அறியாமை கண்டற்றால்  (என்ற மனத்தின் செயலை)என்ற குறளை உங்கள் கட்டுரை புலப்படுத்துகிறது! 
-புலவர் இராமமூர்த்தி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Mar 20, 2023, 11:32:07 AM3/20/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, புலவர் அவர்களே! இந்தக் குறட்பாவைத் தான் தேடிக்கொண்டிருந்தேன் :-) 
ஆம் இந்தப் பதிவுக்கு மிகத் தொடர்புடைய குறள் தான் இது!  

நன்றி
இரா ஆனந்த்


Anand Ramanujam

unread,
Mar 29, 2023, 9:53:47 PM3/29/23
to santhav...@googlegroups.com
இழிபொருளையே நாடும் மனம்

பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்.

விளக்கம்

பொதுவாக எதிர்மறை நிகழ்வுகளின் தூண்டல்களுக்கு நம் மனம் சற்று மிகையாகவே துலங்குவதைக் கண்கூடாகக் காண்கிறோம். நல்ல விஷயங்களை விடத் தீய விஷயங்கள் நம் வாழ்வில் பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகளும் அறிவிக்கின்றன. நாம் அன்றாடம் செய்தித்தாளைப் புரட்டும்போதுகூடக் கெட்ட செய்திகள் தாம் முதலில் நம் கவனத்தை ஈர்க்கின்றன. உறவுகளிலும் நல்ல இயல்புகளைவிடக் குற்றம் குறைகளை நாம் பெரிதாகக் கருதித் துயருறுகிறோம். தீமையின் சக்தியே நன்மையை விட வலிமை வாய்ந்ததாக அமைந்து நம் வாழ்வைத் தடுமாறச் செய்கிறது.

எதிர்மறை உணர்ச்சிகளின் விளைவுகள் நம்மை அதிகம் பாதிப்பதற்கு நாம் எதிர்மறை சார்புடன் (Negativity bias) இருப்பது காரணமாக இருக்கிறது. இதனால் சண்டைச் சச்சரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்; ஆபத்துக்களைப் பெரிதுபடுத்துகிறோம்; அச்சுறுத்தல்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். 'எப்பொழுதும் கவலையிலே இணங்கிநிற்கும்' பாவியராய் வாழ்ந்து மடியும் இந்தக் கீழ்மையான வாழ்க்கைமுறையைச் சாடுகின்ற பாரதி, இத்தகைய இழிநிலைக்குத் தள்ளும் மனத்தை அழுகிய பொருள்களைத் தின்னும் காக்கையுடன் ஒப்பிடுகிறான்.  

தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்

நம் வாழ்வில் எத்தனைப் பெரிய தோல்வியும் துயரமும் வந்தாலும் இறுதியில் நன்மையே கிடைக்கும் என்னும் உலகியற்கையை நாம் பல சூழ்நிலைகளில் மறந்து விடுகிறோம். அதனால், துன்பமே வாழ்க்கை என்னும் முடிவுக்கு வந்து அதே கண்ணோட்டத்தில் பார்த்தால் எல்லாம் எதிர்மறையாகவே தெரியும். அதை விடுத்து, 'இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்று வாழ்ந்தால் வாழ்க்கை வளமாகும்.

இரா. ஆனந்த்

Siva Siva

unread,
Mar 30, 2023, 8:20:47 AM3/30/23
to santhav...@googlegroups.com
/ நம் மனம் சற்று மிகையாகவே துலங்குவதைக் கண்கூடாகக் காண்கிறோம் / 

துளங்குதல் is a better way to spell that word - for the intended meaning here.

=====

Anand Ramanujam

unread,
Mar 30, 2023, 8:27:05 AM3/30/23
to santhav...@googlegroups.com
Yes, துளங்கு = to be affected or impacted, should be the right word here.

Thank you for pointing this out to me!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 8, 2023, 5:59:09 AM5/8/23
to santhav...@googlegroups.com
அன்பு காட்டி ஆவி காக்கும் மனம்

அங்ஙனே
என்னிடத் தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்

விளக்கம்:

தன்னைத் தானே காத்தல் என்பது மனத்தின் தலையாய கடமை என்று உளவியலார் கூறுவர். அதனால் மனத்தின் செய்கைகள் யாவும் 'தன்னலம் காத்தல்' என்னும் நோக்கத்தைச் சுற்றியே நடக்கின்றது.  அச்சம், கோபம், வெறுப்பு, அருவருப்பு போன்ற எதிர்மறை எண்ணங்கள் கூட மனத்தின் தற்பாதுகாப்பு நடவடிக்கையால் விளைந்தவையே எனலாம்.  கொடிய விலங்குகளாலும், தீயவர்களின் செய்கையாலும், கேடு விளைவிக்கும் பொருள்களாலும் நமக்குத் தீமை உண்டாகாதவாறு அவற்றிலிருந்து நம்மை  விலக்கிக் காப்பதற்கு அச்சம் தேவைப்படுகிறது. அதேபோல், நமக்குத் தீமைதருபவர்களைக் கண்டு சீறுவதற்கும் அவர்களை நம்மிடமிருந்து விலக்குவதற்கும் தண்டிப்பதற்கும் சினம் உதவுகிறது.  அவ்வாறே வெறுப்பும், அருவருப்பும் நமக்கு ஒவ்வாதவற்றை நீக்கி நலம் பயப்பனவற்றை நாடுவதற்குத் துணை செய்கின்றன.  இத்தகைய தற்பாதுகாப்பு உணர்வை Self-Preservation Instinct என்று மனோதத்துவ சாத்திரம் குறிப்பிடுகிறது.

இவ்வாறு ஒரு தாயைப் போல விளங்கி, தீமை விலக்கி நன்மை பெருக்கி உயிரைக் காக்கவல்ல மனம் நம்மீது காட்டும் அன்பானது எப்பொழுதும் மாறாத தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு கணமும் நம் நலத்தையே விழையும் மனத்தின் அன்பைப் பாராட்டும் பாரதி, அத்தகைய அன்பை 'மாறுதல் இல்லா அன்பு' என்று போற்றுகிறான். இங்கு, 'அங்ஙனே' என்னும் சொல் 'அப்படியே இருந்தாலும்' என்னும் பொருளில் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது, மனம் எவ்வளவு தான் சஞ்சலப்பட்டு உழன்றாலும் சிறுமைகளை நாடிப் பெருமை இழந்தாலும், அது நமக்கு நன்மை செய்யும் நோக்கத்துடன் தான் எப்போதும் செயல்படுகிறது என்று தெளிவிக்கிறான் பாரதி.

இரா. ஆனந்த்

Govindaraju Arunachalam

unread,
May 8, 2023, 9:06:49 AM5/8/23
to santhav...@googlegroups.com
பாரதியின் எளிய பாடல்களுக்கும் உரையா? அந்த அளவுக்கு வாசகர்களின் தரம் தாழ்ந்து விட்டதா? ஆனந்த் அருமையாக எழுதுகிறார். தொடர்ந்து வாசிக்கின்றேன். உளவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவன் என்ற முறையில் கூடுதல் சிரத்தையுடன் படிக்கிறேன்.
   -இனியன், கரூர்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Siva Siva

unread,
May 8, 2023, 9:24:47 AM5/8/23
to santhav...@googlegroups.com
பாரதியின் காலத்தில் மக்களிடையே இருந்த தமிழ் அறிவிற்கும் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் அறிவிற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கின்றதா? 

வி. சுப்பிரமணியன் 



On Mon, May 8, 2023 at 9:06 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
பாரதியின் எளிய பாடல்களுக்கும் உரையா? அந்த அளவுக்கு வாசகர்களின் தரம் தாழ்ந்து விட்டதா? ....

Anand Ramanujam

unread,
May 8, 2023, 10:56:13 AM5/8/23
to santhav...@googlegroups.com
தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி, கவிஞர் இனியன் அவர்களே! 

எனக்கு உளவியலில் ஆர்வம் மட்டுமே இருக்கிறது. போதுமான ஞானம் இல்லை. எனவே, எனது விளக்கவுரைகளில் ஏதேனும் கருத்துப்பிழை இருந்தால் சுட்டிக்காட்டுமாறும் தங்களைப்  பணிவுடன் வேண்டுகிறேன். 

இரா. ஆனந்த்

Subbaier Ramasami

unread,
May 9, 2023, 8:13:03 AM5/9/23
to santhav...@googlegroups.com
பாரதியின் எளிய பாடல்களுக்கும் உரையா? அந்த அளவுக்கு வாசகர்களின் தரம் தாழ்ந்து விட்டதா?  என்று இனியன் கேட்கிறார்.  பாரதியின் பாடல்களில் எளிய சொற்கள் உண்டே தவிர எளிய பாடல் இல்லை. எளிய சொற்களைத் திறம்பட இணைத்து மாயம் விளைத்து விடுகிறான்.
காக்கை குருவி எங்கள் ஜாதி-  எளிய சொற்களின் தொகுதி. ஆனால் உன்னதக் கருத்தின் வெளிப்பாடு.. என்னதான் விரிவுபடுத்தி எழுதினாலும் இன்னும் எதையோ சொல்ல விடுத்தது போன்ற ஒரு உணர்வைத் தோற்றுவிடும்.

ஆனந்தின் விரிவுரை ஆழமானது. அவசியமானது

இலந்தை

Subbaier Ramasami

unread,
May 9, 2023, 8:19:19 AM5/9/23
to santhav...@googlegroups.com
இருக்கிறது.  பாரதிக்கு முன்  பாரதிக்குப் பின் என்று அதைப் பார்க்கவேண்டும். 
பாரதிக்கு முன் இறுக்கம்
பாரதிக்குப் பின்  எளிமை.

ஆனால் இன்றோ அடுக்குமொழியைத் தொடர்ந்து ஆழத்தை ஒழுகவிடும் சல்லடை.

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
May 9, 2023, 8:20:49 AM5/9/23
to santhav...@googlegroups.com
தோற்றுவித்துவிடும் என மாற்றுக!

இலந்தை

Govindaraju Arunachalam

unread,
May 9, 2023, 10:58:48 AM5/9/23
to santhav...@googlegroups.com
"ஆனால் இன்றோ அடுக்குமொழியைத் தொடர்ந்து ஆழத்தை ஒழுகவிடும் சல்லடை."
இலந்தையாரின் இந்தக் கூற்றை அப்படியே வழிமொழிகிறேன்.
    -இனியன்.

Anand Ramanujam

unread,
May 14, 2023, 8:30:20 AM5/14/23
to santhav...@googlegroups.com
உலகை அறிந்து ஒட்ட ஒழுகல்

கண்ணினோர் கண்ணாய் காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை
உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்

விளக்கம்:
'நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து' - நம்மாழ்வார் (பெரிய திருவந்தாதி)

பரந்த உலகைப் பார்த்துப் புரிந்து கொள்ள நமக்குத் துணை செய்வன, நமது புறக்கண்கள். அதே போல் புறக்கண்களால் கண்டு தெளிய முடியாத நுண்பொருள்களின் நுட்பத்தை உணர்ந்து தெளிய வைக்கும் உட்கண்ணே நம்முடைய நெஞ்சம்.  கண்களைப் போலவே, நம் செவிகளும் புறப்புலன்களே அன்றி அகப்புலன்கள் அல்ல; அதாவது,  வெளிப்படும் ஒலியைக் கேட்கும் சக்தி மட்டுமே காதுகளுக்கு உண்டு. அவ்வொலியை ஆய்ந்து நோக்கி அதன் தன்மையை உணர்ந்து தெளியும் திறமை நம் செவிகளுக்குக் கிடையாது.  உள்ள பொருள்களின் உண்மை கண்டுணர நமக்கு மனம் தான் உதவுகிறது. ஆதலால்தான் மனத்தைக் 'கண்ணினோர் கண்' என்றும்  'காதின் காது' என்றும் குறிப்பிடுகிறான் பாரதி. 

நம் மனமானது காணப்படும் உருவப்பொருள்களை மட்டுமல்லாமல், அருவப்பொருள்களையும் அணு அணுவாகப் பிரித்துக் காட்ட வல்லது; பொறிகளால் அளந்து காண முடியாத விண்மீன்களையும் அவை திரியும் வானத்தையும் துருவி அறியும் ஆற்றல் மிக்கது; ஆழ்கடலுக்குள்ளும் அதனைத் தாங்கி நிற்கும் தரைக்குள்ளும் அகழ்ந்து அறியும் சக்தி வாய்ந்தது. 'அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு' என்று கம்பன் மொழிவதைப்போல், இருட்டறையில் இருக்கும் பூமாலையைப் பாம்பென்று எண்ணி மருளாமல் இருப்பதற்கும், வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணாமல் பகுத்தறிந்து தெளிவதற்கும் மனம் பெரிதும் உதவுகிறது. இவ்வாறு, புலன்கள் தரும் செய்திகளின் மெய்ப்பொருளைக் கண்டறிந்து உலகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவுவதால் மனத்தைப் 'புலன் புலப்படுத்தும் புலன்' என்கிறான்.  

மேலும், 'நான்' என்னும் ஓர் உணர்வினைத் தோற்றுவித்து உலகில் ஓர் அங்கமாக நம்மை அமைக்கின்றது மனம்.  வெறும் நினைவினால் தோன்றும் அந்த 'நான்' என்னும் உணர்வை நிலைப்படுத்தத் தொடர்ந்து எண்ணங்களைப் பெய்து வலுப்படுத்துகிறது.  இதனால், நான், என் குடும்பம், என் மக்கள், என் தேசம் என்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை நிலைநாட்டிக்கொண்டு உலகுடன் உறவாட வழிவகுக்கிறது. 

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது அறிஞர்கள் கூற்று. உலகில் தோன்றும் புதுப்புது மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கேற்பத் தன்னையும் மாற்றிக்கொள்ளும் நெகிழ்ச்சித்தன்மை (elasticity) மனத்திற்கு உண்டு. அதனால், வள்ளுவர் வாய்மொழியின்படி 'உலகத்தோடு ஒட்ட ஒழுகும்' பக்குவத்தையும் முதிர்ச்சியையும் வளர்த்துக்கொள்ள அரும்பெரும் துணையாக விளங்குகிறது மனம். 'நான்' என்று தனித்தும், அதே சமயத்தில் 'நாம்' என்று சேர்ந்தும் வாழ வைக்கும் மனத்தின் திறனை வியந்தே 'உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்' என்று இங்கே போற்றுகிறான் பாரதி.

Govindaraju Arunachalam

unread,
May 15, 2023, 1:21:19 AM5/15/23
to santhav...@googlegroups.com
அருமையான விளக்கம். கவிஞனின் உள்ளக்கிடக்கையை எடுத்துக் காட்டிய விதம் மிக அருமை.
   -இனியன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 15, 2023, 5:05:29 AM5/15/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இனியன்!

Anand Ramanujam

unread,
Jul 3, 2023, 10:01:17 PM7/3/23
to santhav...@googlegroups.com
மகிழ்கொள் சிந்தை

இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்
- பாரதி

விளக்கம்:
"மகிழ்கொள் சிந்தைசொல் செய்கைகொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்கவா ராயே."
- என்பது திருவாய்மொழி.

'மகிழ்கொள் சிந்தையாக' விளங்கி எப்போதும் களிப்பை நாடுவது மனத்தின் இயல்பு.  மனத்தின் இந்த இன்ப விழைவே ஆதி மனிதனைப் பல இன்னல்களிலிருந்தும் பாதுகாத்தது என்று மானுடவியலார் கூறுவர். மனமானது மனித மூளையில் சுரக்கும் டோபமைன், ஆக்சிடோசின், செரோடோனின், என்டார்பின் போன்ற வேதிப்பொருள்களின் மூலம் மகிழ்ச்சி, கிளர்ச்சி, மனப்பொலிவு, வலிநீக்கம் போன்றவற்றைத் தோற்றுவித்து நலம்பயக்கிறது.  இவ்வாறு இன்பம் யாவையும் வாரி வழங்கும் மனத்தின் தன்மையை மெச்சியே  'இன்பம் எல்லாம் தருவாய்' என்று புகழ்கிறான் பாரதி. 

இன்பத்தை  நுகர்ந்த மனம், அந்த இன்ப நுகர்வை நினைவில் பதித்து வைத்துக்கொள்கிறது. பதிவுற்ற அந்த எண்ணத்தின் தூண்டலால் மீண்டும் மீண்டும் அவ்வின்பத்தைத் துய்க்க விரும்புகிறது;  முன்பெற்ற இன்பத்தின் நினைவில் கிறங்கித் தவிக்கிறது. இதையே 'இன்பத்து மயங்குவாய்' என்கிறான் பாரதி. 

இவ்வாறு இன்பத்தை நாடும் மனம் அதைப் பொன்னிலும் பொருளிலும் மண்ணிலும் மனையிலும் அடைய முயல்கிறது. பணநிறைவே மனநிறைவு என்று தவறாகக் கருதித் தன்னலப்போக்கில் சிக்கி நிம்மதியை இழக்கிறது. சுகத்தை வேண்டிச் சிறுசிறு துன்பங்களைக் கூடக் கவனமாகத் தவிர்க்கும் மனம் தடைக்கற்களைப் படிக்கற்காளாக மாற்றக்கூடிய வெற்றிவாய்ப்புகள் பலவற்றை இழக்கின்றது. தற்காலிக சந்தோஷத்திற்காக அடுத்தடுத்த சுகநுகர்வுகளுக்கு அடிமையாகி நீண்டகால வாழ்க்கை நலத்தைத் தொலைக்கிறது. இன்பத்தைத் துய்க்கும்போது கூட, அந்த அனுபவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற ஒருவித எதிர்பார்ப்புடன் இயங்கும் மனம் அவ்வின்பத்தை முழுதும் அனுபவிக்க முடியாமல் ஏமாற்றம் உறுகிறது. இவ்வாறு இன்ப விழைவில் பலவிதமான தவறுகளைப் புரியும் மனத்தின் பேதைமையைக் குறித்தே 'இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்' என்கிறான் கவிஞன். 

N. Ganesan

unread,
Jul 4, 2023, 6:34:18 PM7/4/23
to santhav...@googlegroups.com
On Tue, May 9, 2023 at 7:19 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
இருக்கிறது.  பாரதிக்கு முன்  பாரதிக்குப் பின் என்று அதைப் பார்க்கவேண்டும். 
பாரதிக்கு முன் இறுக்கம்
பாரதிக்குப் பின்  எளிமை.

பாரதிக்கு முன்னோடி வள்ளலார். அவரது எழுத்தில் - செய்யுள்களில், முக்கியமாக உரைநடையில் -
தமிழின் இறுக்கம் குறைகிறது. பாரதியின் பல சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி வள்ளலார்.

நா. கணேசன்


ஆனால் இன்றோ அடுக்குமொழியைத் தொடர்ந்து ஆழத்தை ஒழுகவிடும் சல்லடை.

இலந்தை

On Mon, May 8, 2023 at 9:24 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
பாரதியின் காலத்தில் மக்களிடையே இருந்த தமிழ் அறிவிற்கும் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் அறிவிற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கின்றதா? 

வி. சுப்பிரமணியன் 



On Mon, May 8, 2023 at 9:06 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
பாரதியின் எளிய பாடல்களுக்கும் உரையா? அந்த அளவுக்கு வாசகர்களின் தரம் தாழ்ந்து விட்டதா? ....
   -இனியன், கரூர்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOnLQQP2ymTLK0%2B0qP8oPHhp0O_bMA4OgGOnuq1-F%3DMJg%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 4, 2023, 9:17:55 PM7/4/23
to santhav...@googlegroups.com
/ தமிழின் இறுக்கம் குறைகிறது  /

"இறுக்கம் குறைகிறது"  = ?

V. Subramanian

N. Ganesan

unread,
Jul 5, 2023, 5:02:36 PM7/5/23
to santhav...@googlegroups.com
On Tue, Jul 4, 2023 at 8:17 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
/ தமிழின் இறுக்கம் குறைகிறது  /

"இறுக்கம் குறைகிறது"  = ?

தமிழின் நெடிய வரலாற்றில்,
        வள்ளலாருக்கு முன் இறுக்கம்
        வள்ளலாருக்குப் பின்  எளிமை.

பின் வந்த பலரும், கல்விப் பெருக்கத்தால், அச்சு நுட்பம் அறிமுகம் ஆகிப்
பத்திரிகைகள் பெருக்கத்தால், பழைய தமிழ் நெகிழ்ந்து கொடுத்து,
தமிழில் புலமை பெறாத மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளத் தக்க  உரைநடை வளர்ச்சி பெறலாயிற்று.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், பாரதி, திருவிக, உவேசா, ....
சிலம்புச்செல்வர் மபொசி, தவத்திரு. ஊரன் அடிகள், சிலம்பொலி செல்லப்பன்,
வல்லிக்கண்ணன் .... போன்றோர் நூல்களில் அழகாக இந்த இயக்கத்தை விளக்கியுள்ளனர்.

பழைய புராணங்கள், செய்யுள்களில் உள்ள விஞ்ஞானத்துக்குப் பொருந்தாத செய்திகளில்
நாட்டம் குறைந்து, உலகெங்கும் ஏற்படும் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் ஏறுமுகம் ஆயிற்று.

உத்தமம் (https://infitt.org ) சார்பாக, பிபிசிக்கு வானொலி மட்டுமல்லாமல்,
யூனிகோட் எழுத்தாகவும் செய்திகளைச் சொல்லத் தளம் ஏற்படுத்துங்கள் என்று கடிதங்கள்
பிபிசிக்கு எழுதிய நினைவுகள் வருகின்றன. இன்று, தமிழில் இல்லா பல செய்திகளும் உடனுக்குடன்
தமிழாக வரும் தளமாக, http://bbc.com/tamil இயங்குகிறது. பிபிசி தமிழ் போன்றவற்றில்
வள்ளலார், பின்னர் பாரதி, திரு. வி.க. ... போன்றோர் தமிழின் எளிமை பார்க்கலாம்.
கோடிக்கணக்கான மக்களுக்குத் தேவையான தமிழாக மாறிவிட்டது காண்கிறோம்.

நா. கணேசன்

V. Subramanian

On Tue, Jul 4, 2023 at 6:34 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Tue, May 9, 2023 at 7:19 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
இருக்கிறது.  பாரதிக்கு முன்  பாரதிக்குப் பின் என்று அதைப் பார்க்கவேண்டும். 
பாரதிக்கு முன் இறுக்கம்
பாரதிக்குப் பின்  எளிமை.

பாரதிக்கு முன்னோடி வள்ளலார். அவரது எழுத்தில் - செய்யுள்களில், முக்கியமாக உரைநடையில் -
தமிழின் இறுக்கம் குறைகிறது. பாரதியின் பல சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி வள்ளலார்.

நா. கணேசன்


ஆனால் இன்றோ அடுக்குமொழியைத் தொடர்ந்து ஆழத்தை ஒழுகவிடும் சல்லடை.

இலந்தை

On Mon, May 8, 2023 at 9:24 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
பாரதியின் காலத்தில் மக்களிடையே இருந்த தமிழ் அறிவிற்கும் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் அறிவிற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கின்றதா? 

வி. சுப்பிரமணியன் 



On Mon, May 8, 2023 at 9:06 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
பாரதியின் எளிய பாடல்களுக்கும் உரையா? அந்த அளவுக்கு வாசகர்களின் தரம் தாழ்ந்து விட்டதா? ....
   -இனியன், கரூர்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Virus-free.www.avg.com

Siva Siva

unread,
Jul 5, 2023, 5:23:33 PM7/5/23
to santhav...@googlegroups.com
இறுக்கம் என்றால் இக்காலத்தினருக்குப் புரியாத நடை என்ற அர்த்தமா?
நெகிழ்ச்சி என்றால் இலக்கணக் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாத நடை என்ற அர்த்தமா?

V. Subramanian

N. Ganesan

unread,
Jul 5, 2023, 11:01:45 PM7/5/23
to subrabharathi manian, Santhavasantham
நன்றி, எழுத்தாளரே, சென்னையில் பார்ப்போம். கோவை ஏர்போர்ட்டில்.

On Wed, Jul 5, 2023 at 8:45 PM subrabharathi manian <subrab...@gmail.com> wrote:
in short very nice 

வள்ளலாருக்கு முன் இறுக்கம்
        வள்ளலாருக்குப் பின்  எளிமை.
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdR_57kJipvnxcqouZH0RzxrFQgNL8ANoTH0dDpGEorOw%40mail.gmail.com.

Imayavaramban

unread,
Nov 9, 2024, 4:44:34 PM11/9/24
to சந்தவசந்தம்
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்
 
‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’
'மனநலத்தின் ஆகும் மறுமை' 
வள்ளுவர் வாய்மொழியாம் இவற்றிலிருந்து மனநலத்தின் சிறப்பையும் இன்றியமையாமையையும் நாம் தெளியலாம். 

இப்பிறப்பில் மட்டுமல்லாது, மறு பிறப்பிலும் இன்பமும் செல்வமும் தரவல்ல மனத்தின் முதன்மையான தொழில்களாக இரண்டை முன்னிறுத்துகிறான் பாரதி : இன்பம் காத்தல், துன்பமே அழித்தல்.
 
இன்பம் என்னும் சொல்லுக்கு துன்பமின்மை என்று பொருள். துன்பம் ஒழிந்தால் இன்ப நிலை தானே வந்து எய்தல் இயல்பு.  எனவே இன்பத்தைக் காத்தல் பொருட்டு துன்பத்தை அழிக்கும் பணியிலேயே முழுநேரமும் ஈடுபடுகிறது நம் மனம். இத்துன்பத் தவிர்ப்பு மனத்தில் எவ்வாறு நிகழ்கிறது என்பதை உளவியல் ரீதியாகப் பார்ப்போம்.
 
நம் மனத்தின் தன்னூக்க அமைப்பு முறையானது (Motivational System) சிறு இலக்குகளை உண்டாக்கி அவற்றை அடைவதற்குண்டான சக்தியையும் நமக்குக் கொடுக்கிறது. அவ்விலக்குகளை நாம் அடைவதில் வெற்றிபெறும் போது இன்பமும், தோற்கும்போது துன்பமும் அடைகிறோம். தோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவதற்காக மனமானது பல்வேறு தவிர்ப்பு முறைகளைக் கையாளுகிறது. கடந்த காலத் துன்பங்களை நினைத்துப் பார்த்து, இதுபோல் பிற்காலத்தில் வரக்கூடிய துயரங்களிலிருந்து தப்பிக்கும் வழிகளை ஆராய்ந்து தன் சக்தியெல்லாம் இழந்து சோர்கிறது. சில சமயம், நிகழவே முடியாத ஆபத்துகளைத் தவிர்க்கும் யுக்திகளிலும் தன் முழுக்கவனத்தைச் செலுத்துகிறது. அதனால் எவ்வளவு விரைவாக தப்பித்து ஓடினாலும் ஒரே இடத்தில் இருப்பது போந்ற உணர்வு வருத்த வாடுகிறது.
 
மனம் ஏன் தேவையில்லாத கவலைகளை வளர்த்துக்கொண்டு கற்பனைத் துயரை ஒழிக்கப் போராடுகிறது என்றும் சற்றே சிந்தித்துப் பார்ப்போம்.
 
கற்காலத்தில் வாழ்ந்திருந்த நமது முன்னோர்கள் வழிவந்த நாம், அவர்களது மனவுணர்வுகள் அத்தனையும் பெற்றுள்ளோம். அதனால் தான்,  மனித மூளைக்கு வயது 40,000 ஆண்டுகள் என்கின்றனர் மானுடவியலார். நமது முன்னோர்கள் பல்வேறு விதமான எதிர்மறைத் தூண்டல்களை விளைவிக்கும் பேராபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர்.  விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பெருகியுள்ள இந்தக் காலத்தில் தனிமனித பாதுகாப்பு முறைகள் சீர்ப்பட்டு விளங்கும் இந்தத் தலைமுறையில்,  அத்தகைய பேராபத்துகள் நமக்கு ஏற்படச் சாத்தியமில்லை தான். என்றாலும், காலம் காலமாக முன்னோர்களின் வழியாக நம் மனத்தில் ஆழ்ந்து ஊன்றிய பாதுகாப்பு உணர்வும் இறுக்கமும் இன்றும் நம்மை விட்டு விலகாமல் இருந்து வருகின்ற காரணத்தால்,  நம் இன்பத்துக்கு இடையூறாக ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்னும் ஓர் அச்ச உணர்வினிலேயே எப்போதும் நம் மனம் மூழ்கித் தவிக்கிறது.
 
நம் மனத்துக்கு வியப்புகளும் அதிர்ச்சிகளும் ஏற்புடையதாக இல்லாத காரணத்தால், கிடைத்த இன்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், ஏற்படச் சாத்தியமே இல்லாத ஆபத்துகளை எதிர்நோக்கி நின்று நம் மனத்தை ஒரு தயார் நிலையிலேயே வைத்திருக்கிறோம். மனத்தின் இந்தத் தற்பாதுகாப்பு உணர்வையே 'இன்பத்தைக் காத்துத் துன்பமே அழிப்பாய்' என்கிறான் பாரதி.

- இமயவரம்பன்

(தொடரும்)

இமயவரம்பன்

unread,
Nov 10, 2024, 11:20:15 AM11/10/24
to santhav...@googlegroups.com
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்

 

படிப்பற்றுக் கேள்வியற்றுப் பற்றற்றுச் சிந்தைத் 
துடிப்பற்றார்க் கன்றோ சுகங்காண் பராபரமே

- தாயுமானவர்

 

பற்றும் துடிப்பும் மனவெழுச்சியும் அற்ற அமைதியான இயல்புடைய சிந்தையே இன்பம் தரவல்லது என்கிறார் தாயுமான்வர். இந்த உண்மை உணராமல், 'தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, பிறர் வாடப் பல செயல்கள் செய்து' கிடப்பதையே இன்பமென்று நம்மில் பெரும்பாலோர் கருதுகின்றோம். இதனால், நமக்கும் பிறருக்கும் வாழ்க்கை பயனற்றுப் போக, 'மனம் வாடித் துன்பம் மிக உழன்றுதவிக்கிறோம்இத்தகைய வேடிக்கை வாழ்வை வாழும் மனத்தைப் பார்த்து 'இன்பம் என்று நினைத்துத் துன்பக் குழியில் விழுகிறாயே! மனமே! உனக்குக் கண் இல்லையா! ' என்று கடிந்து பேசுகிறான் பாரதி.  

 

மனிதன் தன் விறுவிறுப்பான வாழ்க்கையில் செல்வத்தைத் தேடித் துடிப்புடனும் பதட்டத்துடனும் செயல்படுகின்ற இந்த இறுக்க நிலையியை உளவியல் நோக்கில் ஆய்ந்து பார்க்கலாம்.

 

நமது நரம்பு மண்டலத்தில் இருண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று, இயல்புநிலைப் பகுதி, மற்றொன்று மனவெழுச்சி நிலைப் பகுதி. பொதுவாக மனவெழுச்சி நிலைப் பகுதியானது ஆபத்துகள் போதும் விறுவிறுப்பான செய்கைகளின் போதும் ஏற்றமடைகிறது. மனவெழுச்சி அடங்கும் போது, இயல்பு நிலைப் பகுதி வலிமை பெறுகின்றது. இவ்விரண்டு பகுதிகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கும்போது, மிகக் குறுகிய காலத்திலேயே நாம் மனவெழுச்சி நிலையில் இருப்போம். நாம் எவ்வளவு நேரம் இயல்பு நிலையில் இருக்கிறோமோ அவ்வளவு நேரம் நம் மனம் தளர்ச்சி நீங்கிச் சுகம் பெறுகிறது. உடல் நலமும் மேம்படுகிறது.

 

ஆனால், இன்றைய விறுவிறுப்பான வாழ்க்கையில், நாம் வெகுநேரம் மனவெழுச்சி நிலையில் தான் இருக்கிறோம். பணத்தாலும் புகழாலும் அழகாலும் இன்பம் வரும் என்று நினைக்கிறோம்இவற்றால் கிடைக்கும் இன்பம் நிலையற்றதே என்பதை உணராமல் இவற்றைத் தொடர்ந்து தேடி இளைக்கும் நாம், உண்மையில் நிலைத்த நலம் பயக்கும் பலவற்றையும் புறக்கணித்து நலிகின்றோம். நட்பு மற்றும் உறவுகள் தரும் அன்பையும் இணக்கத்தையும் கூடத் துறந்து புகழ்ப்பித்துப் பிடித்து அலைகிறோம்இறுதியில், போதுமான மனநிறைவை அடையமுடியாத போது மனநலம் இழந்து தவிக்கிறோம்.  

அறத்தான் வருவதே இன்பம்என்பது குறள் வாக்கு. ஆனால், நாமோ ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்ற வெறியில் அறத்தைக் கவனிக்காமல் எப்படியாவது அடைந்து விடுகிறோம். பின்னர் முழுவெற்றியை ருசிக்க முடியாமல் குற்றவுணர்வில் தவிக்கிறோம். ஆயினும், அதே குற்றவுணர்விலேயே அதனை அனுபவிக்கவும் தொடங்குகிறோம்.

 

இச்சிறுமைகளைச் சாடுவது மட்டுமல்லாமல் இந்நிலையில் இருக்கும் உலக மாந்தரைக் கண்டு வாடும் மனமும் படைத்தவன் பாரதி. அதனால் தான், தன் மனத்துக்குச் சொல்வது போல், தீயை நோக்கிப் பறக்கும் விட்டில் பூச்சிகளாய் அழிந்தொழியும் மக்களைப் பார்த்து இவ்வாறு வாழ்தல் சிறப்பன்று என்று அறிவுறுத்துகிறான்

இமயவரம்பன்

unread,
Nov 10, 2024, 12:03:50 PM11/10/24
to santhav...@googlegroups.com
பிழை திருத்தம்:

இருண்டு பகுதிகள் = இரண்டு பகுதிகள்
ஆபத்துகள் போதும் = ஆபத்துகளின் போதும் 

இமயவரம்பன்

unread,
Aug 31, 2025, 11:05:08 PM (6 days ago) Aug 31
to santhav...@googlegroups.com

பாரதியின் “மனப்பெண்” கவிதை - விளக்கவுரை 


“மனப்பெண்” கவிதை - இது கவிஞன் ஒருவன் தன் மனத்துக்குக் கூறும் அறிவுரை மட்டுமன்று;  உலக மாந்தரின் மன நலத்துக்கு ஒரு வழிகாட்டி; ஆன்ம ஞானத்துக்கு ஒரு திறவுகோல்; இறைவுணர்வை ஊட்டும் ஒளிவிளக்கு. அலைபாயும் மனத்தைக் கைவிடாமல், அதன் குறைகளைப் புரிந்துகொண்டு பரிவு காட்டும் கவிதை; வெறும் கட்டளைகளை எழுப்பாமல் மெல்ல வருடிக் கொடுத்து மனத்தை வழிநடத்தும் கவிதை; மனத்தின் மீது நம்பிக்கை வைத்து, சிவன் அருளாகிய ஆனந்தத்தை அதனுடன் பகிர்ந்துகொள்ளும் கவிதை; ஊசல் ஆடும் மனத்தை உண்மை-நாடும் மனமாகவும், இன்பம் பேணும் மனத்தை முக்தி பெற்ற மனமாகவும் மாற்ற முயலும் சித்தன் ஒருவனின் கவிதை. 


இத்தகைய மகாகவிதையைப் பற்றிய எனது சிந்தனைகளையெல்லாம் விளக்கவுரையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த இழையில் எழுத ஆரம்பித்தேன். இப்போது முழுமையுற்ற இவ்வுரையை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 



அன்புடன்
இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Sep 1, 2025, 8:19:19 AM (5 days ago) Sep 1
to santhav...@googlegroups.com
மெல்லப் படித்து இன்புறுவேன்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 31, 2025, at 23:05, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:



பாரதியின் “மனப்பெண்” கவிதை - விளக்கவுரை 


“மனப்பெண்” கவிதை - இது கவிஞன் ஒருவன் தன் மனத்துக்குக் கூறும் அறிவுரை மட்டுமன்று;  உலக மாந்தரின் மன நலத்துக்கு ஒரு வழிகாட்டி; ஆன்ம ஞானத்துக்கு ஒரு திறவுகோல்; இறைவுணர்வை ஊட்டும் ஒளிவிளக்கு. அலைபாயும் மனத்தைக் கைவிடாமல், அதன் குறைகளைப் புரிந்துகொண்டு பரிவு காட்டும் கவிதை; வெறும் கட்டளைகளை எழுப்பாமல் மெல்ல வருடிக் கொடுத்து மனத்தை வழிநடத்தும் கவிதை; மனத்தின் மீது நம்பிக்கை வைத்து, சிவன் அருளாகிய ஆனந்தத்தை அதனுடன் பகிர்ந்துகொள்ளும் கவிதை; ஊசல் ஆடும் மனத்தை உண்மை-நாடும் மனமாகவும், இன்பம் பேணும் மனத்தை முக்தி பெற்ற மனமாகவும் மாற்ற முயலும் சித்தன் ஒருவனின் கவிதை. 


இத்தகைய மகாகவிதையைப் பற்றிய எனது சிந்தனைகளையெல்லாம் விளக்கவுரையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த இழையில் எழுத ஆரம்பித்தேன். இப்போது முழுமையுற்ற இவ்வுரையை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Sep 1, 2025, 9:16:15 AM (5 days ago) Sep 1
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்! 

On Sep 1, 2025, at 8:19 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

மெல்லப் படித்து இன்புறுவேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages