'மரை' விளக்கம் 👌
நன்றி. மரை என்பதன் etymology யாரும் எனக்கு முன் எழுதியதாகத் தெரியவில்லை. தொல்திராவிடர்கள் வைத்த கலைச்சொல் மரை = antelope. மரையா/மரையான், கன்னடத்தில் மராவு, மரவி என்கிறார்கள் என்றும் தெரிந்தேன். ஆக, antelope என்பதற்கு மிகப்பழைய த்ராவிட வார்த்தை ‘மரை’ என்பது உறுதி.
'நவ்வி' விளக்கம் 🤔 'உழை' விளக்கம் அருமை.
"மென்தினை நுவணை" இலக்கியத்தில் உண்டு. நுண்ணிடி நுவணை = ? (மலைபடுகடாம்)
தினைமா உருண்டையா? எள் உருண்டையா?
உரையாசிரியர் தினைமா உருண்டை என்று சொல்லி இருப்பதாக நினைவு.
நாவு/நவ்வு என்பதன் பொருளில் இருந்து நவ்வி என்ற சிறிய (நுண்ணிய), மடம்பொருந்திய, எழில் மரைக்கான பெயர் தோன்றியிராது. நூவு/நுவ்வு (Cf. கோவை/கொவ்வை கனி, மோது-/மொத்து- ...) என்றால் எள், தினை எனும் நுண்கூலங்கள் என அறிவோம்.
எனவே தான் மரையா/ன் (= Nilgai, மாடு போன்றது), இரலை (Blackbuck [Ref. 1] போன்ற மரைகளை விட, அளவில் சிறுத்ததும், அழகுடையதுமான மரைக்கு நுவ்வி என்ற பெயர் ஏற்பட்டு, சங்க காலத்தில் நவ்வி என மாறிற்று என்ற கருதுகோளை முன்வைக்கிறேன். விவசாயம், மக்கட்டொகை பெருக்கத்தால், நுவ்வி/நவ்வி மரையினம் தென்னிந்தியாவில் முற்றாக அழிந்துவிட்டது. யா என்னும் (ராஜ)சாலம், அகில் போன்ற மரங்கள் இன்று தென்னிந்தியாவில் இல்லை. அதுபோன்றதுதான். முதலைகளில் மூன்று இனங்கள் என்பார் பேராசிரியர் உரையில்: “மூன்று சாதிகள்”. இன்று அவை தமிழ்நாட்டில் இல்லை: முதலை, இடங்கர், கராம். மகர இனங்கள். விடங்கர்/இடங்கர் இல்லை, கராம் “உவர்நீர் முதலை” கடற்கரையில் இல்லை. அதுபோல் தான் நுவ்வி/நவ்வி மரையும். புல்லி > பல்லி போல, நுவ்வி > நவ்வி.
NG Ref. 1: இரலை ரோஹிணீ நக்ஷத்ரத்தின் சின்னமாக 4700 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய வானியலில் இருந்தமை பற்றி ஆராய்ந்து அறிவித்துள்ளேன். This Blackbuck as the mount/symbol of KoRRavai (< kol-), later Durgaa,
|