வெண்பாக் கவியரங்கம்
1.கண்ணெல்லாம் ஆகுமோ கண்?
மண்தின்ற மாதவன் மாமறை மன்னினோன்
பண்கொண்டு கோயில் பயில்கிறான் - எண்ணத்தில்
வண்ணமெழ வண்டாடும் வார்குழலன் காணாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண்? 1
2. பொந்துக்குள் இன்னொரு பொந்து
நாமொரு பொந்ததில் நம்மான்மா தானிருக்கும்
வாமனன் ஆன்மாவில் வாழ்ந்திடுவான்- காமத்தைச்
சிந்தாது கொண்டு செகம்வென்று காணலாம்
பொந்துக்குள் இன்னொரு பொந்து 2
3. நேசமாய் வந்த நெருப்பு
ஓசையின்று உள்புகுந்த உத்தமன் சீர்குணங்கள்
தேசுடைத்துத் தீர்த்திடும் என்னையே - ஆசையை
வாசியின்றி வைக்கவழி இல்லைசெயும் மாலவனின்
நேசமாய் வந்த நெருப்பு 3
4.கண்ணைமூ டிக்கொண்டு காண்.
எண்ணம் அறமிறுத்த எப்போதும் பக்கத்தில்
வண்ணம் விரித்தங்கே வாழ்ந்திடுவான் - மண்ணுலகில்
திண்ணம் அவன்தோன்றும் தேசும் தெரியுமே
கண்ணைமூ டிக்கொண்டு காண். 4
5.பார்ப்பாரே பார்ப்பாரே பார்
வினைகொண்டு வந்தவனை வீக்கா(து) அவனை
வினைவிடுத்(து) ஆன்மா விளங்க - மனையிடு
ஆர்பரித்து ஆன்மா அனைத்துமென்(று) றென்றறிந்து
பார்ப்பாரே பார்ப்பாரே பார் 5
6. குறுக்குத் தெருவில் குடி
விரிந்த உலகில் விரிப்பாய் இதயம்
தெரிந்தார் தெரியாதார் தீண்டு -பெருமை
மறந்தே சிறுமை மனமிட நாளும்
குறுக்குத் தெருவில் குடி 6
7. வானம் இறங்கி வரும்
கானத்தில் நல்முனி காத்தானைக் கண்ணனாய்க்
கானத்தில் கோபிகை கொண்டானை - மானமின்றி
ஏனமாய் பூமி இடந்தானைக் கொண்டாட
வானம் இறங்கி வரும் 7
8.காதுக்கு வேண்டாம் கதவு
தீதுடை மாந்தர் திரிசொல் தடுத்துடன்
வாதம் புரிவார் விலக்கிடு - ஆதரவாய்க்
கோதில் குணத்தார் கொடைவுரை கேட்டிடக்
காதுக்கு வேண்டாம் கதவு 8
9.போதிலே பூத்ததிப் போது
வாதிலே போதினை வைத்து வழிமறந்து
சோதியாம் தன்மை மறந்திருக்க - வீதிசெல்
ஏதமில் நற்குரு எண்ணத்தில் எட்டியவப்
போதிலே பூத்ததிப் போது 9
10.மறதியும் கூட வரம்
குறையின்றி வாழ்ந்து குணம்கொண்ட மேலோர்
நிறைகொள்வர் நன்மை நினைந்து - கறையைப்
பறைசாற்ற மாட்டார் பலன்கொள்ளார் பாரில்
மறதியும் கூட வரம் 10
11.பள்ளியாம் பாதையும் பார்
கள்ள மனத்தையும் வெள்ளையென மாற்றிடும்
பள்ளம் நிறைத்திடும் பள்ளியெனில் - அள்ளலைக்
கொள்ளக் குறைவின்றிக் கொட்டிடும் வாழ்க்கையெனும்
பள்ளியாம் பாதையும் பார் 11
12. நெருப்பை அணைக்காத நீர்
கருத்துடன் கோவிந்தன் காத்தளிக்கும் அண்டம்
இருத்துமே பூதமைந்து முன்னம் - சுருக்கச்
சிருட்டியில் பின்னதாம் முன்சென்று சேரும்
நெருப்பை அணைக்காத நீர் 12
13.கொஞ்சமே னும்மிதைக் கொள்
அஞ்சும் பொருள்காண அஞ்சுதல் வேண்டுமறி
மிஞ்சுவர்க்கு வேறாம் வழியுணர் - வஞ்சமென
நஞ்சுமிழ் வார்பால் நலியாமல் நின்றடிப்பாய்
கொஞ்சமே னும்மிதைக் கொள் 13
14.நட்டத்தில் உச்ச நடம்
இட்டமாய் ஆயர் எழுபயம் தீர்த்தவன்
கட்டத்தில் காக்கும்நம் கண்ணனே - வட்டமாய்
கிட்டத்தில் நின்று கிழமையொடு கோப்பான்கை
நட்டத்தில் உச்ச நடம் 14
15.நீயென்றேன் நீயென்றாய் நீ
மாவுடன் நற்பரி வாரம்சூழ் மாலேயுன்
சேவை கிடைக்க தியானித்தேன் - ஆசையாய்
தேவையறிந்து நெஞ்சில் எழுந்தருள சீர்பெரியன்
நீயென்றேன் நீயென்றாய் நீ 15
16. புன்னகை யார்க்கும் பொது
பொன்மகள் போற்றிட பூத்திடும் செல்வமே
நன்மைகள் நாளெலாம் சேர்ந்திடும் - அன்புடன்
இன்னருள் ஏற்றே இனிமையில் ஆழ்ந்திடும்
புன்னகை யார்க்கும் பொது 16
புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்
வெண்பாக் கவியரங்கம்
1.கண்ணெல்லாம் ஆகுமோ கண்?
மண்தின்ற மாதவன் மாமறை மன்னினோன்
பண்கொண்டு கோயில் பயில்கிறான் - எண்ணத்தில்
வண்ணமெழ வண்டாடும் வார்குழலன் காணாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண்? 1
...
வெண்பாக் கவியரங்கம்
1.கண்ணெல்லாம் ஆகுமோ கண்?
மண்தின்ற மாதவன் மாமறை மன்னினோன்
பண்கொண்டு கோயில் பயில்கிறான் - எண்ணத்தில்
வண்ணமெழ வண்டாடும் வார்குழலன் காணாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண்? 1
2. பொந்துக்குள் இன்னொரு பொந்து
நாமொரு பொந்ததில் நம்மான்மா தானிருக்கும்
வாமனன் ஆன்மாவில் வாழ்ந்திடுவான்- காமத்தைச்
சிந்தாது கொண்டு செகம்வென்று காணலாம்
பொந்துக்குள் இன்னொரு பொந்து 2
3. நேசமாய் வந்த நெருப்பு
ஓசையின்று உள்புகுந்த உத்தமன் சீர்குணங்கள்
தேசுடைத்துத் தீர்த்திடும் என்னையே - ஆசையை
வாசியின்றி வைக்கவழி இல்லைசெயும் மாலவனின்
நேசமாய் வந்த நெருப்பு 3