ஆறுமுகா என ஊறுகெடும்

4 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jun 2, 2026, 12:10:18 PM (4 days ago) Jun 2
to santhavasantham
ஆறுமுகா என ஊறுகெடும் - சிந்துப் பாடல் 

ஆறுமு காவென ஊறுகெடும் - நெஞ்சில்
… ஆழ்ந்திடும் வேதனை மாறிவிடும்
ஊறிடும் ஓர்பயம் நீறுபடும் - புகழ்
… ஓதிட நோயவை ஆறிவிடும். 

பாறைகள் போல்தடை கூறுபடும்  - வினைப்
… பாம்பினை வேற்படை சீறிவிடும்
கூறிடு வார்மனம் வீறுபெறும் - குகன்
… கோவிலைப் பாடிடு பேறுபெறும்.

- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
Jun 2, 2026, 12:59:19 PM (4 days ago) Jun 2
to santhav...@googlegroups.com
அருமையான சிந்துப்பா, திரு. இமயவரம்பன்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 2, 2026, at 12:10, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9CDB26E2-CEA1-4020-AEC4-F0A525DEBF30%40gmail.com.

Arasi Palaniappan

unread,
Jun 2, 2026, 1:56:57 PM (4 days ago) Jun 2
to சந்தவசந்தம்
அருமை இளவலே!

பாம்பினை வேற்படை நூறிவிடும் 

என்று இருக்கலாமோ?

--

இமயவரம்பன்

unread,
Jun 2, 2026, 2:09:38 PM (4 days ago) Jun 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, நண்பரே! 

இமயவரம்பன்

unread,
Jun 2, 2026, 2:20:42 PM (4 days ago) Jun 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அண்ணலே!

இந்தப் பாடல் youTube-ற்க்காக எழுதப்பட்டதால், கூடியவரையில் எளிய சொற்களைக் கொண்டு
எழுத முயன்றுள்ளேன். அதனால், நூறுதல் போன்ற கடினமான சொற்களைத் தவிர்க்கவேண்டியுள்ளது.

(நீறுபடும் என்பதற்குப் பதிலாக எளிய சொல்லைத் தேட முயன்றேன். கிடைக்கவில்லை. மேலும் “ஊறுகெடும்” என்று எழுதும்போது “ஊர் கெடும்” என்று தவறாக எடுத்துக் கொண்டுவிடுவார்களோ என்னும் ஐயமும் உண்டாகிறது )

> On Jun 2, 2026, at 1:56 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> அருமை இளவலே!

இமயவரம்பன்

unread,
Jun 2, 2026, 2:36:47 PM (4 days ago) Jun 2
to santhavasantham, santhav...@googlegroups.com
இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட்டேன் என்று நம்புகிறேன். (ஊறு கெடும் என்பதைவிட ஊறு விடும் என்று சொல்வதால் தவறான பொருள் கொள்வதைத் தவிர்க்க முடியும் என்று தோன்றுகிறது. மேலும் மற்ற ஈற்றுச் சீர்களோடு இயைந்தும் ஒலிக்கிறது) 

மாற்றப்பட்ட முதல் இரண்டு அடிகள்:

ஆறுமு காவென ஊறுவிடும் - மனம்

… ஆழ்ந்திடும் வேதனை மாறிவிடும்

ஊறிடும் ஓர்பயம் ஆறிவிடும் - பிணி

… ஓய்ந்திட ஊன்நலம் தேறிவிடும்

Siva Siva

unread,
Jun 2, 2026, 3:46:03 PM (4 days ago) Jun 2
to santhav...@googlegroups.com
/ ஊறுவிடும் & மாறிவிடும் /

If you are worried by audience's capability to understand the above, then 
அல்லலறும் & தொல்லையறும்
may possibly be useful.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jun 2, 2026, 3:58:10 PM (4 days ago) Jun 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you for the good suggestion.
Reply all
Reply to author
Forward
0 new messages