--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CANuAMWwjLJxV2aLge4kaTjTcwi9YvdbdtizR%3DkxNYZ2f-QWAkA%40mail.gmail.com.
தீபாவளி எனும் திருநாள்
தீபாவளிஎனும் திருநாளே
தெய்வம் அன்பென வருநாளாம்
கோபா வளிகளைக் கொளுத்திடும்நாள்.
கொஞ்சிக் குலவிக் களித்திடும்நாள். 1
தனித்தனி வீட்டின் தரைமெழுகி,
தரித்திரப் பீடையைத் தலைமுழுகி,
மனத்துயர் யாவையும் மறந்திடுவோம்;
மகிழ்வுடன் உள்ளதை விருந்திடுவோம். 2
உதவாப் பழசாம் வழக்கமெல்லாம்
உதறித் தள்ளுதல் ஒழுக்கமெனப்
புதிதாம் ஆடைகள் புனைந்திடுவோம்.
புதுப்புது வழிகளில் நினைந்திடுவோம். 3
ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம்;
ஒருவருக் கொருவர் உபகாரம்;
இவ்வித வாழ்வே தினந்தோறும்
இருந்திட வேண்டிநம் மனம்கோரும் 5
ஈயாப் பத்தரும் ஈந்திடும்நாள்
ஏகிடும் அடிமையும் ஓய்ந்திடும்நாள்
நோயால் நொந்தே இளைத்துவரும்
நோன்பெனக் கொஞ்சம் செழித்திடுவார். 6
‘ஐயா பசி‘யென் பாரில்லை
‘அப்புறம் வா‘யென் பாரில்லை
மெய்யே அன்பு மிகுந்திடும் நாள்
வேற்றுமை விட்டு மகிழ்ந்திடும் நாள். 7
மாச்சரி யங்களும் மறைந்திடும்நாள்
மனிதன் இயல்பு சிறந்திடும்நாள்
ஆச்சரி யம்போல் எல்லோரும்
ஆடலும் பாடலும் சல்லாபம். 8
- நாமக்கல் கவிஞர்