திருப்பரங்குன்றம்

2 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 8, 2026, 11:37:41 AM (3 days ago) Apr 8
to Santhavasantham
திருப்பரங்குன்றம்
------------------

திருப்பரங்குன்ற வேலா!
      - பாபநாசம் சிவன்
 
சீர்காழி மூவர் எனப் புகழ்பெற்ற சைவர்கள் தொடங்கிய தமிழ்க்  கீர்த்தனங்கள், பின்னர் கர்நாடக சங்கீத மூவரால் தெலுங்குக் கீர்த்தனங்கள் ஆக வளர்ந்தன. மூவரும் திரூவாரூரைச் சார்ந்தவர்கள். 20-ம் நூற்றாண்டில், பாரதி, பாபநாசம் சிவன், பெ. தூரன், பாரதிதாசன், ... எனப் பலர் தமிழிசை வளர்த்தனர்.

கர்நாடகக் கச்சேரிகளில் பிரபலமாய் உள்ளது "திருப்பரங்குன்ற வேலா" என்னும் தமிழ்க் கீர்த்தனம் ஆகும். அதன் முன்னர் அறுபடைவீட்டுக்கும்  ஓர் அருச்சனை உண்டு. அதை விருத்தம் போல் செய்யறிவு கொண்டோ, பிறர் பாடியோ சேர்த்தலாம். சங்கீத வித்வான்கள் இந்த விருத்தத்தைப் பாடிக் கேட்டதில்லை.

விருத்தம்

திருச்செந்தூர் சீரலை வாழ் தேவா போற்றி
திருப்பழனியில் இருக்கும் தேவா போற்றி
திருவேரகத்து சாமிநாதா போற்றி
திருத்தணி முதல் மலைகள் திகழ்வாய் போற்றி
தேன்பழங்கள் உதிர் சோலை சேர்வாய் போற்றி
திருப்பொலிய உலகாளும் செம்மால் போற்றி
செந்தமிழ் தெய்வமே போற்றி
ஆறுபடை கொண்ட திருமுருகா போற்றி போற்றி.
   (செம்மல் என்பதன் விளி: செம்மால்)
   
திருப்பரங்குன்ற வேலா! - பாடல்
https://www.youtube.com/watch?v=UN2c6Ev2KNc  - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்
https://www.youtube.com/watch?v=oN64a1Fx_RY - அருணா சாய்ராம்
https://www.youtube.com/watch?v=Q2zYBQZw7k4 -  காயத்ரி கிரீஷ்
https://www.youtube.com/watch?v=LB-oi73q-IU - பிரியா சோதரியர் (25 நிமிடம்)
https://www.youtube.com/watch?v=OamTZiEHaCQ - பரதம்
 
திருப்பரங்குன்ற வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  எனவே, வழக்கு மீதான தீர்ப்பு புதிய ஆட்சி அமைந்தபின் எனத் தீர்க்கமாக நம்பலாம்.

சர்வே தூண் என அரசு தரப்பில் சொல்லியபோது, "மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் இருப்பது தீபத் தூண். நான்கு மாத விரதம் முடிந்தபின் கார்த்திகை தீபம், தேவ தீபாவளி எனப்படுவது ஏற்றுவது போல நடந்திருக்கும். ஆனால் 1000 ஆண்டுகளாக ஏற்றாமல் உள்ளது" என விளக்கினேன். பின்னர் அரசு தரப்பில், "பரங்குன்றத்  தூண் சர்வே தூண் அல்ல, தீபத் தூண் தான்" என மதுரை  நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

வருகிறது தேர்தல்! - சீர்காழி
https://youtube.com/watch?v=IQNJRwAoY4E

முதலில் பரங்குன்றம் என்ற பெயர் ஏன் வந்தது? அதன் காரணம் பற்றித் தமிழ் பிராமி (தமிழி) கல்வெட்டு மூலமாக ஆராய்வோம். மிக அழகான கல்வெட்டு, சில ஆண்டுகள் முன்னர் தான் கிடைத்தது.

பிற பின்,
நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages