மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் பதிகம்

6 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Feb 21, 2026, 6:52:00 AM (5 days ago) Feb 21
to santhavasantham
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் பதிகம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம் - 
மா மா மா மா/ மா கருவிளங்காய்)

1.
ஆரா அமுதாய் அடியார் உரைசெய்
…. அன்பார் தமிழ்மகிழ்வான்
ஏரார் உமையோ டோர்பங் குடையான்
….  ஏடார் மலர்க்கழலான்
காரார் கடல்நஞ் சணிமா மிடற்றான்
….  காதற் புனற்சடையான்
சீரார் மறைவாழ் மாடம் பாக்கம்
….  தேனு புரீச்சுரனே.

2.

தூவான் மதியைச் சூடும் சடையில்

….  சூழும் புனலுடையான்

ஓவா வினைகள் ஓட்டும் விழியான் 

….  ஊரும் விடையுடையான்

ஆவா எனவே அருள்செய் தடியார்

….  ஆகம் நிதமுறைவான் 

தேவா ரமலி மாடம் பாக்கம்

….  தேனு புரீச்சுரனே. 


(ஆகம் = நெஞ்சம்; தேவாரமலி = தேவார இசை நிறைந்த) 


(தொடரும்)


- இமயவரம்பன் 



Ram Ramakrishnan

unread,
Feb 21, 2026, 8:12:16 AM (5 days ago) Feb 21
to santhav...@googlegroups.com
பதிகம் மிகச் சிறப்பாக தொடங்குகின்றது. வாழ்த்துகள், திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 21, 2026, at 06:52, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் பதிகம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2260998F-FDE3-48AB-A9DA-CDCEF007B783%40gmail.com.

Arasi Palaniappan

unread,
Feb 21, 2026, 8:16:18 AM (5 days ago) Feb 21
to சந்தவசந்தம்
அருமை 

"ஏரார் உமையின் ஒருபங் குடையான் "

என்றிருக்கலாமோ?

இமயவரம்பன்

unread,
Feb 21, 2026, 8:53:58 AM (5 days ago) Feb 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!

இமயவரம்பன்

unread,
Feb 21, 2026, 8:57:07 AM (5 days ago) Feb 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்!

“ஒருபங் குடையான்” என்று தான் முதலில் எழுதினேன். ஆனால், “ஏர்” என்பதுடன் இயைந்து ஒலிப்பதற்காக “ஓர்” என்று மாற்றினேன்.

Siva Siva

unread,
Feb 21, 2026, 9:12:43 AM (5 days ago) Feb 21
to santhav...@googlegroups.com
Nice.

/ ஏரார் உமையோ டோர்பங் குடையான் /

உமையோடு? உமையாள்?

/ காதற் புனற்சடையான் /

Interesting phrasing,

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Feb 21, 2026, 9:22:44 AM (5 days ago) Feb 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you!
உமையாள் ஓர்பங்குடையான் fits well here.

Saranya Gurumurthy

unread,
Feb 21, 2026, 8:49:41 PM (4 days ago) Feb 21
to சந்தவசந்தம்
Very nice songs sir.

Saranya

இமயவரம்பன்

unread,
Feb 22, 2026, 5:52:36 AM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you so much.

> On Feb 21, 2026, at 8:49 PM, Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
>
> Very nice songs sir.
Reply all
Reply to author
Forward
0 new messages