(Photo Generated by AI)
சகோதரி நிவேதிதை அவர்களை வாழ்த்திச் சுவாமி விவேகானந்தர் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றைத் தமிழ்ப்படுத்துமாறு திரு. கணேசன் அவர்கள் சில நாள்களுக்கு முன் என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் பணித்தபடி எழுத முயன்ற மொழிபெயர்ப்புக் கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
விவேகானந்தர் நிவேதிதையை வாழ்த்திய கவிதை:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓர்தாய் உள்ளம், வீரர்நெஞ் சுறுதி,
தென்றலின் இனிமை, செந்தழல் எரிபாய்
ஆரிய வேள்வி தோறு(ம்)நின் றொளிரும்
மந்திர வலிமை - என்றுபண் டெவர்க்கும்
நனவினும் கனவினும் நினைவரி யனவாம்
வீ(று)இவற் றொடுநற் பேறுகள் பிறவும்
நின்ன தாகி மன்னுக! - வருநாள்
பாரதம் பயக்கும் பேரார் மைந்தற்(கு)
இன்னருந் தலைவி, அன்புச் சேவகி,
உன்னத சகி-என் றாதிநீ ஒருங்கே.
(மொழிபெயர்ப்பு)
இமயவரம்பன்
(தழல் எரி = ஒருபொருட் பன்மொழி; பண்டு = முற்காலத்தில்; வீறு இவற்றொடு = பெருமை வாய்ந்த இவற்றுடன்; மன்னுக = நிலைக்க; வருநாள் = வருங்காலத்தில்; பயக்கும் = பெற்றெடுக்கும்; பேர் ஆர் = புகழ் வாய்ந்த; சகி = தோழி; ஆதி = ஆவாயாக)
Original poem (by Swami Vivekananda)
BLESSINGS TO NIVEDITA
The mother's heart, the hero's will,
The sweetness of the southern breeze,
The sacred charm and strength that dwell
On Aryan altars, flaming, free;
All these be yours, and many more
No ancient soul could dream before --
Be thou to India's future son
The mistress, servant, friend in one.
[ஆக = ஆகுக; (வியங்கோள் வினைமுற்று)]
நின்ன தாகி மன்னுக! - வருநாள்
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D031EB81-2CB2-4721-B9EE-ABE2BAF2B11F%40gmail.com.