அழகு நடை பழகு குறள் - ழகரப் பாட்டு
(எல்லாச் சீர்களும் ழகர எதுகையில் அமைந்த பாட்டு)
(சந்தக் குழிப்பு :
தனதனன தனதனன தனதனன தனதனன
… தனதனன தனதனனனா)
விழுபொருளை விழைமதியும் இழிசினமும் முழுதகல
… விழுமியசொல் மொழியுமறமாம்
வழுவில்நிதி தழையநிதம் உழவினொடு தொழில்வளர
… வழிமுறைகள் கழறுபொருளாம்
தழலிலுறு மெழுகினுயிர் குழையவரும் எழிலிருவர்
… தழுவியுளம் இழையுமகிழ்வாம்
அழிவிலொளி பொழியருளின் வழியிலுல குழல்வொழிய
… அழகுநடை பழகுகுறளே.
பதம் பிரித்து:
விழு பொருளை விழை மதியும் இழி சினமும் முழுது அகல
… விழுமிய சொல் மொழியும் அறமாம்
வழு இல் நிதி தழைய நிதம் உழவினொடு தொழில் வளர
… வழிமுறைகள் கழறு பொருளாம்
தழலில் உறு மெழுகின் உயிர் குழைய வரும் எழில் இருவர்
… தழுவி உளம் இழையும் மகிழ்வாம்
அழிவு இல் ஒளி பொழி அருளின் வழியில் உலகு உழல்வு ஒழிய
… அழகுநடை பழகு குறளே.
சொற்பொருள்:
விழுபொருள் = அழியக் கூடிய பொருள்;
வழு இல் = குற்றம் அற்ற;
கழறு = சொல்கின்ற;
மெழுகின் = மெழுகைப்போல;
எழில் இருவர் = (அன்பு என்னும்) அழகு வாய்ந்த இரு காதலர்கள்;
இழையும் = சேரும்;
அழிவு இல் ஒளி = என்றும் அணையாத ஒளி;
உழல்வு = துன்பங்கள்
⁃ இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CE6A090C-FC7E-4E24-A4BD-035748579560%40gmail.com.
கழிசினமும் இழிபகையும் ஒழியவிறை தொழுதுவினை
… கழலும்வகை மொழியுமறமாம்
வழுவில்நிதி தழையநிதம் உழவினொடு தொழில்வளர
… வழிமுறைகள் கழறுபொருளாம்
தழலுருகு மெழுகினுயிர் குழையவிழி வழியுமவர்
… தழுவியுளம் இழையுமகிழ்வாம்
அழிவிலொளி பொழியுநெறி வழியிலுல குழல்வொழிய
… அழகுநடை பழகுகுறளே.
(கழலும் = விலகும்)