கொடுத்த கருத்திற்கு விடுத்த வெண்பா - 3

3 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Feb 10, 2026, 3:21:03 PM (18 hours ago) Feb 10
to santhavasantham


கொடுத்த கருத்திற்கு விடுத்த வெண்பா - 3


கொடுத்த கருத்து:

*ஆன்மீக அமைதி*

1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *மந்திரம்*.

2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *தந்திரம்*.
3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *இசை*.

4.பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *கடாக்ஷம்*.

5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *யோகா*.

6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்.*

7.சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *பிராணாயாமம்*.

8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *குண்டலினி*.

9.இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*.

10.உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - *குடும்பம்*.

11.தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *அன்பு*.

12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *பக்தி*


விடுத்த வெண்பா

*ஆன்மிக அமைதி*

மந்திரந் தந்திரம் மன்னுமிசை யோகமிடம்
சிந்தைத் தியானஞ் செறிமூச்சு - செந்திறத்தில்
பக்தி யிறையருள் பந்தஞ்சூழ் அன்புடன்
சித்திதரும் சாந்தம் தெளி.

பிராணயாமம் - செறிமூச்சு (என்றன் பிரயோகம்)
குண்டலினி - செந்திறம் (என்றன் பிரயோகம்)
கடாக்ஷம் - இறையருள்
பக்தி, சித்தி - ஓரின எதுகை (வல்லின எதுகை)

காட்டு:

தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தின் காணப் படும்.
(திருக்குறள் 114)

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Ram Ramakrishnan

unread,
Feb 10, 2026, 7:23:15 PM (14 hours ago) Feb 10
to santhavasantham
திருத்தம்: எச்சத்தாற்

தக்கார் தகவில ரென்ப தவரவர் 
எச்சத்தாற் காணப் படும்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
Reply all
Reply to author
Forward
0 new messages