மூன்று முறை வெவ்வேறு கோணங்களில் கைலாயக் காட்சி கிடைத்தது. தெற்குப்புறக் காட்சி. நந்தி முன்பாகப் படுத்திருக்க மேனி முழுதும் வெண்ணீறு பூசியது போன்ற அற்புதமான கைலாயக் காட்சி. என்னே ஆச்சர்யம். கைலாய மலை உரித்துவைத்த வெள்ளை வெங்காயம் போலக் காட்சியளித்தது.
கண்டேன் கயிலைமலை கண்டு மனநெகிழ்ச்சி
கொண்டேன், அடடா குதூகலம்- அண்டியவர்க்(கு)
ஆனா நலமளிக்கும் அண்ணலே என்றனுக்கு
ஞானானந் தம்தா நயந்து
களிப்போடு நந்திமுன்னே காட்சிதர
தேகம்
வெளுப்பாய்க் கயிலைமலை வீற்றே- ஒளிர்ந்திருக்க
என்னே பரவசம் எவ்வளவு பேரழகு
அன்னேயீ தன்றோ அருள்!
உரித்துவைத்த வெள்ளைநிற உள்ளியென
நீறு
தரித்திருந்த கைலாயத் தானே- பொருப்பெனவே
காட்சி யளிக்கும் கருணையினை என்சொல்வேன்
மீட்சியினுக் கீதன்றோ வித்து
இலந்தை
7-6-2026....கைலாய மலை உரித்துவைத்த வெள்ளை வெங்காயம் போலக் காட்சியளித்தது.
...
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBP98okAuxMnbO5cC7LdUAPD8ZLxJ9JyrwjivyJBrNVYQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D778DC0E-2F63-4581-8BFE-A9ED8214FF8C%40gmail.com.
07-6-2026 7 ஜூன் 2026
இரவு 2 மணி அளவில் ஒரு கனவு. வெட்ட வெளியில் நானும் என்மகன் சுந்தரும் எனது ஸ்ரீவித்யா குருவும் நடந்து கொண்டிருக்கிறோம். “இங்கேயே உங்களுக்கு ஒரு மந்திரம் கொடுக்கப்போகிறேன். ஆனால் அதை நீங்கள் பெறுவதற்குமுன் நான் கேட்கும் மந்திரத்தை நீங்கள் கையில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொண்டு சொல்லவேண்டும்.சரியாகச் சொன்னால் மந்திரம் கிடைக்கும் எங்காவது சென்று ஒரு வெங்காயத்தைக் கொண்டு வாருங்கள்” என்றார் குரு. நான் காசைத் தேடினேன். “விலைக்கெல்லாம் வாங்கக் கூடாது. அதுவாக உங்களுக்குக் கிடைக்கவேண்டும்.”என்றார் குரு. . அதிசயமாக குருவின் முன்னாலேயே ஒரு பெரிய திரணமான வெங்காயம் கிடைத்தது. சரி ஜோடசியைச் சொல்லி கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணுங்கள் என்றார். ஜோடஸியைச் சொல்லத் தொடங்கினேன். அப்பா தப்பு என்றான் பையன். தினமும் சரியாகத்தானே சொல்லுகிறேன். இன்றேன் சரியாக வரவில்லை. மூப்பாலே மறதி வந்துவிட்டதோ? மறதி வந்துவிட்டால் மந்திரம் வேண்டாம் என்று கத்தினேன். விழிப்பு வந்துவிட்டது. உடனே கம்ப்யூட்டரைத் திறந்து ஜோடசி மந்திரத்தைச் சரிபார்த்துக்கொண்டேன். அப்பொழுது கைலாய யாத்திரை சென்றிருக்கும் என் பையனிடமிருந்து ஒரு வீடியோ அழைப்பு வந்தது. “அப்பா கைலாய மலையைப் பார் என்று சொல்லிக் கைலாய மலைக் காட்சியை நேரடியாகக் காட்டினான். ஓம் நமசிவாய என்று சொல்லிக் கை கூப்பினேன். மிகத் தெளிவான கைலாயக் காட்சி. மெய்சிலிர்த்துவிட்டேன்.
மூன்று முறை வெவ்வேறு கோணங்களில் கைலாயக் காட்சி கிடைத்தது. தெற்குப்புறக் காட்சி. நந்தி முன்பாகப் படுத்திருக்க மேனி முழுதும் வெண்ணீறு பூசியது போன்ற அற்புதமான கைலாயக் காட்சி. என்னே ஆச்சர்யம். கைலாய மலை உரித்துவைத்த வெள்ளை வெங்காயம் போலக் காட்சியளித்தது.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPvpL3OKwFtH-mBj8EeSb%3DGvmTQWKisRtJ-0dGybJkY7g%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBcCHXV9OdAFNewwzYQAVe4SgwxE6Mxhym2jsUhkGdRbQ%40mail.gmail.com.