தமிழில் புதிர்கள்

2,640 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Sep 26, 2012, 1:15:13 PM9/26/12
to santhav...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil

எல்லார்க்கும் வணக்கம்,

அண்மையில் இணையத்தில் கீழ்க்காணும் புதிரைப் படித்தேன். 

தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:
முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
என்று.
நண்பர் சொன்னாராம்:
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் பெயரில் கால் நீக்கி அதில் தேய்
என்று.

இதற்கு விடை 

முதலாம் நண்பர் இப்படிச் சொன்னாராம் :

முக்கால் என்பது கைத்தடி. மூவிரண்டு என்பது ஆறு. ஐந்து தலை நாகம் என்றால் நெருஞ்சி முள். கைத்தடி எடுத்துக் கொண்டு ஆற்றுப் பக்க போகையில் நெருஞ்சி முள் குத்திவிட்டது என்பது இதன் பொருள். 

அதற்குப் பதிலளித்த இரண்டாம் நண்பர் 

பத்துரதன் = தசரதன்
பத்துரதன் புத்திரன் = இராமன்
புத்திரனின் மித்திரன் = சுக்ரீவன்
புத்திரனின் மித்திரனின் சத்துருவின் மனைவி = தாரை 

தாரையில் ஒரு காலை எடுத்து விட்டால் தரை. நெருஞ்சி முல்லை எடுப்பதற்கு தரையிலே தேய் என்றாராம் இரண்டாம் புலவர். 

இதைப் போன்று இன்னும் ஏராளமான புதிர்கள் தமிழில் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு தெரிந்தவற்றை இங்கே பகிர முடியுமா ?

படிப்பதற்கு சுவையாக இருக்கும் 

அன்புடன்,
நிரஞ்சன் 
338.gif

Naren Cmc

unread,
Sep 26, 2012, 2:06:35 PM9/26/12
to santhav...@googlegroups.com
inimayana pathivu... mikka nandri ...

2012/9/26 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
Narendiran S.
338.gif

sk natarajan

unread,
Sep 26, 2012, 8:31:45 PM9/26/12
to tamizhs...@googlegroups.com, santhav...@googlegroups.com, min tamil
அருமை ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/9/26 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

vis gop

unread,
Sep 27, 2012, 1:08:38 AM9/27/12
to santhav...@googlegroups.com
இன்னொரு 'பு'திர்:

புல்லின்மேலே ஏறிச்செல்வேன்
பல்லினாலே கீறிச்செல்வேன் - நான்
செல்லும்புல்லோ காகக்கருப்பு
சொல்லிப்பாரென் பேரில்லொருபு!   
நான் யாரப்பு?

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2012/9/26 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

--
338.gif

vis gop

unread,
Sep 27, 2012, 1:58:44 AM9/27/12
to santhav...@googlegroups.com
இன்னொரு 'பு'திர்:

ஐயன்பரமன் பையன்கொள்ள  
மெய்யாய்விரும்பிக் கையில்கொள்வான் 
உசிப்பீர்நீரும் உச்சுக்கொட்டிப் 
பசிக்குத்தின்னும் பறியாக்கனியே!
எது அது?

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

338.gif

Balasubramanian N.

unread,
Sep 29, 2012, 2:35:35 AM9/29/12
to santhav...@googlegroups.com

எட்டி பழுப்பதேன்? எருமைக்கன்று சாவதேன்? - இரு வினாவொரு விடை. - ’பாலற்று’

இன்னொரு வகை:- ஆட்டுக்குக் காலில்லை! மாட்டுக்குக் கொம்பில்லை ! பாட்டிலே ஆராய்ந்து பார்!

இதெல்லாம் இன்னுங்கொஞ்சம் வேண்டின் அரிகிருட்டினனாரிடம் கேட்கவும். நான் கேட்கச்சொன்னேனென்றால் கட்டாயம் தருவார்.

ஐயம்பேட்டைக்கு அடுத்தவூரான்[?]



2012/9/27 vis gop <vis...@gmail.com>
338.gif
Reply all
Reply to author
Forward
0 new messages