குறள் பொருள் விளக்கும் விருத்தங்கள்

116 views
Skip to first unread message

Anand Ramanujam

unread,
Aug 30, 2023, 3:18:20 PM8/30/23
to santhavasantham
குறள் பொருள் விளக்கும் விருத்தங்கள்

அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு.

விளக்க விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

அகரம் என்னும் ஓரெழுத்தாம்
  அறிவை விரிக்கும் சீரெழுத்தாம்
திகழும் எழுத்துத் திரட்கெல்லாம் 
  திலதம் அனைய முதலெழுத்தாம்
புகழும் அகர எழுத்தினைப்போல்
  புவிக்கோர் இறைவன் முதலாவான்
அகமும் புறமும் ஆள்பவனாம்
  அன்னை தந்தை ஆனவனாம். 

- இரா. ஆனந்த்

Siva Siva

unread,
Aug 31, 2023, 6:34:33 PM8/31/23
to santhav...@googlegroups.com
Good. 
What is the goal of this effort?

திலதம் / = ?

V. Subramanian

Anand Ramanujam

unread,
Aug 31, 2023, 6:47:14 PM8/31/23
to santhav...@googlegroups.com
Thank you!

திலதம் = திலகம் என்பதன் தமிழாக்கம்

The goal is to provide explanation in the form of song. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNtFRfdE57rVQQ%2BehAYd7eOrWiYFvNqxCYOCQdLJ45XYQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Aug 31, 2023, 7:05:35 PM8/31/23
to santhav...@googlegroups.com
திலகம் - is easier to understand. I presume you have a reason to use another (what I think is an obscure) form.

It is fine to attempt writing such verses as an exercise and for fun. But I do not know if there is a target audience that will read such verses.

Are you intending to write for a specific set or for the entire book?

V. Subramanian

Anand Ramanujam

unread,
Aug 31, 2023, 7:06:58 PM8/31/23
to santhav...@googlegroups.com
I found a usage of  ‘திலதம்’ in ‘திருவாய்மொழி’:

திலதம் உலகுக்கு ஆய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே

Anand Ramanujam

unread,
Aug 31, 2023, 7:08:47 PM8/31/23
to santhav...@googlegroups.com
It is mostly for exercise and fun. I am planning to write only for ‘கடவுள் வாழ்த்து’

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Aug 31, 2023, 7:17:00 PM8/31/23
to santhav...@googlegroups.com

Anand Ramanujam

unread,
Aug 31, 2023, 7:38:10 PM8/31/23
to santhav...@googlegroups.com

N. Ganesan

unread,
Aug 31, 2023, 9:58:11 PM8/31/23
to santhav...@googlegroups.com
பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து பணிவார் பொருவு_இல் இவர்
மேவும் பொன்னி திரு நாடே புவிக்கு திலதம் என வியப்பார்
பாவும் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின்
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார் - பெரியபுராணம்

சௌந்தர்

unread,
Sep 1, 2023, 2:07:17 AM9/1/23
to சந்தவசந்தம்
A frank exchange of opinion between Siva Siva and Anand. I like it.
Soundar

Anand Ramanujam

unread,
Sep 1, 2023, 4:39:00 AM9/1/23
to santhav...@googlegroups.com
நன்றி, திரு. கணேசன்.

Anand Ramanujam

unread,
Sep 1, 2023, 4:39:57 AM9/1/23
to santhav...@googlegroups.com
Thank you, Thiru. Soundar!

Anand

lns2...@gmail.com

unread,
Sep 1, 2023, 6:31:22 AM9/1/23
to சந்தவசந்தம்
அருமை

Srini

Ramamoorthy Ramachandran

unread,
Sep 1, 2023, 7:46:28 AM9/1/23
to santhav...@googlegroups.com
வணக்கம் ஆனந்த் ! தொடர்ந்து 1330 விருத்தப்பாக்கள் எழுதப் போகிறீர்கள் !
பெரும்பணி! மலைப்பு உண்டாகிறது! 
அன்பன் புலவர் இராமமூர்த்தி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Sep 1, 2023, 11:32:22 AM9/1/23
to santhav...@googlegroups.com
very good aananth vazga,
 yogiyar

Anand Ramanujam

unread,
Sep 1, 2023, 11:41:09 AM9/1/23
to santhav...@googlegroups.com
Thank you, Thiru. Srini!

--

Anand Ramanujam

unread,
Sep 1, 2023, 11:42:27 AM9/1/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, புலவரே!

On Fri, Sep 1, 2023 at 7:46 AM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:

Anand Ramanujam

unread,
Sep 1, 2023, 11:44:22 AM9/1/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, யோகியாரே!

Dr Subramanian

unread,
Sep 1, 2023, 9:17:46 PM9/1/23
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு. தொடர்க. 
அன்பன் 
வவேசு 

Anand Ramanujam

unread,
Sep 1, 2023, 9:29:12 PM9/1/23
to santhav...@googlegroups.com

Anand Ramanujam

unread,
Sep 3, 2023, 7:11:09 AM9/3/23
to santhavasantham
அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்.

விளக்க விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

ஞானக் கலைகள் பயின்றிடினும்

   நயமார் நூல்கள் நவின்றிடினும்

வான மறிந்த தனைத்தினையும்

   வகையோ டறிந்து தெளிந்திடினும்

தானோர் தூய அறிவுருவன் 

   தலைவன் மலர்த்தாள் தொழுதேத்தி 

ஆனா அன்பால் உருகாரேல் 

   அறிவின் பயனைப் பெறுவாரோ?

(ஆனா = நீங்காத)

- இரா. ஆனந்த்

Subbaier Ramasami

unread,
Sep 4, 2023, 4:57:39 AM9/4/23
to santhav...@googlegroups.com
நல்ல முயற்சி. திலத வாணுதலார்  என்கிறார் பாரதி

முயற்சி வெல்க்! 
இல்ந்தை

On Wed, Aug 30, 2023 at 3:18 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Sep 4, 2023, 6:59:16 AM9/4/23
to santhav...@googlegroups.com
தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, இலந்தையாரே!

பாரதியின் கவிதையிலிருந்து திலதத்தை எடுத்துக் காட்டியமைக்கும் நனிநன்றி!

- இரா. ஆனந்த்
… 

N. Ganesan

unread,
Sep 5, 2023, 7:50:30 AM9/5/23
to சந்தவசந்தம்
On Monday, September 4, 2023 at 3:57:39 AM UTC-5 Subbaier Ramasami wrote:
நல்ல முயற்சி. திலத வாணுதலார்  என்கிறார் பாரதி

உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் 
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் இதனிடை 
சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரிதாக மயக்குமால் 
திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விகக் கனவு அன்னது வாழ்கவே 

பாரதி பாடலில் தேட:  http://tamilconcordance.in/TABLE-BRYR.html

Anand Ramanujam

unread,
Sep 5, 2023, 7:56:37 AM9/5/23
to santhav...@googlegroups.com
நன்றி, திரு.கணேசன்!

Anand Ramanujam

unread,
Sep 8, 2023, 5:39:32 PM9/8/23
to santhavasantham
அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்.

விளக்க விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

அருள்கொண் டாடும் அடியார்கள்
... அன்பின் நினைந்த அப்போதே
விரியும் மனமாம் மலர்தன்னில்
... விரைவின் மேவி இடங்கொள்வான்
ஒருநற் கதியாம் அவன்தாளில்
... ஒன்றிக் கலக்கும் உணர்வுடையார்
இருளற் றொளிரும் வீட்டுலகில்
... இனிதே நிலைபெற் றிருப்பாரே!

-இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Sep 12, 2023, 7:21:43 AM9/12/23
to santhavasantham
அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விளக்க விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

வேண்டும் எனவொன் றில்லாதான்
... விருப்புற் றெதையும் நண்ணாதான்
வேண்டா வெனவும் தள்ளாதான் 
... வெறுப்பொன் றகத்தில் கொள்ளாதான்
மாண்புற் றொளிரும் குணமுடையான்
... மலர்த்தாள் பணியும் மனமுடையார்
தீண்டும் துயரற் றென்றென்றும்
... சிந்தை தெளிந்து வாழ்வாரே.

- இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Oct 10, 2023, 6:43:43 AM10/10/23
to santhavasantham
அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

விளக்க விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

அறிவை மயக்கி இருள்பெருக்கி
... அழுத்தும் தீய வினைப்பலனும்
பிறவிச் சுழலில் தளைப்படுத்திப் 
... பிணைக்கும் தூய வினைப்பலனும்
அறவே விலக அகமகிழ்வார்
... அறிவும் சிறக்க நலமுறுவார்
இறவாப் புகழ்சேர் இறையருளை
... எண்ணித் துதிக்கும் மனத்தவரே. 

Siva Siva

unread,
Oct 10, 2023, 9:49:34 AM10/10/23
to santhav...@googlegroups.com

/தூய வினைப்பலனும்/
நல்வினை என்ற பொருளா?

Anand Ramanujam

unread,
Oct 10, 2023, 10:54:20 AM10/10/23
to santhav...@googlegroups.com
ஆம். நல்வினை என்னும் பொருளில் எழுதினேன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Oct 10, 2023, 9:29:03 PM10/10/23
to santhavasantham
அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 6

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

விளக்க விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

விழிவாய் செவிமூக்(கு) உடலென்னும்
... வெல்லற் கரிய புலனைந்தின்
வழியை அறிவாம் தாழ்கொளுவி
... மறித்துச் சிறக்கும் நலமுடையான்
ஒழிவில் உண்மை ஒளியோங்கும்
... ஒருநற் றலைவன் அவன்காட்டும்
வழுவில் நெறியே மருவிடுவார்
... மண்ணில் நெடுநாள் வாழ்குவரே!

(தாழ்கொளுவி = தாழ்ப்பாளைப் பூட்டி)

Anand Ramanujam

unread,
Oct 11, 2023, 6:05:25 AM10/11/23
to santhavasantham
அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

விளக்க விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

நிகரென் றொருவர் இல்லாதான்
... நேராம் பொருளும் இல்லாதான்
புகழில் மிகுநர் இல்லாதான்
... பொருவற் றொளிரும் அன்பாவான்
புகலென் பவர்க்கோர் சார்வாவான்
... பொற்றாள் வணங்கும் பேர்க்கல்லால்
மிகுவெந் துயரம் வாட்டாமல்
... வெல்லும் திறனும் வாய்க்காதே.

(பொருவற்ற = ஒப்பற்ற)

Siva Siva

unread,
Oct 11, 2023, 8:33:16 AM10/11/23
to santhav...@googlegroups.com
பொருள் என்பது பொதுவான சொல் அன்றோ?

/நிகரென் றொருவர் இல்லாதான்
... நேராம் பொருளும் இல்லாதான்/
Is the second half redundant?

/வணங்கும் பேர்க்கல்லால்/
வணங்கி னார்க்கல்லால்
may possibly flow better.

/வாய்க்காதே/
வாயாதே
may possibly be the more preferred form.

V. Subramanian


Anand Ramanujam

unread,
Oct 11, 2023, 5:48:12 PM10/11/23
to santhav...@googlegroups.com
பொருள் பற்றித் தெளிவித்தமைக்கு நன்றி!

பாடலை இவ்வாறு மாற்ற விரும்புகிறேன்:

நிகரென் றொருவர் இல்லாதான்

... நிலையீ தென்ன ஒண்ணாதான்

புகழில் மிகுநர் இல்லாதான்

... பொருவற் றொளிரும் அன்பாவான்

புகலென் பவர்க்கோர் சார்வாவான்

... பொற்றாள் வணங்கி னார்கல்லால்

மிகுவெந் துயரம் வாட்டாமல்

... வெல்லும் திறனும் வாயாதே.


(நிலை ஈது என்ன ஒண்ணாதான் = அவனது நிலை இத்தகையது என்றும் கூற முடியாது) 
தொல் நிலை ஒருவரால் துணியற்பாலதோ” - கம்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Oct 12, 2023, 8:07:12 AM10/12/23
to santhav...@googlegroups.com
ஒற்றுப்பிழை திருத்தம் : பொற்றாள் வணங்கி னார்க்கல்லால்

Anand Ramanujam

unread,
Oct 12, 2023, 8:22:18 AM10/12/23
to santhavasantham
அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது

விளக்க விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

தருமம் எனுமோர் தடங்கடலின்
... தனிப்பே ருருவாம் ஒருதலைவன்
அருளைப் பொழியும் அருந்தவத்தோன்
... அகிலம் புரந்(து)ஓர் அரசிருப்போன்
புரையில் மலர்நேர் திருவடிகள்
... புணையென் றடையும் அடியவர்க்கே
திரைநின் றலைக்கும் பொருளின்பச்
… சுழலைக் கடக்கும் திறன்வருமே.

(புரையில்= குற்றமற்ற; புணை = தெப்பம்)

GOPAL Vis

unread,
Oct 12, 2023, 8:23:26 AM10/12/23
to santhav...@googlegroups.com
அருமை முயற்சி. வெல்க.
இக்குறளில் எனக்கு ஒரு ஐயம் உண்டு. இறைவன் மாணடியைச் சென்றடைந்தவர் நிலமிசையும் வாழ்ந்து கொண்டிருப்பாரோ என்று. சேர்ந்தார் என்றால் அவனிடம் பக்தி செய்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். உங்கள் விளக்கப் பாடலில் அவனைக் கதியாக அடைந்தவர் - மோக்ஷம் (வீடு) பெற்றவர் - அந்த வீட்டிலே இன்பத்தில் நிலைபெறுவர் என்கிறீர்கள். நன்று!  நிலமிசை என்பது மோக்ஷத்தில் (வீட்டில்) என்று பொருள்படுமா?
கோபால்


On Sat, Sep 9, 2023 at 3:09 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்.

விளக்க விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

Siva Siva

unread,
Oct 12, 2023, 8:40:25 AM10/12/23
to santhav...@googlegroups.com
நீடுதல் -  3. To abound; to be copious; பெருகுதல். நீடிய செல்வம். (W.) 4. To thrive, grow well; செழித்தல். (யாழ். அக.) 5. To rise high; மேம்படுதல். நிலைமை நீடுத றலைமை யோ வன்றே (ஞானா. பாயி. 3). 

7.34.1
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
    சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
    ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

.... சிவபிரான், தன்னையே பாடுவார்க்கு இம்மையிற்றானே நல்ல உண்டியும், ஆடையும், பிறவும் தந்து புரப்பான் ; அதனால், புகழும் மிகும் ; துன்பங் கெடுதலும் உண்டாம், இவையன்றி இவ்வுடம்பு நீங்கிய நிலையிற்றானே சிவ லோகத்தை ஆளுதல் உளதாம் .....

V. Subramanian



GOPAL Vis

unread,
Oct 12, 2023, 8:56:48 AM10/12/23
to santhav...@googlegroups.com
நன்றி. 
நீடுதல் என்பதில் ஐயம் பெரிதும் இருந்ததில்லை. அடிசேர்ந்தார் என்பதில் தான் ஐயம். நில வாழ்வின் இயல்பான பவக்கடல் அனுபவங்களை விட்டு நீங்குவதே அவன் திருவடியில் சேர்ந்து/இணைந்து விடுவது. சேர்ந்தார் என்பதற்கு  அணைந்தார்/அண்டினார்/.. என்பதுபோல எளிய பொருள் கொண்டால் நிலமிசை வளம்பெற்று வாழ்வது என்பது எளிது விளங்குகிறது. திரு ஆனந்த், வீடுபேற்றை அடைந்து அங்கு நிலைபெறுவதாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
கோபால்

Lalitha & Suryanarayanan

unread,
Oct 12, 2023, 9:02:02 AM10/12/23
to santhav...@googlegroups.com
சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் என்று பொருள் சொல்வர்.

சிவசூரி.

Anand Ramanujam

unread,
Oct 12, 2023, 10:39:59 AM10/12/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு.கோபால்!

திருமங்கை ஆழ்வார் வீட்டுலகத்தை ‘பெருநிலம்’ என்றே குறிக்கிறார். அதேபோல், வள்ளுவரும் இங்கே மோக்ஷ உலகினை ‘நிலம்’ என்றே கூறுகிறார் என்று நினைத்தேன்.  மேலும், பரிமேலழகர் உரையில் 'எல்லாவுலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்’ என்று குறிப்பிட்டுள்ளமையாலும் ‘நிலம்’ என்பது வீட்டுலகமே என்று கொண்டு எழுதினேன்.

நீடு என்பதன் பொருளையும் சேர்தல் என்பதன் பொருளையும் விளக்கிய திரு.சிவ சிவா, சிவசூரியார் ஆகியோருக்கும் மிக்க நன்றி!


-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Oct 12, 2023, 10:46:37 AM10/12/23
to santhav...@googlegroups.com
I think Parimelazhagar commentary will always be appropriate.
However, a phrase may lend itself to more than one interpretation - and sometimes both can be taken to get the full picture. (சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்);

V. Subramanian

Anand Ramanujam

unread,
Oct 12, 2023, 11:07:07 AM10/12/23
to santhav...@googlegroups.com
Yes I agree, it can mean both prosperity in this world (‘மண்ணில் நல்ல வண்ணம் வாழ்தல்’) and also achieving Moksha (‘நல்ல கதி அடைதல்’). 

Thank you!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Oct 13, 2023, 7:00:09 AM10/13/23
to santhav...@googlegroups.com
அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 9

கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

விளக்க விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

குணமொன் றிலதாம் உணர்வில்லாக்
... கோலப் பதுமை அதுபோல
அணிவா யொடுகண் செவிமூக்கும்
... அறிவற் றிருந்தால் நலமுண்டோ?
குணமோ ரெட்டும் உடையான்றன்
... குரைசே வடியே சரணென்று
கணமெப் பொழுதும் தொழுதேத்தக்
... கருதாத் தலையால் பயனுண்டோ?

Anand Ramanujam

unread,
Oct 14, 2023, 10:19:23 AM10/14/23
to santhav...@googlegroups.com
அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 10 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார். 

விளக்க விருத்தம் 
(அறுசீர் ஆசிரிய விருத்தம்) 

நவையே பெருக்கி நலிவுறுத்தி 
... நசையால் உளத்தைத் தளைப்படுத்தி
அவமே விளைக்கும் பிறப்பிறப்பாம் 
... அலைசேர் கடலும் கடந்திடுவார் 
புவிகால் முதலாம் பூதமெலாம் 
... பொலிவார்ந் தொளிரும் தனிமுதல்வன் 
அவியாப் புகழ்சேர் அடியிணையே 
 ... அருமாத் துணையென் றணைந்தவரே.  

இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Oct 14, 2023, 10:40:52 AM10/14/23
to santhavasantham
மூன்றாம் குறட்பாவின் (மலர்மிசை ஏகினான்)
விளக்க விருத்தத்தின் ஈற்றடியை இவ்வாறு மாற்ற விழைகிறேன்:

முன்பு இட்ட அடி:

இருளற் றொளிரும் வீட்டுலகில்

... இனிதே நிலைபெற் றிருப்பாரே!


மாற்றம்:

 திருவிற் பொலியும் வாழ்வுறுவார்

... செழுவீட் லுலகும் பெறுவாரே!


Anand Ramanujam

unread,
Oct 29, 2023, 9:00:32 PM10/29/23
to santhavasantham
இவ்விழையில் இதுவரை நான் இட்ட கடவுள் வாழ்த்துக் குறள் விருத்தங்களின் தொகுப்பைக் காண எனது வலைப்பக்கத்துக்கு வருகை தருமாறு வேண்டுகிறேன்:
- இமயவரம்பன்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Oct 30, 2023, 2:26:40 AM10/30/23
to சந்தவசந்தம்
அருமை ஐயா 🙏

On Thursday, August 31, 2023 at 12:48:20 AM UTC+5:30 Anand Ramanujam wrote:
குறள் பொருள் விளக்கும் விருத்தங்கள்

அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து

குறள்பா - 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு.

விளக்க விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

அகரம் என்னும் ஓரெழுத்தாம்
  அறிவை விரிக்கும் சீரெழுத்தாம்
திகழும் எழுத்துத் திரட்கெல்லாம் 
  திலதம் அனைய முதலெழுத்தாம்
புகழும் அகர எழுத்தினைப்போல்
  புவிக்கோர் இறைவன் முதலாவான்
அகமும் புறமும் ஆள்பவனாம்
  அன்னை தந்தை ஆனவனாம். 

Anand Ramanujam

unread,
Oct 30, 2023, 3:16:21 AM10/30/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தங்கவேல்!

- இமயவரம்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Nov 23, 2023, 9:37:05 AM11/23/23
to santhavasantham
இவ்விழைக்குக் கிடைத்துவரும் ஆதரவால் குறள் பொருள் விளக்கும் இவ்விருத்தங்களைத் தொடர்ந்து எழுத விரும்புகிறேன்.

அறத்துப்பால் - அதிகாரம் 2. வான் சிறப்பு

குறள்பா - 11 

வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று.

விளக்க விருத்தம் 
(அறுசீர் ஆசிரிய விருத்தம்) 

அறமும் பொருளும் இன்பமுமாம்
... அருமா நலங்கள் நனிபெருக
நிறைவாழ்(வு) அதிலே நெறிசிறக்க
... நிலைபெற் றென்றும் உயிர்செழிக்க
இறையாய் நின்றே இனிதளித்தே
... இணையற் றோங்கு வளம்பொழிந்தே
குறையா துலகைப் புரந்திடுமோர்
... குணத்தால் மழையை அமிழ்தெனலாம். 

- இமயவரம்பன்

Anand Ramanujam

unread,
Nov 25, 2023, 12:59:40 PM11/25/23
to santhavasantham
அறத்துப்பால் - அதிகாரம் 2. வான் சிறப்பு

குறள்பா - 12 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

விளக்க விருத்தம் 
(அறுசீர் ஆசிரிய விருத்தம்) 

உண்டு வாழும் உயிர்க்கெல்லாம்
... ஊனைப் பேணும் திறனோங்க    
உண்ணத் தக்க உணவாக்கி
... ஊட்டம் கூட்டும் ஒருமாரி
தண்ணீர் ஆகித் தனைத்தந்து 
... தாகம் எல்லாம் தணிவித்துப்
புண்ணார் வயிறும் பொலிந்திடவே
... பொல்லாப் பசிநோய் போக்கிடுமே.  

- இமயவரம்பன்

Anand Ramanujam

unread,
Nov 26, 2023, 10:48:19 AM11/26/23
to santhavasantham
அறத்துப்பால் - அதிகாரம் 2. வான் சிறப்பு

குறள்பா - 13 

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.

விளக்க விருத்தம் 
(அறுசீர் ஆசிரிய விருத்தம்) 

பரந்த நீரால் பயனில்லாப்
... பரவை சூழ்ந்த உலகத்திற்(கு)
இரங்கி வானம் இடையின்றி
... மழையை ஈயத் தவறிடிலோ
இருந்து  வாழும் உயிரெல்லாம்
... ஆக்கம் இழந்து பொழுதெல்லாம்  
வருந்தி வாடிப் பசியெனுமோர்
... மாளாத் தீயில் நசிந்திடுமே.

- இமயவரம்பன்

Anand Ramanujam

unread,
Dec 6, 2023, 10:41:54 AM12/6/23
to santhavasantham
அறத்துப்பால் - அதிகாரம் 2. வான் சிறப்பு

குறள்பா - 14 

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

விளக்க விருத்தம் 
(அறுசீர் ஆசிரிய விருத்தம்) 

விரிவான் உலவும் கருமுகில்கள்
... மிகையாய் வழங்கும் மழையெனுமோர்
வருவாய் குறையப் பொழிவொழிந்து 
... வளமற் றவனி வறண்டிடிலோ  
எருதேர் உழவர் உழவொழிவார்
... எருவிட் டுறுநீர் நிலத்திறையார்
இருமா நிலத்தில் தொழிற்கெடவே
... இருளார் வறுமைத் துயர்மிகுமே!

- இமயவரம்பன்

Anand Ramanujam

unread,
Dec 15, 2023, 5:33:21 PM12/15/23
to santhavasantham
வான் சிறப்பு

குறள்பா - 15 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

விளக்க விருத்தம் 
(அறுசீர் ஆசிரிய விருத்தம்) 

மிகையாய்ப் பெய்தே வியனுலகில்
 வெள்ளம் விளைக்கும் கொடுமழைதான்
மிகவும் குறைவாய்ப் பெய்துவிட்டால்
 வெம்பஞ் சத்தில் ஆழ்த்திடுமே
தகுமோர் அளவில் பொழிந்திடிலோ
 தரணி வாழும் உயிர்க்கெல்லாம்
சுகமாய் வாழத் துணைநின்றே
 துவள்வோர் துயரும் துடைத்திடுமே.

- இமயவரம்பன்
Reply all
Reply to author
Forward
0 new messages